இதழ் வழி இதயம் நுழைந்தாள்
Ethaiyam1

ராணாவின்
1.இதழ் வழி இதயம் நுழைந்தாள்
இத்தனை லட்சம் பொண்ணுங்க இருக்கிற தமிழ்நாட்டுல ஒரு பொண்ண கொண்டு வர முடியலையா உங்களால? என்ன பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு ஒரு பொண்ணு வேணும்.. கூட படுக்க காசு கொடுத்தா நொடிக்கு ஒருத்தி வர்றா ..கல்யாணம் கட்டிக்க ஒருத்தியும் வர மாட்டாளா? நெத்தி கண் திறந்தபடி சினத்தில் தொண்டை பந்துகள் ஏறியபடி தண்ணீரை அருந்தினான்..
சார் அது அவங்க தொழில்.. ஆனா நீங்க கேட்கிறதுக்கு பொண்ணுங்க வர்றது கஷ்டம் சார், நாங்களும் தேடதான் செய்றோம், ஒருத்தரும் உங்க கன்டிசனுக்கு ஒத்து வர மாட்டைக்காங்க சார்... மேனேஜர் விழி பிதுங்கி போனார் இந்த ஒருவாரத்தில் எதிரில் நிற்கும் மல்லனால்..
"ஏன் ஒழுங்கா தேடல சொல்லு"...அவன் இவருக்கு இதே வேலையா போச்சுடா காசுக்காக என்ன வேலை எல்லாம் செய்ய வைக்கிறான்க அண்ணனும் தம்பியும் தன்னிலை நொந்து போனார்
"இப்ப என்ன பண்ண அதை சொல்லு கேள்வி வேண்டாம் பதில் வேணும்"..
"சார் தாத்தாகிட்ட ஒரு மாசம் டைம் கேட்டு வாங்கி தாங்க, எப்படியாவது ஒரு பொண்ண பிடிச்சி கொண்டு வந்துடுறேன்..."
" அந்த ஒரு மாசம் டைம் தந்தா நான் ஏன்யா இப்படி டென்சன் ஆக போறேன் .. வேற ஐடியா தேட போறேன்...ஆம்பளையா பிறந்தா கல்யாணம் பண்ணணும்னு அவசியம் இருக்கா"..கல்யாணம் பண்ண கூடாது என்ற லட்சியத்தில் மண்ணை அள்ளி வாரி இறைத்த தாத்தாவை டெப்பாடி ஆக்கும் அளவுக்கு அவனுக்கு கோவம் வந்தது..
அது வந்துங்க சார் ஆறு பிள்ளை பெற்று வரலாறு படைத்த மனிதன் குழைந்து கொண்டே அசடாக சிரித்தார்..அதன் அர்த்தம் புரிந்து கொண்டவன்
அதுக்குதான் டெய்லி ஒருத்தி என் ரூமுக்கு சேவை செய்ய வர்றாளே .. காசு வீசுனா காமம்!! இதுக்கு கல்யாணமா? யாரு கண்டுபிடிச்சது... இந்த சட்டத்தை ரப்பீஸ்! எரிச்சலா வருது !!என்று மேஜையில் குதித்து ஏறி அமர்ந்தான்....
யோகி கிருஷ்ணா , 29 வயது ,
ஹீரோ அழகாதான் இருப்பான் இவனும் அழகுதான்.. யோகிகிருஷ்ணா பேருக்கு ஏற்றது போல கிருஷ்ணலீலை முறைத்த முகம் வைத்து கொண்டே செய்வான்..
உலக நாடுகள் முழுவதும் யோகியின் பெயர் பிரசித்தி பெற்றது.. யோகி பல்துறையில் கால் பதித்து கொடி ஏற்றி தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறது .. தாத்தா காலத்து சொத்து வழிவழியாக தொழில்கள் பெருகி உலகம் முழுவதும் கிளைகள் பரவி தமிழ்நாட்டில் முதல் இடத்தில் இருக்கிறது...
