இதழ் வழி இதயம் நுழைந்தாள் 4
Ethal4

4.இதழ் வழி இதயம் நுழைந்தாள்
இனி என் மூத்த பேரன் யோகி குடும்ப சேர் ஐம்பது சதவிகிதம் அவனுக்கும் பாதி அனு ரெட்டிக்கும் போகும், ஒருத்தர் கையெழுத்து போடாம ஒருத்தர் பணத்தை எடுக்க முடியாது இரண்டு பேரும் சேர்ந்தே தான் வேலைக்கு போகணும் , சேர்ந்தே தான் எங்கையும் போகணும் எனும் வார்த்தையை அழுத்தி யோகியை பார்த்து கொண்டே கூறினார். அதில் நீ பொண்ணு கூட கூத்தடிக்க போனாலும் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போய்தான் ஆகணும் என்ற கட்டளை இருந்தது...
சஞ்சு இவர் போடுற சடடம் எல்லாம் என்ன ஒன்னும் பண்ணாது என் பொண்டாட்டி இப்பவே எல்லா சேயும் எனக்கு கையெழுத்து போட்டு தந்திட்டா என்ன பண்ணுவாராம்...பெருசா தந்திரமா யோசிக்கிறதா நினைப்பு , வயசான காலத்துல தின்னுட்டு தியானம் பண்ண போறதை விட்டுட்டு எதுக்கு இப்படி தேவையில்லாத வேலை,
நான் என்ன படவா செய்ய ,நீங்க காலா காலத்துல கல்யாணம் பண்ணி பூட்டன்க பெத்து கொடுத்திருந்தா நான் ஏன்டா இப்படி மூளைக்கு வேலை கொடுக்க போறேன்..
சஞ்சு என் பொண்டாட்டி கையெழுத்து போட்டு தந்திடுவா பத்திரம் மாத்தி எழுத சொல்லு
அதை அவளை சொல்ல சொல்லு படவா
யோகி:இந்தா பொண்ணு நான் காட்டுற இடத்தில கையெழுத்து போட்டு தருவதான தனக்கு பின்னாக நின்ற அந்த பெண், மனைவியாக அழைத்து வந்த பெண்ணின் பெயர் தெரியாத யோகி அஃறிணை போல் அழைத்தான்
உன் பொண்டாட்டி பேரு அனு படவா ,அவ முகத்தை கூட ஒழுங்கா பார்க்கலை போல நாலு பேர் நடுவுல உன் பொண்டாட்டிய விட்டா என் பொண்டாட்டி யாருன்னு தேடுவ போல..
ஜோக் சொல்லிட்டார் சஞ்சு உன் தாத்தா எல்லாரும் சிரிச்சிருங்க இல்லை சோறு கிடையாதுன்னு புது சட்டம் எதுவும் போட்டிற போறார்
சஞ்சு:அட நீ வேற ஏன்டா நான் இன்னும் ஷாக்குல இருந்து மீண்டு வரல, அப்போ இந்த சொத்துல நமக்கு உரிமை இல்லையா யோகி
அததான்டா அந்த பெரிய மனுசர் நாசுக்கா சொல்றார்..
தாத்தா :நான் ஏன்டா நாசுக்கா சொல்ல போறேன், நேரடியாதான் சொல்றேன் .இந்த சொத்துக்கு புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் தான் பாட்னர்
இன்னைக்கு வந்த இந்த குஜிலியை நம்புவ ,நீ என்னை நம்ப மாட்டியா தாத்தா ,நல்லா யோசிச்சி பதில் சொல்லு நானா இல்லை என் பக்கத்தில நிற்கிற இந்த குஜிலியா கிருத்திகாவை சஞ்சு பக்கவாட்டில் திரும்பி பார்த்தான், அவளோ ஆனந்த அதிர்ச்சி தாண்டவம் ஆட தாத்தாவுக்கு எந்த ஊரில் சிலை வைக்கலாம் எனும் நன்றி கடனில் நின்றாள்
திருடி தானா கிடைச்ச புதையலை திருடிட்டு போக ரெடியா இருக்கியா,பூதம் காத்த மாதிரி இனி என் சொத்தை காப்பாத்தி உன்ன விரட்டி விடுறேன் பாரு
பத்து லட்சம் தேறும்னாலே பட்டா போட்டு படுத்திடுவேன் என் பேர்ல பல கோடியா, போக முடியாதுடா என்ன முடிஞ்சா அனுப்பி பாரு என்றவள் தாத்தா அருகில் போய் நின்று கொண்டவள்
எப்போ தாத்தா பாகம் பிரிப்ப?
