உறைபனி என்னில் பொழிகிறாய்-24

அத்தியாயம்-24
காலையில் எழுந்தவுடன் பாசமலகள் ஐந்தும் சென்று நின்ற இடம் ரிஷியின் வீடு.
அவனோ சந்தனாவை தனக்குள் வைத்து பிடித்தபிடியில் தூங்கிக்கொண்டிருக்க, அவனது போனிற்கு அழைத்தார் விஜிம்மா,அதை எடுத்துப் பார்த்தவன் விஜிம்மா வரவர கரடி வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க என போனை அணைத்து வைத்தவன் தன் மனைவியை கட்டிக்கொண்டு தூங்கினான்.
அதற்குள்ளாக விஜிம்மாவோ "வீட்டுக்கு அவனோட மச்சானுங்க வந்திருக்காங்க, இன்னம் தூங்குறான், இவனோட பெரிய கேவலம் நமக்கு என்று தலையில் அடித்துக்கொண்டவர்...
நந்தனிடம் உன் தம்பியப் போய் எழுப்புடா... எல்லாருடைய முன்னாடி நம்மளை மானத்தை வாங்குறான்டா என்றதும்.. நந்தன் மெதுவாக முன்னறைக்கு சென்றவன் வந்தவர்களின் முன்பாக அசடுவழிந்த சிரிப்பொன்றை சிரித்துக்கொண்டே மேலே சென்று... ரிஷியின் அறை கதவை மெதுவாகத் தட்ட.
ரிஷியோ இந்த விஜிக்கு வேற வேலையே இல்லை...உனக்கு ஜூஸ் தாரேன் சூப்புத் தர்றேனு என்னையும் சேர்த்து தொந்தரவுப் பண்றாங்கப் பாரு என்றதும்...
சந்தனா மெதுவாக அவனை விலக்கி எழுந்து கதவைத் திறக்க... அங்கு நந்தனோ... உங்க அண்ணன்க எல்லோரும் ஒட்டுமொத்தமா வந்திருக்காங்கமா சீக்கிரம் ரிஷியை எழுப்பி விடு... என்றவன் கீழே சென்றுவிட்டான்.
சந்தனாவோ எதுக்கு எல்லோரும் வந்திருக்காங்க... என்ற யோசனையோடவே ரிஷியை எழுப்ப அவனோ என்னடா செல்லம் என்று அவள் மேல் கையப்போட்டு தன் பக்கம் இழுக்க அவளோ "ரிஷி எழும்புங்க, அண்ணன்ங்க எல்லோரும் வந்திருக்காங்களாம்...சீக்கிரம் எழும்புங்க என்று குளிக்கப்போக"
அண்ணன் என்ற வார்த்தையை கேட்டதும் பதறி எழும்பியவன் இங்க எதுக்கு வந்திருக்காங்க... நேத்துதானாடா அங்கிருந்து வந்தோம்... நைட் வேற போன்ல பேசினியே என்று நொந்துப்போய் கேட்க.. தெரியலை வாங்க என்று அவனையும் அழைக்க.
இது நல்லாயில்ல சொல்லிட்டேன், நேத்துதான இங்க அனுப்பி வச்சாங்க அதுக்குள்ள இன்னைக்கு உன்னைப்பார்க்க வந்துட்டாங்களா... என்னங்கடா நியாயம் இது என்று கட்டிலில் அமர்ந்து சத்தம்போட்டு சந்தனாவிடம் பேச...அவள் குளித்து முடித்து அரைகுறையில் வர...அப்படியே எழுந்து அவளிடம் நெருங்கியவன்...சந்துபேபி என்று அவளது ஈரத்தலையில் தன் கரத்தினை நுழைத்து அவளது முகத்தினை தன் பக்கம் இழுத்து நெற்றயில் முத்தமிட்டு தன் வேலையை தொடங்க...அவ்வளவுதான் அவனைத் தள்ளிவிட்டவள் போய் குளிங்க அழுக்கு பையன் என்றதும்.
உன்னாலதான் இப்போ அழுக்கா ஆகிட்டேன் என்று சோகத்தோடு உள்ளே சென்று குளித்து வெளியே வந்தவன்...