தாத்தா கிருஷ்ணருக்கு இரு மகன்கள் யுகேந்திரன்,லோகேந்திரன்.. யுகன் மனைவி லட்சுமி இவர்களுக்கு பிறந்தவன் யோகி கிருஷ்ணா, லோகேந்திரன் ...வாணி தம்பதியரின் மகன் ..
சஞ்சய் கிருஷ்ணா.. வயது அதே 29 இருவரும் ஒரு மாதம் முன்ன பின்ன பிறந்தவர்கள் , கைகோர்த்து மண் வைத்து விளையாண்டு இப்போது பெண்ணை வைத்து விளையாடும் உத்தமபுத்திரர்கள்..
பெயரை போல இருவரும் கட்டுபாடு இல்லாமல் பணம் , பெண், போதை, டிஸ்கோ ,பப், இரவு நேர கேளிக்கை என்று வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள்...
காலையில் வேலை என ஓடும் யோகிகள் மாலையில் கோபியர் கொஞ்சம் கிருஷ்ணர்கள்.. தொழில் செய்யும் இடத்தில் சிறுத்தைபோலவே, படுக்கையில் பெண்களை வேட்டையாடும் சிறுத்தைகள்... தன் டென்சனை இரவில் வரும் பெண்களை பயன்படுத்தி விட்டு காமத்தை சஸ்ட் லைக் தட் என கடந்து போய்விடும் அழகுக்கு இலக்கணமான யோகிக்கும் ,சஞ்சய்க்கும் ஒரு வாரமாக தலை மேல கத்தி தொங்குகிறது தன் தாத்தாவின் கெடுபிடியால்....
இவர்களின் விளையாட்டுகள் குடும்பம் மொத்ததுக்கும் ஏற்கனவே தெரியும்.. சரி திருந்துவார்கள் என பார்த்தால் ..அவர்களோ பெண்களின் எண்ணிக்கையை கூட்டினார்களே தவிர குறைக்கவில்லை.. இப்படியே விட்டால் அவன் போக்கில் கழுதையாக போய்விடுவார்கள் என்று கடிவாளம் போட ..தாத்தா அதிசய சட்டம் ஒன்றை போட்டார்..
ஆடி போய்விட்டார்கள் யோகி கிருஷ்ணா, சஞ்சய் கிருஷ்ணா...
ஹாலில் குடும்பம் குழுமி இருந்தது .. யோகி,சஞ்சய் பேட் மிட்டன் விளையாடிய விட்டு உள்ளே வந்தனர்.. பார்த்ததும் பஞ்சாயத்து தான் தெரிந்து விட்டது... இவனுக்கு அவனும்...அவனுக்கு இவனும் சளைத்தவர்கள் இல்லை அழகில் ,அடாவடியில்...முரட்டுதனத்தில்
என்னடா பண்ணின? யோகி
எங்கடா பண்ண விடுறாள்க.. சும்மா கத்துவாள்க ஒரு காரியம் காரியம் நடக்காது...சஞ்சய்
தூ நான் அதை கேட்கல இங்க பஞ்சாயத்து வழக்காக உனக்குதான அதிகமாக நடக்கும் அதான் கேட்டேன்..
நானும் உன்ன போல இப்பதான உள்ள வர்றேன், எனக்கும் தெரியல வாணிகிட்ட கேட்டா சொல்ல போகுது .. வா போய் தீர்ப்பு சொல்லிட்டு வருவோம்..
நான் வரல, எனக்கு குடும்னாலே அலர்ஜி ..அன்பு, பண்பு கருணை ,எருமைன்னு உயிர எடுப்பாங்க. உனக்குதான் செட் ஆகும் நீயே போய் கொஞ்சு, என்ன விடு யோகி சொலலிவிட்டு படியில் ஏற ஆரம்பித்து விட்டான்...
நில்லு...குரலில் கால் அசையாமல் நின்றது
எவன் அவன்? சஞ்சய் சொல்லி கொண்டே திரும்பினான் அவர்கள் தாத்தா கிருஷ்ணன் கையில் தடியோடு வந்தார்..