உடனே பேத்தி
சீக்கிரம் பிரிச்சி கையில தாங்க தான் பத்திரமா பார்த்துக்கிறேன்
அதுலயும் சிக்கல் இருக்கே பேத்தி
அடுத்த பூதம் கிளம்ப போகிறது என்பது யோகி,சஞ்சுவுக்கு நன்றாக தெரிந்தது,
கிருத்திகா :என்ன தாத்தா போட்டி எதுவும் வச்சி சொத்துல கூட தர போறீங்களா
ஆமா
என்ன போட்டி சொல்லுங்க உடனே செஞ்சிடுறேன்
பிள்ளை உண்டாகுற போட்டி தாத்தா அடுத்த இன்னிங்ஸ் சிக்ஸர் அடித்து விட்டார்.....
என்ன குழந்தையா??? இந்த அதிர்வலை யாரை அதிர செய்ததோ இல்லையோ அனு ரெட்டியை அதிர செய்தது..அருகே இடைவெளி பல விட்டு நின்ற யோகி அருகில் போய் அவன் கையை இழுத்தாள்..
ஏய் தள்ளி போ தொடாத
சாரி சார் தள்ளி நின்று கொண்டு யோகியிடம் எதையோ கேட்க தயங்கி நின்றாள்
எதுக்கு இப்போ இடிச்சிட்டு வந்த
இல்ல சார் நீங்க ஏதோ சிம்பிளா சொன்னீங்க, இங்க நடக்கிறது எல்லாம் ஏதோ பெருசா தெரியுதே
ஆமா அதுக்கு என்ன, என் தாத்தா இப்படி எல்லாம் பண்ணுவார்னு எனக்கு மட்டும் தெரியவா செய்யும் சும்மா வண்டு போல காதை குடையாத
இது ஆகிறதுக்கு இல்ல சார் ,நீங்க என்ன சொல்லி என்ன கூட்டிட்டு வந்தீங்க
இப்போ எதுக்கு அது
ப்ளீஸ் சார் எனக்கு பயமா இருக்கு ,என்ன கொண்டு போய் விடுங்க இல்லை அழுவேன்
இது என்ன மர்ம உலகமா பயப்பட ,இது என் வீடுதான்
என்ன என் லவ்வர கண்டு பிடிச்சி சேர்த்து வைக்கிறேன்னு சொல்லி, கூட்டிட்டு வந்து இப்படி ஏதேதோ எல்லாருமா பேசினா எப்படி சார்.
முட்டாள் ,உன் லவ்வர் என்ன அடுத்த தெருவுலையா இருக்கான்
அதான் பேர் சொன்னேனே சார்..ரமேஷ்
ரமேஷ் இந்த பேர்ல மெட்ராஸ்ல ஒரு ரமேஷ்தான் இருக்கானா
அப்போ கண்டுபிடிக்க முடியாதா ஆந்திர தேசத்து காரமிளகாய் போல அனுவின் மூக்கு சிவந்து அழுகை வெளி வந்தது..
இப்போ எதுக்கு அழுவுற
சார் என் லவ்வர் கூட எப்படியாவது சேர்த்து வச்சிருங்க,இல்லை என் ஊருக்கு அனுப்பி விட்டிருங்க, அப்பா வெட்டி கொன்னாலும் பரவாயில்லை இந்த வீட்டுக்கு வர மாட்டேன் வாங்க சார் போகலாம் யோகியின் இரும்பு கரத்தை பற்றி இழுத்தாள் ,அவனோ ஒரு அடி அசையவில்லை
நான் சொல்றது போல இங்க இருந்தா உன் லவ்வர் ரமேஷை கண்டு பிடிச்சி அவன் கூட சேர்த்து வைக்கிறேன்
ஒன்னும் வேண்டாம் சார், ஏதோ தைரியத்தில இங்க வந்துட்டேன் இப்போ பயமா இருக்கு நான் வீட்டுக்கு போறேன்
அப்படியா போ பார்க்கலாம் என் சொத்து என் கைக்கு கிடைக்கும் வர நீ எங்கையும் போக கூடாது, போனேன்னு வை அந்த ரமேஷை கண்டுபிடிச்சி உன் அப்பாகிட்ட இவன்தான் உங்க பொண்ணு லவ் பண்ற பையன்னு சொன்னா என்ன நடக்கும்னு தெரியும்தான
சார்
உனக்கு வழியே இல்லை அட்ஜெஸ்ட் பண்ணி எங்கூட இரு,உன்னால எனக்கு தொல்லை இல்லாத வரைக்கும் என்னால உனக்கு தொல்லை வராது யோகிக்கு வாக்கு சுத்தம்
அப்போ தாத்தா சொன்னார்னு குழந்தை அது இதுன்னு டிரை பண்ண மாட்டீங்களே ,நீங்க இந்த தாலி கட்டினதே எனக்கு ஒரு மாதிரி உறுத்துது , அதான் கட்ட வேண்டாம் சொன்னேன் இப்ப ரமேஷுக்கு நான்,என்ன பதில் சொல்வேன்
ஏன் அவன் கட்டினா இனிக்குமோ, தேவையில்லாமல் கோவம் வந்தது,
அவர் என் லவ்வர் சார், நீங்க ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி பார்த்த ஆளு அவரும் நீங்களும் ஒன்னா
என் தாலி உன் கழுத்துல கிடக்கிற வரை உனக்கு கார்டியன் நான்தான் எனக்கு பொண்டாட்டி நீதான், மைண்ட் இட் கேட்க கூடாத ஏதையோ கேட்டது போல யோகிக்கு பத்தி கொண்டு வந்தது, தாலி ஏறினால் தாயும் ஒரு படி கீழ் இறங்கி போய்தான் ஆக வேண்டும்
யாரையும் பார்க்காமல் அனு ரெட்டி கையை வலுவாக தன் விரலோடு இணைத்து கொண்டவன், தாத்தாவை இடிப்பது போல கடந்து சென்றான் அனுவும் அவன் இழுத்த இழுப்புக்கு பின்னாடி ஓட ஆரம்பித்தாள்.
ஒரே ராத்திரியில எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருட்டிட்டி கம்பியை நீட்டிறணும் கிருத்திகா இப்போதே கணக்குகளை போட ஆரம்பித்து விட்டாள்
இவ கிட்ட இருந்து என் குடும்பத்தை காப்பாத்துறது தான் என் முழு நேர வேலையா இருக்க போகுது போல, இங்க நின்ன கீரியை எங்க காணலை கிருத்திகாவை சஞ்சு தன் அருகில் தேடினான், அவள்தான் ஆளுக்கு முன்னாக வீட்டுக்குள் எதை ஆட்டையை போடலாம் எனும் நோக்கில் சஞ்சுவை இடித்து தள்ளி விட்டு ஓடிய கீர்த்தனா பின்னால் தன் வீட்டு சொத்தை காப்பாத்த வழி தெரியாமல் சஞ்சு ஓடினான்.
தாத்தா முகத்தில் பிரகாசமான புன்னகை..
What's Your Reaction?