மனைவியை தேட, அவளோ எப்பவோ கீழேப்போயாச்சு...இவனும் அங்கு செல்ல.
சந்தனா நடுவில் அமர்ந்திருக்க அவளைச் சுற்றி ஐந்துப்பேரும் இருந்தனர்...
அடேய்களா என் பொண்டாட்டி பக்கத்துல உட்கார எனக்கு கொஞ்சமாவது இடமாவது கொடுங்களேன்டா என்று நினைத்துக்கொண்டே இறங்க...அதற்குள் விஜிம்மா சாப்பாடு தயார் செய்து அழைக்க...சிறிது யோசித்தனர்.
அதற்குள் சந்தனா வாங்கண்ணா சாப்பிடலாம் எனக்கும் பசிக்குது என்றதும்...உடனே சரி எனத் தலையாட்டி சாப்பிடச் செல்ல...ரிஷியை அங்கு யாரும் கண்டுக்கவேயில்லை...விஜிம்மா உட்பட.
அங்கயே அமைதியாக முகத்தை உர்ரென்று வைத்துக்கொள்ள பின்னாடியே வந்த சந்தனா...அவனது கையைப்பிடித்து இழுத்து சாப்பிட அழைத்துச்சென்றாள்.
அவர்கள் எல்லோருடைய எண்ணமும் இதுதான் நம்ம பாப்பவே இங்கதான் வாழ்றா, அவ சாப்பிடறதை நம்ம சாப்பிடமாட்டோமா...என்றுதான் சந்தோஷத்தோடே சாப்பிட்டனர் எந்தவித
பணத்தின் குணம் அங்கு வரவில்லை...அன்பும் பாசமே பிராதனமாக இருந்தது.
ரிஸ்வான் அத்தை நீங்க நல்ல சமைக்கறீங்க...பேசாம நானும் சந்தனாக்கூட இங்கயே வந்திடட்டுமா? என்றதும்...
ரிஷி அரண்டுட்டான் வந்தாலும் வந்திருவான்...அப்புறம் என் கதி அதோகதிதான்.
ரித்திக்தான் நீ திங்கறதுலயே இருடா...இங்க வந்த விசயம் மறந்திட்ட என்றதும் எல்லோரும் அமைதியாகிவிட சாப்பிட்டு எழுந்ததும்..முன்னறையில் பேச உட்கார்ந்தவர்கள் மெதுவாக"அத்தை தப்பா நினைச்சிக்காதிங்க...ரித்திக்கோட கல்யாணம் வருது, அதுக்கு எங்ககூட சந்தனா இருக்கணும். அதனால நான் அவளை அழைச்சிட்டு போகலாமா...அப்பா சொல்லச் சொன்னாங்க, கல்யாணத்துக்கு அப்பா முறையா வந்து கூப்பிடுவாங்களாம். அதுக்கு சந்தனா எல்லாத்துக்கும் முன்னாடி நிக்கணும், துணி எடுக்க,தாலி எடுக்க அதனாலதான் தப்பா நினைச்சிக்காதிங்க, அதுக்கு அப்புறமா கொண்டுவந்து விட்டுறுவோம்"என்று பெரியவனான ப்ரணவ் கேட்க.
விஜிம்மா"என்ன தம்பி நீங்க, உங்க தங்கச்சிய உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு எதுக்கு இவ்வளவு தடுமாற்றம்...இந்த நேரத்துல தாய்வீட்ல இருக்கணும்னு அவளுக்கும் ஆசையிருக்கத்தான் செய்யும், அழைச்சிட்டுப்போங்க தாரளமா"
ரிஷிக்கு அப்படியே கடுப்பாகிட்டு விஜியை முறைத்தவன்...எதுவும் சொல்லாமல் இருக்க...
ஆடி மாசம் தானடா பொண்டாட்டிய பிரிச்சு கூட்டிட்டு போவாங்க...இங்கென்னடானா வாரத்துக்கு நாலு நாளா கூட்டிட்டு போறீங்க என்று கடுப்பில் இருந்தான்.
