உறைபனி என்னில் பொழிகிறாய்-23

Apr 2, 2024 - 19:51
 0  527
உறைபனி என்னில் பொழிகிறாய்-23

அத்தியாயம்-23

ரித்திக்கிற்கு வந்த தகவலை உறுதி செய்ய  அவனுக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்தான் அந்த தகவல் உறுதியானது...இவன் கொலை நடந்த இடத்தில் மட்டுமே இருந்திருக்கிறான், அதனால் அவனுக்கு ஜாமீன் கிடைத்திருந்தது.

அவன் ப்ரணவிற்கு அழைத்து சொல்ல ஐந்துபேரும்  வீட்டுப்பெரியவர்களுக்குத் தெரியாமல் மொட்டைமாடியில் சந்தித்தனர்.

ப்ரணவ் வருத்தப்பட்டான்... இப்பதான் பாப்பா சந்தோஷமா வாழறானு  நிம்மதியா இருந்தோம் மறுபடியும் அவன் வெளியே வர்றானே... ரிஷியையும் சந்தனாவையும் பாதுகாப்பாக இருக்க சொல்லணுமே.

எத்தனை நாளைக்கு  இப்படி செய்யமுடியும். அவ என்னடா பாவம் பண்ணினா நமக்கு தங்கச்சியா பிறந்ததை தவிர. ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இதுக்குமேலயும் அவளுக்கு எந்த பிர்ச்சனையும் வராம பார்த்துக்கணும்...

என்ன செய்யலாம் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணறதுக்கு பவுன்சர் வைச்சாலும் பணத்துக்காக எதாவது கோல்மால் பண்ணிடுவானுங்க.. .போலிஸ் பாதுகாப்பு கேட்போமா கமிஷனர் ஆபிஸ் போய் பேசுவோம் காலையில போகலாம் என்றதும்...சரி சரி என்று தலையாட்டினர் மற்ற நால்வரும்.

சரி இது அப்பாவுக்குத் தெரியவேண்டாம் டென்சன் ஆகிடுவாங்க ரிஸ்வான் நீ எதுவும் உளறிடாத..என்று பேச்சை முடித்துக்கொண்டு எல்லாரும் இறங்கி சென்றதும்.

கேசவ் அப்படியே நிற்க அவனை திரும்பி பார்த்து சைகை செய்தான் ரித்திக்; மற்ற மூன்று பேரும் தங்களது அறைக்குள் நுழைந்ததும், சிறிது நேரங்கழித்து ரித்திக்கின் அறை பக்கமா கேசவ் பார்த்து பார்த்து பூனைபோல மெதுவாக நடந்து வந்தான்...

இப்போது ரித்திக்கின் அறைக்குள் கேசவ் வந்ததும்...என்ன ண்ணா பெரிய அண்ணா போலிஸ் பாதுகாப்பு கேட்குறாரு.

விஷ்வேஷ் ஏற்கனவே கிரிமினல்; அவன் கண்டிப்பா எதாவது பண்ணுவான். அவனோட குறி நம்ம வீட்ல உள்ளவங்கதான்... நம்ம எப்படியும் சந்தனாவப் பாதுகாப்பா வச்சிருப்போம்னு அவனுக்குத் தெரியும்... அதனால வேற திட்டம் ஏதாவதுப் போடுவான்..அதுவும் வந்த உடனே எதுவும் செய்யமாட்டான். கொஞ்சம் டைம் எடுத்து  ஒளிஞ்சிருந்து தான் எதாவது செய்வான்...

என்ன செய்யலாம்  அவனையே போட்ரலாமா... நம்ம குடும்பம் நிம்மதியாவது இருக்கும்...சந்தனா வாழ்க்கையும் பயமில்லாமல் இருக்கும். 

நீ சொல்றதும் சரிதான்டா எத்தனை நாளைக்குத்தான் அந்த நாய்க்கு பயந்து நம்ம வாழமுடியும்... நாய அடிச்சு தூக்கி போட்றவேண்டியதுதான்.

கேசவ்"அவ தங்கச்சி இங்க இருக்கற விசயம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அதுக்கு வேற எதாவது கலாட்டா பண்ணுவானோ. கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணுவானா என்ன"

ரித்திக் "அவனை அதுக்கும் விடக்கூடாது... அவன் தங்கச்சினா என்ன இரட்டைக்கொம்பா; பார்ப்போம் நான் அவள் கழுத்துல தாலிக்கட்டி என் பொண்டாட்டியாக்குறேன்...அவனால என்ன செய்யமுடியுதுனு"

கேசவ் நிமிர்ந்துப் பார்க்க ரித்திக் இப்போ பேசியதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்க...

