மனதை மயிலிடம் மறந்தேனே-4

மனது-4
மணியன் முத்தழகிக்காக உள்ளே சென்று சாமிக்கும்பிட்டு வேகமாக வெளியே வந்தான்.அப்போது வெளியே கடையில் தனியாக நின்றிருந்த தீபாவின் அருகே வேகமாகச் சென்று நின்றான்.
அவள் யாருடா இதுவென்று பயந்து ஒதுங்கி நிற்க”என்ன நீ பால்வாடி பிள்ளைங்க மாதிரி பிரின்சிபால்கிட்ட புகார் கொடுத்திருக்க?எங்க டாக்டரம்மா வந்து எங்கய்யாவையும் என்னையும் அப்படி வையுறாங்க.இவ்வளவு வளர்ந்திருக்க அறிவில்லை”
அதைக்கேட்டு அவள் என்னவென்று கோபத்தில் கண்களை உருட்டி முறைத்தவள்,எங்க அண்ணனுங்க வந்தால் பிரச்சனையாகிடுமோவென்று பயந்து பின்னாடி திரும்பிப்பார்த்தாள்.
அதைக்கண்டு “என்ன உங்கண்ணனுங்க வந்திடுவாங்கன்னு பயமுறுத்திருய்யா?எவன் வந்தாலும் இந்த மணியாகிட்ட ஒன்னும் செல்லுபடியாகாது.அதனால் பயப்படாதே!”
‘பயமா?இவன் எந்த மாதிரி ரகம்.எதையுமே எதிர்ல இருக்கிறவங்களைப் பத்தி யோசிக்கவேமாட்டானா,அவனா வர்றான், அவனா பேசுறான் அவனா போயிடுறான்.ஊப்ஸ் அலங்காநல்லூர்ல இப்படியொரு காட்டெருமையா?’என்று யோசித்து நின்றாள்.
அதற்குள் முத்தழகியும் வந்துவிட்டார்.அவரோ :என்ன மனுஷன் நீ உனக்காக சாமிக்கும்பிட வந்தால் அது முடியறதுக்குள்ள ஓடிவந்துட்ட” என்று திட்டிக்கொண்டே அவனை இழுத்து குனிய வைத்து நெற்றியில் பட்டையைத் தீட்டிவிட்டார்.
அதில் புருவம் சுருக்கி பார்த்த தீபாவிடம்”அம்மான்னா கொஞ்சம் பயம் அவ்வளவுதான்.அதுக்காக உனக்கெல்லாம் பயப்படுவேன்னு நினைக்காத”
“நினைச்சிட்டாலும் உன்னையெல்லாம் பார்த்துட்டாலும் நீ பயந்துட்டாலும் போயா காட்டெருமை” என்று வாய்விட்டு மட்டும்தான் சொல்லவில்லை.உடல்மொழி அதைத்தான் சொன்னது.
அதற்குள் ஈஸ்வரியும் மகளைத்தேடி வந்துவிட்டார்.பெரிய அண்ணனும் மனைவியும் குழந்தைகளோடு வண்டியில் சென்றுவிட,சின்ன அண்ணன் கார்கொண்டுவருவதற்காக காத்திருந்தனர்.
அதற்குள் முத்தழகியை அழைத்துக்கொண்டு மணியன் அங்கிருந்துக் கிளம்பிவிட்டான்.தீபா போறவனையே பார்த்திருக்க ஈஸ்வரிதான்”என்னடி அவங்களையே பார்த்திட்டிருக்க என்ன விசயம்?”
“இதுதான் காலையில் வந்து ஸ்கூல்ல பிரச்சனை பண்ணின காட்டெருமை”
“ஓஓஓ எதுவும் வம்பு பண்ணினானா?”
“இல்லம்மா.அவன் ஒரு காட்டெருமை விடும்மா”என்றுவிட்டு கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு வந்துச் சேர்ந்தனர்.
அவள் சொன்னக் காட்டெருமையோ தனது வண்டியில் அம்மாவை ஏற்றிக்கொண்டு வீடுநோக்கிப் பறந்துக்கொண்டிருந்தான்.
பின்னாடி இருந்த முத்தழகியோ”ஏன்டா அந்தப்புள்ளை எம்புட்டு அழகா இருக்கு.அதுக்கிட்ட என்னத்தடா முறைச்சிட்டு பேசிக்கிட்டு இருந்த?”
“அதுதான் நம்ம ஐஸு பாப்பா டீச்சரு.காலையில் நம்மகிட்ட கொஞ்சம் லந்து பண்ணிச்சு.அதால டாக்டரம்மா என்னையவும் காளியய்யாவையும் வைச்சு திட்டித் தீர்த்துட்டாங்க”
“அதுசரி டாக்டரம்மா வஞ்சிச்சுன்னா உங்கமேலதான் தப்பு இருக்கும்.அழகா இருக்கு அந்தப்புள்ள இப்படியொரு புள்ள உனக்குக் கிடைச்சா நல்லாயிருக்கும்.நீதான் காட்டான் மாதிரி கல்யாணம் வேண்டாம்னு சுத்துதியே”
“யாரு இப்போ கோயில்ல பார்த்தியே அதுவா?”
“ம்ம்ம்”
“அதுசரி அது காலையிலே ஸ்கூல்ல வைச்சு சாமியாடும்போது பார்க்கலையே.அவக் கண்ணு ஒரு பக்கமும் வாய் ஒருபக்கமும் போயிட்டு வரும்.அவ பேசுற ரூல்ஸ்க்கு நம்மளையும் பெஞ்சு மேலே ஏறி நிக்க சொல்லுவா.இந்த டீச்சரே நமக்கு செட்டாகாது.ஆளை விட்று ஆத்தா”
அப்படியா?என்று கேட்டவர் சத்தமாகச் சிரித்தார்.அதைக்கேட்டவன்”எதுக்கு ஆத்தா சிரிக்குற.என்ன நான் பெஞ்ச் மீல ஏறி நிற்கிற மாதிரி யோசிச்சியாக்கும்”
“ஆமா.அப்படி நிக்கவைக்கவாது ஒருத்தி வரணும்”
“உன் வேண்டுதல் பலிக்காது ஆத்தாஆஆஆ”
“பார்க்கலாம்.ஆத்தா கண் திறந்து என் வேண்டுதலுக்குப் பதில் தருவா”
“தந்தா என்கிட்ட சொல்லு.அந்த வரத்தை திருப்பிக் கொடுத்துட்டு வந்திடுறேன்”
முதுகில் சுளீர்னு ஒரு அடி அவர் கொடுத்தார்.ஆத்தாஆஆஆஆஆ என்று வலியில் வண்டியை நிறுத்திவிட்டு அவரைத் திரும்பிப்பார்த்தான்.
அந்தநேரம் அவர்களைத் தாண்டி சென்ற காரிலிருந்து இவன் அடிவாங்கியதைப் எட்டிப் பார்த்துச் தீபா சிரித்தாள்.
அதைப்பார்த்தவன் “போடி”என்று தலையாட்டி கையை முஷ்டியை மடக்கிக் காண்பித்துவிட்டு அவனது அம்மாவிடம் திரும்பி “ஆத்தா இப்படியெல்லாம் ரோட்டுல வைச்சு அடிக்காத.என் மரியாதை என்னாகுறது.வேணும்னா வீட்டுக்குப்போய் கும்மு கும்முன்னு கும்மு”
“பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்கி இப்போ உன் பிள்ளைங்ககிட்ட அடிவாங்குற நாள்ல வந்து இப்படிச் சொல்லுறியே வெட்காம இல்லையா தம்பி.வண்டியை எடு”என்று நொந்துப்போனார்.
பார்க்கத்தான் இவன் காட்டெருமையா இருக்கிறான்.அவன் அம்மாகிட்டலாம் அடிவாங்கிட்டு நிக்கிறானே! என்று தான் தீபா சிரித்துவிட்டு எட்டிப் பார்த்தது.
ஆனால் அவளுக்கு ஒன்று தெரியவில்லை.அவனது இந்த அடிவாங்கல்கள் எல்லாம் அன்பானவர்களிடம் மட்டும்தான்.தன்னை எதிர்த்து நிற்கிறவனுக்கு அவனும் காளியைப் போன்றே எமன்தான்.
அவன் அடங்கிப்போகும் ஆட்கள் முன்பென்றால் இரண்டுபேர் இப்போதென்றால் ஐஸையும் சேர்த்து மூன்று பேரு.காளி முத்தழகி சின்னபாப்பா.
அவன் இவர்கள் மூவரையும் தவிர யாரையும் தன்னைத் தொடக்கூடவிட்டதில்லை.
தீபா அவனை நினைத்துக்கொண்டே போனாள்,ஏன்னு தெரியாது அன்று காலையில் இருவரும் முட்டிக்கொண்டு சண்டைப்போட்டுக்கொண்டு, மாலையில் அப்படியே லேசான சிரிப்போடு அவனைக் கடந்துவந்திருக்க ஒரு சின்னதாக அவனது ஞாபகம் நெஞ்சில் இருந்தது.
அடுத்தநாள் காலையில் மகளை எழுப்பி கிளப்பிக்கொண்டிருந்த சௌந்தர்யாவின் அருகில் வந்த காளி “மாடு”என்று அழைத்தான்.
“மாடு”என்று ஐஷுவும் திரும்பச் சொன்னாள்.சௌந்தர்யா கணவனைத் திரும்பிப் பார்த்து”மாமான்னுலாம் பார்க்கமாட்டேன்.இனி மாடுன்னுக் கூப்பிட்டிங்க அப்புறம் இருக்கு”
“சரி இனிக்கூப்பிடலை.ஆனா நனே பாப்பாவை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றனே.நம்ம மணியனும் நானும் அமைதியா போயிட்டு விட்டுட்டு பத்திரமா வந்திடுவேன்.டீச்சர்கிட்டலாம் சண்டையே போடமாட்டோம்”
“உங்களை எப்படி நம்புறது?உங்க வாயும் கையும் எப்படி நீளும்னுதான் எனக்குத் தெரியுமே.நேத்து அந்த டீச்சர் பயந்துட்டாங்க போல.அதனால் கிளாஸ் மாத்திக் கேட்டிருக்கேன்”
“ம்ம்ம்”
“என்ன ம்ம்ம்”
“சரின்னு சொன்னேன்டி”
“சரின்னா என்ன அர்த்தம்?”
“அமைதியா போய் விட்டுட்டு வந்திடுறோம்.புது கிளாஸ் மிஸ்கிட்ட எதுவும் பேசாமல் வந்திடுறோம்”
“இன்னைக்கு மட்டும் நம்பி அனுப்புறேன்”என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க மகள் சத்தமில்லாது வெளியே ஓடி இரண்டு அப்பத்தாக்களிடம் செல்லம் கொஞ்ச போய்விட்டாள்.
“என்னடி வர வர நீ ரொம்ப மிரட்டுற?பொண்டாட்டின்னு பார்க்கமாட்டேன்”
“என்ன பண்ணுவீங்களாம் மைனர் குஞ்சு?”
“கடத்திட்டுப்போய்…”
“கடத்திட்டுப்போய்…அப்புறம் சொல்லு மாமா.ம்ம்ம்”
“இராத்திரி ஒன்னும் பண்ணமுடியலை.நம்ம பாப்பாதான் நீ என்மேல கையைப்போட்டாலே சிங்கம் மாதிரி சிலுத்துக்கிட்டு சண்டைப்போடுறாளே”
“அதனால?”
“கடத்திட்டுப்போய் இரண்டுநாள் காதல் பண்ணுவேன்டி”
“ஹான்?ம்ம்ம் நல்லாயிருக்கே உன் ப்ளானு போ மாமாஆஆ”என்று அவனது நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட்டுப் போனவளின் கையைப் பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு நின்றான்.
“என்ன மாமா பண்ற?”என்று மெல்லியக் குரலில் அவனது காதோடு ரகசியமாகக் கேட்டாள்.
அவனும் அவளது காதில் “ரகசியமாக காதல் பண்றேன்டி.நாலு வருஷத்துக்கு முன்னாடி இந்த மாடு மாடுன்னு ஒருத்தி மாட்டு டாக்டரா இந்த ஊருக்கு வந்து இருந்தாளாம்;அவளை காரணமேயில்லாது அவ்வளவு பிடிக்கும்;அவளுக்கும் என்னை அவ்வளவு பிடிக்கும்;கல்யாணம் என்கின்ற நிர்பந்தமில்லாதே என்னோடு காதலோடு வாழ்ந்தாள்.அந்தக் காதலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்”
அதைக்கேட்டதும் சட்டென்று உணர்வுகள் உள்ளத்தில் பொங்கத் திரும்பி அவனது கண்ணோடு கண் பார்த்து அப்படியே நின்றிருந்தாள்.
இருவரது கண்களிலும் அதே பழைய காதல்.அதைத்தானே அவனும் அவளிடம் எதிர்பார்த்தான்.
அடுத்த நிமிடங்களில் இருவரது உதடுகளும் அவர்களது வசமில்லை.தனது பார்வையாலே அவளைக் கட்டிப்போட்டிருந்தான் காளி.
அவளது காதல் பார்வையை உணர்ந்தவன் தன் தலையை சரித்து அவளது மூக்கோடு மூக்கு உரசிக்காது, உதட்டினை லாவகமாகக் கடித்து பற்களுக்கு இடையில் வைத்து அப்படியே உறிந்து சுவைக்க ஆரம்பித்தான்.
சௌந்தர்யாவும் தனது காதலின் வேகத்தைக் காட்டுவதற்கு தனது கைகளால் அவனது தலையைப்பிடித்து பின்னபக்க முடிகளோடு விரல்களை நுழைத்துப் பிடித்துக்கொண்டாள்.
அந்த நீண்ட நெடிய முத்தம் என்பது இருவருக்குள்ளுமாக இருந்த அத்தனை பிணக்குகளும் இதயத்தில் லேசாக ஒட்டிக்கொண்டிருந்த வேதனையின் பிசிறுகளும் ஒட்டுமொத்தமாக களைந்து பழைய காளியும் சௌந்தர்யாவுமாக மீண்டும் உருமாற்றியிருந்தது.
இருதயத்தின் உருமாற்றமது! அத்தனை சுலபத்தில் உண்டாகவில்லை!
அதனால் வந்த ஆனந்தத்தின் ஊற்று இருவருக்கும் தொற்றிக்கொள்ள காளியின் மனதும் உடலும் அந்தரத்தில் பறப்பதுபோன்று உணர்ந்தவன் அப்படியே பின்னாகக் கட்டிலில் சாய்ந்தான்.
சௌந்தர்யாவும் அவன்மேல் சரிந்தாள்.முன்பைவிடவும் இப்போது அழகும் பொழிவும்கூடி அப்படியே அவனையே காதல் பித்தங்கொள்ளச் செய்யுமளவிற்கு இருந்தாள்.
“என்னடி மாடு சும்மா கும்முன்னு இருக்கிற.இன்னும் இன்னும் உன்னைத் தூக்கி கொண்டாடணும்னு தோணுதடி,செம்மக் கட்டைடி”என்று கழுத்தில் கடித்து வைத்தான்.
“மாமாஆஆ இந்த மாடுன்னு சொல்லுறதை விடேன்.உன் மகளும் உன்கூடச் சேர்ந்து என்னை மாடுன்னு சொல்லுறா பாரு.எங்கப்பா அம்மாவும் எவ்வளவு அழகா இருக்கேன் சௌந்தர்யான்னு பேரு வைச்சிருக்காங்க.நீ என்னடான்னா இப்படி மாடுன்னுக் கூப்பிடுற.ஹ்ம்ம் போ மாமா”
“மாடுன்னுக்கூப்பிடலை பசுமாடுன்னுக் கூப்பிடவா?”
“ச்சீ போ மாமா”என்றவள் அவரிடமிருந்து உருண்டுப்பிரண்டு எழுந்திருக்க முயன்றாள்.
அவளால் முயலமட்டும்தான் முடிந்தது.அவன் கரத்திற்குள் மட்டுமல்ல மொத்த உடலுக்குள்ளும் அவள் மாட்டிக்கொண்டாள்.
“என்ன மாமா பண்ற?விடு மாமா ஹாஸ்பிட்டல் போகணும்?”
“போகலாம் இருடி!”என்று அவளது முகத்தில் விழுந்து முடியை ஒதுக்கிவிட்டான்.
சௌந்தர்யா தனது கரத்தால் அவனது கன்னத்தைத் தாங்கி அவனையே ஆசையாகப் பார்த்தவள்”நான் அப்பா சொல்லி இங்க வந்தாலும் உன்னை உண்மையாக நெஞ்சிக்குள்ளிருந்தும் என் உயிருக்குள்ளிருந்தும்தான் மாமா காதலிச்சேன்.ஏனோ உன்னை பார்க்கும்போதெல்லாம் அம்மாவின் அந்த ஜாடை அப்படியே வந்துப்போகும்.அதுதான் உன்கூட இன்னும் இன்னும் நெருங்கவைச்சுது.உன்னோடு இணையவும் அதுததான் காரணம்”
“தெரியும்டி எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு விளக்கம் சொல்லுற.என் பொண்டாட்டியை எனக்குத் தெரியும்டி”
“இன்னும் உன் மனசுல என்னைப் பத்தி மிச்சசொச்ச வருத்தம் இருந்தால் எடுத்துப்போட்டிரு மாமா”
“அட பைத்தியமே!இன்னுமா கோபமிருக்குன்னு நினைச்சிட்டிருக்க.உன்னை தேடி அலைஞ்சனே அப்பவே மொத்தமா எல்லாமே போயிடுச்சு.அதுவுமில்லாமல் நீ இல்லைன்னு இரத்தத்தோடு தூக்கிட்டு ஓடினேனே!! அப்போதே என்னை மொத்தமும் உன்னிடம் தொலைச்சிட்டேன்.நீதான் என் காதல்! நீ மட்டும்தான் வாழ்வுன்னு உணர்ந்த நாள் அது !”என்று சொன்னவனின் உடல் மொழியோ அவளை மொத்தமாக தனக்குள்ள கொண்டுவரும் முயற்சியில் இருந்தது.
அதன்பிறகு சௌந்தர்யாவிற்கு சொல்லவா வேண்டும்,தாவி அவனது உதட்டில் நச்சென்று முத்தம் வைத்தாள்.
அதை தனதாக்கிக்கொண்டு அவள்மேல் படர்ந்தவன் தன் நெஞ்சை முட்டிக்கொண்டு,மூச்சுமுட்ட வைக்கும் அவளது பேரழகைத் தனது கையால் வருடினான்.
“மாமாஆஆஆஆ”
“ம்ம்ம்”என்றவன் அவள் எதற்குக்கூப்பிடுவாள் என்று தெரிந்து முகத்தை அப்படியே திருப்பி அவளது நெஞ்சமதில் தலைசாய்த்துக்கொண்டான்.
அவனது முடியை வருடியபடியே காதுமடலைப்பிடித்துக் கடித்து வைத்தாள்.
அவள் உடுத்தியிருந்த புடவையினூடே கைகளை அப்படியே நகர்த்தியவன் இமாலயத்தின் முடிவில் நின்றான்.
சட்டென்று திரும்பி அவனிடமிருந்து விலக நினைத்தாள்.ஆனால் மொத்த சேலையையும் உருவியெடுத்துவிட்டான்.
“ஐயோ மைனர் குஞ்சு நான் ஹாஸ்பிட்டல் போகணும்.சேலையைத் தா மாமா”என்று கை நீட்டிக் கேட்டுக்கொண்டிருந்தவளின் அங்கத்தின் அசைவுகள் அவனை இன்னும் நெருங்கிடத் துடிக்கவைத்தது.
அவள் நீட்டியக் கையைப்பிடித்து ஒவ்வொரு விரலாக முத்தம் வைத்து நகர்ந்து நகர்ந்து முத்தத்தை மொத்தமாக அவளது உடலில் இறக்கினான்.
அந்த முத்தத்தில் மொத்தமாக மயங்கிப் படுத்திருக்க,காளியின் கைகள் இன்னும் மென்மையான அங்கங்களை கைகளால் பதம்பார்த்துவிட்டு இப்போது நாவினால் சுவைத்துக்கொண்டிருந்தான்.
அவளுள் அவனும் அவனுள் அவளுமாக இருக்கும் முயற்சியில் தடையில்லாது முன்னேறிக்கொண்டிருந்தானர்.
What's Your Reaction?