யோகி: ஓல்ட் பீஸ் வந்திடுச்சி இனி மாநாடு களைகட்டும் அவர் பேச கூட்டம் ஜால்ரா அடிக்கும் ,நமக்கு தலை வெடிக்கும்...
ஹரே ஹரே யோகி உன் பேச்சு எல்லாம் அதிருதே நேத்து நைட் யாரு?
அதை ஏன் கேட்கிற ஒரு இத்து போன எருமை வந்தது, ஒரு மண்ணும் தெரியல காசு மட்டும் சரியா வாங்கி உள்ள சொருகிட்டு போறா..
நீ ஏன் யோகி அந்த டினோவை டிரை பண்ண கூடாது ,ஆளு கொஞ்சம் சுமார் தான்..
கிழவின்னு சொல்லு...
ஆனாலும் வேலையில கில்லிடா...
உனக்குதான் அவ லாயிக்கு ,நான் தேடுற மாதிரி கம்பெனி ஒருத்தியும் கிடைக்க மாட்டைக்கிறாளேடா.
நீ ஏன்டா ஒரு விளம்பரம் போட கூடாது
போடலாமே அதுக்கு முன்ன உனக்கு போட்டு டிரையல் பார்ப்போம்...
ஒன்னும் பிரச்சினை இல்லை வந்த வரை லாபம் தான் யோகி எனக்கு..
பெரிசு ரொம்ப நேரமா முறைக்குது என்னவாம் அதுக்கு..
இரு கேட்டு சொல்றேன்.. சஞ்சய் நல்லவன் போல் தன் தாய் நோக்கி நடந்து போனான்..
என்ன காலையிலையே வீட்ல யார போட்டு தள்ள பஞ்சாயத்து நடக்குது தன் அன்னை வாணிக்கும் ,பெரிய அன்னை லட்சுமிக்கும் இடையில் வந்து அமர்நதான்..யோகி என் வேலையை பார்க்க போறேன் என்பது போல இடத்தை காலி செய்து விட முனைந்தான்..
உங்கிட்ட பேசணும் யோகி என்றார் யோகியின் தந்தை யுகேந்திரன்...
யோகி படியில் ஒரு நிமிடம் நின்று அவரை திரும்பி பார்த்தவன்..
வெட்டி கதை பேச எனக்கு நேரமில்லை...ஆபீஸ் கிளம்பணும்..
போகலாமே, ஆனா கேட்கிற கேள்விக்கு பதில் வேணும் தாத்தா குரலில்..
கேளுங்க
நேத்து நைட் எங்க இருந்த..
இதுல மறைக்க என்ன இருக்கு,, கால் கேர்ள் கூட பீச் ஹவுஸ்ல இருந்தேன் .. என்னவோ தெரியாதது போல கேட்கிறீங்க என்றதும் மற்றவர்கள் அனைவரும் அவனை ஏன்டா என்பது போல் பார்க்க .. சஞ்சய் அப்படியே மெல்ல நழுவ நினைத்து எழும்பி அறை நோக்கி நடக்க ஆரம்பித்தவன் தன் தந்தை மீது மோதி நின்றான்..
நீ எங்கடா போயிருந்த... அடுத்த கேள்வி இவனுக்கு பாய்ந்தது ..
தாத்தா அவன மாதிரி அசிங்கமாவெல்லாம் நான் சொல்ல மாடடேன்.. ரேஷ்மி கூட டேட்டிங் போனேன்...
அவன் சொன்னதும் நீ சொல்றதும் ஒரே அர்த்தம்தான் .. எப்படிடா எங்க குடும்பத்து பிள்ளையா வந்து பிறந்தீங்க ..
ஆமாடா , நான் உன் அம்மாவை தவிர வேற பொண்ண பார்த்து பார்த்திருக்கியா சஞ்சய்.. லோகேந்தர் மகனை முறைத்து கொண்டே கேள்வி கேட்டார் அவனோ எல்லாத்துக்கும் ரகமாக பதில் வைத்திருந்தான்..