ரித்திக் உன் வாய் அவசரப்பட்டு உண்மையை உளறிட்டுடா என்று அமைதியாக இருக்க.

கேசவோ தம்பி எது எப்படியோ ரிதன்யா உன் பொண்டாட்டியாகிடுவா கவலைப் படாத; விஷ்வேஷை என்ன பண்ணலாம்னு பிளான் வச்சிருக்க அதை சொல்லு .

அவன் விவரித்த பிளானை கேட்டு கண்களை விரித்தவன்...இது சரியா வருமாடா, மாட்டிக்கிட்டா ஜெயில்ல களிதான் திங்கணும் பார்த்துக்கோ என்று கேசவ் லேசாகப் பயப்பட.

களிதான திங்கலாம், நம்ம குடும்ப நிம்மதிக்காக அதைக்கூட செய்யமாட்டம என்ன?

கேசவ் அவனைக் கட்டிக்கொண்டான்...

செய்வோம்டா என்று தட்டிக்கொடுத்துவிட்டு வெளியே செல்ல கதவை அடைக்க வத்தவன் பார்த்தது... ரிதன்யா அவளது அறையின் வாசலில் நின்று எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

மெதுவாக அங்கே வந்தவன்  "இந்த அர்த்த இராத்திரியில இங்க என்ன பண்ற" என்று கேட்கவும் திடுக்கிட்டு திரும்பியவள் அவன் மேலயே இடித்துக்கொண்டு நிற்க" உனக்கு தூக்கம் வரலையா இந்த நேரத்துல இங்க என்ன பண்ற" என்று அதட்டிக் கேட்கவும்...

ஆட்கள் நடமாடுற மாதிரி சத்தம் கேட்டுது  அதான் கதவைத் திறந்துப் பார்த்தேன் என்றாள்.

லூசா நீ வீட்டுக்குள்ள  ஆட்கள் நடமாடுற சத்தம் தான் கேட்கும்...இல்லைனா பேய் நடமாடுற சத்தமா கேட்கும் லூசு போடி போய் தூங்கு என்றதும்..

ஆமா பேய்தான் நடமாடுது என்று அவனை சுட்டிக்காட்ட...

நான் உனக்குப் பேயா என்று சுட்டிய விரலைப்பிடித்துக்கொள்ள...அவனது கண்களைப் பார்த்து அப்படியே உறைந்து நிற்க...அவனும் சில நொடி அவளது ஸ்பரிசத்தில் அமைதியாக நின்றான்.

ரிதன்யாவோ  தன் கைகளை அவனிடமிருந்து உருவ; அவனோ இன்னும் இறுக்கிப் பிடித்தான்.

இன்னும் அவளை தன்பக்கமாக இழுத்து, என்னடி ஓவரா பண்ற கையை பிடிச்சதுக்கே இப்படி ரியாக்ட் பண்ற... நமக்கு கல்யாணம் முடிஞ்சா வேற என்னென்னமோ பண்ணுவேன் அப்போ என்ன பண்ணுவியாம்...ம்ம்ம். 

அவள் அதற்கு ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்க...

என்ன பயமா இருக்கா? அதான் ஓடிப்போயிடு உங்க வீட்டுக்கே போ.. உங்க அண்ணனை ஜாமீன்ல விடுறாங்களாம்,

உனக்கு நல்ல பையனாப்பார்த்து உங்க குடும்பத்துக்கு ஏத்த மாதிரி (அதை நக்கலாக அழுத்தி சொன்னான்) பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பான் போடி என்க...

உன்மையாகவே உங்களுக்கு என்னைய பிடிக்கலையா? ரித்திக் என்று ஏக்கமாக கேட்கவும்.

தன்னுடைய  முகத்தைப் திருப்பிக்கொண்டு உன்னை எதுக்கு எனக்குப்பிடிக்கணும்... நீ எனக்கு யாருமில்லை. நீ போனாலும் எனக்கு ஒன்னுமில்லை... தாராளமா உங்க வீட்டுக்குப் போகலாம் இப்போ வேணும்னாலும் கொண்டுவிடுறேன் வர்றியா என்று கேட்டான்.