வர்ஷாவைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு தான் இருந்தனர்.நந்தனோ தம்பியின் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விட்டான். அவன் என்ன யோசித்திருப்பான் என்று அவனுக்குப் புரிந்ததும் அதனால் கமுக்கமாக சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அதைவிட ராமகிருஷ்ணனும் மகனின் நிலை அறிந்து, பாவமாக தோன்றவும் அவனுக்கு கையைக் காண்பித்து அமைதியாக இரு நான் ஏதாவது பண்றேன் என்று சைகை செய்ய... சரி என்று தலையசைத்துவிட்டு அமர்ந்திருந்தான்...
அதற்குள் நந்தனின் மகன் சிறியவன் வந்து எங்க சித்தப்பாவ கூட்டிட்டு போக மாட்டீங்களா? சித்தியை மட்டும் தான் கூட்டிட்டு போவீங்களா?
எங்க மம்மி அம்மாச்சி வீட்டுக்குப் போகும்போது எங்க டாடியையும் சேர்த்து தான் கூட்டிட்டு போவாங்க...டாடி வரலைன்னா மம்மி அழுவாங்க...
ரிஷிப்பா போகலைனா சந்தனா சித்தி அழமாட்டாங்களா? சரியான நேரத்தில் அவன் கேள்விக் கணைகளைத் தொடுக்க...
ரிஷிக்கோ ஹப்பாடா நமக்காகப்பேசவும் ஒரு ஜீவன் இருக்கே என்று நிம்மதியாக.
அதற்குள் வைபவ் அவனைத் தூக்கி மடியில் வைத்து இரண்டுபேரையும்தாடா கூட்டிட்டுப்போறோம்... உங்க ரிஷி சித்தப்பாவை கூப்பிடாமல் போனால் சந்தனா சித்தி அழவாளோ? இல்லையோ? கண்டிப்பா ரிஷி அழுதிடுவாரு என்றதும் எல்லோரும் சிரித்துவிட்டனர்.
அப்படியா நம்ம முகம் எல்லாத்தையும் காட்டிக்கொடுக்குது என்று யோசித்தவன். எல்லோரையும் பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க... அது இன்னும் மற்றவர்களை சிரிக்க வைத்தது...
ஒருவழியாக ரிஷியையும் சந்தனாவையும் பத்திரமாக அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு...ப்ரணவும் வைபவும் கமிஷனர் ஆபீஸிற்கு சென்று பாதுகாப்புக்காக எழுதிக் கொடுத்துவிட்டு வந்தனர்.
இங்கோ கேசவும் ரித்திக்கும் தங்களது திட்டத்தை சரியாக தீட்டிருந்தனர்.
ரிஸ்வான் வழக்கம்போல ரிஷியுடனே ஒட்டிக்கொண்டான்.
அடுத்தநாள் இரண்டு போலிஸ்காரர்கள் வீட்டின் பாதுகாப்பிற்காக வரவும் ரிஷிக்கு வித்தியாசமாக தோன்ற, எனவே அழைத்துக் கேட்டான்.
"எங்க வீட்டுக்கு அனுப்பிய அடுத்த நாளே எங்களை வந்து இங்க கூட்டிட்டு வரதுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். இங்க போலீஸ் பாதுகாப்பு வேற இருக்கு என்ன பிரச்சினை என்று ஓப்பனா சொல்லுங்க மச்சான்" என்று கேட்கவும் உண்மை சொன்னான் அவன்.
ரிஷிக்கு கோபம் தான் வந்தது ஒரு கேடி கிரிமினல் ஒருத்தனுக்காக,ஒரு குடும்பமே பயந்து ஒதுங்கி இருப்பதைக் கண்டதும் வருத்தம் தான் வந்தது. அதில் வேறு விஷ்வேஷ் வெளியே வரும்போது முதல்ல பிரச்சனை நமக்குத்தான் வரும்... சந்தனாதான் அவனது குறி அதற்காகத்தானே ஆதியை இல்லாமலாக்கியது... இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கணும் என்று தீவிரமாக யோசித்தான்.
பணம் பதவி வச்சு இவனை ஒன்னும் செய்ய முடியாது, இவனையெல்லாம் இறங்கி அடிக்கணும் என்று தனது நண்பர்கள் பட்டாளத்திற்கு அழைத்து பேசியவன் விஷ்வேஷின் முழு விபரத்தையும் விசாரித்தான்...அவனது முழுவிபரம் கைக்கு கிட்டியதும் தானாக ஒரு திட்டம் தீட்டினான்.
அதற்குள் விஜிம்மா நந்தனையும் வர்ஷாவையும் ஒன்றாக அழைத்து பேசினார் "இன்னைக்கு சந்தனாவோட குடும்பம் வரும்போது வர்ஷா, நான் சமைக்கமாட்டேன், அவங்ககிட்ட பேசமாட்டேனு ரூமுக்குள்ளப் போய் இருந்திக்கிட்டா என்ன பழக்கம் இது.
நம்ம ஒரு திட்டம் போட்டோம் அதை கடவுள் மாத்தி வேற மாதிரி எழுதிட்டாரு அவ்வளவுதான்... அவ இந்த வீட்டு மருமகள் அதற்கு தகுந்த மாதிரி நடந்துக்க முடியும்னா இங்க இருக்க சொல்லு... இல்லைனா தனியா போயிடுங்க யாருக்கும் எந்த பாதகமும் இருக்காது. எனக்கு நீயும் ரிஷியும் ஒன்னுதான்... பாரபட்சமா நான் பார்க்கமாட்டேன்.
என்னைக்காவது வர்ஷாகிட்ட ரிஷி மரியாதைக்கேடா நடந்திருக்கானா.
இவதான் தஞ்சாவூர் வச்சி நிறைய பேசினா... ஆனாலும் அதையெல்லாம் மனசுல வச்சுக்காம ரிஷி வந்து வர்ஷாகிட்ட பேசத்தான் செய்தான்.
எதிரியே நம்ம வீட்டைத்தேடி வந்துட்டாங்கனாலும் அவங்களை உபசரிக்கணும் அதுதான் முறை. அதுவும் சந்தனா வீட்டாளுங்க எந்த விதத்திலயும் குணத்துல குறைஞ்சவங்க இல்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துவிட்டார்...அந்த வீட்டின் தலைவியாக சில முடிவுகளை எடுத்திருந்தார்.
நந்தனோ என்னம்மா இது தனியா போங்க அது இதுனு பேசுறீங்க...வர்ஷா யாரு உங்க அண்ணன் பொண்ணுதான புத்தி சொல்லி திருத்துங்க அதைவிட்டுட்டு தனிக்குடித்தனம் போகச்சொல்லாதிங்க...
நானும் ரிஷியும் இங்க கூட்டுக்குடும்பமாகவே ஒன்னா இருக்காத்தான் விரும்புறோம்... பிரிஞ்சு போறதுக்கில்லை என்று வருத்தத்தோடு சொல்ல...வர்ஷா ஏதும் பேசாமல் அமைதியாக நந்தன் சொல்வது சரியென்பது போலவே நின்றிருந்தாள்...எது எப்படியோ அந்த வீட்டின் ஒற்றுமை குலையாமல் விஜிம்மா பார்த்துக்கொள்வார்.
இங்க ரித்திக்கின் கல்யாணநாளும் வந்தது...அன்றிரவு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்வதை தவிர்த்திருந்தனர்.
அன்று காலையில் மணமகளை தயார் செய்து கோவிலுக்கு செல்வதற்காக சந்தனா அழைத்துவரவும் தான்... ரித்திக் அவளைப் பார்த்தான்.
இன்னும் அந்த முகத்தில் பழைய அதே குறும்புப் பெண்ணைத்தான் கண்டான்... துறுதுறு கண்கள், அவனைப் பார்க்கவேண்டும் என்று ரகசிய ஆசை மனதில் எழத்தான் செய்தது.
அவளோ அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்... ரிதன்யாவின் அம்மா வந்திருந்தார்...அவரது முகத்தில் கவலைத் தெரியத்தான் செய்தது. மகன் வந்து எதுவும் தடை வந்திருமோவென்று கோவிலுக்கு செல்வதற்கு முன் தன் அம்மாவின் காலிலும், நாகராஜ், தனராஜ் மற்றும பத்மாவின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபின்னரே காரில் ஏறினாள்.
கேடி...இதெல்லாம் நல்ல மரியாதை செய், என்கிட்ட வந்தாமட்டும் மரியாதைனா என்ன விலைனுக் கேளு என்று பார்த்திருந்தான். (கல்யாணம் முடிஞ்சுதுனா அந்த மரியாதையும் உனக்கு கிடைக்காதுடா , அது தெரியாம மாப்பிள்ளை ஜோருலப் போற போ)
கோவிலுக்கு செல்லும்போதும் சந்தனா ரிஷியை தங்களுடனே கவனமாக வைத்திருந்தனர்.
விஷ்வேஷோ தங்களது கெஸ்ட் ஹவுசில் தனது நண்பர்களுடன் இருந்தான்.
எல்லா சொத்துக்களுக்கும் இப்போது வாரிசு மூன்றுபேரும் என்பதாலும்,கேஸ் நடத்துவதற்காக தன்னுடைய பங்கினை வாங்கவேண்டிய சூழ்நிலை...தனது அம்மாவிடமாவது கையெழுத்தை ஏமாற்றி வாங்கிவிடலாம்.. ஆனால் தங்கையிடம் இவனது எந்த தகிடுதத்த வேலையும் செல்லாது.
அதுவேறு இப்போது எதிரி குடும்பத்திற்கே வாழப்போறாள் என்றதும் நெஞ்செல்லாம் அவனுக்கு விஷம் ஏறியது... தங்கையா இருந்தால் என்ன? யாராக இருந்தால் என்ன? என்னைய இந்த நிலைமைக்கு கொண்டு வந்த அவனுங்களை சும்மாவிடகூடாதுடா... என்று தன் பழிவெறியோடு கிளம்பினான்.
கோவிலில் ரித்திக் பக்கத்தில் ரிதன்யாவை அமர வைத்ததும்,திரும்பி பார்த்தான் அவளோ யாருக்கோ கல்யாணம் என்பது போல அமர்ந்திருந்தாள்...
மெதுவாக குனிந்து சிரித்தவாக்கிலயே,என் தங்கச்சிக்கிட்ட நம்ம இர்ணடுபேரும் லவ் பண்றோம்னு தைரியாமாக சொல்லத் தெரியுது, இப்போ ஏன்டி இப்படி யாருக்கு வந்த விதியோனு மூஞ்ச தூக்கி வச்சிருக்க?
என்னடி நினைச்சிட்டிருக்க... லேசா சிரி" என்று சொல்லவும்.
"போடா டேய்" என்று உதட்டை அசைக்கவும், என்ன சொன்ன என்று கோபத்தில் எகிறவும்.
ரித்திக் மச்சான் கொஞ்சம் பொறுமையா இருங்க..பொண்ணு உங்களுக்குத்தான் எதுக்கு இப்பவே தங்கச்சிக்கிட்ட வம்பு வளக்குறீங்க...அதுக்கு ஆயுசு முழுவதும் நேரமிருக்கு. உங்க இரண்டு பேரையும்தான் எல்லோரும் பார்த்திட்டிருக்காங்க என்றதும்... தன்னைக் அடக்கிக் கொண்டிருந்தான்.
சந்தனா தான் பின்னாடி நின்றிருந்தாள் அவளுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது... என்ன இரண்டு பேரும் இப்படி முறைச்சிட்டேயிருக்காங்க, லவ் பண்றோம்னு சொன்னாங்க என்று கவலைப்படவும்; அவளது முகவாடலைக் கண்ட மற்ற அண்ணன்கள் உடனே ரித்திக்கிடம் சைகை காண்பிக்க...சுதாரித்தவன் ரிதன்யாவினை நன்றாக நெருங்கி இடித்துக்கொண்டு அமர, அவள் அவனை ஏறிட்டு முறைத்துப்பார்க்க.
பின்னாடி சந்தனா நிக்குறா அதுதான்.
அப்படியே நீயும் மெயின்டெயின் பண்ணுடா என் செல்லாக்குட்டி என்று ஈஈஈ என்று எல்லாப் பற்களையும் அவளிடம் காண்பிக்க..
சகிக்கலை சிம்பன்சி மாதிரியே இருக்கு என்று உதடு சுழிக்க...
ம்ம்ம் இரு சிம்பன்சி என்ன செய்யும்னு நைட்டு காண்பிக்குறேன் இருடி என்றவன்
ஐயர் சொல்லும் மந்திரத்தில் கவனம் வைக்க...இனிதாக ரிதன்யாவின் கழுத்தில் பெரியவர்களின் ஆசியுடன் தாலியைக் கட்டினான். ரிதன்யாவிற்கு கண்ணீர் அப்படியே சாரைசாரையாக கன்னத்தில் இறங்கியது. எல்லோருக்கும் ஒரு நிமிடம் பயம் வந்தது.
ரித்திக்கிற்கு புரிந்தது ஏனென்று அவளது நெற்றியில் குங்குமத்தை தன் கரத்தை சுற்றி கொண்டு வைக்கவும், அதுதான் தாலிக்கட்டி உனக்கே உனக்குனு சொந்தமாகிட்டேனே அப்புறமெதுக்கு இந்த அழுகை, சந்தோஷமான நேரத்துல என்ன கண்ணீர் என்று சொல்லவும் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள்...
சந்தனா ரிஷிக்கும் ரொம்ப சந்தோஷம் அவனது திருமணம் எந்த இடரும் இல்லாமல் நடந்ததினால்... மாலை ரிசப்ஷனிலும் இருவரும் அவ்வளவு மகிழ்வோடு பங்கேற்றிருந்தனர்.
ரொம்ப நேரமாக ரிஷி யோசித்துக் கொண்டிருந்தவனிடம்,சந்தனா வந்து ரிஸ்வான் அண்ணா எங்கப்போனாங்க? எப்பவும் என் பக்கத்துலதான இருப்பாங்க என்று கேட்கவும்... ரிஷியின் சந்தேகம் இப்போது ஊர்ஜிதமானது... நேராக சென்று கேசவிடம் "ரிஸ்வான் மச்சானை எங்க எங்கப்போனாலும் சந்தனாவும் நானும் இருக்ககூடிய இடத்துலதான் இருப்பாங்க,ரொம்ப நேரமாக காணவில்லை"
அப்படியா இங்கதான் எங்கயாவது இருப்பான் என்று அவனுக்கு போனில் அழைப்பு விடுக்க.. அது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் வரவும் கேசவ் பதட்டப்பட்டு ரிஷியிடம் சொல்ல... அதிர்ந்தவன், மண்டபத்தை சுற்றிப்பார்க்க ஒரு இடத்தில் அவனது கோர்ட் மட்டுமே கிடந்தது.
ரிஷிக்கு என்ன செய்யவென்றுத் தெரியவில்லை...பாசமலர்கள் ஐந்திலும் ரிஸ்வானை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் சந்தானவின் வலது கையாக எப்போதும் இருப்பவன் அவனே, அவனுக்கு சந்தனா என்றால் உயிர், அதனால் தான் அவனால் ரிஷியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்தது.
மொத்தப்பேரும் வீட்டிலுள்ளவருக்கும் குறிப்பாக ரித்திக்கிற்கும் தெரியாமல் கூடினர். ப்ரணவ் போலிஸிற்கு தகவல் சொல்லிடுவோம் அதுக்குப்பிறகு நம்ம தனியாக எதாவது பண்ணிக்கலாம் என்றதும்; சரி என்று தீர்மானித்து ரிசப்ஷன் முடிவதற்குள் தனியாக சென்று போலிஸில் கம்பையிண்ட் கொடுத்தனர்..
அதன் பிறகு ரிஷி தனியாகத் தன் நண்பர்கள் மூலமாக வேலையைத் தொடங்கினான். எல்லோரும் இங்கு பதட்டத்தோடு அவனைத் தேடிக்கொண்டிருக்க
அங்கோ விஷ்வேஷ் முன்பாக ரிஸ்வான் கூலாக அமர்ந்திருந்தான்.
What's Your Reaction?