உங்க விதி ஒன்னோட முடிஞ்சி போகணும்னு இருந்திருக்கு டேடி.. இப்போ கூட ஒன்னும் கெட்டு போகலப.. ரேஷ்மின்னு அத்தை ஒன்னு இருக்கு.. செம கட்டை, நீங்க ம்ம்ம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க டீலிங் பேசி நான் முடிச்சிடுறேன், ம்ஹூம் சொன்னா பெரியப்பாவுக்கு முடிச்சிடலாம் என்றதும் சுள்ளென சஞ்சய் முதுகில் ஒரு அடி விழுந்தது,அவன் தாய் வாணியேதான் போட்டார்..
நீங்க கெட்டதும் காணாதுன்னு ஏன்டா என் புருஷன கெடுக்கிற ..
பாவம் மனுஷன் ஆசையா கேடடார்னு ஆஃபர் பண்ணினேன், வேண்டாம்னா போங்க..
இது எல்லாம் திருந்தாதுங்க, உலகத்துக்கு பாரமா..
யாரு நாங்க பாரம்... போம்மா!! நாங்கதான் என்ஜாய் பண்ணி ரசிச்சி வாழ்றோம்.. நீங்கெல்லாம் வேஸ்ட்.. புருஷன், பூஜை புள்ளைங்கன்னு குண்டு சட்டிக்குள்ள உலகத்தை வாழ தெரியாம ,வேஸ்ட் பண்ணிட்டு.. என்ன குறை சொல்லாதீங்க என்றான் சஞ்சய்
ஆமாண்டா நீங்க பொண்ணுங்க சகவாசம் வச்சிருக்க மாதிரி நாங்க வச்சிருந்தா, எப்பவோ பிச்சை எடுக்க வேண்டியிருக்கும் ...
யோகிக்கு எரிச்சல் வண்டி வண்டியாக வந்தது..குடும்பத்தை அனுசரித்து போக அவனுக்கு ஒருநாளும் தெரிந்ததே இல்லை.. எதற்கு எடுத்தாலும் முட்டி கொள்ளும் இவன் தவறா?அவர்கள் தவறா தெரியாது ஆனால் குடும்பத்தில் தனித்து வாழ்வான்..
இப்ப எதுக்கு என்ன இப்படி ஸ்கூல் பையன் போல நிற்க வச்சி கேள்வி கேட்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?யோகியின் கடுமையான சத்தத்தில் அறை எங்கும் அமைதி நிலவியது.
அத சொல்லதானப்பா ,இராத்திரி பிஸியா இருந்த உங்க ரெண்டு பேரையும் ஆள விட்டு கூட்டிட்டு வந்திருக்கு.. இரவில் வெளிநாட்டு அழகியோடு மட்டைபந்து விளையாண்டவனை, தாத்தாவுக்கு சீரியஸ் என்று அழைத்து வர டிரைவரை அனுப்பியதில் .. ஏற்கனவே கோவம் இப்போது அதை சொல்லவும் இன்னும் எரிச்சல் வந்தது..
நாங்க என்ன சின்ன குழந்தைங்களா..பண்றது சரியா தப்பான்னு தெரியும் எங்களுக்கே.. நாங்க ஒன்னும் யாரையும் வலுக்கட்டாயமா வாங்கன்னு கை பிடிச்சி இழுக்கல.. பணத்துக்காக வர்றவ கிட்ட போறோம் இதுல என்ன தப்பு தப்பே பண்ணவில்லை என்று பேசும் யோகியை மற்றவர்கள் செய்வதறியாது பார்த்தனர்...
நிறுத்துடா படவா ஒரு வார்த்தை பேசுன கன்னம் சிவந்திடும் ராஸ்கல் கிருஷ்ணன் ஒலிபெருக்கி சத்தம் கேட்டு குண்டூசி சத்தம் இல்லாத அமைதி ..
இத்தனை வருடம் ஆனாலும் அவரின் கை அசையாமல் இந்த வீட்டில் எதுவும் நடக்காது.. பத்து வருடத்துக்கு முன்பு மனைவி யோகேஷ்வரி இறந்து விட சிறுது நோய்வாய் பட்டு விட்டார் பிறகு வீட்டில் இருந்து விட்டார் ...
யோகி,சஞ்சு இங்க வந்து உட்காருங்க அவரின் கடுமையான குரலில்
ஆங் தாத்தா சஞ்சய் வந்து அவர் கை நீட்டிய இடத்தில் உட்கார்ந்து கொண்டான்..
நீயும் தான் யோகி..
எனக்கு காது நல்லா கேட்கும் அங்கிருந்தே சொல்லுங்க...
எப்போ யோகி நீ பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்ப லட்சுமி மகனின் முகத்தை வேதனையாக பார்த்தார் ...
மரியாதை கொடுக்க தோணும் போது கொடுப்பேன், உலகம் முழுசா உங்க சொத்தை நூறு மடங்கு மாத்தி
இருக்கோம் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம இப்படி நிற்க வச்சி பேசினா எப்படி மரியாதை கொடுக்க தோணும்...
ஊருக்கே நீ பெரிய பருப்பா இருந்தாலும் எனக்கு நீ பொடியன் தான்டா...
இப்போ என்ன பண்ணணும் அதை சொல்லுங்க...
உங்கள பத்தின எல்லா நியூஸ் வந்துட்டுதான் இருக்கு..
அதற்கு
தாத்தா நாங்க தொழில் சரியாதான் பண்றோம் என்றான் சஞ்சய் முந்திகொண்டான்..
எனக்கு தொழிலை விட கெளரவம் முக்கியம், நடத்தை முக்கியம் என்றதும்..
யாருடா இந்த வேண்டாத வேலையை பார்த்தது .. மேஜர் சுந்தரராஜன் போல இனி தமிழ் இங்கிலிஷ்ல பேசி உயிர எடுப்பாரே,என்று சுற்றி இருந்தவர்களை பார்த்தான் சஞ்சய்...
ராணி தேனீ இருந்தா தான், தேன் கூட்டுக்கு மதிப்பு..
டிஸ்கவரி சேனல் பார்த்துட்டு வந்தீங்களா தாத்தா என்றவன் தலையில் தடியால் போடு போட்டார்..
படவா படவா பேசி முடிக்கிற வரை பேச கூடாது...
தாத்தா ஒரு நாள் இல்லை ஒரு நாள் இதை உடைச்சி போடுறேன் பாரு.. என்ன மட்டும் அடிக்கிற அவன் ஒருநாள் கூட யாருக்கும் மதிப்பு தர மாட்டைக்கிறான் அவன அடிக்கிறீயா நீ...
உரிமை உளளவனதான் அடிக்க முடியும் அவருக்குதான் நாம முக்கியம் இல்லாத வேற்றாள் தானே...
இப்போ எதுக்கு இந்த கதை?என்பது போல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..
சரி தாத்தா ராணி தேனீ கதை சொல்லுங்க பிறகு யோகி பத்தி பேசுவோம்...
ராணி தேனீ இருந்தா தான் தேன்கூட்டுக்கு மதிப்பு, அதே போல பொண்ணு இருந்தாதான் குடும்பத்துக்கு மதிப்பு..
அதுதான் திருவாரூர் யானை போல அம்மாவும் பெரியம்மாவும் அசைய முடியாம வீடு புல்லா அடைச்சி மேனிக்கு இருக்காங்களே...என்றான் தன் குண்டு அம்மாவை பார்த்தபடி சஞ்சு..
படவா வாயை திறக்காத..என்ன டென்சன் பண்ணாத..
சாரி தாத்தா ,சொல்லுங்க...
நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணணும்...
என்ன? கல்யாணமா கல்யாணமா!! கல்யாணமா!! சந்தானம் போல சஞ்சய் ரியாக்ஷன் கொடுத்தான், யோகி முடிஞ்சா பண்ணி வை என்பது போல் உட்கார்ந்திருந்தான் ..
இதழ் வழி இதயம் நுழைவாள்........................
What's Your Reaction?