"என் முகத்துக்கு நேரா பார்த்து சொல்லுங்க"

ஏன் உனக்கு  காது கேட்காதா? எப்படி சொன்னாலும் சொன்னது சொன்னதுதான் என்றுவிட்டு  தனது அறைக்கு சென்றுவிட்டான்...

படுத்தவனுக்கு தூக்கம்வரவில்லை புரண்டுப்படுத்தவன்... இப்போது எழுந்து ரிதன்யாவின் அறைப்பக்கம் செல்ல..அங்கோ கதவு திறந்திருந்தது.

உள்ளே எட்டிப்பார்க்க அவளில்லையென்றதும் எங்கப்போனாளோ? ஒருவேளை அவங்க வீட்டுக்கு போயிட்டாளா...வாய்ப்பில்லையே நம்ம அனுமதியில்லாம வாட்ச்மேன் அனுப்பிருக்க வாய்ப்பில்லையே என்று தேடி பார்க்க, அம்மையார் இருந்ததோ மொட்டைமாடியில் தனியாக அமர்ந்திருந்தாள்.

ஏறி வந்தவன் அவளைப் பார்த்ததும் தான் நிம்மதியானான்.. அவளருகில் வந்து அப்படியே அலேக்காக அவளைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்க...அவளோ அவனிடமிருந்து திமிற.

விடுடா என்னை; நீதான் என்னைய வேண்டாம்னு சொல்லிட்டியே, அப்புறம் நான் எங்கயிருந்தா உனக்கென்ன...விடுடா என்னை என்று வாய்பேச.

மரியாதையா பேசுடி இல்லைனா கீழப்போட்ருவேன்... ஒரேடியா  மேலப்போய் சேர்ந்திருவ, வாடா போடானு பேசுற அடி பிச்சிருவேன்டி...

அப்படித்தான்டா பேசுவேன்; என்னடா செய்வ...நீதானடா என்னை வேண்டாம் போனு சொன்ன...என்னைய நீ கடத்தாம இருந்திருந்தா உன்னை அப்படியே மறந்திருப்பேன்.. நீ தான் மறுபடியும் என் முன்னாடி வந்து நின்ன...நான் இல்லை...எல்லாம் செய்திட்டு வேண்டாம்னு சொல்லுவானம் நான் அப்படியே போயிடணுமாம்...போடா டேய் என்றதும்.

அப்படியே அவளை படியிலேயே இறக்கியவன் அவளது அந்த பேசுற வாயை தன் உதடுக்கொண்டு அடைத்தான்...அவன் கரங்கொண்டு அவளது முகத்தை தாங்கியிருந்தான்...அவளது  கண்களோ விரிந்துப் பார்க்க.

மெதுவாக அவளது உதட்டினை விடுவித்தவனது நெஞ்சில் குத்தியவள்...நீதனா அப்பவே எனக்கு எங்க பாப்பாதான் முக்கியம்; நீ வேண்டாம்னு என்னைய தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டல... அப்புறம் எதுக்குடா என்னைத் தூக்கிட்டுப்போன, அதுவும் ரேப் பண்ண முயற்சிப்பண்ணின...எல்லாம் நீயே செய்திட்டு போ போனு என்னை விரட்டுற.

உன் மனசாட்சிப்படி சொல்லு உனக்கு என்னைய பிடிக்கலைனு...என்று கோபத்தில் கேட்க...

அவன் ஒன்றுமே சொல்லாமல் பேசுற அவளையே பார்த்து நின்றான்.

என்னைய என்ன உணர்ச்சியே இல்லாத மனுஷினு நினைச்சிட்டியா...எனக்கு இப்போ நீ வேண்டாம் போடா...நான் எங்கயாவது போய்க்கிறேன் என்று அவனைத் தள்ளிவிட.

ரித்திக்கோ அவளை இறுக கட்டிக்கொண்டான். அவனது கரங்கள் அவளது மேனியில் ஊர்ந்துப்போக நெளிந்தவள்... கொன்றுவேன்டா என்று கையைத்தட்டிவிட...

மறுபடியும் அவளது இடுப்பில் கையைகொடுத்து தூக்கியவன் அவளது அறையில் கொண்டுப்போய் விடவும்...வாயைத்திறந்து எதோ பேச வந்தவளை ஷ்ஷ் என்று அடக்கியவன்...போய் தூங்கு என்று விட்டு கதவை சாத்திவிட்டு அவனது அறைக்கு வந்தவன் படுத்துவிட...இருவரின் சிந்தனையும்  பழைய நிகழ்வுகளில் லயித்தது.

மூன்று வருடத்திற்கு முன் அப்போதுதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ரிதன்யா   ப்ரண்ட்ஸ் கூட  மாலிற்கு சுற்றிப்பார்க்க வந்திருந்தாள்.

அங்க வைத்து ரித்திக்கைப் பார்க்கவும் ஆர்வத்தில்  ஓடிச்சென்று அவனிற்கு முன்பாக நின்றாள்...ஹலோ என்று சொல்ல...யாரென்று பார்த்தவனுக்கு நியாபகம் வந்தது.

"ஹாய் என்ன இந்தப்பக்கம்"என்று கேட்டான் ரித்திக்

ஹய்யா...உங்களுக்கு என்னை நியாபகமிருக்கா?  என்று கண்கள் பட்டாம்பூச்சியாக சிறகடிக்க கேட்டவளின் பிஞ்சு முகமும் அவளது ஆர்வமும் அவனை ஈர்க்கத்தான் செய்தது.

ஆமா...பார்த்த அன்னைக்கே என்னைப் பார்த்து கண்ணடிச்ச முதல் பெண்ணாச்சே மறக்குமா என்ன...அப்புறம் சொல்லு வீட்டுக்குத் தெரியாம ப்ரண்ட்ஸ் கூட சுத்துறியா?

ஆமா...கேட்டா விடமாட்டாங்க, கட்டடிச்சுட்டு வந்தாச்சு என்று கண்ணடித்து துள்ளலோட பேசினாள்.

வேற என்ன? 

"ஒன்னுமில்லை"

"காபி சாப்பிடுவோமா...வர்றியா" என்றதும் சரியென தலையசைத்தாள் ரிதன்யா.

இருவரும் காபி சாப்பிட அங்கிருந்த கபேயில் அமர... அதற்குள் ஓராயிரம் கதைகள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவளை... ரசித்துப் பார்த்தான்...

இருவரின் கண்களும் ஒருவரையொருவர் ரசிக்க... அவளது அந்த  வயதிற்கேயுண்டான பருவ வளர்ச்சி அவனை இன்னும் ஈர்க்க... அவனது கண்கள் அவளை அனுவனுவாக ரொம்ப ரசித்தது.

ரித்திக் அடங்குடா சின்ன பிள்ளைடா... ஆர்வக்கோளாறுலயும், உன்மேல உள்ள ஈர்ப்புலயும் இருக்குடா... அடக்கி வாசிடா என்றாலும் கண்கள் ரசிக்கத்தான் செய்தது.

மறுபடியும் ரித்திக்கின் மனமோ  மாணிக்கவேலின் மகள்டா, அதைவிட அந்த பொறுக்கி விஷ்வேஷின் தங்கை என்று  உணர்த்தினாலும்... அவளின்பால் செல்லும் மனதை அடக்க முடியவில்லை

"என்ன படிக்குற"

அதுவா இஞ்சினியரிங்க் படிக்குறேன்... அப்பா  பிஸினஸ் ரிலேட்டடா படினு சொன்னாங்க... நமக்குத்தான் அதுல இன்ட்ரெஸ்ட் இல்லை... நீங்க எம்.பி.ஏ தான. உங்க வீட்ல எல்லாரும் அப்படித்தான படிச்சிருக்கீங்க, சரி பரவாயில்லை நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்குறேன் என்றவள்... டக்கென்று தன் நாக்கை கடித்து  அவனைப் பார்க்க...

அவனோ என்ன  சொன்ன? என்ன சொன்ன? என்று சிரித்துக்கொண்டே கேட்கவும்...

ஆமா...உங்களுக்கு என்ன கேட்டதோ அப்படித்தான் சொன்னேன்...இப்போ அதுக்கு என்னவாம் என்க...

அப்படியே அவன் பேச்சை மாற்றினான் உன் பிரண்ட்ஸ் உன்னைத் தேடமாட்டாங்களா? என்று கேட்டு முடிக்கறதுக்குள்ளாக அவளது தோழி ஒருத்தி தேடிவந்து...

"இவருதான் உன் ஆளா, நல்ல ஹேண்ட்ஸம் தான்...எப்படி எங்ககூட வர்றியா? இல்லை  அவரே ட்ராப் பண்ணுவாரா? என்று நேரடியாக கேட்கவும்

ஐயோ மானத்தை வாங்கதடி போடி வர்றேன் என்று கண்ணைக் காண்பிக்க...

ரித்திக் நீ போ...உன் பிரண்ட்டை நான் ட்ராப் பண்றேன் என்று அந்தப்பொண்ணை விரட்ட...ஐயோ வேண்டாம் காலேஜ் கட் அடிச்சது வீட்ல தெரிஞ்சிடும் என்று அவள் எழும்பவும்...அவளது கையைப் பிடித்து வைத்துக்கொண்டு.

அவளது தோழியை போகச்சொன்னான்.

ரிதன்யாவைப் பார்த்து  நான் யாருனு உன் ப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லி வச்சிருக்க?

உன் ஆளுனா? அப்படியா?

அவளோ முகத்தை வேறுபக்கமாக கூச்சத்தில் திருப்பிக்கொள்ள, அப்படியே அதை தன் பக்கமாகத் திருப்பியவன்...

அவ்வளவா என்னை பிடிச்சிருக்கு? 

ம்ம்.. ரொம்ப என்று தன் கையை விரித்துக் காண்பித்தாள்...கல்லூரி முதலாமாண்டு படிக்கும் பொண்ணிற்கு என்ன விபரம் இருந்திடப்போகுது... வீட்டினுடைய எந்த நிலவரமும் அவளுக்குத் தெரியாது..

அதனால் எப்படியும்  அப்பாவுடைய பிஸினஸ்ல தெரிந்த குடும்பம்தான ரித்திக்கினுடையது என்றுதான் எந்த பிரச்சனையும் வராது  என்று தான் அவள் மனதில் விழுந்த நேசவிதையை வளரவிட்டாள்.

ரித்திக்கிற்கும் அவளது அந்த துறுதுறு பேச்சும் கண்கள் சொல்லும் காதலும், ஒரு கிறக்கத்தைக் கொடுக்கத்தான் செய்தது.

அவள் காபிக்குடித்து முடிந்ததும் உன்னை நானேக் கொண்டு விடுறேன்...வீட்டுக்கு முன்னாடி விட்டப்போதுமா இல்லை வீட்டுக்குள்ளவே விடணுமா?

ஐயோ...தெருப்பக்கம் விட்டிருங்க ஏற்கனவே ட்ரைவர் வரவேண்டாம் லேட்டாகும்னு அம்மாவுக்கு சொல்லிட்டேன்... நீங்க வந்தா அப்பாவுக்கு தெரிஞ்சிடும்...

இந்த வயசுலயே ரொம்ப விவரம் தான் என்று பேசியபடியே நடக்க, இருவரின் கரங்களும் உரசத்தான் செய்தது... அப்படி நடப்பது இருவருக்குமே ஒருவித போதையைக் கொடுத்தது அதையே தொடர்ந்தனர்...காரில் ஏறும் வரைக்கும்.

காரில் முன்பக்கம் அவனருகில் அமர்ந்தவள், அமைதியாக வர அவளைத் திரும்பி திரும்பி பார்த்தான் ரித்திக்.

அவளுக்கும் புரியத்தான் செய்தது அவனுக்கும் அவளை பிடிக்குது என்று, மெது மெதுவாக அவனருகில் அமர்வதற்கு நகர்ந்து செல்ல...தன் ஓரக்கண்ணால் பார்த்தவன்.

இவ என்னடா அட்வான்ஸ்டா போறா என்று நினைத்தவன்...உனக்கு இன்னும் நாலு வருஷம் படிக்கவேண்டியதிருக்குல...

அதுக்குள்ள எங்கவீட்ல எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிவச்சிட்டா என்ன பண்ணுவ?

என்னது கல்யாணம் பண்ணிவச்சிடுவாங்களா? ஐயோ? அப்போ என்னை இப்பவே உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போயிடுங்க.

காரை அப்படியே சைடில் ஒதுக்கி நிறுத்தியவன்...ஏன் மைனர் பொண்ணக் கடத்திட்டேனு உங்க அண்ணன் என்னை உள்ளத் தள்ளுறதுக்கா?

நான் மைனர் இல்லை மேஜர்...பதினெட்டு வயசு முடிஞ்சிட்டு...என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொல்ல.

அதுசரி அப்போ கல்யாணமே பண்ணிக்கலாமே...அடிங்க எங்க பாப்பா கல்யாணம் முடியணும், எங்க இரண்டு அண்ணனுங்க கல்யாணம் முடியணும்  அதுக்கு பிறகுதான் என் கல்யாணம்,எப்படியும் நாலஞ்சு வருஷமாகிடும்...

"நான் காத்திருப்பேன்"

அதுசரி நீ காத்திருக்கலாம் வேண்டாம் அதுக்குள்ள வருஷம் கரெக்ட்டா வந்திரும்...ஒழுங்கா படி சரியா என்று அவளது தலையைப் பிடித்து ஆட்டினவன்...அப்படியே அவளது கன்னத்தில் கைவைத்துக் கிள்ளப்போக அது பஞ்சுபோல அவன் விரல்களை உள்வாங்கியது.

அவ்வளவுதான் அப்படியே அங்கயே தன் உதடுகளை வைத்து மென்மையை  அறிய முத்தம் வைத்தான்...

அந்த ஒரு முத்தத்திற்கே தாங்காது கண்கள் கிறங்க மூச்சு வாங்கிக்கொண்டு அவனது சட்டையைப் பிடித்திருந்தாள் ரிதன்யா, அவளது கரங்கள் நடுங்கியது ,அவளது மூச்சு படபடவென்று அடித்துக்கொள்ள...அவள் தலைகவிழ்ந்திருந்தாள்.

 உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா சின்னப்பொண்ணா இருக்கடா; இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ஓகேவா என்றதும், சரி என்று தலையாட்டியவளை அவர்கள் வீடு இருக்கும் தெருவில் இறக்கிவிட்டவனின் மனதில் இப்போதும் இருக்கின்றாள். 

அடுத்தடுத்து அவளை எங்குப் பார்த்தாலும் சிறிது நேரம்  ஒதுக்கி அவளுடன் பேசி, நெருங்கி நின்று அவளது ஸ்பரிசத்தை உணர்ந்த பின்னே அவளை விட்டு வருவான்.

ஆனால் என்று ஆதிக்கு விபத்து ஏற்பட்டதோ அன்றிலிருந்து ரிதன்யாவை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்திருந்தான். விஷ்வேஷ் தான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் வலுப்பெற்றது... அதுதான் காரணம்.. ஆனால் சந்தனாவைக் கடத்தியது அப்பவே அவனுக்குத் தெரிந்திருந்தால் பிரச்சனை வேறுவிதமாகப் போயிருக்கும் அப்பவே ரிதன்யாவை கடத்தியிருப்பான்...

சந்தனா விபத்து நடந்தபிறகு ஒருதடவை அவளே வலுக்கட்டாயமாக அவனை தேடிவந்து சந்தித்தாள் "என்னைத் தேடி வராத.. இதுவே கடைசியா இருக்கட்டும்... மாணிக்கவேல் பொண்ணு எனக்கு வேண்டாம்... எங்க பாப்பாவோட நிம்மதியும் வாழ்க்கையும் எங்களுக்கு முக்கியம்... அதனால உன் மனசுல இருக்குறதை அழிச்சிடு...

ஓஓ..அப்போ உங்க மனசுல இருக்குற என்னோட நினைவுகளையும் ஏற்கனவே அழிச்சிட்டீங்க அப்படித்தான. நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை... நீங்கதான எல்லாம்னு இவ்வளவு நாளும் கற்பனையிலேயே வாழ்ந்திட்டிருக்கேன்...இப்போ வந்து இப்படி சொல்றீங்க...

யாருமே நினைச்சு பர்க்காததெல்லாம் நடந்திட்டு... அதனால வாழ்க்கையில நான் எந்த எதிர்பார்ப்பும் வைக்கலை... நீ எனக்கு வேண்டாம் அவ்வளவுதான் என்றான்.

அவளுக்கு அழுகை தாங்காமல் நான் உண்மையாதான் நேசிச்சேன்.. பார்க்கலாம் என் வாழ்க்கை எப்படி போகுதுனு என்றவள்... அவனிடம் நெருங்கிப்போக.

அவனோ வேண்டாம் என்கிட்ட வராத என்னை மயக்கலாம்னு பார்க்காத...உங்க அண்ணன் புத்தியை இங்க கொண்டு வராத என்று வார்த்தைகளை கடுமையாக்க... அது எதிர்பார்க்காதவள் அப்படியே அதிர்ந்து சிறிது நேரம் நின்றவள்,வெளியே வந்து அவனது கண்களை திரும்பி பார்க்க.. அவனது கண்கள் அவளைத்தான் பார்த்து வேற செய்தியை சொன்னது. அதன்பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதேயில்லை... அவன் அவளை கடத்தி செல்லும் வரைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow