ஏகாந்தம் இனிது உன்னோடு 16-22

Aug 1, 2024 - 08:05
 0  400
ஏகாந்தம் இனிது உன்னோடு 16-22

அத்தியாயம் - 16

உயிருக்குள்

உயிரை விதைத்து

சென்றாயடா..

போலிஸ் வேனிலிருந்து அந்த ஏரியா எஸ்.ஐ, இரண்டு போலிஸ்காரங்களும்,காரிலிருந்து ஜெபா,ஜெயராஜிம் இறங்கினர்.

உள்ளே வந்ததும் அர்ஷாத்த ஓங்கி அடித்தான் ஜெபா அவன் வாய் கிழிந்து இரத்தம் வந்தது. ஆனாலும் எதிர்த்து ஒன்னும் செய்யல.

கவிதா தான் ஊடே புகுந்து தடுத்து. என் பிள்ளைய அடிக்க உங்களுக்கு எதுவும் இல்ல. உங்க பிள்ளை இங்க இருந்தா கூட்டிட்டு போங்க என சத்தமிட்டார்.

அனிஷாவுக்கு இந்த சத்தம் கேட்கவும் 

கீழே படபடவென இறங்கினாள் கொஞ்சம் முடியல கால்வலி. கால் கொஞ்சம் மெதுவா வைத்து வரவும் எல்லாரும் அவளைத்தான் பார்த்தனர். கவிதாவின் கண்ணில் வெறுப்பு.

ஜெபாவும்,அப்பாவும் கோவமாக ஆத்திரத்தில் பார்த்திருந்தனர்

மெதுவாக வந்து அர்ஷாத் பக்கம் நின்றவள் அவன் முகத்தைப் பார்க்கவும் உதட்டு லேசா பிஞ்சி இரத்தம் வந்தது.

அவன் முகம் திருப்பி லேசா துடைத்துவிட்டாள் இரத்தத்தை.

ஜெபா " பாப்பா கிளம்பு வீட்டுக்கு போகலாம் "அனிஷா தலையைத்து வரவில்லை என்கவும்.

ஜெயராஜ் " என்ன வரலையா என்ன நினைச்சிட்டிருக்க. நீ வரலைனா இங்கேயே இரு. இவங்க எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா உள்ள வச்சிடுறோம். "

அனிஷா " ப்பா "எனக் கத்தினாள்.

அர்ஷாத் " அதெப்படி முடியும். நானும் அவளுமே 21வயசு முடிஞ்சவங்க போலிஸ் வச்சிலாம் மிரட்டாதிங்க.அவா எங்கயும் வரமாட்டா. அவா என் மனைவி இப்போ ஒன்னும் பண்ணமுடியாது. "

அனிஷா " ப்பா...நாங்க முன்னாடியே ரெஜி.. " சட்டென அர்ஷாத் அவ கைய பிடிச்சி வேண்டாம். இப்போ அத சொன்னோம் அதையும் இல்லமாக்கிருவாங்க என அவனுக்குத்தெரியும். ஆதலால் சொல்லவிடாமல் தடுத்தான்.

ஜெபா " அறிவிருக்காடா நாங்களும் அந்த டிபார்ட்மண்ட்தான். வேற எதாவது கேஸ் போட எவ்வளவு நேரமாகும்.

ஒருத்தரையும் விடமாட்டேன். கொஞ்சம் வசதியான வீட்டுப்பிள்ளைங்கனா லவ் பண்ணி இப்படித்தான் ஏமாத்துவீங்களா. கொன்னுபோட்ருவோம் "

அனிஷா " அவன் அப்படி இல்லண்ணா எனக்கு அவனத்தான் பிடிச்சிருக்கு ப்ளீஸ் ப்பா ,எங்கள விட்ருங்க நான் உங்ககூட வரமாட்டேன் " என அர்ஷாத் கைய இருக்கமாக பிடிச்சிட்டு நின்றாள்.

ஜெபா கண்ண காமிக்கவும் போலிஸ்காரங்க இரண்டுபேரம் அவங்கப்பாவையும் அவனையும் அரெஸ்ட் பண்ண வரவும்.

அனிஷா " வேண்டாம்ப்பா நாங்க என்ன தப்பு பண்ணோம்ப்பா. லவ் பண்றது தப்பா. பணம் இருந்தாதான் காதல் வரனுமா. அவன் என்ன நல்ல பார்த்துப்பான் ப்பா. உங்கள மாதிரியே ரெம்ப பாசம் என்மேல. உங்க காலுலவேன விழுறேன்.போங்கப்பா இங்க இருந்து " எனக் கதறி அழுதாள்.

ஜெயராஜ் " பாப்பா அழாதடா.இது சரிவராதுடா சொன்னா கேளு .

வீட்ல எல்லாரும் உன்ன காணலைனு 

தேடுறாங்க. வந்திருடா நம்ம வீட்டுக்கு போயிடலாம். "

" உங்களுக்கு ஆரம்பத்துலயே சொல்லிவச்சோம். இவ்வளவு செய்தும் உங்க பையன் இப்படி எங்க வீட்டு பொண்ண இழுத்திட்டு வந்திட்டான். எங்க குடும்பம் எப்படி தலைக்குனிஞ்சி நிக்கிறோம் பாருங்க

நாங்க யாருக்கும் தெரியாம பிரச்சனைய முடிச்சி எங்க பிள்ளையை கூட்டிட்டு போகலாம்னு வந்தோம். உங்கபிள்ளைகிட்ட சொல்லுங்க என உறுமிகிட்டு நின்றார்.

அர்ஷாத்கிட்ட கவிதா பேசினார்.உஹூம் அவன் அசையவே இல்ல.

கவிதா " உன் இஷ்டப்படி.எப்படி வேணாலும் இரு. ஆனா நாங்க சத்தியமா உயிரோடவே இருக்க மாட்டோம். என கிட்சன் சென்று கதவை அடைத்து கேஸ்ஸை திறந்து வைத்துவிட்டார். எல்லோருக்கும் பயம் எதுவும் லேசானக்கூட அபாயம்.

அனிஷா தான் ஓடிப்போயி கிட்சன் கதவை தட்டி "அத்தை வெளிய வாங்க. எதுவும் பண்ணிடாதிங்க. நான் எங்கப்பா கூடவே போயிடுறேன் என அழுதாள் "

அர்ஷாத்தும் அவங்க அம்மா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல. கேஸ் வாடை வெளியவர வந்ததும் எல்லாருக்கும் பயம் அதுக்குள்ள அனிஷா "அப்பா நான் உங்ககூடவே வந்திர்றேன் பா பிரச்சனை பண்ணாதிங்கப்பா. அழுது ஓய்ந்தவள் அப்படியே மடங்கி விழுந்தாள்.

ஜெபா அவளைத் தாங்கி காருக்கு கொண்டு சென்றான்.

ஜெயராஜ் இனி என்பொண்ணு பக்கம் உங்க பையன் வந்தா நான் இப்படி வந்து பேசமாட்டேன். டைரக்ட்டா கம்ப்ளயிண்ட் குடுத்து என்ன பண்ணனுமோ பண்ணிட்டு பேசாமா இருப்போம். இப்போ எங்க பொண்ணு இங்க வந்தது வெளிய தெரியக்கூடாது அதுதான் சத்தமில்லாம போறோம் ஞாபகம் இருக்கட்டும் "

அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சுதா என அர்ஷாத் பார்த்து நின்றான் .அவர்கள் போனதுக்கு பிறகு கவிதா வெளிய வந்தவர் பணமும் ஆள்வசதியும் இருக்கு. அவங்க அண்ணன் வேற பெரிய ஆபிசர் உன்னால எப்படி எதிர்க்க முடியும் எனக் கேட்டார்.

அர்ஷாத்க்ஷ" நீங்க கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்மா. உங்களால மட்டுந்தான் அவாபோயிட்டா. ஈரக்கொலை பதறுதும்மா "

கவிதா " நான் அப்படி பண்ணலன்னா உன்ன என்ன செய்வாங்களோ. நா ஒரு அம்மாவா என் பிள்ளையை பத்தி யோசிக்க மாட்டனா "

அர்ஷாத் போச்சி எல்லாமே போச்சி என தலையில் கைவைத்து அழுதான்.

அனிஷா கார்ல படுத்திருந்தா என்ன நடக்குது என அவ மூளைக்கு எட்டவே இல்லை. ஜீவா வேலை பாக்குற ஆஸ்பத்திரியில அட்மிட் செய்து ஏற்கனவே விழுந்தது இப்போ அழுதது என சோர்ந்து மயங்கிட்டா.

வீட்டுக்கு சாரதாவிற்கு தான் தகவல் சொன்னாங்க. கல்யாண மண்டபத்திலிருந்து வெளியே வந்து ரோடு கிராஸ் பண்ணும்போது அடிபட்டு ஆஸ்பத்திரியில இருந்ததாகவும்.அவ மயக்கத்துல இருந்ததாகவும் அதனாலதான் தகவல் கிடைக்கல எனவும் வீட்டில் சொல்லியிருந்தனர்.

ஒரு நாள் ஆஸ்பத்திரியில இருந்திட்டு வீட்டுக்கு வந்தனர். அனிஷா எதுவுமே பேசுற மனநிலையில் இல்ல.

அனுராதா வீட்லயேதான் இருந்தாள். யாருக்கிட்டயும் எதுவும் பேசல. தனியாவே இருந்தாள். சாப்பிடுற எண்ணமே இல்லாம.

அர்ஷாத் நார்மல் செயின் மாதிரித்தான்

தாலி வாங்கியிருந்தான். அதனால யாருக்கும் தெரியல புதுச் செயின் என்று நினைத்தனர்.

சாரதாவும் அனுராதாவும் தவிச்சிப்போயிட்டாங்க.ஏன் என்ன என்று எதுவும்தெரியாமல்.அடிபட்டதுதான் இப்படி இருக்கா என நினைத்தனர். யார் சொல்வார் அவர்களுக்கு மனதில் பட்ட அடியை.

இப்படியே இரண்டு மாதம் கடந்தது.

அனிஷாவிற்கு புனேலயிருந்து லெட்டர் அவள் படித்த காலேஜ்ல இருந்து வேலைக்கான அழைப்பு ஸ்காலரான அவளையும் மோனலையும் வேலைக்கு அழைத்திருந்தனர்.

எல்லோரும் ஹாலில் உட்கார்ந்திருந்தனர் அவர்களிடம் போனவள் விசயத்தை சொல்லவும் ஒருத்தருக்கும் சம்மதமில்லை.

ஆனந்தராஜ் ஏற்கனவே ரெம்ப வருத்தத்துலதான் இருந்தார் பிள்ளை முன்ன மாதிரியில்ல. இப்போ தனியா அங்க வேலைக்குஎதுக்குபோகனும்.நம்ம கிட்ட இல்லையா என்ன எனக்கேட்டார்

அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை அமைதியாக இருந்தாள். ஜெபாதான் சரி போ என சம்மதம் குடுத்தான்.

ஜீவா " இரண்டு நாள் கழிச்சிபோயேன் குட்டிப்பையன இங்க நாளைக்கு கூட்டிட்டு வர்றோம் " என சொல்லவும் சரி என தலையசைத்தாள்.

ஒருமாதம் கடந்திருந்தது வேலைக்கு சேர்ந்து. ஏற்கனவே படிச்ச காலேஜ் வேறு பழகிய இடம்தான.அமைதியா அர்ஷாத்த விட்டு வந்து 3 மாதத்திற்கு மேலாகிவிட்டது.

காலேஜ்ல இருக்கும்போதே உடலில் ஒரு சோர்வு.எதோ லேசா மிதக்குற ஃபீல்.வீட்டுக்கு வந்தவள் சாப்பிடபோக தன்னையறியாமாலே வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.

மனதின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவள் வேறொன்றையும் சிந்திக்கவில்லை .ரெமி மதியம் ட்யூட்டிக்கு போயிருந்தார். 

இன்னைக்கு என்னவோ அர்ஷாத்த பார்க்கனும்போல ரெம்ப தோனுச்சிது.அவன் தந்த மொபைல் இன்னும் அவாகிட்டதான் இருக்கு.

ரியா கல்யாணத்திற்கு போகறதுக்கு முன்னாடி பேசிட்டு அவளோட பேக் அடியில போட்டது.இன்னும் எடுக்கல. எப்பவுமே அவாகூட ஆட்கள் இருந்ததுனால அத எடுக்கவே முடியல. அதவிட பயம் நம்ம எதாவது பேசி வீட்ல தெரிஞ்சா என்னாகுமோ என பயந்தாள்.

கவிதா அன்னைக்கு செய்ததற்கே. மனசுக்குள்ள இப்போ வரைக்கும் நடுங்குவா. அவளோட வீட்ல இப்படி பட்ட ஆர்பாட்டமான சத்தம் பேச்சு இதலாம் பார்த்ததே இல்ல அதனால பயந்தாள்.

மோனல் கிட்டயாவது போவோம் என நினைத்து. எழும்பியவளுக்கு தலைசுத்தி அப்படியே பெட்லஉட்கார்ந்தவள் .என்னனு தெரியலயே என நினைத்து தண்ணி குடித்துசமாளித்தவள்.

வண்டியில போகமுடியாது என தெரிந்து ஆட்டோ பிடித்து மோனலின் ஹாஸ்ட்டல் போயி இறங்கியவள் அவளுக்கு நடக்ககூட முடியல மோனல் வந்துதான் ரூமுக்கு அழைத்து சென்றாள்.

அங்கயும் போயி படுத்தே இருந்தவளை பார்த்த மோனல்தான் பயந்து ஹாஸ்பிட்டல் போகலாம்னு கூட்டிச்சென்றாள்.

டாக்டர் செக் பண்ணிட்டு லாஸ்ட் ப்ரீயட்ஸ் எப்போனு கேட்கவும் தான் சுதாரித்தாள். யோசித்தவளுக்கான விடை அர்ஷாத்தோட இருந்ததுக்கு முன்னாடி. டாக்டர்கிட்ட தியதி சொன்னவளின் இருதயம் அதிகமாக துடித்தது.

கல்யாணம் எப்போ முடிஞ்சுதுன்னு கேட்கவும் ரிஜிஸ்டர் நடந்த தியதியை சொன்னாள்.பிரக்னஸ்ஸி டெஸ்ட் பண்ணிடுவோம் என சொல்லவும் தலையாட்டியவள்.ரிப்போர்ட்க்கு காத்திருக்கும்போதே அனிஷாவுக்கு உறுதியாக நம்பினாள் இது அதுதான் என.

ரிப்போர்ட் வரவும் மோனல் வாங்கிப்பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

அனிஷாவின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

நான்காவது மாதம் இது என குறிப்பிடபட்டிருந்தது.

அனிஷா " எனக்கு எதுவுமே அறிகுறி தெரியலையே " எனசொல்லவும்.

டாக்டர் " அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் "என விளக்கம் சொன்னார்.

ஹாஸ்டல் வரவும்தான் மோனல் கேட்டா என்னப்பா பண்ணபோற.

அனிஷா " இது என்ன கேள்வி. இது என்ன வேண்டாத கர்ப்பமா என்னப்பா செய்யப்போறனு கேட்கிற.

இது எங்களோட பிள்ளை. இரண்டவது ஆப்ஷனே கிடையாது. நாங்க சேர்ந்தாலும் இல்லனாலும். இது எங்க பிள்ளை அவன்தான் தகப்பன் பின்ன "

மோணல் " உங்கப்பாவுக்கு விசயம் தெரிஞ்சா என்ன ஆகும் "

அனிஷா " தெரிஞ்சாதான பார்க்கலாம்.

எங்கள எதுக்கு பிரிச்சாங்க.

நாங்க என்ன ஒன்னும் தெரியாத சின்னபிள்ளைங்களா படிச்சிருக்கோம் சம்பாதிப்போம். யோசிச்சி முடிவெடுத்தாங்களா இல்லல.

அவங்க குடும்ப ஸ்டேட்டஸ் ,பணம் இதத்தான் பார்த்தாங்க. வாழப்போற என்ன நினைக்கவே இல்ல அர்ஷாத்த விடுடா .

என்ன பத்தி யோசிச்சாங்களா.

உயிரில்லாததெல்லம் நினைச்சப்பம் வாங்கிகுடுத்தவங்க.

அர்ஷாத்த மட்டும் ஏன் அப்படி பண்ணாங்க. விடு முடிஞ்சிப்போச்சி எல்லாம். அம்மா மட்டுந்தான் அப்படினு பிள்ளைக்கு விதிச்சிருந்தா அப்படி நடக்கட்டும். கூட இருக்கானோ இல்லையோ அவன்தான என் பிள்ளைக்கு தகப்பன். கடவுள் பார்த்துப்பாரு. "

மோனல் " அர்ஷாத்த எவ்வளவு லவ் பண்ற இல்ல"அவள அனைத்து விடுவித்தவள். எனக்கும் உறவிருந்தும் இல்லாத நிலை. உனக்கும் இப்போ அப்படியான நிலையானு கஷ்டமா இருக்கு "

அனிஷா " விடுறா நான் எனக்குனு எதுவுமே ப்ரே பண்ணதே இல்ல. அதுவேணும் இது வேணும்னு .

 அர்ஷாத்த கூட என் வீட்ல எல்லாருக்கும் பிடிச்சி. கல்யாணம் வீட்ல பண்ணி வைக்கனும்னுதான் ப்ரே பண்ணேன். சர்ச்க்கு போகவேயில்ல இப்போ போகனும் போல இருக்கு .

நான் கேட்காத ஒரு சந்தோசத்தை குடுத்திருக்காரு அதுக்காக"

அடுத்த நாள் அர்ஷாத்துக்கு போன் செய்தாள்.அது ஸ்விட்ச்டு ஆஃப்.

சந்துருவும் வெளிநாட்டுல இருக்கான். யாருக்கிட்ட கேட்க என நினைத்தவள்.

தேவாவுக்கு போன் செய்தாள்.

தேவா புதிய நம்பர்ல இருந்து அழைப்புனால அவன் போன் எடுத்து பேச நேரமாச்சுது.

எடுத்து பேசவும் தகவல் கேட்டா.

" நான் இப்போ அவனுக்க வீட்லதான் இருக்கேன். இரு அர்ஷாத்துகிட்ட குடுக்கேன் இரு "

அவனிடம் போனைக் குடுக்கவும் 

 " ஹலோ அனிஷா பேசறேன் "

சிறிது நேர அமைதி " எனக்கு எங்க மாமா பொண்ணுகூட கல்யாணமாகிட்டு இனி எனக்கு போன் செய்யாத " என சொல்லவும் பின்னாடியிருந்து தேவா எதோ கத்தவும் சரியாக இருந்தது

அதற்குள் போன் அணைத்து வைக்கப்பட்டது.

அனிஷா எதுவுமே சொல்லாம அமைதியா இருந்தாள். மோனல் தான் என்னடா இப்படி கேட்கவும்.

" அவனா ? இன்னொரு பொண்ண கல்யாணம் பண்றதா சிரித்தாள் "

மோனல் " இப்போ அவனுக்கு இத எப்படி சொல்லுவ "

அனிஷா " ஏன் சொல்லனும் வருவான் அப்போ தெரியட்டும். கூட்டிட்டு போனாங்களே உயிரோட இருக்காள என்னனு பார்க்கல. இப்போ நான் பேசுனா கல்யாணமாகிட்டாமா. விடு வருவான் என்னத்தேடி அப்போ பார்த்துக்கலாம் "

இப்படியே ஐந்து மாதம் தொடக்கம் வரைக்கும் யாருக்கிட்டயும் சொல்லல .

ரெமி அத்தைதான் கண்டுபிடிச்சிட்டாங்க.

அவாகிட்ட கேட்காமலயே தம்பிக்கு கால் பண்ணி சொல்லிட்டார்.

அடுத்த நாள் வந்தவர் அனிஷாவ கூப்பிட்டு பேசினார். " என்ன நினைச்சிட்டு இருக்க. நேரமே சொல்லிருக்கலாம் இப்போ இப்படி " அனிஷா வயிற்றை சுட்டிக்காட்டினார்.

அவருக்குமே என்ன செய்ய எனத்தெரியலை.

அனிஷா"நான் உங்க பிள்ளை. அடிக்க கொல்ல எல்லா உரிமையும் இருக்கு.

ஆனா இது என்னோட குழந்தை. இத என்ன செய்யனும்னு நான்தான் முடிவு பண்ணனும். இத தந்தவனுக்கு கூட உரிமையில்ல. யாராவது வேற மாதிரி யோசிச்சீங்க என்ன உயிரோடவே பார்க்க முடியாது " என பேசிவிட்டு ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை ஜெயராஜ் அனிஷாகிட்ட பேசினார். என்ன முடிவு எடுத்திருக்க எனக்கேட்கவும்.

" இதுக்குபதில் நேத்தே சொல்லிட்டேன் "

ஜெயராஜ் " சரி ஆனா குழந்தை பிறந்த பிறகு நான் சொல்றத கேட்கனும். என்ன கேட்ப்பியா இல்லையா என சத்தம்போட்டார்."

அவளுக்கு இப்போது யாருக்கிட்டயும் எதிர்க்கமுடியாது. நமக்கு நம் குழந்தை முக்கியம் என கருதியவள் தலையை ஆட்டிவைத்தாள்.

இன்னும் மூன்று மாதம் கழித்து அனிஷா வாட்ஸப்க்கு மெசேஜ் வந்தது.

 புது போன் மாற்றி அர்ஷாத் குடுத்த சிம்கார்டுதான் இப்போ வரைக்கும் வச்சிருக்கா.

" நான் வெளிநாடு போறேன் காண்ட்ராக்ட்ல எப்போ வருவேன்னு தெரியாது. நீ உங்க வீட்ல பார்க்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ. பின்னாடியான வாழ்க்கையில என்னால எந்த பிரச்சனையும் வராது. எப்போ வேணும்னாலும் கையெழுத்து போட்டு தர்றேன். பிளைட் டிக்கட் போட்டோவும் இருந்தது." பார்த்திட்டு சிரித்தாள்.

மோனல் என்ன சிரிக்க எனக்கேட்கவும் 

மெசேஜ் காமிக்கவும். இதுக்கு எதுக்கு சிரிக்க.

அனிஷா "அன்பு எல்லாவிதமான முட்டாள்தனமான காரியங்களையும் நமக்கு பிடிச்சவங்களுக்காக செய்ய வைக்கும். அதான் சிரிச்சேன்.

மூனு மாசம் முன்னாடி எனக்கு கல்யாணமாகிட்டுனு சொன்னான்.

இப்போ என்னடானா நீ கல்யாணம் பண்ணிக்கோ அப்படினு மெசேஜ் போடுறான்.இவன என்ன செய்யலாம் "

ஆனால் அவள் மனசுபூராவும் ரணம் தன்னுடைய ஹெல்த்த சரியா பார்க்கம பிரசவத்தின் போது ரெம்பக்கஷ்டப்பட்டாள்.

ரெமி அத்தை வேலைப்பார்க்குற ஆஸ்பத்திரியிலதான் சேர்த்திருந்தனர்.

இக்கட்டான நிலையிலும் யாருமேயில்லாம குழந்தையை பெற்றெடுத்தாள்.

அடுத்தநாள்தான் வந்து சேர்ந்தார் ஜெயராஜ்.

பழைய நினைவுகளில் மூழ்கியவளின் சிந்தனையை கலைத்தது பிள்ளையின் அழுகை..

               அத்தியாயம் - 17

காணல் நீராய்

போனதென்ன

என் ஆசைகள்....

பிள்ளை அழவும் அவளை தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவள் திரும்பி படுத்தாள் அங்கே பார்த்தது தூங்காமல் விட்டத்தை பார்த்து படுத்திருந்த அர்ஷாத்தைதான்.

இன்னும் தூங்காம என்ன பண்ற

எனக்கேட்கவும். அவன் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியா இருந்தான்.

இரண்டுபேருமே அமைதியா இருந்தனர் கொஞ்சநேரம்.

எழும்பி அமர்ந்தவன். சுவரில் சாய்ந்து அனிஷாவைத்தான் பார்த்திட்டு இருந்தான்.

அர்ஷாத்" நீ தூங்கலையா "

அனிஷா " தூக்கம் வரல "

அர்ஷாத் " பிள்ளை விசயமாவது என்கிட்ட சொல்லிருக்கலாம் "

அனிஷா " என்ன "

அர்ஷாத் " நான் கேட்டது உனக்கு காது கேட்கலையா "

அனிஷா " ஏன் சொல்லனும் "

அர்ஷாத் " இதென்ன விதண்டாவாதம்.

நீ நினைச்சா எனக்கு தகவல் சொல்லிருக்க முடியும். ஆனாலும் சொல்லல. மொபைல் மட்டுந்தான் ஸ்விட்ச்டு ஆஃப். மெயில் ஐடிலயிருந்து எல்லாத்துக்கும் உனக்கு பாஸ்வேர்டு வரைக்கும் தெரியும் வேணும்னுதான சொல்லல.ம்ம் "

அனிஷா " எனக்கு தூக்கம் வருது "

திரும்பி படுத்துக்கொண்டாள்.

காலையில எழும்பி பார்த்தாள் பிள்ளை அர்ஷாத்தின் நெஞ்சில படுத்து ஹாயா தூங்குது.

அனிஷா " என்ன இருந்தாலும் அவங்க அப்பா இரத்தவாடை தெரியுது எப்படி ஒட்டிகிட்டு தூங்குதுங்க இரண்டும் "

என நினைத்து வெளியே சென்றாள் அங்கு எல்லாரும் ரெடியாகிட்டிருந்தனர்.

சாரதா " பிள்ளைய எங்க பாப்பா "

அனிஷா இரண்டு அம்மாவுக்கும் நடுவில் சென்று அமர்ந்தவள் 

" அவா அவங்கப்பாகிட்ட படுத்திருக்கா "

அவங்க தோளில் சாய்ந்தாள் மனசு ரெம்ப லேசான மாதிரி இருந்தது.

ஜெயராஜ் " மதியம் கிளம்பனும் அவளுக்கு இங்கயிருந்து என்ன எடுக்கனுமோ எடுத்து வைக்கச்சொல்லு மீதிய பார்சல் சர்வீஸ்ல போட்ருலாம் "

சாரதா அனிஷாவ பார்க்க அவள் தலையசைத்தாள் சரியென.

அர்ஷாத் எழும்பிட்டானா என பார்க்கபோனாவள் பார்த்தது அப்பாவும் மகளும் எதோ பேசி

சிரித்துக்கொண்டிருந்ததைதான்.

இப்போது யோசித்தாள். இப்பவும் இவன் வரலனா என் பிள்ளைக்கு தகப்பன் பாசம் கிடைக்காமலே போயிருக்குமே.

அனிஷா " அம்மு " என அழைக்கவும் ஓடிவந்து அவளிடம் தாவியது.

அர்ஷாத்திடம் சொன்னாள் எழும்பு பிரஷ்அப் ஆகு. மதியம் பிளைட் ஊருக்கு போகனும்னு அப்பா சொல்றாங்க எனசொல்லிச் சென்றாள்.

பிரஷ் அப் ஆகி வெளியே வந்தவன்.

நேராக ஜெயராஜிடம் சென்றான்.

உங்கிட்ட கொஞ்சம் பேசனும் எனவும் அவர் நிமிர்ந்து பார்த்தார்.

அர்ஷாத் " நீங்க என்ன முடிவு செய்திருக்கீங்க "

ஜெயராஜ் " எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீங்க உங்க குடும்பத்தோட வந்து உங்க வீட்டுக்கு அவள அழைச்சிட்டு போங்க "

அர்ஷாத் " நான் இப்படியே என்கூட கூட்டிட்டு போறேனே. எங்க வீட்ல எந்த பிரச்சனையும் இல்லை.

என் பிள்ளைக்காக மட்டும் இல்ல உங்க மகளுக்காகவும்தான் கேட்டுக்கறேன்.

எவ்வளவு பிரச்சனையாக இருந்தாலும் 

அவங்க இரண்டுபேரையும் இவ்வளவு தூரம் பத்திரமா பாதுகாத்து தந்ததுக்காக மட்டுந்தான் உங்களோட முடிவுக்காக வெயிட் பண்றேன்

நீங்க செய்ததுக்கெல்லாம் இன்னும் மனசுல வருத்தம் இருக்கு.

எங்க இரண்டுபேரோட வாழ்க்கைய எவ்வளவு சின்னாபின்னமாக்கி வச்சிருக்கீங்க என உங்களுக்கே தெரியும்.

அதனோட இழப்பு அப்பவும் சரி இப்பவும் சரி எங்க இரண்டுபேருக்கு மட்டுந்தான்.

நீங்க அடிக்கும்போதுலாம் எனக்கு திருப்பி அடிக்க எவ்வளவு நேரமாகும். அவளுக்காக மட்டும்தான் பொருத்து போனேன். கடைசியில அவளும் நல்லாயில்ல நானும்.

பணத்தை வச்சி உங்கபொண்ணு வாழ்க்கைய உங்களால மாத்தியமைக்க முடிஞ்சுதா. கஷ்டமோ நஷ்டமோ

நாங்க இரண்டுபேரும் ஒன்னா வாழ்ந்திருப்போம். "

ஜெயராஜ் " ஒரு தகப்பனா நான் என் பிள்ளைக்காக சிந்திச்சேன். அதத்தான் செய்தேன். தப்பு பண்ணிட்டேன் அப்படிலாம் சொல்லமாட்டேன். என்ன பொருத்தவரைக்கும் சரிதான் "

அர்ஷாத் " என் மனசுல இருக்குறத சொல்லனும்னு இருந்தேன் சொல்லிட்டேன். நானும் மனுஷந்தான். உங்களுக்கு தெரியாது கிட்டதட்ட நாலு வருசத்திற்கு மேல மனசுல

ரணத்தைவச்சிட்டு வாழ்ந்தேன்.

யாரையும் வருத்தப்படுத்னும்னு பேசல "

அனுராதா " எல்லாருக்கும் வருத்தம்தான் தம்பி. இப்படி வரும்னு யாரும் எதையும் செய்யறதில்ல "

அனிஷா இடைப்புகுந்தாள். அர்ஷாத் போதும் அவர் ஹார்ட் பேசண்ட். விடு 

அவங்கபொண்ணு நல்லாயிருக்கனும் செய்தது. எப்படியோ மாறிட்டு இப்போ எதையும் பேசவேண்டாம்.

ஜெயராஜ் " உங்க வீட்ல எல்லாரையும் கூப்பிடுங்க. எங்க குடும்பத்துல சொந்தத்திற்குள்ள அறிமுகப்படுத்தி பாப்பாவ உங்ககூட அனுப்பி வைக்கிறோம் "

அர்ஷாத் " சரி " என தலையசைத்தான்.

மதியம் ஊருக்கு செல்ல கிளம்பவும் ரெமிதான் பிள்ளைய பிரியப்போறேம்னு அழுதார். அனிஷாதான் சமாதானப்படுத்தினாள்.

அர்ஷாத் "அவங்க கிட்டப்போயி காலில் விழுந்து வணங்கினவன்

எல்லாத்துக்கும் நன்றினு ஒரு வார்தையில சொல்லிட முடியாது. நீங்க செய்ததுக்கு என் வாழ்க்கை முழுக்க மறக்கமாட்டேன் " என சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.

அனிஷா " வர்றேன் அத்தை நீங்க சீக்கிரம் ஊருக்கு வந்திருங்க "

என அனைவரும் கிளம்பினார்கள்.

திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து காரில் செல்ல எல்லாத்தையுமே ஆனந்தராஜ் ஆள் வைத்துப்பார்த்துக்கொண்டார்.

தக்கலை வந்ததும் இறங்கியவன் ஜெயராஜிடம் " என்னோட கார் இங்க பார்க்கிங்க்ல இருக்கு எடுத்திட்டு வீட்டுக்கு போறேன் "

நாளைக்கு எல்லாரையும் அங்க அழைச்சிட்டு வர்றேன் எனக்கூறியவன்.

  

அனிஷாவின் முகத்தைப்பார்த்தான்.

அவள் கண்கள் கூறியதோ ஏன் போற கூடவே இரு என்று ஆனாலும் தலையசைத்தாள். பிள்ளையின் கன்னத்தை தடவி வர்றேனு கிளம்பிட்டான்.

வீடு வந்து சேர்ந்ததும் எல்லோரும் ஆலோசனை செய்தனர்.நம்ம குடும்பத்திற்கு கெட்டபெயர்தான் இருந்தாலும் பிள்ளையோட வாழ்க்கைய பார்க்கனும் என ஆனந்தராஜ் முடிவு செய்து ஒரு சின்ன குடும்பம் சார்ந்த விருந்திற்கு ஏற்பாடு செய்தனர்.

அர்ஷாத் வீட்டிற்கு வந்தவனுக்கு ஒன்னுமே ஓடல. அனிஷாவையும் பிள்ளையையும் விட்டுவந்தது ஒருமாதிரியா இருந்தது.

அம்மவிடம் சென்றவன் எல்லாவற்றையும் சொன்னான்.

தங்கையின் குடும்பம் கூட வந்தா நல்லாயிருக்கும் என அழைத்து சொன்னான்.

இரவு ஒன்பது மணி இருக்கும் அனிஷாவுக்கு போன் எடுத்துபார்த்தாள் அது அர்ஷாத் நம்பர்

" ம்ம். சொல்லு "

அர்ஷாத் " பிள்ளைய எங்க அவள பார்க்கனும்போல இருக்கு முடியல தூங்கிட்டாளா "

அனிஷா " புது இடம் கொஞ்சம் ஒருமாதிரி இருக்கா. என்கிட்டயே ஒட்டிக்கிட்டு "

அர்ஷாத் " ஐயோ அப்போ நாளைக்கு இங்க வந்தாலும் எப்படி பழகிக்குவா

என்ன செய்ய." என ஒரு தகப்பனாக யோசித்தான்.

அனிஷா " காலையில அப்பாகிட்ட அவ்வளவு பேசின. உன் பிள்ளையினா துடிக்குது அவங்களும் அப்படித்தான துடிச்சிருப்பாங்க "

அவங்க செய்தது சரின்னு நான் சொல்லல. அவரு பக்கமா யோசிச்சி செயல்பட்டாங்க. இனி அவங்கள எதுவும் சொல்லாத என்னாலதான் அப்பா இப்போ ஹார்ட் பேஷண்ட்டா இருக்காங்க. மறக்கமுடியாட்டாலும் மன்னிக்கலாம் "

அர்ஷாத் " சரிடா நாளைக்கு பார்க்கலாம் "

அனிஷா " ம்ம்.நல்ல தூங்கு "

அர்ஷாத் " ம்ம்.நீயும் நல்லதூங்கு "

அடுத்த நாள் காலை அர்ஷாத்துக்கு அவ்வளவு சந்தோசமா இருந்தது.

மனைவி பிள்ளைய இங்க கூட்டிட்டு வரப்போறோம்னு உற்சாகம் அவனுக்கு.

கவிதா அவனத்தான் பார்த்திருந்தார் ஒன்னும் சொல்லல. இத்தனை நாள் அவருக்கிட்ட அவன் பேசவேயில்லை எதுவென்றாலும் தன் தங்கையின் மூலமாகவே சொல்வான்

பகிர்ந்த்துக்குவான்.

இப்போ அவனோட பிள்ளைய பார்த்ததும் எல்லாம் மறந்து அம்மவிடம் பேச ஆரம்பித்திருந்தான்.

அவன் மொபைல் எடுத்து பேத்தியின் போட்டோவை அவருக்கு காண்பித்தான். அவருக்குமே மகிழ்ச்சிதான் ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவன் காரிலும் ஒரு வாடகைக்காரிலுமாக அவன் சித்தப்பா குடும்பமாக அனிஷாவின் வீட்டிற்கு சென்றான்.

ஆனந்தராஜிம் ஜீவாவுந்தான் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்தனர்.

சாரதா ஜெயராஜ் உள்ளே சொந்த பந்தங்களுடன் நின்றிருந்தனர்.

எல்லோருக்கும் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

அந்த இடத்தில் கவிதா உணர்ந்தார். ஏன் இத்தனை செய்து அனிஷாவை கூட்டிட்டுப்போனாங்க என்று அறிந்துக்கொண்டார். அவர்களின் குடும்பமும் அவர்களின் வசதிநிலையும்

அவருக்குத் தெள்ளத்தெளிவாக விளங்கியது.

அர்ஷாத்-அனிஷா-ஹனி சாரா

மூன்றுபேரையும் ஒன்றாக நிற்கவைத்து அறிமுகப்படுத்தினர்.

எல்லோரும் விசாரிக்கவும் செய்தனர்.

மாப்பிள்ளை பையன் என்ன பண்றான் என்ன படிச்சிருக்கான் என ஏகப்பட்ட கேள்விக்கணைகள் வந்தது. ஒருவாறு சமாளித்து அனுப்பினர்.

மாலை அர்ஷாத்துதான் பேசினான் நான் என் மனைவி பிள்ளைய என் வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என சொல்லவும் அதுதான சரி என எல்லோரும் சம்மதித்தனர்.

அனிஷா அவங்க அப்பா அம்மாவைத்தான் பார்த்தாள்.

 அவங்களுக்குமே வருத்தம் எப்படி சீரும்சிறப்புமா கல்யாணம் செய்து கொடுக்கனும் என நினைத்தோம் இப்படியாகிட்டுதே என வருத்தம்.

ஜீவா அர்ஷாத் அருகில் வந்தவன் கவிதாவையும் பார்த்து இவ்வளவு நாள் என்ன நடந்துச்சோ அது இனி மாற்றமுடியாது. ஆனா இனி சந்தோஷமான வாழக்கைய எங்க பாப்பா வாழனும்னு நாங்க விரும்புறோம். அது உங்க கையிலதான் இருக்கு என அர்ஷாத் கையப்பிடித்துக்கொண்டே சொன்னான்.

அர்ஷாத் கண்டிப்பா நான் நல்லா பார்துக்குறேன் வர்றோம் என கிளம்பினர்.

அர்ஷாத் காரில் முன்சீட்டில் அனிஷாவும் பிள்ளையும். பின்பக்கம் அவன் அம்மாவும் தங்கையும் மட்டுமே இருந்தனர். எந்தவிதமான பேச்சுக்களே அங்கு இல்லை வீடுவந்து சேரும்வரை.

அர்ஷாத்தின் வீடு வந்து இறங்கவும் அனிஷாவிற்கு அந்தவீட்டில் நடந்த அனைத்தும் நியாபகம் வந்தது. அது மனதில் இப்பவும் அந்த நடுக்கம் வரவும் அர்ஷாத்தின் முகத்தைதான் பார்த்தாள்.

அதைப்புரிந்தவன் அவகிட்ட இருந்து பிள்ளயை வாங்கிக்கொண்டு அவள் கரங்களை கெட்டியாகப்பிடித்துக் கொண்டான்.

அதற்குள் கவிதா உள்ளே சென்று ஆரத்தி எடுத்துவந்தவர் மூவருக்கும் சுற்றி எடுத்து உள்ளே போகச்சொன்னார்.

அனிஷா உள்ளே வந்ததும் அமைதியாக சோபாவில் அமர்ந்தாள்.

சாரா யாருக்கிட்டயும் இப்போ இருக்கமாட்டா. புது இடங்கள் மாறவும் அவ அழ ஆரம்பித்தாள்.

அர்ஷாத்துக்கும் அவள சமாளிக்க முடியாம அனிஷாவிடம் கொடுத்தவிட்டான்.

கவிதா மூவரையும் அழைத்து சாமிகும்பிட சொல்லவும்தான அங்க பார்த்தாள் அர்ஷாத்தின் அப்பாவின் படத்திற்கு மாலையிட்டு விளக்கு வைத்திருந்தது. அதிர்ச்சியோடு அர்ஷாத்தை பார்த்தாள் 

அவன் என்ன என்று வினவவும் போட்டோவை கைகாமித்தாள்.

அவன் சொன்னான் நாலு வருசமாகிட்டு அவள் யோசித்தாள்.

இதுதான் நம்மள தேடாம இருந்ததுக்கு காரணமா என யோசித்தாள்.

தலையசைத்தவள் ஒன்றுமே சொல்லாமல் அவனோடு இணைந்து நின்றாள். அன்றைக்கும் இப்படித்தான

வாழ்க்கைய ஆரம்பிச்சோம் என இருவருமே நினைத்தனர்.

அப்போதான் கவிதா பேசினார் போயி ரெஸ்ட் எடுக்கட்டும். எப்படியும் தெரிஞ்சவங்க ஒவ்வொருத்தரா வருவாங்க என சொல்லவும்.

மேல சென்று பார்த்தவளுக்கு ஆச்சர்யம் ரூம் முற்றிலும் மாறியிருந்தது.

அர்ஷாத் " புனேயில் இருக்கம்போதே பேசி வேலை செய்ய சொல்லிட்டேன். நம்ம பாப்பாக்கு தக்க மாத்திட்டேன்.

எப்படி இருக்கு எனக்கேட்கவும் செய்தான்.

பிள்ளையை வாங்கி கட்டிலில் கிடத்தியவனின் கையை இருக்கமா பிடித்திருந்தாள் சாரா. அவனுக்கு ஆச்சர்யம் இரண்டு நாளில் இப்படி எல்லாம் வாய்ப்பில்லை. அனிஷாதான் அவளுக்கு சொல்லிக் குடுத்திருக்கனும் என சரியாகயூகித்தான்.

அர்ஷாத் " பாப்பா எப்படி எங்கிட்ட இவ்வளவு சீக்கிரம் ஒட்டிக்கிட்டா "

அனிஷா அவளோட போன் எடுத்து அவன் கையில் கொடுத்தாள் .

பார்த்தவனுக்கு ஆச்சர்யம் 

அதுல் அவனோட விடியோஸ் இருந்திச்சி அவனுக்குத் தெரியாமலே எடுத்தது. இது எப்படி என பார்க்க உபயம் சந்துரு 

அனிஷா " வெளிய பக்கத்துல பார்த்து கேட்க ஆரம்பிச்சிட்டா. அதான் எல்லாம் சந்த்துருக்கிட்ட கேட்டு வாங்கினேன். டெய்லி அத பார்த்திருவா "

அர்ஷாத்துக்கு ஒன்னுமே சொல்லமுடியல கண்கள் எல்லாம் கலங்கி அப்படியே பிள்ளைய மடியில துக்கிப்போட்டுகிட்டான்.

அர்ஷாத் "எப்போ பிள்ளை விசயம்

தெரியும் "

அனிஷா "தேவாக்கு போன் செஞ்சி பேசுனம்லா அப்போதான் "

அர்ஷாத் "ஒ.அது அப்பா இறந்து ஒருவாரம் காரியத்துக்கு வந்தான். அப்போதான் நீ கால் பணணிருந்த அப்போதைக்கு சூழ்நிலை ரெம்ப மோசம் அதான். "

அனிஷா " சாரி எனக்கு தெரியாது "

அர்ஷாத் " சாரி எதுக்கு சொல்ற.நானே உனக்கு தெரிய வேண்டாமானுதான் சொல்லல "

அனிஷா " அந்த டைம்ல உன்ன ரெம்ப தேடுனேன். மிஸ் பண்ணேன்.

அப்புறமா அப்பா வந்து வேறெதாவது பண்ணிடலாமானு அத்தைகிட்டகேட்டாங்க அத்தைக்கு ஏற்கனவே குழந்தையில்லாத ஏக்கம் அப்பாவ பிடிச்சி சத்தம் போட்டாங்க. 

என்கிட்ட பேச நான் வாய்ப்பே

 குடுக்கல "

அர்ஷாத் அவகிட்ட நெருங்கி வந்து அவள தன் தோளில் சாய்த்தான்.

இப்படி இருக்கனும் என சாரா வயித்துல இருக்கும்போது ரெம்ப ஆசைப்பட்டேன் இரண்டு அம்மா இருந்தும் அந்த நேரத்துல யாருமே இல்ல.

வலி வந்தப்போம் செத்துப்போயிடுவனோனு பயம் நான்

செத்துப்போயிட்டா என் பிள்ள எப்படி இருக்கும் அப்படிலாம் யோசிச்சேன்.

கடைசியில கொஞ்சம் பிரச்சனையாகி

முடியலன்னா ஆப்பரேஷன் பண்ணுவாங்க. அதுக்கு கையெழுத்துக்கூட அத்தைதான் போட்டாங்க.

அத்தைக்கிட்ட சொன்னேன்.எனக்கு எதுவும் ஆகிட்டுனா என் பிள்ளைய அவங்கப்பாகிட்ட குடுத்திருங்கனு சொன்னேன். எல்லாமே அத்தைதான் பார்த்துகிட்டாங்க. அப்படி எதுவும் நடக்காம எல்லாம் நார்மலாகிட்டு.

இதைக்கேட்டதும் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டான் இறுக்கமாக. அவளுக்குமே அவனுடைய அருகாமைத்

தேவையாயிருந்தது . அவனோடு இன்னும் நெருங்கியிருந்தாள்.

அவா பிறந்ததுக்கு அப்பறம் அவள பார்க்கவேண்டியே மெடிக்கல் லீவ் இப்போ வரைக்கும் பாத்துக்கிட்டாங்க.

அட்லீஸ்ட் நீ என் கூடவாவது இருக்கனும்னு அந்த நேரத்தில ஆசப்பட்டேன். பிள்ளைய நீதான் முதல்ல வாங்கனும்னு ஆசைப்பட்டேன்.

நீ என்னாடானா மெசேஜ் பண்ற. வேற கல்யாணம் செய்துக்க உனக்கு கையெழுத்தெல்லாம் போட்டுத்தர்றேன்னு என அழுதவள் அவனிடமிருந்து விலகி. நீ எனக்கு வேண்டாம் போ என சொல்லி படுத்துக்கொண்டாள்.

அவனுக்குத்தான் அவள எப்படி சமாதானம் செய்யறது எனத்தெரியவில்லை.

இழந்த நிமிடங்கள் இழந்ததுதான எப்படி அந்தநேரங்கள் திரும்பி வரும். இது ஆறாதவலி செத்து மண்ணோடு மண்ணா போகுற வரைக்கும் சில வலிகளை மறக்கமுடியாது.

அதற்குள்ளாக கவிதா அவனை அழைத்திருந்தார். கீழே சென்றவன்

தாயிடமும் எதையும் சொல்லவில்லை.

அமைதியாக இருந்தவனை

கவிதாதான் மீண்டும் அழைத்தார்.

சாப்பாடு ஆர்டர் செய்தியா வந்திருக்கு.

பைசா குடுத்திட்டு. சித்தப்பா வீட்ல எல்லோரையும் கூப்பிடு என சொல்லி சென்றுவிட்டார்.

எல்லோரும் வந்ததும் அனிஷாவ கூப்பிட மேலே சென்றவன் இரண்டு பாப்பாவும் அழகா தூங்கிட்டிருந்ததைத்தான்.

இதுல யார எழுப்பினாலும் நமக்குத்தான பிரச்சனை என பார்த்திட்டிருந்தான்.

வேற வழியில்லாம மெதுவா அனிஷாவ எழுப்பவும் பிள்ளையும் சேர்ந்து எழுந்திட்டாள்.

அர்ஷாத்துதான் முழிச்சிட்டு நின்னான் ஐயோவென. அனிஷா என்ன எனக்கேட்கவும்.

" கீழவா எல்லாரும் வந்திருக்காங்க "

ம்ம் சரி நீ போ என சொல்லியவள் கீழ வந்தாள் எல்லாருக்கூடவும் சகஜமா இல்லனாலும் விலகிப்போகாமல் இருந்தாள். பிள்ளையும் அவளிடமே இருந்தது.

இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும் செல்லவும் ரூமுக்கு வந்து பிள்ளையை தூங்கபோட்டு படுத்திருந்தாள்

திடீரென அவள் இடையோடு ஒரு கரம் நுழைத்து அவளை தன் பக்கம் இழுத்திருந்தான் அர்ஷாத்.

அத்தியாயம் - 18

உன் இதழ் செய்யும்

மாயவித்தைக்காகவே

என்னைதருகிறேன்

உன்னிடம்...

அவனின் கரம் அவளை இழுத்து அணைக்கவும் அமைதியாகவே இருந்தாள்.

" ஓய் ரௌடி "என காதில் மெதுவாக அழைக்கவும் தனக்குள் ஒடுங்கினாள்.

" பேசமாட்டியா.ம்ம் "என முத்தமிட்டவாறே கேட்டான்.

அவளைத்தன் பக்கமா திருப்பியவன் கண்டது அவளது கண்ணீரைத்தான்.

" ஏன் அழற என்கூட வாழ வந்ததுக்கா இவ்வளவு அழுகை. அப்போ என்கூட வாழப்பிடிக்காமதான் இருந்தியா.

நான்தான் தெரியாம வந்து உங்கப்பாக்கிட்ட பேசி கூப்பிட்டுக்கிட்டனா "

தொப்பென்று கீழ விழுந்த சத்தம் ஆம். அர்ஷாத் தான் விழுந்திருந்தான். இவன் பேசவும் கட்டிலில் இருந்து அவனை தள்ளிவிட்டிருந்தாள்.

மெதுவா எழும்பியவன். மறுபடியுமாக அவள் பக்கத்தில்அமர்ந்தான்

( அடிவாங்கியும் திருந்தமாட்டியா என மனசாட்சி கேட்க. பொண்டாட்டி கையில அடிவாங்கதவன் யாருப்பா இருக்கா.மானங்கெட்டவனா இருந்திட்டு போறேன்) மெதுவா தள்ளிவிடு இப்படி செய்தா சேதாரம் உனக்குத்தான் "

அவள் எரிக்கும் பார்வை பார்த்தாள்.

" அனிமா, இங்கப்பாரு இப்படி அழுதா பின்ன நான் அப்படித்தான பேசமுடியும்.

உனக்காவது பிள்ளனு ஒரு ஆறுதல் இருந்துச்சி.

எனக்கு யாரு இருந்தா சொல்லு. நீயும் இல்ல இங்கயும் யாருமில்லாம. வாழவே பிடிக்கல எதுக்கு நம்ம இப்படி இருக்கோம் என பல நாள் யோசித்து வெறுத்துப்போயிருக்கேன்டா.

ஏதோ ஒரு நாட்டுல வெந்து நொந்து ஏன்டா இந்த வாழ்க்கைனு இருந்தவனுக்கு. லக்கி ப்ரைஸ் மாதிரி பொண்டாட்டியும் பிள்ளையும் சேர்ந்து கிடைச்சிருக்கு. இனி என் வாழ்க்கை நல்லா இருக்கும் என நினைச்சா.நீ அழற என சொல்லவும்."

அவன் கண்களின் கண்ணீர் அவளது கரத்தில் விழவும் துடித்துப்போனாள்.

" த்தான் " என தாவி அவனை அணைத்துக்கொண்டாள்.

அர்ஷாத் இன்னுமாய் அவளை தன்னோடு இறுக்கி முத்தமழை பொழியவும். அவனோடு அவளும் இழைந்தாள்.

அர்ஷாத் " எப்படி கூப்பிட்ட என்ன. இப்படிலாம் நீ கூப்பிடமாட்டியா.உன்கிட்ட பேசமாட்டோமா என நினைச்சி நினைச்சி மருகின நாள் அதிகம்டா "  

அவன் நெஞ்சிக்குள் முகத்தை புதைத்தாள்.

இனி பார்க்கமுடியுமா,நமக்கு கிடைக்குமா ,ஒன்னா வாழ்வோமா,என எல்லா சந்தேகத்திற்கும் விடைகிடைத்த சந்தோசம் இருவரிடமும்.

தன்னிலிருந்து அவளை எடுத்து அவள் முகத்தை பார்த்தவன் அவள் கண்ணோடு கலந்து காணாமல் போக ஆசைப்பட்டான்.

இரு கண்களிலும் முத்தமிட்டவன் பேசினான்.

முதல் முதல்ல எனக்கு பிடிச்ச தேவதைப்பெண்ண பார்த்தவுடனே தலைகுப்புற விழுந்திட்டேனாம் 

இப்போவரைக்கும் அவமட்டுந்தான் எனக்கு வாழ்க்கையினு இருக்கேன்.

அவா இல்லனா இந்த அர்ஷாத்தும் இல்லையாம் என கதை பேசினான்.

ஆமா முதல் நாள்ல அம்மா நல்ல நேரம் பார்த்து அனுப்பினாங்களா வர்ற அவசரத்துல ஒரு பொண்ணு மேல மோதி அந்த பொண்ணு கீழ விழுந்திட்டுது. அந்த டென்சன்லயே கிளாஸ் கண்டுபிடிச்சி உள்ள என்ட்ரியானா ஒரு தக்காளி மாதிரி தளதளன்னு ஒரு பொண்ணு அங்க இருக்க பிள்ளைங்களவிட ஹைலைட்டா இருந்தாளா பச்சக்குன்னு இங்க ஒட்டிக்கிட்டா என தன் நெஞ்சை சுட்டிக்காட்டினான்.

ஆமாடா உன்கிட்ட நெருங்கவே பயம்.

இரண்டு வருசமா உன்ன பார்த்து பார்த்து ரசிச்சிருக்கேன். நீ எங்க இருந்தாலும் உன்ன பார்க்குற மாதிரி இருந்துப்பேன். நீ எங்க அதையெல்லாம் கவனிச்சிருக்க. நீ ஏதொ படிக்கறதுக்கும் பசங்க எதாவது சொன்னா அடிக்கறதுக்கும் பிறந்தவ மாதிரி கவனம்வச்சிருந்த.

என்னையெல்லாம் எங்க கவனிச்ச என சிரித்தான்.

ரத்தீஷ் மட்டும் அந்த பிரச்சனைய கிளப்பலன்னா எனக்கு தைரியம் வந்திருக்குமா என தெரியாது ஆனா அவன் உனக்கு சாக்லேட்டும் பூவும் கொடுத்ததும் வந்துபாரு கோபம் அவன்கிட்ட கேட்டு சண்டை போட்டேன் நல்ல அடிச்சிட்டேன் தெரியுமா "

அனிஷா " இது எப்போம் எனக்கு தெரியாது "

அர்ஷாத் " அது நம்ம கிளாஸ்ல உள்ள பசங்களுக்கு மட்டும்தெரியும். அதுக்குள்ளதான் என் இரண்டு மாமானாரும் வந்து பிரச்சனைய முடிச்சிட்டாங்கலே "

அப்போ முடிவு செய்தவன்தான் இவதான்டா உன் வாழ்க்கையின்னு ஒரு குயிலு உள்ள இருந்து கூவிச்சா. அத அப்படியே தொடர்ந்து இங்க வந்து நிக்குது என அவளை அணைத்துக்கொண்டான்.

அனிஷா தன் கண்ணைவிரித்து கேட்டுக்கொண்டிருந்தாள். இப்படிலாம் பார்த்து அத்தான் மயக்காதடி என் மாயக்காரி. என அவளை இன்னும் தனக்குள் இறுக்கி கொண்டான்.  

மெதுவாக அவள் கன்னங்களை கடித்து சுவைத்து முத்தமிட்டான். அவள் அதரங்களை தனது உணவாக்கி தின்றான்.

மெதுவாக முன்னேறியவன் அவள் முகம்பார்த்து அமைதியாகினான்.

அவள் கண்களில் அவனுக்கான காதலையும் மயக்கத்தையும் பார்த்தவன். அவளில் மூழ்க துடித்து முன்னேறினான்.

அவளிடம் தன் தேடல்களை தொடங்கினான். கண்களில் முத்தமிட ஒரு சுகம்,கன்னங்களில் முத்தமிட ஒரு கிறக்கம் அவள் இதழ்களில் என அவளுடலில் அவன் உதடுகளால் ஊர்வலம் போனான்.

அவன் வாய் உதிர்த்த சொற்கள் முழுவதும் " அனி "மட்டுமே. நான்கு வருட பிரிவையும் ஒரே கூடலில் தீர்க்க முனைந்தான். அனிஷா உணர்ந்தது அவன்ஆசையையும் வேட்கையையும், அபரிமிதமான காதலையும்.

அதிவேகம் அதிகாதல் எல்லாவற்றையும் தனது இணைக்கு பகிர்ந்து முடித்தான்.

இப்பொழுது அனிஷா அவன் மேல படுத்திருந்தாள்.

முன்னாடி தக்காளி மாதிரி தளதளன்னு இருந்த. இப்போ ஆப்பிள் மாதிரி பளபளனு இருக்கடா என சொல்லவும் .

" போடா டேய் " என அவனிடமிருந்து இறங்கியவள் அவள் துணியைத்தேட

அனிமா அது உன் கைக்கு கிடைக்காது 

அத ஒழிச்சி வச்சிட்டேன் என சொல்லி சிரித்தான்.

அனிஷா " அதே கள்ளன் தான்டா நீ " என சினுங்கினாள்.

அர்ஷாத் " அனிமா தேங்க்ஸ்டா "

அனிஷா " இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவாங்க.ஐய "

அர்ஷாத் " முழுசா கேளுடி என் தக்களி "

அனிஷா " என்னது டி யா "

ஆர்ஷாத் " நீ மட்டும் என்ன டா சொல்ற "

அனிஷா " நா அத்தான்ல சொல்றேன் "

அர்ஷாத் " அத பிறகு டீல் பண்ணிக்குறேன். இப்போ வேற பேசலாம் வா " என அழைத்து தன் நெஞ்சில் சாய்த்தவன். அவளின் முடியை கோதியபடியே பேச ஆரம்பித்தான்.

தேங்க்ஸ் எதுக்கு சொன்னேனா.

நீ எல்லா விளக்கமும் என்கிட்ட கேட்டு என்கூட ஒத்திருந்தனா எனக்கு கஷ்டமாயிருந்திருக்கும். ஆனா என் பொண்டாட்டி எப்படி இருந்தாலும் என்ன புரிந்து ஏத்துக்கிட்டா அப்படிங்கற சந்தேசம் எனக்கு தந்ததுக்கு நன்றி சொன்னேன் விளங்குதா.

நச்சுன்னு ஒரு முத்தம் கன்னத்தில்

விழுந்தது அர்ஷாத்திற்கு .

" வாவ் என் பொண்டாட்டி எனக்கு முத்தம் கொடுத்திட்டா " சத்தமாக சொல்லவும்.

அவன் உதடுகளை கடித்திருந்தாள் அனிஷா. அப்படியே அவள் மேல சரிந்தவன் ஆடையில்லா அவளுடலில் தன் உடலால் கவிதை எழுதினான்.

எல்லாம் முடித்து எழுந்தவன் அனிமா கொஞ்சம் பேசனும் பக்கத்துல நல்லபிள்ளையா உட்காரு என சொல்லியவன். அவள் தோளில் கைப்போட்டு பேச ஆரம்பித்தான்.

அனிஷாவை அவனிடமிருந்து பிரித்து சென்று ஒருவாரம் ஆகிய நிலையில்.

அவனுடைய ரூமில் அவளோட வாசனைய உணர்ந்துகொண்டே படுத்திருந்தான்.

தன் துணை இல்லாதிருந்தால் ஒரு மனிதனின் நிலை இப்படி ஆகுமா என சொல்லுகிற அளவுக்கு அவன் இருந்தான்.

அந்த ஒரு வாரமும் உணவு உண்டானா தெரியாது என்ன செய்தான் எனவும் தெரியாது பித்து நிலைதான் அவனுக்கு.

கவிதாவிடம் பேசுவதில்லை. யாரிடமும் வாயேதிறப்பதில்லை.

திடீரென கவிதாவின் அழுகை சத்தம் ரெம்ப கேட்க. ஓடிச்சென்று பார்த்தான்.

அவங்க அப்பாவை ஆம்புலன்ஸ்ல கொண்டுபோக நின்றிருந்தனர். அவன் சித்தப்பாவும் கூட இருந்தார்.

இவன் என்னனு கேட்டதும்தான் தெரியும். அவருக்கு நெஞ்சுவலின்னு.

என்ன ஏது ஒன்னும் தெரியாம கூடவே சென்றான்.

ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் சொல்லிட்டாங்க மாஸிவ் அட்டக். இரவும் பகலும் பாராது ஆஸ்பத்திரியிலயே இருந்து பார்த்து அவரின் உடல்நிலை தேறியதும் வீட்டிற்கு கூட்டி வர ஒருமாசம் ஆகியது.

அவரது மெடிக்கல் செலவே ஒரு தொகையை தாண்டியது.

அவரது உடல்நிலை பிஸினஸ் பார்த்துக்கற அளவு இல்லை. அதனால அரஷாத்தை அழைத்து இதுக்கு பிறகு நீதான் செங்கல் சூளையை பார்த்துக்கோ என சொல்லவும் வேற வழியில்லாமல் சரியென தலையசைத்தான்.

தொழிலுக்கு அவன் சென்றபின்தான் தெரியும். அவ்வளவும் நஷ்டம் திரும்ப

பணம்போட கையில

இருப்புக்கிடையாது.

உருட்டிபிரட்டி கொஞ்சமா ஒப்பேத்திக்கிட்டிருந்தான் தொழிலை.

என்ன செய்ய என விழிபிதுங்கி நின்றான்.

 அனிஷாவின் விசயம் கொஞ்சம் ஒதுக்கி வைத்தான். அவனுக்குமே இப்போ இருக்குற நிலையில அவளையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்தான்.

ஒரு நாள் அவங்க அப்பா அவனையும் மனைவியையும் அழைத்து பேசினார்.

அர்ஷாத்திடம் " உன்ன மட்டுமே நம்பி வாழ வந்த பெண்பிள்ளை நிறைஞ்ச வீட்ல இருந்து கதறி அழுதிட்டு போச்சிது. அந்த பாவமோ என்னவோ நம்ம இந்த நிலைமையில இருக்கோம்.அந்த பிள்ளைய அழவைக்காதிங்க.ரெம்ப நல்ல பிள்ளை. உங்க அம்மாக்கு எதுவும் ஆயிடுமோ அப்படி நினைச்சித்தான் அந்த பிள்ள இங்கயிருந்தே போச்சிது "

கவிதாவைப்பார்த்து " அவன் தலைமேல நிறைய பாரத்தை தூக்கி வச்சிட்டேன் என வருத்தப்பட்டவர். அடுத்த பொண்ணடிய அழவச்சா நம்ம வீட்டுப் பொண்ணடிக்குத்தான் சாபம் வரும் பார்த்துக்க என சொன்னார் "

அடுத்த நாள் தன் அப்பாவை காணவந்தவன் கண்டது. அவரது உயிரற்ற உடலைத்தான்.

என்ன செய்ய எனத்தெரியாது திக்குத்தெரியாத காட்டில் நிற்பதாக இருந்தது அவனுக்கு.எழும்பி வருவாருன்னு பார்த்தா அப்படியே எங்கள விட்டுட்டுபோயிட்டாரே.

இதுக்குத்தான் நேத்து அவ்வளவு பேசினாரோ என எண்ணிக்கொண்டான்.

எல்லாக்காரியமும் முடித்து இரண்டு நாள்கூட ஆகலை. வீட்டுக்கு வரிசையா ஆள் வந்தாங்க அப்பா வாங்கிய கடனுக்காக. மலைத்தனர் இதனாலத்தான் அப்பாவுக்கு அட்டாக் வந்திருக்குமோ என நினைத்தான்.

இருந்த கொஞ்சநஞ்ச சொத்துக்களையும் வித்து குடுத்தாச்சி.இனி ஒன்னுமே இல்லாதநிலை அவனோட வண்டி வரைக்கும் வித்தாச்சி. இதுல இருந்து மீண்டுவரவே கொஞ்சநாளாகும்.

கவிதாவிற்கும் அவர் கணவர் வாங்கிய கடன் தெரியாது. தன் கனவர் என்ன பண்றாரு எப்படி பிஸினஸ் நடத்துறாரு என எதுவுமே தெரியாம இப்போ நிராதரவாக விழிபிதுங்கி நின்றனர்.

ஏழாவது நாள் காரியம் முடிஞ்சி இருக்கும்போது தான் தேவாவிற்கு ஃபோன் செய்தாள் இவன் பதில் சொல்லும்போதே தேவா சத்தமா திட்டினான். அவாகிட்ட எதுக்குடா இப்போ இப்படி பேசின.

அர்ஷாத் " வேண்டாம்டா கடவுள் தான் என்கிட்ட இருந்து அவள பிரிச்சிருக்கனும். அவளும் என்கூட சேர்ந்து கஷ்டப்பட வேண்டாம் என நினைச்சிருப்பார்.

அவ்வளவு சீக்கிரம் அவ மனசு மாறமாட்டா. அவங்கப்பா எதாவது அடாவடியா செய்து அவளுக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைச்சி தருவாரு "

தேவா " அப்படி இல்லனா என்ன பண்ணுவ. அவங்கப்பா சொல்றதையெல்லாம் அவா கேட்கமாட்டா. வேணும்னா பாரு அப்படியேதான் இருப்பா. சரி அதவிடு நீ எப்படி அவா இல்லாம இருப்ப அத யோசிச்சியா. தாங்க மாட்டடா அவாகிட்ட எல்லாத்தையும் சொல்லிரு "

அர்ஷாத் " தலையை குனிந்துக்கொண்டே சொன்னான். முடியாதுதான் அவா இல்லாம நான் எப்படி.... "

அப்படியே வெளியே கிளம்பி நடந்தவன் எங்கபோறோம் எங்க இருக்கோம் எங்கே படுத்திருக்கோம் என நிலைத்தெரியாது படுத்திருந்தவன்.

இராத்திரி 2 மணிக்கு வீட்டுக்கு வந்தான்.

இப்படியாக ஒரு பத்து நாள் கழித்து போஸ்ட்மேன் குடுத்த கவர் பார்த்து நின்றவன். பிரித்து படித்ததும் அப்படியே தலையில் கைவைத்து உட்கார்ந்தே விட்டான்.

கவிதாதான் அவனை தட்டி என்ன எனக்கேட்கவும். நம்ம நம்ம வீடு ஏலத்திற்கு போகப்போகுது ஜப்தி நோட்டீஸ். இன்னும் ஒரு மாசந்தான் டைம் தந்திருக்கு.

கவிதா ஓங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.

உடனே அவரோட அண்ணனுக்கு போன் செய்து சொன்னார்

கவிதாவின் அண்ணன் பேசினார் நம்ம எதாவது செய்யமுடியமானு பார்க்கலாம் என சொன்னவர்.

பிரச்சனை முடியறவரை என் வீட்டில இருங்க என அவர்கள் வீட்டிற்கு அழைத்துசென்றார். அங்கு சென்றபிறகுதான் புரிந்துக்கொண்டான் பணம் இல்லனா என்ன மரியாதை கிடைக்கும் எனத்தெரிந்துக்கொண்டான்.

சாப்பாடுல இருந்து எல்லாத்திற்கும் காத்திருக்கும் நிலை.

அர்ஷாத்துதான் ஒரு ஆண்மகனாக குன்றிப்போனான். இப்படி ஒரு நிலையா என எண்ணியவன் அழைத்தது சந்துருக்குத்தான்.

அவனிடம் எல்லா விசயத்தையும் சொல்லி விசா ஏற்பாடு செய்ய சொல்லிருந்தான்.

அதற்குள் இங்க கவிதாவும் அவர் அண்ணனும் வேறவிதமாக போசி முடித்திருந்தனர். அதாவது அவரோட இரண்டாவது பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளையா அர்ஷாத்த கல்யாணம் பண்ணாக்கொடுப்பாங்கலாம். அதனால அவன் தங்கை ரம்யாவிற்கும் அவரே நகையெல்லாம் போட்டு கல்யாணம் செய்து குடுத்திருவாரம், இதுக்கு சம்மதம் என கவிதாவும் ஒப்புக்கொண்டார் அரஷாத்தை கேட்காமலயே.

அப்படினா இப்போதைய நிலைக்கு பண உதவி செய்வதாகவும் கூறியிருந்தார் அவனது தாய்மாமா.

அதற்குள்ளாக வக்கீல் மூலமாக ஜப்திக்கு தடை வாங்கியிருந்தான்.

ஏன் என்றால் கடன் வாங்கியவர் உயிருடன் இல்லை என்று.

எல்லாம் முடிந்ததும் தான் தன் தாய்மாமவின் சுயரூபம் தெரிந்தது.

கவிதாவை அழைத்து " ஏன்மா என்னோட வாழ்க்கை பத்தி தெரிஞ்சும் இப்படி செய்தீங்க. என்னபத்தி கொஞ்சமாவது நினைச்சி பார்த்தீங்களா. அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா என்னைய கையலாகதவன் என நகனைச்சிட்டீங்க இல்ல. எவ்வளவு வலியோட இருக்கேன் நீங்க இப்படி செய்வீங்கனு எதிர் பார்க்கல"

அன்றோடு பேச்சைநிறுத்தியவன்

இப்போதுதான் பேசினான்.

ஒரு நிமிடம் பேச்சை நிறத்தி கண்களை மூடியவன் தாய்மாமா விட்லயும் பிரச்சனை. பல நாள் ஒருவேலை தான் உணவு. இரண்டு நாள்லாம் சாப்பிடாம இருந்திருக்கேன் தெரியுமா.

அனிஷாவுக்கு இதக்கேட்டு அவ்வளவு அழுகை நம்ம இவன் என்ன செய்றான்னு யோசிக்காம இருந்திருக்கோம் என அழுதாள்.

மறுபடியும் சொல்ல ஆரம்பித்தான்.

என்ன செய்ய கிட்டதட்ட மூன்று மாதம் கழித்து அவனுக்கு விசா எல்லாம் வரவும் யாரிடமும் சொல்லாமல் ரெடியாகி போகும்போது மட்டும் தன் தங்கையிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஏர்போர்ட் போயிதான் அனிஷாவிற்கு மெசேஜ் செய்தான். நம்மதான் இப்படி இருக்கோம் நம்மகூட சேர்ந்து அவ எதுக்கு கஷ்டப்படனும் என நினைத்துதான் அனுப்பினான்.

அது அவளை எவ்வளவு காயப்படுத்தும் எனத்தெரிந்தும் செய்தான்.

வேலைக்கு சேர்ந்தாலும் மனசு முழுவதும் இங்கதான். முதல்ல ரெம்ப கஷ்டப்பட்டது சாப்பாட்டுக்குதான் அசைவ சாப்பாடு வாமிட் வரும்.

அனிஷா கூட இருந்திருந்தா இதெல்லாம் ஓரளவு பழகிருப்பேன்தான.அப்படினு நினைச்சே அசைவம் சாப்பிட பழகினான்.

நாலு வருசம் ஊருக்கே வரல. தங்கச்சி கல்யாணத்திற்குத்தான் வந்தேன்.

அனிஷா எழும்பி அவனை தன் நெஞ்சில் தாங்கிக்கொண்டாள்.எவ்வளவு வலி தாங்கியிருக்கான்.

இந்த வீட்டை மீட்டுட்டேன். அப்பா கட்டினதுன்னு இது மட்டுந்தான் மீதி அதான்.

இப்போ உங்க வீட்டளவு இல்லைனாலும் என் பொண்டாட்டி பிள்ளைங்களை பாத்துக்கறளவுக்கு நல்லாவே சம்பாதிக்கிறேன்.

அவன் தலையை கொதிவிட்டவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.

அர்ஷாத் " அனிமா எம்மேல எதாவது கோவம்னா சொல்லிரு மனசுக்குள்ள வச்சி அழாத "

அனிஷா " ஒன்னுமில்ல "

அரஷாத் " ப்ச்ச் இப்பதான சொன்னேன். எதுனாலும் என்கிட்ட கேளு இல்லனா சண்டைப்போடு "

அப்பவும் அமைதியாக இருந்தாள்.

திரும்பி படுத்து அவளோட முகத்தை பார்த்தவாறு கேட்டான்.

" என்னடா "

 

அனிஷா " அங்கபோன பிறகாவது என்கிட்ட சொல்லிருக்கலாம். நா எப்படி இருக்கேன்னு கேட்டியா அதுகூட பரவாயில்லை. ஆனா கேட்டப்பாரு கேள்வி அதுலயே நான் பாதி செத்துப்போயிட்டேன்."

மொபைல் எடுத்து வாட்ஸப் சாட் காமிச்சதும் அர்ஷாத் " ஐயோ நல்லது செய்யுறேன்னு எனக்கு நானே செய்வினை வச்சிக்கிட்டனே " என்க

அர்ஷாத் முடிய பிடிச்சி ஆட்டுனா.

ரெம்ப நாள் கழிச்சி மெசேஜ் வந்திச்சா.ஐயா நம்மள இன்னும் மறக்காம இருக்காரேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டா " உன் ஹஸ்பண்ட நல்லயிருக்காரா,எத்தனை குழந்தைங்கனு கேட்குற நீ "

அர்ஷாத் " அதுக்குத்தான் அவன் செத்துப்போயிட்டானு சொல்லிட்டு பிளாக் பண்ணிட்டியே. சூப்பரா மறுபடி தந்துட்டயே "

" இப்படி கேட்டா அப்படித்தான் சொல்லுவேன். உன்ன கொல்லாம விட்டனே சந்தோஷப்படு.

 மனுஷனாட நீ "

" என் மேல எவ்வளவு நம்பிக்கை. நம்ம இல்லனா இவா இன்னொருத்தன கல்யாணம் செய்து சந்தோஷமா வாழ்வான்னுதான நினைச்ச.

இதவிட எனக்கு என்ன கேவலம் இருக்க முடியும்

எனக்கு கொஞ்சம் பிரச்சனையிருக்கு அதுமுடிச்சிட்டு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணு சொன்னா. நா இருக்கமாட்டனா. என்ன இப்படித்தான் புரிஞ்சி வச்சிருக்க இல்ல.

அர்ஷாத் " எவ்வளவு நாள் வெயிட் பண்ணுவ. எனக்கே தெரியாது எப்போ எல்லாம் முடிப்பேன்னு "

அனிஷா " லவ் பண்ண பொண்ண விட்டுகுடுத்தா பரவாயில்ல.

நீ கல்யாணம் பண்ணி தாலிய வேறக்கட்டி,குடும்பம் நடத்திட்டு விட்டுக்குடுக்கன்னு ,வேற கல்யாணம் செய்ய சொன்னா கேட்டுட்டு தலையாட்டிட்டு இருக்க நான் என்ன பைத்தியக்காரியா.

அப்போ உன் கஷ்டத்துல எனக்கு பங்கு இல்லையா.சந்தோசத்த மட்டுந்தான் பகிர்ந்துக்கனுமா "

அர்ஷாத் " ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணம் எனக்கு என்னோட ஏஞ்சல் கஷ்டபடவேண்டாம்னு தோனுச்சி செய்தேன்.புரியுதா "

நீ இல்லாம நா மட்டும் சந்தோஷமா வாழமுடியுமா என்ன என அவள் கன்னத்தை தடவினான்.

திடீரென ஞாபகம் வந்ததுபோல இரு உனக்கு ஒன்னு காமிக்குறேன். என எழும்பி அவன் பீரோவில் இருந்த பொருளை எடுத்து அவள் கையில் கொடுத்தான். " இது ஞாபகமிருக்கா.

இத்தனை வருசமா என்கூடவே இருக்கு. உன் வாசம் அதுல இப்பவும் இருக்கு பாரேன் "

அனிஷா ஆச்சர்யமா அவனை பார்த்திருந்தாள்.

அத்தியாயம் - 19

இது கருவில் போட்ட முடிச்சோ

உனக்கும் எனக்குமான

இந்த ஆயுட்கால பந்தம்..

            அவன் கையில் வைத்திருந்த பொருளைப்பார்த்து ஆச்சர்யம். அதை அவள் மறந்தேபோயிருந்தாள்.

  அது முதன்முதலாக அவர்கள் வாழ்வை தொடங்கும்போது கட்டியிருந்த அந்த கிழிந்த சேலை அது.

   இப்போவும் உன் வாசம் வீசுதுபாரு என அவள் முகத்திற்கு நேராக நீட்டினான்.

   வெளிநாட்டிற்கு வேலைக்கு போன இடத்துக்கும் கொண்டுபோனேன்.

உன்னதான் வேற கல்யாணம் செய்ய சொன்னனே தவிர.உன்னைத்தவிர வேறயாரும் என் வாழ்க்கையில வரமுடியாது.அது எனக்குத் தெரியும் அதுதான்.

   உன்னிடத்தை நிரப்ப யாராலும் முடியாது. அத நான் செத்து சுண்ணாம்பா போறவரைக்கும்.

அப்படியே கீழ விட்டத்தை பார்த்து படுத்துகொண்டே சொல்லியிருந்தான்.

   அந்த வார்த்தை அனிஷாவிற்கு அப்படியோரு தாக்கத்தை கொடுத்தது. அப்படியே ஓடிப்போயி அவன் மேல வாகாய்ப்படுத்துகொண்டாள்.

   வாழ்கையும் சரி குடும்பமும் சரி அவர்களுக்கு நிறைய காயங்களைக்கொடுத்தும் அவர்களின் காதல் ஒருவரையொருவர் இன்னும் ஆழமாக நேசிக்க வைத்தது.

   தன்மேல படுத்திருந்தவளை பார்த்து உன்ன காயப்படுத்தனும் என எதையுமே செய்யல. நீயாவது நல்லயிருக்கனும்னு தான் யோசித்தேன் சாரிடா மன்னிச்சிரு என்றான்.

    அவள் அவன் கண்களைத்தான் பார்த்திருந்தாள். அவள் கன்னங்களை தொட்டு இன்னும் அந்த குலோப்ஜாமூன் சாப்பிடறத நீ விடலையா. இப்பவும் உன் கன்னம் அப்படித்தான இருக்கு. கடிச்சி சாப்பிடனும்போல என சொன்னவன்.கன்னங்களை கடித்துதின்க முயற்சித்தான்.

" ஸஸ்அஆஆஆ. வலிக்குது த்தான் என தடவிக்கொண்டாள். அப்போ வலிக்காமா கடிக்குறேன் என் மீண்டும் முயற்ச்சிக்க.

     அவள் தடுக்க அவன் உதடுகள் இப்போது வேற வேலையில் மும்முறமஅவள் உடல்மொழியும் அவனை இன்னும் தூண்ட மீண்டுமாக தேடலை துவங்கியவர்கள் எப்போது முடித்து எப்போது உறங்கினர் என்று அவர்களுக்கே தெரியாது.

  காலையில் எழுந்தவள் பிள்ளைக்கு எதாவது செய்யவேண்டும் என நினைத்து அவளும் பிள்ளையும் பிரஷ்ஷாகி வெளிய வரவும் ஹாலில் புதிதாக யாரோ அமர்ந்திருந்தனர்.

   அப்போதுதான் அர்ஷாத்தின் தங்கை ரம்யா அவனிடம் உரிமையாக பேசும்போதுதான் அறிந்துக்கொண்டாள். அது அவளோட வீட்டுக்காரர் என.

    அவனது பார்வை அனிஷாவையும் பிள்ளையைக் கண்டதும் ஏளனப்பார்வை பார்த்தான். அவர்களது குடும்பமும் அங்கதான் இருந்தது

    அவளுக்கும் புரிந்தது இந்தவீட்டு மருமகன் என்று. எங்க விசயம் ஒன்றும் அறியாமல் எப்படி இப்படி பார்க்கலாம் என உள்ளம் கொதித்தது.

    இனி கொஞ்சநாட்கள் இப்படித்தான் போகும் என அறிந்தவள் ஒன்றும் சொல்லாமல் கிட்சன் சென்று கவிதாவிடம் பிள்ளைக்கு பால் வேணும் எனக்கேட்கவும் அவர்தான் பிள்ளைக்கு பால் கலக்கி கொடுத்து அவளுக்கு டீயும் கையில் கொடுத்தார்.

   கவிதா வேறு எதுவும் பேசவில்லை.

பிள்ளயை தனது கையில் வாங்கிக்கொண்டார்.

       அனிஷா ஒன்றும் சொல்லவில்லை அர்ஷாத்துக்காக மட்டுமே எல்லாம் சகித்தாள்.இல்லையென்றால் பிடிவாதம் பிடித்து தனியாக சென்றிருப்பாள்.

    இன்னோரு கப் டீயை அவள் கையில் கொடுத்து அர்ஷாத்தை எழுப்பிவிட சொன்னார்.மருமகனும் அவங்க குடும்பமுரம் வந்திருக்காங்க நம்மதான் கவனிக்கனும் என தன்போக்கில் சொல்லியும் சென்றார்.

    மேல சென்றவள் அர்ஷாத்தை எழுப்பி விசயத்தை சொன்னாள்.

     அவளது முகவாட்டத்தைப் பார்த்து என்ன எனக் கேட்கவும் அவள் ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.வந்த அடுத்த நாளே நம்மளால எந்த பிரச்சனையும் வரக்கூடதென நினைத்தவள் அவன்கூடவே மறுபடியும் கீழே சென்றாள் அர்ஷாத் தங்கையின் கணவனிடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தான்.

   அர்ஷாத்தின் சொந்தங்கள் ஒவ்வொருவராக மெதுவாக வந்து பார்த்து சென்றனர் . அனிஷாவுக்குத்தான் ஒருமாதிரி இருந்தது.ஏற்கனவே அரசல்புரசலாக ஊரில் தெரிந்திருந்தது இவர்களது காதல் கல்யாண விவகாரம்.

   மதியத்திற்கு மேல் வீட்டிற்கு முன் கார் சத்தம் கேட்கவும் வந்து பார்த்தனர். 

ஜெயராஜ்-சாரதா,ஆனந்தராஜ்- அனுராதா

ஜீவா குடும்பமாக வந்திருந்தனர்.

  அனிஷாவிற்கு அவ்வளவு சந்தோசம் ஓடிவந்து அனுராதவை கட்டிக்கொண்டு சாரதா கையை பிடித்திருந்தாள். ஏதோ வருசக்கணக்கா பார்க்காதமாதிரி ஓவர்ஃபீலிங்க். அர்ஷாத் சிரிக்கவும் என்ன எனக்கேட்டாள் இதை சொல்லி சிரித்தான்.

    அர்ஷாத் தங்கையின் குடும்பமும் அங்கதான் இருந்தது. பக்கத்து ஊருதான் அவங்களோடது.

      உபசரிப்பு முடிந்ததும் ஆனந்தராஜ்தான் தொடங்கினார்.

தம்பி என அழைக்கவும் அனிஷாதான் அப்பா அவங்க உங்க மருமகன்தானப்பா பெயர் சொல்லியே கூப்பிடுங்க என சொல்லவும், அர்ஷாத்தும் அதைத்தான் சொன்னான்.

       " அது சரியா இருக்காது வேணும்னா மருமகனேனு கூப்பிட்றேன் "என சொல்லவும் தம்பிக்கு இது பரவியில்லை என எண்ணியவன் சரி எனத்தலையசைத்தான்.

   ஆனந்தராஜ் பேச்சைத்தொடங்கினார். எப்படி கல்யாணம் முடிச்சிருந்தாலும் எங்க பாப்பாக்கு நாங்க செய்வேண்டியது நிறைய இருக்கு அதக்குடுக்கத்தான் வந்தோம் என கூறவும்.

    அர்ஷாத் " எனக்கு எந்த சீரும் பொருளும் என எதுவுமே வேண்டாம் அது எனக்கு தேவையிமில்லை " என பட்டென சொல்லிமுடித்தான்.

    ஜெயராஜ் " இல்ல அவளுக்கு என உள்ளது அவளுக்குத்தான். அத நீங்க வாங்கிக்கனும் தயவுசெய்து எங்க பாப்பாவ நாங்க வெறுங்கையோட அனுப்பினமாதிரி கஷ்டமா இருக்கு எஙகளுக்கு " என்றார்

     அனிஷா " உங்க மருமகனுக்கு வேண்டாம். எங்கப்பா எனக்கு தர்றத நான் வாங்கிக்கறேன். ஏன் என்றால் அவளுக்கு தெரியும் அது அவளோட பெற்றோருக்கு கௌரவப்பிரச்சனை சரிப்பா எனக்குள்ளத தாங்க என சொல்லவும் "

    அர்ஷாத் " அனிமா இது சரியில்ல. நான் வேண்டாம் சொல்லியாச்சி இப்போம் நீ வாங்கினா என்ன அர்த்தம் " என்கவும்

 

அனிஷா " த்தான் நான் ஒரே பொண்ணு அவங்க ஆசையா எனக்குத்தான் செய்யமுடியும் அவங்க விருப்பம்போல செய்யட்டும் " என்றாள்.

கவிதாவை அழைத்தனர் அவர் வர யோசிக்கவும். அனுராதா " இங்க வாங்க அண்ணி எங்கப்பொண்ண உங்கள நம்பிக்குடுத்திருக்கோம் நீங்க சபைக்கு வாங்க என்ன ஒதுக்கம். நாங்க எதுவும் இப்படியெல்லாம் பார்க்கமாட்டோம்.

உங்க பிள்ளைங்க நல்லாயிருக்கனும்னு உங்களவிட யாரு வாழ்த்திடப்போறாங்க வாங்க என அழைக்கவும் வந்தார்.

      அர்ஷாத்தின் சித்தப்பா குடும்பமும் வந்தனர்.

அவர்கள் முன்னாடியே தனது மகளுக்கான நகையினது லாக்கர் சாவியை அவள் கையில் குடுத்தனர். எத்தனை பவுன் நகை எனச்சொன்னதும் தான் அங்கிருந்தவர்களின் வாய் ஒரு நிமிடம் திறந்து மூடியது.

      அடுத்து அவளின் பேரில் இருக்கும் சொத்துப்பத்திரங்களை அர்ஷாத்-அனிஷா இருவரின் கரங்களில் சேர்த்தே தந்தனர்.

    அர்ஷாத்துக்கு கொஞ்சங்கூட விருப்பமில்லை அதை அவன் தன் செயலில் காண்பித்தான்.

     ஜெயராஜ் பேசினார் " ஒரு தகப்பானா என் மகளோட வாழ்க்கையில எதுவும் தப்பா நடந்திடக்கூடாது அப்படிங்கறதுக்காகவே நிறைய செய்தேன். அதுக்காக வருத்தப்படல.

    ஆனால் என் மகளோட நிலை எந்த இடத்துலயும் தாழ்ந்து போகக்கூடாது.

ஒன்னுமில்லாத வீட்டுப்பிள்ளைய போல வெறுங்கைய வீசிட்டு வந்துட்டா அப்படி என நாளபின்ன யாரும் எங்க பாப்பாவ சொல்லக்கூடாது.

     இதுவே நாங்க செய்ய நினைச்சதுல பாதிதான். மீதிய எங்க பேரப்பிள்ளைங்களுக்கு செய்துக்கறோம் " என சொல்லி முடித்து கையில் கொடுத்தார்.

    கவிதா அன்றைக்கு அனிஷாவீட்டிற்கு போயிட்டு வந்ததுலயே அவங்க குடும்பத்தின் செல்வநிலை தெரியும் ஆனால் மகளுக்கு செய்தத பார்த்து இவ்வளவா என ஆச்சர்யம்.

   அனிஷாவை ஏளனமாக பார்த்த அர்ஷாத்தின் தங்கை ரம்யாவும் அவளது குடும்பமும் இப்போது இருந்த இடம்தெரியாமல் இருந்தனர்.

   பணமும் வசதியும் சில இடத்துல பேசும் என நன்கு அறிந்தவர்கள் ஜெயராஜிம் ஆனந்தராஜிம்.

   பிற்காலத்துல நம்ம பிள்ளை இப்படி வந்தத யாரும் குறிப்பா அர்ஷாத் வீட்ல குறையா சொல்லிட்டா நம்ம பிள்ளைதான் கஷ்டப்படும் என யோசித்துதான் தங்களுடைய மகளுக்காக வந்திருந்தனர்.

    இப்படியே ஒருமாதம் சென்றிருக்கும் அன்று அர்ஷாத் வீட்டிலிருக்கவும் அனிஷா வந்தவள் ." த்தான் "

அர்ஷாத் " ம்ம் "

அனிஷா " த்தான் "

அர்ஷாத் " ம்ம் "

அனிஷா " டேய் "

    அர்ஷாத் " டேயா அடிங்க உன்னவிட மூனு வயசு பெரியவன் நான்.வர வர மரியாதையே இல்ல லவ் பண்ணும்போது கூப்பிட்ட பரவாயில்ல. இப்போ கல்யாணம் முடிஞ்சு ஒரு பிள்ளைக்கு தகபப்ன் உன் புருஷன் ,எதுக்கு டேய் சொல்ற "

அனிஷா ஒன்னும் சொல்லாம அமைதியா இருந்தாள்.

 

அர்ஷாத் " என்னடா சொல்லு "

அனிஷா " வீட்ல இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு .நான் வேலைக்கு போகவா "

அர்ஷாத் " ஏன் அம்மா எதுவும் சொல்றாங்களா "

அனிஷா " இல்ல "

     அர்ஷாத் " அப்பறம் ஏன்,

செலவுக்கு காசு வேணும்மா நான் தர்றேன் "

      அனிஷா சொல்ல ஆரம்பித்தாள். " ச்ச்.இவ்வளவு நாள் வேலைப்பார்த்திட்டு இப்போ சும்மா இருக்கேன். சாராவ அத்தை பாத்துக்றாங்க எனக்கு வேற வேலையே இல்ல அதுதான் "

   அர்ஷாத் " அப்படியா,இங்க வா என அருகில் உட்கார வைத்து. அப்போ நம்ம வேற பாப்பா உருவாக்குற வேலை பார்ப்போம் எப்படி முதல்நாள் அவளிடம் கண்ணடித்தது மாதிரியே செய்யவும் மயங்கித்தான் போனாள் "

      சிறிது நேரத்தில் தெளிந்தவள் " எப்பவும் இதே பேச்சுதான் என அவனைத் தள்ளிவிட்டு போடா டேய் பழம் மாதிரி இருந்திட்டு செய்யறதெல்லாம் பலான வேலை " எழும்பி வெளியே செல்லப்போகவும்.

    அர்ஷாத் அவளைப்பிடித்து நிறுத்தி கேட்கவும் " நீயும் வெளிய போயிடுற நான் தனியா இருக்கறமாதிரி இருக்கு.

எங்க வீட்லயிருந்து சீர் செய்யற வரைக்கும் வேறமாதிரி பார்த்தாங்க.

அதுக்கு பிறகு ஒட்டாம தள்ளி நிக்குறாங்க உங்கவீட்டு ஆளுங்க. பிள்ளை வேணுமாம் ஆனா அவளப்பெத்த நான் வேண்டாமாம் " என சொல்லி அழத்தொடங்கினாள்.

அவனுக்கே தெரியும் இப்படி பிரச்சனைகள் வரும் என அதை சரிசெய்வதற்கான எல்ல ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்தான்.

இப்போ இவள் அழவும் " என்னாட இப்படி அழற. நம்ம எவ்வளவு பெரிய பிரச்சனைகள்ல இருந்து மீண்டு வந்திருக்கோம் இப்படி அழுதா எப்படி.

உங்கவீட்டுக்கு போயிட்டு வர்றியா. நாகர்கோவில்தான் போறேன் உன்னகொண்டு விட்டுட்டு வர்றேன்.

அனிஷா " வேண்டாம் இங்க வந்ததுக்கு பிறகு என்ன வீட்டுக்கு சாரும்மாவும் கூப்பிடல அனுமாவும் கூப்பிடல, வான்னு சொல்லவும் இல்லை என்ன மறந்திட்டாங்க அங்க வேண்டாம் "

அர்ஷாத் " அப்படில்லடா இப்போதான் ஒன்னா சேர்ந்திருக்கோம் அதான் அவங்க கூப்பிடல. என்னடா பிரச்சனை உனக்கு "

அனிஷா " தெரியல இங்க எல்லாரும் என்ன ஒருமாதிரி பாக்கற மாதிரி தோணுது "

  

   அவனுக்கும் புரிந்தது..அதை சரி செய்யத்தான்

இந்த ஒருமாசம் அலைஞ்சிதிரியறான்.

  அவளை அருகில் அமர்த்தி மெதுவாக பேசினான் " யாருமே இல்லாம என்னோட பிள்ளை எனக்கு வேணும் என தைரியமா சாராவ பெத்து பாதுகாத்து, வளர்த்து தைரியமாக இருந்த அந்த அனிஷா பாப்பா எங்க போனாள் "

   சமூகம் சில விசயங்கள் குறை சொல்லும் அவங்க சூழ்நிலையென்ன எப்படியான வாழ்க்கை என சிந்திக்கமாட்டாங்க.

   இப்படி ஒன்னொன்னுக்கும் அழுதா வாழ்க்கை முழுசம் அழனும் சரியா.நீ இப்படி அழுதா நம்ம பிள்ளைய எப்படி தைரியமா முடிவெடுத்து வளர்க்கமுடியும். அது அவளை பாதிக்கும் புரியுதா.

நம்ம இரண்டு பேரும் இந்த வாழ்கைய நமக்கென அமைச்சிக்க பட்ட கஷ்டம் நமக்கு மட்டுந்தான் தெரியும் யாருக்கிட்டயும் போயி நாங்க அப்படியில்ல இப்படியில்லனு சொல்லி விளக்கிட்டிருக்க முடியாது சரியா "

அனிஷா மெதுவாக தலையசைத்தாள். அர்ஷாத் இது நமக்கான நேரம் சரியா.இப்போ என்ன பத்தி மட்டும் நினைப்பியாம். என சொல்லியவனின் கைகள் அவளின் அதரங்களை பிடித்து இழுத்தது.

" த்தான் வலிக்குது விடு "

அவள் சொன்னதும் கைகளை விட்டவன் தன் உதடுகளால் அவள் அதரங்களை பிடித்திருந்தான்.

அவள் விலக எத்தனிக்க இன்னொரு கரம் கொண்டு அவள் முடிகளுக்குள் தன் விரல்களை கொடுத்து பிடித்தவன் அவள் எழாதிருக்க செய்தான்

அவள் வாகய் அவனுக்கு இசைந்துக்கொடுக்கவும் அவள் இடையோடு தன் ஒருகரத்தால் அணைத்து தன்மேல் ஒட்டிக்கொள்ள செய்தான்.

சிறிது நேரம் சென்று அவளை விடுவித்தவன். நான்கு வருட வெறுமையான வாழ்க்கைதான் நியாபகத்திற்கு வந்தது..

அதை இல்லாமல் ஆக்க.இன்னும் அவளை தன்பிடியில் வைத்திருந்தவன் அவள் காதில் மெதுவாக மேல தட்டுக்கு போவமா எனக்கேட்டான்.

" பிள்ள தேடுவா "

" அவா அம்மாகிட்டதான இருக்கா பார்த்துப்பாங்க. இல்லன நம்மள கூப்பிடுவாங்க " என அவன் சொல்லவும். அவளும் சரி என தலையாட்டவும் மேல தூக்கி சென்றான். அங்கே அவள் பார்த்தது கீழ பெட் விரிச்சி எல்லா செட்டப்பும் ரெடி

இது எப்போ நடந்திச்சி. என தன் கண்களை விரித்தாள்.

அர்ஷாத் அவளை இறக்கி விட்டு கைகளை கட்டி அவளைத்தான் பார்த்திருந்தான்..

அசையாமல்.

" த்தான் என்ன இப்படி பாக்குற "

திரும்பவும் அப்படியே அசையாமல் அப்படியே அவளை இமையெடுக்காம பார்த்திருந்தான்.

" த்தான் " அவள் அவன் நொஞ்சில கைவைத்து தட்டவும் கையைபிடித்துக்கொண்டான்.

" ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி என் தேவதைப்பெண்ண இங்க கூட்டிக்கிட்டு வந்து அவக்கூட வாழ்க்கைய தொடங்கின நாளாம் இன்னைக்கு "என சொல்லி முடிக்கவிடவில்லை அர்ஷாத்தை கட்டிப்பிடிக்கறேன்னு அவனையும் சேர்த்து கீழ தள்ளியிருந்தாள். 

அனிஷா " நீ மறந்திட்டியோனு நினைச்சன் "என சொன்னவளின் கண்களில் கண்ணீர் முட்டி நிற்க கண்டவன். அவள் தலையை செல்லமாக ஆட்டி அவளைத் தன்மடியில் இருத்திக்கொண்டான்.

நிறையக்கதைகள்பேசினர்.கொஞ்சிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இதழ்கள் உரசிக்கொண்டும் உடல்கள் தீண்டிக்கொண்டும் அந்த ஏகாந்தப்பொழுது அவர்களுக்கு மட்டுமே இனிதான பொழுதாக அமைந்தது.

அவளை படுக்கைகயில் கிடத்தியதும்

அவளை ஒட்டிக்கொண்டு அவனும் அவள் மெய்தீண்டிட. 

அவள் கண்கள் அவன் தீண்டலில் மயக்கம் கொண்டது.

அர்ஷாத் மெதுவாக அவளிடையில் தன் கரம்பதித்து. ஆடையெனும் திரைவிலக்கி

அவளை கண்களினாள் களவாடிக்கொண்டிருந்தான்.

" த்தான் என்ன இப்படி கூச்சமா இருக்கு" என அவன் கண்களை தன் கரங்களால் மூடினாள்.

அவள் கரங்களை விலக்கியவன் என் பொண்டாட்டிய ரசிக்கறேன்டா. நீ கண்ணமூடிக்கோ.

அனிஷா " சரிதான் ரெம்ப முத்திட்டு "

என சொல்லி சிரிக்கவும்.

அர்ஷாத் " உன்ன பார்த்த நாளா இப்படித்தான் இருக்கேன்.இனியும் இருப்பேன் " என அவளின் மேல் படர்ந்தான். தன் உடலால் அவள் உடலை இருக்கமாக அணைத்து அவள் மென் கழுத்தில் முத்தமிட்டான்

மெதுவாக கீழிறங்கி அவள் பெண்மையை தனது உணவாக்கி கொண்டான்.

உதடுகளால் உடம்பின் மச்சங்களை எண்ணிக்கொண்டு இரவு முழுவதும் அவளது தேகத்தில் பலவித்தைகள் பயின்று இருவரும் உடலால் பிணைந்து இணைந்து களைத்தனர். 

அந்த இரவின் ஏகாந்தம் அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வந்தது.

அடுத்த நாள் காலை எழும்போதே வீடு நிறைத்து விருந்தினர் சத்தம்.அவள் எழும்பி வெளியேவந்து பார்க்க சாரதா கண்ணில்படவும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். சாரா அனுராதா மடியில் என்ன விசேஷம்மா .எப்போ வந்தீங்க எனக்கேட்கவும்.

சாரதா " கல்யாணம் செய்து ஒரு வீட்டுக்கு மருமகளா வந்தாச்சி உனக்கான பங்க்க்ஷனே உனக்கு தெரியல. என்னடா இது மருமகன் உன்கிட்ட எதுவும் சொல்லயா " எனக் கேட்டார்.

அனிஷா என்னோட விசேஷமா. மேல ஏறிச்சென்று கிளம்பிக்கொண்டிருந்த அரஷாத்துக்கிட்ட கேட்கவும்.

அவன் ஒன்றும் சொல்லாமல் புதுபட்டுப்புடவையை கையிலக்கொடுத்தான். கட்டிக்கொண்டு வந்தாள்.

ஹாலில் அவளை நடுவில் உட்காரவைத்தனர். அவளுக்கு இது எல்லாமே புதியது.

அர்ஷாத் தன் கையில் இருந்த புது தாலிச்சங்கிலியை தன் தங்கை கையில் கொடுத்து அனிஷாவின் பழையதாலி சில பல இத்தியாதிகளை அதனுடன் சேர்த்து கோர்த்து சங்கிலியை மாற்றினர். இப்படியெல்லாம் முறையிருக்கு என் அவளுக்கு தெரியாது. அவா பார்த்ததே இல்ல.

அனிஷாவிற்குதான் அவ்வளவு ஒரு சந்தோஷம் . எல்லோருக்கும் ஒரு மனநிறைவு அர்ஷாத்தின் தங்கைக்குத்தான் அது பெரிய வருத்தம்.அவள் கவிதாவிடம் சென்று முறையிட்டாள்.

ரம்யா " அண்ணே அண்ணிக்கு மட்டும் இவ்வளவு செய்றாங்க.எனக்கு கல்யாணதுக்கே நகை குறைவாதான் போட்டீங்க. இப்போ எனக்கும் கொஞ்சம் செய்ய சொல்லுங்களேன். 

கவிதா பேசினார் உங்க அண்ணே உட்கார்ந்து திங்கறளவுக்கு சொத்தும் நகையும் அவளுக்கு குடுத்திருக்காங்க.

உங்க அண்ணே போட்டது வெறும் 11 பவுன் தாலிச்செயின்தான்.

உனக்கு வேணும்னா உன் மாப்பிள்ளைகிட்ட போயிக்கேளு.

இங்க சண்டமூட்டுறதுக்கு வராத என கொஞ்சம் கடிந்தே சொல்லிவிட்டார்.இப்படியே விட்டா இவ நிறைய இருக்கு என எல்லம் கேட்க ஆரம்பிச்சிடுவான்னு தெரிந்தே செய்தார்.

ஒரு பதினைந்து நாள் கடந்திருந்தது.

சாரதாவும்,அனுராதாவும் அர்ஷாத்தைதான் முறைத்துக்கொண்டு நின்றனர். திருவனந்தபுரம் இன்டெர்நேஷனல் ஏர்போட்டில்.

      அத்தியாயம் - 20

தீயாய் தீண்டி

பனியாக குளிர்ந்து

இருமனம் இணைந்து

பிறந்த சொந்தம் நீ...

தாலி பிரித்து கோர்த்ததுக்கு அப்புறமா அனிஷாவின் முகம் கொஞ்சம் தெளிவா இருந்தது.

அர்ஷாத்த விரும்பும்போதே தெரியும் இரண்டுபேரோட எல்லாவித பழக்கவழக்கங்களும் வேறு வேறு எல்லாவிதத்திலும் ஒருத்தொருத்தர் விட்டுக்கொடுத்துதான் போகனும் என்று.

ஆனால் விட்டுக்கொடுப்பதை விட விரும்பி ஏற்றுக்கொள்வதுதான் காதலின் மாண்பு.அதுதான் அவர்களுக்குள் நடந்துக்கொண்டிருந்தது.

அர்ஷாத் வீட்டின் வழக்கப்படி அந்த தாலியை போட்டுக்கறது அவளுக்கு அவ்வளவு இஷ்டம்.அதுவே அவளோட முகத்திற்கு தனியழகை கொடுத்தது.

காதலிச்சிருந்தாலும் பிள்ளையோட வாழவந்திருக்கா என்ற ஒரு சொல் வந்திரக்கூடாது என நினைத்துதான் கலங்கினாள். அதைபோக்கும் விதமாக தன் கனவனே அந்தவிழாவை நடத்தி அவள் மனக்கிலேசங்களை தகர்த்தான்.

ஒரு பத்து நாள் கொஞ்சம் பிஸியாகவே இருந்தான். யாரு என்னக் கேட்டாலும் ஒரு முக்கியமான விசயமா போறேன்னு போயிடுவான்.

ஒருவழியாக அவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்தவன் கவிதாவையும் அனிஷாவையும் அழைத்தவன்

" இன்னும் ஐந்து நாள்ல நான் அனிஷாவையும்,பிள்ளையையும் என்கூடவே கூட்டிட்டு போறேன்.

தங்கச்சியும் மாப்பிள்ளையும் இங்க வந்து உங்ககூட இருப்பாங்க. நாங்க அங்க கொஞ்சநாளைக்கு இருக்கத்தான் யோசிச்சிருக்கேன்.

பார்க்கலாம் எப்படின்னு " என சொல்லவும்.

கவிதா " நீங்க இரண்டுபேரும் என்கிட்ட சொல்லவேயில்லை கடைசி நேரத்துல வந்து சொல்ற " என அனிஷாவையும் ஒரு பார்வை பார்த்தார்.

அனிஷா " எனக்கு எதுவும் தெரியாது இப்போதான் எனக்கே தெரியுது "

அர்ஷாத் " ம்மா.நான் புனேலயிருந்து வரும்போதே முடிவெடுத்துதான் கூட்டிட்டு வந்தேன். அங்க கம்பேனியில எனக்கு குடும்பமா அங்க இருக்க எல்லாமே தராங்க அதான் எங்கூடவே இருக்கட்டும் "

கவிதா " அவங்க வீட்ல சொல்லிட்டியா அவங்க எதுவும் சொல்லப்போறாங்க "

அர்ஷாத் " இல்ல விசா எல்லாம் வந்தபிறகு சொல்லனும்னு இருந்தேன்.

இன்னைக்குத்தான் கையில கிடச்சிது அனி கிளம்பு உங்கவீட்டுக்கு போயிட்டு வரலாம் " என சொல்லவும்தான்

அனிஷா அங்கயிருந்து நகர்ந்தாள்.

அனிஷாவின் வீட்டிற்கு காரில் செல்லும்போதுதான் அவள் வாயைத்திறந்தாள்.

" என்கிட்ட ஏன் சொல்லல. இப்போ பாரு நான் எதோ உன்னபிரிச்சி கூட்டிப்போறமாதிரி அத்தை மூஞ்சிய வச்சிருக்காங்க "

அர்ஷாத் பேசினான் நீயா எப்படி இப்படி தப்பா யோசிக்குற.அவங்கள நம்ம விட்டுப்போறதுனால வருத்தமா இருக்காங்க. விடு கொஞ்ச நாள்ல சரியாகிடுவாங்க.

அனிஷா வீட்ல விசயத்தை சொல்லவும் இரண்டு மாமனாரும் சரியாக சிந்தித்தனர் இவன் நம்ம வசதியில வாழ நினைக்கல அவன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு சம்பாதிக்க நினைக்கிறான். என அவன் எண்ணப்போக்கை படித்தனர்.

இந்த மாமியார் இரண்டுபேரையும் சமாளிக்க முடியல. பேத்திய இப்போதான் கண்ணுல காமிச்சிருக்காங்க. அதுக்குள்ள வெளிநாடு கூட்டிட்டு போறீங்கன்னா எப்படி.

அவர்களை சமாதானப்படுத்தறதுக்குள்ள

போதும் போதுமென்றாகிவிட்டது.

ஒரு வழியா இப்போது திருவனந்தபுரம் ஏர்போர்ட்ல நிக்குறாங்க.

சாரதாதான் பிள்ளையவும் பேத்தியையும் பிரிச்சி கூட்டிட்டு போறான்னு அர்ஷாத் மேல கோவம். அதற்குத்தான் அவ்வளவு முறைப்பு அர்ஷாத்த பார்த்து.

அர்ஷாத் அனிஷாவிடம் " உங்கம்மா ரியாக்க்ஷனபாரு. ஏதோ நான் உன்ன நாடுக்கடத்திட்டு போகிறமாதிரியே பார்க்குறாங்க "

இப்போது அனிஷாவும் அழுதாள் எல்லாரையும் விட்டுப்போறோம் என.

ஒருவழியாக கிளம்பி கனடா நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அவனோட ஆபிஸ்ல இருந்த ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து எல்லாம் செட்டிலாகவே ஒருமாதமாகியது அவர்களுக்கு.

சாராவை சமாளிப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. முன்னவாவது தனியா பிள்ளையை சமாளித்தாள்.

ஊரில் ஆளாளுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்காங்க என கனவனிடம் புகார் வாசித்தாள்.

" நீ எப்படி எல்லாருக்கும் செல்லமோ என் பிள்ளையும் அப்படி இருக்கா. உனக்குத்தான் பொறாமை.

அப்படித்தான செல்லம் " என மகளையும் கூட்டுக்கு அழைத்துக்கொண்டான். அவ்வளவு பாந்தமான குடும்பம் என இருந்தது.

இப்படியாக ஒரு நான்கு மாதங்கள் கடத்திருந்த நிலையில் ஒரு நாள் அனிஷா சோர்ந்து லேசான மயக்கத்துடன் அப்படியே பெட்டில் விழவும் அர்ஷாத் பயந்த பயம் அவன் அவளை நெஞ்சோடு அணைத்து அழவும் பிள்ளையும் அவனோடு சேர்ந்து அழுதது.

மெதுவாக எழும்பியவள் என்னடா நடக்குது என பார்க்க. அர்ஷாத் இருந்ததை பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அவனை கூப்பிடவும் பதறி எழும்பியவனிடம் " ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க "

அவளை இன்னும் தன் நெஞ்சுக்குள் புதைத்தான் " உனக்கு என்னாச்சினு பயந்திட்டோம் " என சொல்லவும்.

அனிஷா " டேய் பழம் "

அர்ஷாத் " என்ன " என முறைத்தான்.

அனிஷா " பொண்டாட்டிக்கிட்ட ஒட்டிக்கிட்டே இருக்கத் தெரியுது. இராத்திரி டபுள் ட்யூட்டி பார்க்கத் தெரியுது இதெல்லாம் 

பண்ணினா புள்ள பிறக்கும்னு தெரியாதா "

அர்ஷாத் கண்ணு இரண்டும் விரிஞ்சது அப்படியா எனக்கேட்கவும்.

அனிஷா ஆமா என தன் தலையசைத்தாள்.

சாராவை தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டே சொன்னாள் .

" நம்ம வீட்டுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப்போகுது " என சொன்னாள். சாரா ஹை என கைத்தாட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

உண்மையாகவே அர்ஷாத்துக்கு அவ்வளவு மகிழ்ச்சி சாரா பிறந்ததே தெரியாது எனும் போது அவனுக்கு இரண்டாவது குழந்தையின் வரவு அவனை தலைகீழாக மாற்றியது.

அப்படி ஒரு அமைதி அவனிடம் இரண்டு நாளாக. மூன்றாவது நாள் அனிஷாவிட்ம வந்தவன் கேட்டான் " நாம நம்ம ஊருக்கே போயிடலாமா "

அனிஷா " என்னப்பா இது.இப்படி முடிவெடுத்திருக்க. இங்க வந்து ஆறுமாசம் ஆகல எதுக்கு "

அர்ஷாத் " நீ இப்படி இருக்கும்போது பயமா இருக்கு அங்கனா எல்லாரும் இருப்பாங்க அதனாலதான் "

அனிஷா " உனக்கு பிடிச்ச வேலை நீ எதிர் பார்த்த சம்பளம் எல்லாத்தையும் விட்டுட்டு வருவியா.அங்க ஒன்னும் வேண்டாம் நா சமாளிச்சிப்பேன் "

அர்ஷாத் " ச்ச் புரியாமபேசாத.

இதெல்லாம் விட நீ, பாப்பா ,வயித்துல இருக்க குட்டிபாப்பா எல்லாரும் எனக்கு முக்கியம். நீதான சொன்னா உங்கம்மாகிட்ட யாருமே இல்லாம பிரசவத்துல ரெம்ப கஷ்டப்பட்டேனு சொன்னல.பயமா இருக்கு ரெம்ப டென்சனாகுது போயிடுவோம்டா " அவள் மடியில் தலைவைத்து படுத்துகொண்டான்.

அனிஷா " நீ எனக்காக பார்த்து பார்த்து இவ்வளவு செய்யற. நா உனக்கு என்ன செய்யபோறேன்னே தெரியல "

அர்ஷாத் " இது என்ன வியாபாரமா நா செய்தா நீ திருப்பி செய்ய அடிவாங்கப்போற. நீ என்கூட இருக்கறதே என்க்கு சந்தோசம். அதவுமில்லாம சாராவ எனக்கு தந்திருக்க .இன்னொரு பாப்பா பெத்து தரப்போற. இதவிட என்னவேணும் எனக்கு "

இப்படியாக அவளை பேசிப்பேசியே சம்மதிக்க வைத்து மூன்று மாதம் நோட்டீஸ் கம்பெனியில குடுத்திட்டு.

டாக்டருகிட்ட சிலபல தகவல்கள் வாங்கி திருவனந்தபுரம் வந்து சேர்ந்தாச்சி அனிஷாவிற்கு இப்போது ஏழாவது மாதம்.

அவங்க ஊருக்கு வர்றாங்க என தெரிந்து திரும்பவும் எல்லாரும் ஏர்போர்ட்ல காவல் இருந்தனர் அர்ஷாத் குடும்பத்திற்காக.

அவ்வளவு ஒரு நிம்மதி அவனுக்கு. அனிஷா நிறைமாத கர்ப்பினியாக தேர்போல அசைந்து வர்றது பார்த்து பார்த்து ரசித்தான்.முன்பு இழந்ததை எல்லாம் மீட்டுக்கொண்டவனின் மனநிலை இப்போது அவனுக்கு.

அவளுக்கு போன் வரவும் எடுக்க கஷ்டப்படுவா என அவன் அதை எடுக்கவும் மறுபக்கம் மௌனம் மட்டுமே.

அனிஷா யாரென கேட்கவும் தெரியல என தலையசைத்தான்.

திரும்பவும் போன் வரவும் அனிஷா எடுக்கவும் மறுபக்கம் " எப்படி பாப்பா இருக்க " என அவளிடம் கேட்கவும்தான் புரிந்தது. அது அவளோட ஜெபா அண்ணன்.

அவள் பேசிமுடித்து வந்து பெட்ல உட்காரவும் அவளது முதுகை மெதுவா நீவி விட்டவன் பேசினான் " உங்க நொன்னன் என்ன சொல்றான். நான் எடுத்தாபேசமாட்டாங்களா ஹான்.

எப்போ பாரு என்ன முறைச்சிகிட்டு

எங்கயாவது யாரையாவது பார்த்தவுடனே பிடிச்சி தலைகுப்புற விழுந்து கல்யாணம் பண்ணிக்கபோறான் பாரு உங்க போலிஸ்கர அண்ணன் " என சாபம் கொடுத்தான்.

அனிஷா அவனை முறைத்து பார்த்தாள். இது சாபம் மாதிரி இல்லையே வரம் மாதிரிலா இருக்கே. உங்க சாபம் பலிச்சிட்டு சாமியாரே என அர்ஷாத்த பார்த்து கண்ணடித்தாள் .

ஆம். ஜெபா அவன் கல்யாண விசயமாகத்தான் அவளுக்கு அழைத்து பேசினான். அப்படியா என அவனுமே ஆச்சர்யப்பட்டான்.

ஆனாலும் அனிஷா மனசுக்குள்ள இவனுங்க இரண்டு பேரும் எப்படா சமாதானம் ஆவங்கன்னு தெரியலேயேன்னு முழிச்சிட்டு இருந்தா"

நாட்கள் நகர்ந்து இதோ அனிஷாவின் பிரசவித்திற்காக ஜீவா வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில்தான் சேர்திருந்தனர்.

அர்ஷாத்தின் மனம்தான் ஒரு நிலையில் இல்லை முதல் பிரசவம் கஷ்டமாயிருந்தது என சொல்லிருந்தாள் அதே நினைத்து பயந்தான்.

கடவுள்களிடம் பிரார்த்தனை வைத்தான் இப்போதான் ஒன்னா வாழவே ஆரம்பிச்சிருக்கோம். அவள பத்திரமா என்கிட்டயே திருப்பித் தந்திருங்க என.  

மொத்த கூட்டமும் அங்கதான் இருந்தனர் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் எல்லோரையும் காக்க வைத்து அர்ஷாத்தின் மகன் பிறந்தான்.

எல்லோருக்கும் சந்தோஷம் முதலாவது பெண் பிள்ளை இரண்டாவது ஆண்பிள்ளை.அர்ஷாத்தின் அம்மா கவிதா தான் பிள்ளையை கைகளில் வாங்கினார்.

அனிஷா அவங்க அம்மாவீட்டில் இருந்தாள். இவன்தான் பொண்டாட்டி பிள்ளைகள பார்க்க முடியாமல் தவித்து போனான்.

புதிதாக அவன் படிப்பு சார்ந்த தொழில் தொடங்கினான். அவனுக்கே இதுவே மகிழ்ச்சி தன் இணையோடு சொந்தபந்தங்கள் துணையோடு வாழ்வதற்கான நிறைவு அவன் முகத்தில் பிரதிபலித்தது.

மூன்று மாதத்திலயே தன் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து தன் பிள்ளையின் பெயர்சூட்டுவிழாவை வைத்திருந்தான்.

அதற்காக அவங்க நண்பர்கள் எல்லோரையும் அழைத்திருந்தனர்.

பக்கத்தில்தான் சந்துரு வீடு அவங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

அனிஷாவின் மொத்தக்குடும்பமும் வந்திருந்தனர்.

நண்பர்களான சந்துருவின் குடும்பம்,ரியா கீர்த்தனா, பிருந்தா என அனைவரும் வந்திருந்தனர்.

பிள்ளையை தொட்டிலில் கிடத்தி அவன் காதில் மூன்று முறை " ரித்திக் " என சொல்லி விழாவைத்தொடங்கினர்.

அனிஷா வீட்டில் எல்லோரும் இரு பிள்ளைக்கும் சேர்த்து நகை வாங்கியிருந்தனர்.

முதல் குழந்தையான சாராவிற்கு இப்படி செய்ய முடியாததை இப்பொழுது செய்து மகிழ்ந்தனர். முக்கியமாக அர்ஷாத்தின் எல்லா நிலையிலும் துணை நின்ற தேவா அவன் மனைவியோடு வந்திருந்தான்

இனிய இரவு பொழுதில் தன் கனவனின் மார்பில் சாய்ந்து கவிதை படித்துகொண்டிருந்தாள்.

அனிஷா " த்தான் நான் ரெம்ப லக்கி இல்ல. என்குடும்பம் நீ நம்ம பிள்ளைங்க அப்படி என் எவ்வளவு எனக்கு கிடைச்சிருக்கு "

அரஷாத் " நானும் லக்கிதான் நீ எனக்கு கிடைச்சுருக்க அதனால "

என் தங்கள் அன்பை முத்தங்களாக பரிமாறிக்கொண்டனர்.

அர்ஷாத் -அனிஷா காதலில் விழுந்து,சிலபல அனுபவங்கள் பெற்று இப்போது தன் இணையுடன் இணைந்து தனக்கென ஒரு கூட்டை உருவாக்கிக்கொண்டனர்.அது அவர்களுக்கான சந்தோசக் கனவின் வீடு. அதில் அவர்கள் இன்னும் நிறைவாக வாழப்போகிறார்கள் அதில் அவர்களின் காதல் மட்டுமே என்றும் நிறைந்திருக்கும்.

                அத்தியாயம் - 21

எனக்கான வாழ்வை

என் உயிராகிய

உன்னோடு மட்டுமே

வாழமுடியும்...

அனிஷா காலையில் எழும்போதே சோர்வாக எழுந்தாள்.

பையன் அவளை இரவு தூங்கவிடாமல் விழித்திருக்கான். மூன்று மாதம் முடிந்து நான்காவது மாதமாகிற்று.

இரவு அம்மாவின் மடிதான் அவனுக்கு தொட்டிலில் சிலநேரம் குழந்தைக்கு பசியாற்றுபவள் அப்படியே அமர்ந்தவாறே தூங்குவாள் அவ்வளவு படுத்துவான். 

அம்மாவீட்டிலயாவது இரண்டு பேரும் பிள்ளை அழுதா பார்த்துப்பாங்க. இங்க கவிதாகிட்ட இன்னும் பேச்சு வார்த்தையே சரியா இல்லாத போது எப்படி உதவிக்கேட்பாள். 

யாருமில்லாம சாரவை பார்த்துக் கொண்டபோது இருந்த வைராக்கியம் இப்போ இல்ல இளகிய மனதுடன் இருப்பதால் பிடிவாதத்தன்மை கொஞ்சம் குறைந்திருந்தது.

ஆனால் அர்ஷாத்திடம் மட்டும் எப்பவுமே அதே அனிஷாதான் எந்த மாற்றமும் இல்லை.

கீழ இறங்கி வந்தவள் பார்த்தது கவிதாவும் அர்ஷாத்தும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.அவள் வரவும் பேச்சை நிறுத்தியிருந்தனர்.

அதை அனிஷா கண்டுக்கொள்ளவில்லை என்றாலும் சிறிது கோவம் வந்தது அர்ஷாத் மீது ஏன் நான் இவன் பொண்டாட்டிதான இவங்க அம்மா பேச்ச நிறுத்துனா இவனும் நிறுத்துவானா என.

ஒன்றும் சொல்லாமல் அர்ஷாத் பக்கம்சென்று அவனருகில் அமர்ந்தாள். அவன் அவள் தலையை பிடித்து லேசா ஆட்டி தூங்கி முழிச்சிட்டியா தம்பி தூங்கிட்டானா எனக்கேட்டான்.

சாரா ஸ்கூல் போக ரெடியாகி அவங்க பாட்டி ஊட்டிவிடவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவா இப்போ அவ்வளவு அம்மாவ தேடுறதில்லை. தம்பி பாப்பா பிறந்த பிறகு அனிஷாவுக்குமே அவள பார்க்கவே நேரமில்ல.

உண்மைதான் சாரா வயித்துல இருந்தபோது இருந்த மனநிலைக்கு எல்லவற்றையும் தானே செய்துகொண்டு வேலையும் பார்த்தாள் அதனாலதான் என்னவோ சாரா அனிஷாக்கிட்ட சமத்தா ஒட்டிகிட்டு அவா கஷ்டம் புரிஞ்சி அமைதியா சேட்டை பண்ணாம இருப்பா.

ஆனால் ரித்திக் அப்படியில்லை எப்பவும் அம்மாவோட கைசூட்லயே இருக்கனும். தவேறயாராவது அவன தொட்டுட்டா அவ்வளவுதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவான்.

அர்ஷாத் சாப்பிட்ட தோசையை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து அனிஷாவுக்கும் ஊட்டி விட்டான். அதைப்பார்த்த சாரா எனக்கும் டாடி என கிள்ளையாய் வாயத்திறக்கவும்

  " அப்படியே அம்மா மாதிரி " என சொல்லி அவளுக்கும் ஊட்டினான்.

அர்ஷாத்திற்கு தெரியும் பிள்ளை ரெம்ப படுத்துறான். அவளால சாப்பிட முடியாது என தானே ஊட்டிவிடுவான் யாரு இருக்கா இல்லை என பார்க்கமாட்டான்.

 

எப்பவுமே அனிஷாவ தனி ஒரு கேர் எடுத்துப்பான். சண்டைபோடறதென்னவோ அனிஷாதான் ஆனால் அவனோட அன்பினாலும் சிலநேரம் காதலினாலும் அவளை சரி செய்துவிடுவான் மாயக்காரன்.

அர்ஷாத் " அனிமா பிஸினஸ் கொஞ்சம் பார்த்துக்கனும். எனக்கு வீட்ல இருந்து எதாவது உதவி பண்ணமுடியுமா "

அனிஷா " சின்னவன் ரெம்ப படுத்துறான் எப்படி முடியும். இருந்தாலும் ட்ரை பண்றேன் "

அர்ஷாத் " தேங்கஸ்டா " என எழுந்து சென்றுவிட்டான்.

கவிதா அனிஷாவைத்தான் பார்த்திருந்தார் ஆனால் அவர் முகம் தெளிவில்லாமல் இருந்தது ஒன்றுமே சொல்லவில்லை சாராவை பள்ளியில் விட கூட்டிக்கொண்டு சென்று விட்டார்.

இவங்களுக்குத்தான் என்ன இப்படி பாக்குறாங்க இத்தன நாள் இல்லாம என்றிருந்தது.

அனிஷாக்கு இந்த குடுமிபிடி சண்டை எல்லாம் அலர்ஜி. இங்க அர்ஷாத் குடும்பத்துல சித்தி சித்தப்பா அவங்க பிள்ளைங்க என எல்லாரும் நல்ல வாய் பேசறதுனால கொஞ்சம் ஒதுங்கியே இருப்பா. சாரவையும் சில இடத்தில் கண்டித்துவிடுவாள்.

இப்போ என்னவோ பிரச்சனைனு தெரியுது. நம்மகிட்டவரும்போது பார்க்கலாம்.

அதற்குள்ளாக பிள்ளை அழற சத்தத்துல எழுந்து ஓடிச்சென்றாள்.

அதற்கு பிறகு நேரம் போனதே தெரியல.

மதியம்போல அவளுக்கு போன் வந்தது. எடுத்து பார்த்தவள் அவளின் ஜெபா அண்ணன் " ஹலோ சொல்லுண்ணா எல்லாம் முடிஞ்சுதா எதுவும் பிரச்சனையில்லயே "

ஜெபா " பிரச்சனை எதுவும் இல்லமா. நான் சரியான நேரத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டேன் " என.

சில பல காரியங்கள் பேசி வைத்தான்.

இரவில் எல்லாரும் தூங்கியதும் அர்ஷாத் மெதுவா அனிகிட்ட வந்தவன் எனக்கு நீ இப்போ நேரமே ஒதுக்க மாட்டுக்க .பேசறதுக்குகூட முடியலடா.

அனிஷா " உங்கம்மாகிட்ட பேசலாம் டைமிருக்கு அதுவும் ரகசியம். என்கிட்ட பேசமட்டுந்தான் நேரமில்ல போடா " என சுனங்கினாள்

அர்ஷாத்" லூசா நீ "

அனிஷா முறைத்தவள் " ஆமா இப்போ என்ன பார்த்தா உனக்கு லூசு மாதிரிதான் இருக்கும் " என அழ ஆரம்பித்தாள்.

அர்ஷாத்" இருக்க பிரச்சனையில நீ வேற வேற எதுவும் ரகசியம் இல்லடா ரம்யா விசயமாகத்தான் பேசினாங்க."

அனிஷா " ரம்யா விசயமா எதாவது பிரச்சனையா "

அர்ஷாத் " ஆமாடா. இப்போ கர்ப்பமா இருக்கா இந்த நேரத்துல பிஸினஸ் பண்ணனும்னு பணம் கேடகிறாங்க. நம்ம எங்க போறது அதுதான் அம்மா பேசிட்டு இருந்தாங்க வேற 

ஒன்னுமில்ல "

அனிஷா " எவ்வளவு கேட்கிறாங்க "

அர்ஷாத்" ஐஞ்சு இலட்சம். அவா கல்யாணத்துக்கு கூட இவ்வளவு ஆகல.

நான் முடியாது என சொல்லிட்டேன் விடு பார்த்துக்கலாம். நானே என்னோட சம்பாத்தியத்துலதான் பிஸினஸ் ஆரம்பித்தேன்.அதவிடு இப்போ என்ன கவனிடா "

அனிஷா " என்னத்த கவனிக்கறதாம் " 

அர்ஷாத் " அதுவா இந்த அத்தான் வருசக்கணக்கா பட்டினி ஞாபகமிருக்கா "

அனிஷா " ஏதோ நான் பட்டினி இருக்க சொன்னமாதிரி. பயந்துபோயி பக்கத்துல வராம இருந்தது நீ. அதுக்கு நான் என்ன பண்ண முடியும் "என ஏற்ற இறக்கமாக பேசி அவனை பித்தங்கொள்ள செய்தாள்.

பெண்ணவளின் மீதான பித்தம் அவனுக்கு தீராத மயக்கமல்லவா.

அதுவும் காதல்கொண்டு வரும் கிறக்கம் அவர்களின் ஒவ்வொரு செல்களிலுமல்லவா இருக்கும்,அதை உணரவும் செய்தனர்.

பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென அவள் அதரங்களை தனது உனவாக்கிகொண்டான்.

அதிர்ந்து விழித்தவள் அவனது கண்களின் மயக்கத்தை உணர்ந்ததும்

அவளும் அவனோட ஒட்டிக்கொண்டாள்.

அவனது முத்தத்தின் வேகத்தில் சிறிது தினறித்தான் போனாள். அவனுக்கு அவளோடான காதலை உணர்ந்தாள் இந்த வாழ்க்கைக்கு தான ஆசைப்பட்டாள்.

அவளின் உடலின் ஆடைகளை தன் கரங்களால் கலைந்து தன் மனையாளை ரசித்தவன் என்னடி மாயம் செய்த என பிதற்றிக் கொண்டிருந்தான்.

அவன் கைகளின் மாயத்தில் பெண்ணவள் துவளத்தொடங்கினாள். அவள் கண்களின் மொழி படித்தவன் தன் செயல்களில் இறங்கினான்.

அவனுக்கென்று படைக்கப்பட்ட பெண்ணுடல் அவனுக்கு இசைந்து இன்பத்தை அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளை முழுவதுமாக ஆண்டுக்கொண்டிருந்தான் .களைத்து அவளை தன் மார்பில் சாய்த்து தலைக்கோதி கொடுத்தவன் " எதுவும் வலிக்குதாடா நாளைக்கு ஒன் டைம் டாக்டருக்கிட்ட போயி செக் பண்ணிடுவோமாடா "

அனிஷா ஒன்னுமே சொல்லாமல் அவன் மார்புச்சூட்டை வாங்கி தூங்கிக்கொண்டிருந்தாள்.

அவன் பார்த்து சிரித்து இரண்டு பிள்ளைக்கு அம்மா ,இன்னும் சின்னபிள்ளதான் நம்மகிட்ட மாத்திரம் "

அவளை மெதுவாக தூக்கம் கலையாமல் படுக்கவைத்தவன்.

அவன் பிள்ளைகள் இரண்டையும் பார்த்திட்டு வந்து படுத்தான்.

அடுத்த நாள் காலை சாப்பிடும்போது அனிஷாதான் பேசினாள்.

" நம்ம வேணா ரம்யா மாப்பிள்ளைக்கு கொஞ்சம் உதவி செய்யலாமா "

அர்ஷாத் ஏறிட்டு அவளைப்பார்த்து

 " ஏன் "

அனிஷா " அவா நம்மவீட்டு பிள்ளை நம்ம அவ வாழ்க்கைக்காக கொஞ்சம் இறங்கிப்போறதுல தப்பில்ல பணம் கொடுக்கலாம் "

கவிதா இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டுத்தான் இருந்தார்

அர்ஷாத் " இருந்த எல்ல பணத்தையும் தொழிலுக்கு போட்டாச்சி. பணம் எங்கிட்ட இருந்து எடுக்க எப்படியும் ஆறுமாசமாகும்.அதுவும் இவ்வளவு பணம் எடுக்க முடியாது "

அனிஷா " அது நான் தர்றேன் என்னோட சம்பளப்பணம் அப்படியேதான் இருக்கு "

அர்ஷாத் சாப்பிடாமா பாதியில எழும்பவும் பிடித்து இருத்தியவள் " நான் இந்தவீட்டு மருமகள் என்னால என்ன செய்யமுடியுமோ அத செய்யனும். நான் என்னோட அர்ஷாத்தின் தங்கைக்கு செய்றேன். இப்படி கோவப்பட்டா எப்படி "

அர்ஷாத் கவிதாவின் முகத்தைப் பார்த்தான் அவர் ஏற்கனவே மகளை நினைத்து கலங்கிபோயிருந்தார்

"அது இல்லமா இப்போ பணம் தந்தா மறுபடியும் கேட்பாங்க நான் சொல்ல வர்றது புரியுதா " தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

அனிஷா " யாருக்கு செய்யறேன் உன்னோட தங்கச்சி வாழ்க்கைகாக."

என அவன் கையபிடித்து தடவிக்கொடுத்தாள்.

நீ சமாதானமா போ நான் பார்த்துக்கறேன் என சொல்லவும் செய்தாள். அவன் ஆஃபிஸ் கிளம்பி சென்றபின்னர்.

அனுராதவ ஃபோணில் அழைத்து விவரத்தை சொன்னவள் " மா நான் செய்யறது சரியா என கேட்கவும் செய்தாள் "

அனுராதா " ரெம்ப சந்தோசம்டா பணத்தை பார்க்காத பாப்பா. அவ வாழ்க்கைய சரி பண்ண முடியதா பாரு.

எங்க பாப்பா இவ்வளவு யோசிச்சி செய்றளவு இருக்கா என எங்களுக்கு சந்தோசம்டா. நான் சாரதாகிட்ட பேசிக்குறேன் "

அனிஷா தீர்மானித்துவிட்டாள் பணம் இருக்கோ இல்லையோ கனவன் சரியா இருந்தா வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா இருக்கும் என இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு நன்றாக தெரியுமல்லவா.

கவிதாவை அழைத்துக்கொண்டு ரம்யா வீட்டிற்கு சென்றாள்.

அவர்களை உள்ளே அழைத்து உபசரிக்கவும் அனிஷா நேரடியாகவே ஆரம்பித்துவிட்டாள் ரம்யா தான் கொஞ்சம் கலங்கி பயந்து இருந்தாள் வாழ்க்கை என்னாகுமோவென.

" இங்க பாருங்க நான் இந்த தடவ நீங்க கேட்ட பணம் தர்றேன். ஆனால் இதுக்குமேலயும் பணம் அது இதுன்னு எங்க வீட்டுப்பிள்ளை கஷ்டப்படுத்தினா இவ்வளவு பணம் தந்து உன்கூட வாழறதுக்கு. எங்க பிள்ளைய நாங்க உன்கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டுபோயி இதே பணத்தை வச்சி வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து இரண்டாவதா கல்யாணம் கட்டி வச்சிருவேன்.

நா சொன்னா செய்வேன் புரியுதா என மிரட்டி. ரம்யாவை அழைத்து ஐந்து இலட்சத்தையும் அவள் கையில் கொடுத்தவள் இது என்னோட அர்ஷாத்துக்காக செய்றேன். நீ அவன் தங்கச்சி அப்படிங்கறதனால மட்டுமே எனச்சொல்லி வெளியே வந்துவிட்டாள்.

 

இப்படி பணத்துக்காக அலையுற மனுசங்கள கண்டா வெறுப்பவள். கவிதாதான் மகளிட்ம சிறிது நேரம் பேசிவிட்டு வந்தார்.

வீட்டுக்கு வந்ததும் அவள் மேல ரூமுக்கு சென்று பிள்ளைய தூங்க வைத்து தானும் சிறிது தூங்கி எழுந்தாள்.

கீழ சத்தம் கேட்கவும் இறங்கி வந்தவள் பார்த்தது கவிதா அர்ஷாத்திடம் அழுதுக்கொண்டிருந்தார்.

என்ன ஏதோ என பயந்து வந்தவள் அருகே செல்லவும்

அனிஷாவின் கையைபிடித்து கொண்டு அழுதார்

" உங்க அண்ணனும் அப்பாவும் வந்து என்பிள்ளைய அடிக்கவும் உன்னாலதான எல்லாம என உன் மேல கோவமும் வெறுப்பும்தான் வந்திச்சி அதனாலதான் உங்கிட்ட வெறுப்பைக் காட்டினேன் என்னோட பிள்ளைங்க நல்லதுக்காகத்தான் நான் யோசித்தேன்.

உன்னோட கஷ்டத்த கண்ணீர நான் பார்க்கல. ஆனா அதெல்லாம மனசுல வைக்காம் என் பிள்ளைங்க வாழ்க்கைகாக எல்லாம் செய்ற 

தப்பு பண்ணிட்டனோனு தோணுது "

அனிஷா அர்ஷாத்ததான் பார்த்தாள் அவனுமே நெகிழ்ந்திருந்தான் யாரு இப்படி செய்வா எனக்காகத்தான இவ்வளவும் சொய்யுறா என அவள் மேல இன்னும் காதல்தான் பெருகிற்று அவனுக்கு.

அனிஷாவிடம் அம்மவா சமாதானம் படுத்து என கண்ணைக் காட்டினான்.

அனிஷா " விடுங்கத்தை நடந்ததெல்லாம் போகட்டும் எல்லாருக்கிட்டயும் தப்பு இருக்கு யாருதான் பண்ணல எங்கப்பா அண்ணன். இவனுங்கூட என்ன விட்டுத்தான போனான் " என சொல்லவும்

அர்ஷாத்துக்கு சுருக்கென்றிருந்தது.

இருந்தாலும் வெளிய தெரியாமல் அமர்ந்திருந்தான் அனிஷா கவனித்துவிட்டாள் அவன் முகவாட்டத்தை.

கவிதா கொஞ்சம் சமாதானமானர்.

அவள் இப்பொழுதெல்லாம் அனுராதவின் அன்பின் கொள்கைதான் கடைபிடித்தாள்.

கவிதாவிற்கு உண்மையில சந்தோசம்தான் இவ்வளவு வசதியான வீட்டுப்பிள்ளை அர்ஷாத்த லவ் பண்ணினதுக்காக அவன் மேல் உள்ள பாசத்திற்காக மட்டுந்தான் இவ்வளவு இறங்கிப்போறா என.

இன்னைக்கு ரம்யா வீட்ல எப்படி பேசினாள் என பார்த்தர்தான.

அர்ஷாத்திடம் சொல்லிக்கொண்டு சாராவ பள்ளியிலிருந்து அழைக்க சென்றார்.

அர்ஷாத்தின் முகம் பார்க்க கோபத்தின் சாயல்.....

அத்தியாயம் - 22

வானவில்லாக அழகான

வர்ணஜால வாழ்க்கை

அதை நீயே கொடுத்தாய்...

அர்ஷாத் ரூமிற்குள் நூழைந்து எதுவுமே பேசாமல் அப்படியே அமைதியாகவே படுத்துவிட்டான்.

பின்னாடி வந்த அனிஷா அவனை அழைக்கவும் எந்த சத்தமும் தரமால் அப்படியே அமைதியாக தூங்க முற்பட்டான்.

என்னாச்சி நல்லாதான பேசிட்டிருந்தான் 

என யோசித்தவளுக்கு அப்போதுதான் பிடிபட்டது அவள் பேசிய வார்த்தையின் வீரியம்.

ஐயோ காயப்படுத்திட்டனோ எப்பவும் அவன் சொல்றதுதான் வார்த்தைகள் கவனமா பேசனும் குறிப்பா அவங்க இரண்டுபேருக்குள்ளும் இருக்கும் ரகசியம் வெளிய பேசறது அவனுக்கு சுத்தமா பிடிக்காது.

இப்போது யோசித்தவள் இவன் கோவப்பட்டு சண்டை போட்டா பரவாயில்லை. பேசாம இருந்து பிடிவாதத்தால் சாதிப்பான். அடுத்த தடவை அத சொய்ய என்னமே வராது.

அவன் முகத்தைதான் பார்த்திருந்தாள்

ம்க்கும். அவன் அசையற மாதிரி இல்ல.

மெதுவா பிள்ளைய தூக்கிக்கொண்டு கீழே வந்தவள் தன் பெண்ணிற்காக காந்திருந்தாள்.

சாரா வரவும் அவளுக்குள்ளது எல்லாம் கவிதா செய்தாளும் அவளும் கூட இருப்பாள்.

பிள்ளைக்கு சாப்பாடுக் கொடுத்தவளின் கையில் அர்ஷாத்திற்கான டீயை கொடுத்தார்.

அதைக்கொண்டு போனவள் கண்டது இன்னும் அப்படியே படுத்திருந்தவனைத்தான்.

எழுப்யியவள் டீ குடிக்க அழைத்தும் வரவில்லை.

இரவு உணவும் அவன் சாப்பிடவில்லை.

அனிஷா இப்போதான் ரெம்ப பயந்தாள்.

இரவு பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு அவனருகில் வந்து அவனை ஒட்டிப்படுத்தாள். அப்போதும் அவன் பேசவும் இல்லை என்ன என்று கேட்ககூட இல்ல.

அனிஷாவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அடக்கிக்கொண்டு படுத்துவிட்டாள்.

பாதி தூக்கத்துல யாரோ அவள தூக்கறமாதிரி இருக்கவும் விழித்து பார்த்தாள் அர்ஷாத் அவளை தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு தூங்கினான்.

காலை எழும்பி அவன் முகத்தை பார்க்கவும் அமைதியாக இருந்நது அவன் முகம்.

எல்லா வேலைகளையும் செய்து முடித்து மகன் எழும்புவதற்குள் கிளம்பினாள்.

அவங்க அம்மாவீட்டிலிருந்து வர்றாங்க. இன்னும் மூன்று நாட்களில் அவள் சின்ன அண்ணனிற்கான திருமண வரவேற்பு நாகர்கோவிலின் புகழ்பெற்ற மண்டபத்தில் வைத்திருந்தனர்.

அதற்கான அழைப்பிதழ் கொடுக்க ஆனந்த்ராஜ்-அனுராதவும் வருவதாக சொல்லிருந்தனர். 

" த்தான் "அர்ஷாத்தை அழைக்கவும் அவன் விழித்து என்ன என பார்க்கவும் .

அனுமாவும் ராஜ்ப்பாவும் வர்றாங்க பத்திரிக்கை வைக்க.

பத்துமணி போல வருவாங்க நீ எப்போ ஆஃபிஸ் போவ.

அவன் ஒன்றுமே சொல்லாம வாஷ் ரூம்போயிட்டான்.

" பக்கத்துல இருந்த பிளவர் வாஸ் வேணும்னே தட்டிவிட்டு " போடா டேய் " என சொல்லிச்சென்றாள்.

வெளிய வந்தவன் " வரவர வாய் ரெம்ப கூடிப்போச்சுது என முனங்கி கொண்டே கீழே சென்றான் "

அர்ஷாத் " ம்மா இன்னைக்கு என்னோட பெரிய மாமனார் வீட்லயிருந்து வர்றாங்க எதாவது ஸ்பெசலா சமையல் பண்ணுங்கமா. சித்தப்பா வீட்லயும் கூப்பிடுங்க "என கவிதாவை அழைத்து விவரம் சொன்னான்.

" நான் பதினோரு மணிக்குத்தான்மா ஆஃபிஸ் போவேன் அவங்க வந்திட்டு போன பிறகுதான் " என சத்தமிட்டு சொல்லவும் கவிதா அவன் தோளில் தட்டினார் என்னடா இவ்வளவு சத்தமா பேசற அதிசயமா உன் மகன் எழுந்திட்டான்னா. நீதான் சமாதானப்படுத்தனும் என சத்தமிடவும் மேல சென்றான்.

அனிஷா வாயிக்குள்ளவே பேசினாள்

" கேட்டது நான் பதில் அவங்க அம்மாவுக்கு " 

பத்து மணிக்கு மேல அனுராதாவும் ஆனந்தராஜியும் வந்தனர்.

கவிதா முன்பைவிட இப்போது கொஞ்சம் ஒட்டுதல் காமித்தார்.

வந்தவர்கள்தான் தாங்கள் வந்த விசயத்தை மெதுவா சொல்ல ஆரம்பித்தனர்.

அண்ணி சின்னவன் கொஞ்சம் அவசரமா கல்யாணத்தை முடிச்சிட்டான். அவனுக்காக சின்ன ரிசப்ஷன் மாதிரி வச்சிருக்கோம் என பத்திரிக்கை வைத்து அழைத்தனர்.

அனிஷாவின் சின்ன மாமனார் வீட்டிற்கும் அழைப்பிதழ் கொடுத்தனர்.

ரம்யா வீட்டுக்கு குடுக்கனும் கொஞ்சம் வழி சொன்னீங்கன்னா நாங்களே போயிடுவோம் என சொல்லவும்

அர்ஷாத் " வங்க மாமா அத்தை நான் கூட்டிட்டு போறேன் பக்கத்து ஊருதான என அழைத்தவன் வெளியே செல்லும் முன் "அனிஷாவையும் பிள்ளைங்களையும் உங்ககூட கூட்டிட்டு போங்க இரண்டு நாள் அங்க இருக்கட்டும் நான் ரிசப்ஷன் அன்னைக்கு வந்திருவேன் எனக்கு கொஞ்சம் வேலையும் அலைச்சலும் அதுதான். "

ஆனந்தராஜ் " அதுக்கென்ன நாங்க அவங்கள கார்லயே கூட்டிட்டு போறோம் நீங்க எங்கள விட்டுட்டு போங்க "

இதைக்கேட்டவளுக்கு ரெம்ப கஷ்டமா இருந்தது. தெரியாம ஒரு வார்த்தை வாயில இருந்து வந்திட்டு ரெம்ப பண்றான் நான் இல்லாம கஷ்டபடட்டும் என நினைத்து எல்லாவற்றையும் பேக் செய்து வைத்தாள்.

அவளுக்குமே நாகர்கோவிலுக்கு போகவேண்டியதிருந்தது. பேங்க்ல இருந்து நகைய எடுக்கவேண்டும் பங்க்க்ஷனுக்கு போட.

ரம்யா வீட்ல அழைப்பிதழ் குடுத்திட்டு திரும்பி வந்தவங்கள சாப்பிட்டு மத்தியானம் போங்க என சொல்லிச் சென்றான் அவளிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல்.

அவர்கள் கிளம்பி நகையெல்லாம் எடுத்திட்டு வீட்டிற்கு வர சாயங்காலம் ஆகிற்று.

என்னதான் காதலித்து கல்யாணம் செய்தாலும் பெண்பிள்ளைகளுக்கு தாய்வீடு சொர்க்கமல்லவா.

பிள்ளைகளை பார்க்க இரண்டு 

அம்மா அதனால கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் மனசுக்குள்ள அவன் பேசமல் இருப்பதுதான் கொஞ்சம் நெருடல்.

சகஜமாக இருக்க முற்பட்டாலும் பயம் எதுவும் பிரச்சனையாகிடுமோ என சிந்தித்துக்கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கிப்போனாள்.

சாரா சத்தம் கேட்டு விழித்தவள் பார்த்தது கனவனைத்தான் அப்பாவும் மகளும் எதோ மாசக்கணக்கா பார்க்கதவர்கள் மாதிரி பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

அவள் எழும்பி முகம் கழுவி வரவும் சாரதா " என்ன பிள்ளை நீ மருமகன் வந்து இவ்வளவு நேரமாகுது. உங்கள பார்த்திட்டு போகவந்திருக்காரு நீ இப்படி கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டிருக்க " என பேசி காஃபி கொண்டு வந்தார் அதை

அனிஷாவின் கையில் குடுத்து மருமகனுக்கு குடு என சொல்லவும் இருந்த எரிச்சலில் " என்ன பெரிய மருமகன் நாலு வருஷமா விட்டுப்போயிட்டு, இருக்கோமா செத்தமானு பார்க்காமல் இருந்தவரு தான " என திரும்பவும் வார்த்தைகளை யோசிக்காமல் பேசிவிட்டாள்.

சாடரென சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தனர் அர்ஷாத் கோவத்தில் வெளியேறிக் கொண்டிருந்தான்.

அனிஷாவுக்கு இப்போ என்ன செய்யவெனத் தெரியல.

சாரதா தான் வார்த்தைகள கவனமா பேசமாட்டியா பாப்பா எனக்கடிந்து கொண்டார்.

இரவு அவன் போன் பண்ணுவான் என எதிர்பார்த்து காத்திருக்க போன்வரல.

மகளவிட்டு பேசலாம் எனக் காத்திருந்தாள். எங்க போன் சுவிட்ச்டு ஆஃப் என வந்தது.

இரவு முழுவதும் தூக்கமே இல்லாமல் இருந்தவள் காலையில் கவிதாவிற்கு அழைத்துவிட்டாள்.

அவர்தான் என்ன விசயம் என கூறவும் அப்படியே பெட்ல விழுந்துவிட்டாள்.

சாரதா எழுப்பி கேட்கவும் அழுதுகொண்டேசொன்னாள்

அதாவது கார்ல சென்றவனுக்கு லேசான ஒருவிபத்து என்றும் வலதுகையில சின்ன காயம் கட்டுப்போட்டிருக்காங்க எனவும் விசயத்தை தெரியப்படுத்தினாள்

உடனே சிறுபிள்ளையை கையில எடுத்து வாங்கப்பா என்னக் கொண்டு விடுங்க நம்ம அவர பார்த்திட்டு வருவோம் என சொல்லவும்.

ஜெயராஜ் " நா கார் எடுத்திட்டுபோய் அவர இங்க அழைச்சிட்டு வர்றேன் என அவசரமாக கிளம்பியவர் பிரேமையும் கையோடு கூட்டிக்கொண்டு சென்றார்.

அவர் திரும்பி வர்றவரைக்கும் அப்படியே பிள்ளையை பக்கத்தில் கிடத்தி தானும் படுத்துக்கொண்டாள்.

ஒரு இரண்டு மணி நேரம் கடந்து அர்ஷாத்த வீட்டிற்கே கூட்டிவந்துவிட்டனர்.

எல்லாரும் அவன சுத்தி நின்னு வருத்தத்தோடே அவனை விசாரிக்கவும் அனிஷாதான் தேம்பிதேம்பி அழுதாள்.

" ஒன்னுமில்ல கொஞ்சம் கவனக்குறைவா இருந்திட்டேன்.

ஒன்னுமில்ல " என அவன் எல்லாருக்கும் ஆறுதல் சொல்றளவுக்கு ஆகிப்போச்சிது.

ரூமிற்கு போயி ரெஸ்ட் எடுங்க எனச்சொல்லவும் வந்தவன் எதுவும் சொல்லாமல் படுத்துக்கொண்டான்.

அனிஷாதான் பக்கத்தில் வந்து அவன் கையை தொட்டு தொட்டுப் பார்த்தாள்.

 நான்பேசினதுனால தான என்னாலதான் எல்லாம் என பேசவும்.

" ஆமா அப்படியே திரும்பி வரமா போயிருந்தா நல்லாயிருக்கும்

நாலு வருசம் கழிச்சி திரும்பி வந்ததுனாலதான இப்படி அடிக்கடி எல்லாருக்கு முன்னாடியும் என்னை தலை குனிய வைக்குற என ஆதங்கப்பட்டான்.

இப்போ வரைக்கும் அத நினைச்சி நினைச்சி வருந்துறேன். என்ன சூழ்நிலையா இருந்தாலும் என் பொண்டாட்டிய எப்படிவிட்டு இருந்தேன்னு மனசு முழுவதும் ரணமா வலிக்குது. அத நீ வேற அடிக்கடி கீறிவிடுற " என கோபத்தில் பேசியவன் திரும்பி படுத்து தூங்க முற்பட்டான்.

அனிஷா சமாதானம் பேச வந்தும் ஒன்னுமே பேசல. அவன் இவ்வளவு பேசக்கூடிய ஆளே இல்ல. இன்னைக்கு இவ்வளவு பேசிட்டான் மனதின் ஆதங்கம் வெளிய வந்திட்டு.

அடுத்த நாள் ஜெபா கல்யாண ரிசப்ஷன் அதற்கான எல்லா முடிவுகளும் ஒரே மருமகனான இவனிடமே அபிப்பிராயம் கேட்டு செய்தனர்.

அந்த நாள் முழுவதுமே மௌனமாகவே கழிந்தது அவர்களுக்கு இரவில் இவளாகத்தான் அவனிடம் ஒன்றிப்படுத்தாள்.

அடுத்த நாள் இருவருக்கும் ஒரு மனசுனக்கத்தை கொண்டு வந்தது பேசமல் இருந்தது அவ்வளவு கஷ்டமா இருந்திச்சி இரண்டுபேருக்குமே.

மாலைவேளை ரிசப்ஷனில் மணமகன் அருகில் அர்ஷாத்தும் மணமகள் பக்கத்துல அனிஷாவும் நின்றிருந்தனர்.

அதுதான் வழக்கமும்கூட 

மலையேறப்போனாலும் மச்சான் துணை வேணும்.

இப்போ மேடையில பிள்ளைய வச்சிக்கிட்டு நிற்பதற்கு அனிஷா சிரமபட்டாள்.

ஆனாலும் அர்ஷாத் வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருந்தனர்.

அவனின் தங்கை ரம்யாவின் குடும்பமும் வந்திருந்தனர்.

அவள் கவனித்ததை விட அவளின் வீட்டினர்தான் எல்லாருக்கும் அவர்களை அறிமுகப்படுத்தினர். தங்கள் செல்லமகளின் புகுந்தவீட்டினர் அல்லவா.

ரித்திக் பசிச்சு அழவும் சாராதவிடம் சொல்லிட்டு கீழே சென்றவள் தனியறைக்கு சென்றாள் அதற்குள்ளாகவே அவன் ரெம்ப அழுதான்.

அவள் புடவை வேறு ரெம்ப ஹெவி சிரமபட்டுப்போனாள்.

பரிதபமாக பிள்ளையை பார்த்தவளுக்கு பின்னாடி சத்தம்வர பார்த்தவள் அர்ஷாத் நின்றிருந்தான்.

ஹுக்கு கலட்ட வரல என பரிதாபமாக அழுகை வரும்போல சொல்லவும் அவன்தான் கழட்டிவிட்டு மகனை அவளுக்க வாகாய் கொடுத்த அருகில் அமர்ந்து அவள் முதுகை தாங்கி தடவிவிட்டான்.

இவ்வளவு நேரம் நின்னது வேற பையன் அழுதது என் திண்டாடிப்போனாள் இப்போ அவனிடம் சாய்ந்துக்கொண்டாள்.

கோவம் வருத்தம் எது இருந்தாலும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலும் புரிதலும் அதைவிட அபரிமிதமான காதலும் இருந்தது. அங்க சமாதான பேச்சுக்கள் இல்லை ஆனாலும்

சமாதனமாகிக்கொண்டனர்.

அரஷாத் " நம்ம இரண்டுபேரையும் பிரிச்சு வச்சி வில்லன் வேலை பார்த்த உங்க போலிஸ்கார அண்ணன பார்த்தியா உங்க அண்ணிய கண்ணாலயே சாப்பிட்ருவாரு எனக்கு பார்த்து பார்த்து சிரிப்பு. எனக்கு சிரிப்ப அடக்கவே முடியல "

அனிஷா " எங்க அண்ணன் காதல் கல்யாணம் உனக்கு சிரிப்பா இருக்கா என அவளுமே சிரித்துக்கொண்டே கேட்டாள் "

அர்ஷாத் " நம்மள துரத்தி துரத்தி பிரிச்சிவிட்டாரு இப்போ பாரு அவர் என்ன பார்த்து வழிஞ்சசிரிப்பு சிரிக்காருடி முடியல எப்பா..

வில்லன் இப்போ காமெடி பீஸ் ஆகிட்டாரு என சொல்லவும் அவள் திரும்பி அவன் வாயை அடைத்திருந்தாள்.

உனக்கு வாய எப்படி முடனும்னு தெரிலடி நான டெமோ காமிக்கிறேன் பாரு என அவள் உதடுகளை தன் உதடுகளால் மூடினான்

அதற்குள் குட்டிப்பையன் தூங்கியிருக்க 

இவன் மெதுவா அவளை விடுவித்தான்.

அவள் உதட்டை தன் கையால் தடவிக்கொணடே சொன்னான். எதுவும் பழசை பேசாதாடா மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு உன்ன ரெம்ப வேதனை படுத்திட்டனோ என பேசி முடிக்கவும் மகன் சினுங்கவும் சரியா இருந்தது.

இவன் எனக்கு வில்லனா அவங்க மாமன்காரன் மாதிரி வரப்போறான் நான் உன் பக்கத்துல வந்தாலே இவனுக்கு பிடிக்க மாட்டுக்கு என தன் மகனே தூக்கத்திலயே கொஞ்சினான்.

அனிஷா "நமா இராத்திரியே நம்ம வீட்டுக்கு போயிடலாமா "

அர்ஷாத் " ஏன் இங்க உங்க அம்மா கேட்டா என்ன சொல்லுவாங்க "

அனிஷா "அத பார்த்துக்கலாம் நீ என்ன கூட்டிட்டுபோ " என கெஞ்சினாளா கொஞ்சினாளா தெரியாது அவன் தலை சரியென எல்லா பக்கமும் ஆடியது.

ஐந்து வருடங்கள் கழித்து அர்ஷாத்,அனிஷா சாரா,ரித்திக் என நான்குபேரும் கடற்கரையில் கால் நனைத்து நின்றனர்.

காலையிலயே ரித்திக் கேட்டுவிட்டான்

 " ப்பா இன்னைக்கு பீச் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கீங்க பிறகு பிஸின்னு சொல்லக்கூடாது என கட்டளை பிறப்பித்தான் .

அர்ஷாத்திற்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் அவனுக்கு எப்போதும் நிற்க நேரமில்லாமல் ஓடுவான். அனிஷா அவள் படித்த காலேஜ் பக்கத்துலதான அங்கே வேலைக்கு சேர்ந்தாள் பிள்ளைங்க பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் அவளும் வேலைக்கு சென்றாள்.

எதுவாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு என நேரம் ஒதுக்கிவிடுவார்கள் அதனாலதான் இந்த பீச் விசிட்.

இப்போதும் அர்ஷாத் கையைப்பிடித்து நின்றிருந்தாள் அனிஷா. அவளுக்கு அந்த பீச்ல அவனோடு கைகோர்த்து நடப்பதும் அலைகளில் கால் நனைப்பதும் அவளுக்கு பிடித்தமான ஒன்று . இப்படித்தான அந்த அலைகள் போல் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் காதலும் அன்பும் நேசமும் அவர்களை வழிநடத்தும் இன்று போல என்றும்.

       முற்றும்..

   - - - -

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow