உறைபனி என்னில் பொழிகிறாய்-26

Apr 3, 2024 - 13:49
 0  761
உறைபனி என்னில் பொழிகிறாய்-26

அத்தியாயம்-26

காலையில் எழுந்து வெளியே வந்து அனைவரும் கேட்டது விஷ்வேஷின் செய்தியைத்தான்.

அதன் பிறகு மெதுவாக எழுந்து வந்த ரிஸ்வானைப் பார்த்ததும் முதலில் பதறியது சந்தனாதான் "என்னாச்சு ண்ணா நெத்தியிலக் காயம் என்று அழவே ஆரம்பிக்க...

ரிஷிதான் ஏய் ஏய் இந்த நேரத்துல இப்படி பதறி அழாதடா... மச்சானுக்கு ஒன்னுமாகலை நேத்து மண்டபத்துல எதோ பொண்ணு வழிதெரியாம நின்றிருக்கு...அந்தப்பொண்ணு அண்ணானு சொன்ன உடனே உன் பாசமலரு வெளியப்போய் விட்டுட்டு திரும்பும்போது ஒரு வண்டிக்காரன் மோதிட்டான் கீழ விழுந்திட்டாரு, அதான் இராத்திரி உடனே ஹாஸ்பிட்டல் போய் தையல் போட்டு வீட்டுக்கு வர லேட்டாகிருச்சு ஒருத்தருக்கிட்டயும் சொல்ல முடியலை, அப்படித்தான மச்சான்...வேணும்னா கேசவ் மச்சான்கிட்ட கேட்டுப்பாரு என்றான்.

ரிஸ்வானும் கேசவும் ஆமாம் சாமி போட வீட்டில் எல்லோரும் நம்பிவிட்டனர். ரித்திக் கேசவைப் பார்க்க அவன் சிரித்ததிலேயே தெரிந்தது எதோ உள்குத்து இருக்கு என்று. 

கேசவோ தனியாக பேசலாம் என்று சைகை செய்ய வைபவும் ப்ரணவும் பார்த்துவிட... போச்சுடா அண்ணனுங்களுக்கு பதில் சொல்லணுமே என்று முழித்தான்.

ரிஸ்வானோ இதுக்குமேல யாராவது கேள்விக்கேட்டா அதுவும் சந்தனாக் கேட்டா உண்மைய சொல்லிடுவோம் என்று அவசர அவசரமாக உணவை  வாயில் வைத்துக்கொண்டான்.

நாகராஜ் தான் வருத்தப்பட்டார் விஷ்வேஷ்க்கு இப்படி ஆகிருக்கவேண்டாம்.

அவங்க அவங்க செய்த பாவம் பின்தொடரும்னு சொல்லுவாங்க அதுதான் அவன் வாழ்க்கையில நடந்திருக்கு...

பேராசை பெருநஷ்டம் மாணிக்கவேலுக்கு என்று உண்மையாகவே வேதனைப்பட்டார்.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அவர்களின் குணமும் தரமும் என்றும் மாறபோவதில்லை.

இப்போது பாசமலர் ஐந்திற்கும் என்ன நடந்தது ரிஷி வந்து ரிஸ்வானைக் காப்பாற்றியது என எல்லாம் சொல்லப்பட்டது... ரித்திக் தான் தேங்க்ஸ் த்தான் என்று ரிஷியை கட்டிப்பிடித்துக் கொண்டான்... ஹப்பாடா இருவரும் சமரசமாகிட்டாங்கப்பா என்றுதான் மீதி நான்குபேரும் நிம்மதியாகினர்.

அடுத்த இருநாட்களில் ரிஷி தனது மனைவியுடன் தங்களது வீட்டிற்கு சென்றுவிட்டான்... வர்ஷா முகத்தை திருப்பாவிட்டாலும் சந்தனாவோடு அவ்வளவாக ஒட்டுவதில்லை... விஜிம்மா வர்ஷாவைவிட சந்தனாவிடம்தான் அதிகமாக பேசிப்பழகினார் இப்போதெல்லாம்.

சந்தனா யாருக்குமே தீங்கு நினைக்காத ஒரு நல்ல மனுஷி... அதனால்தான் எல்லாத் துன்பங்களிலிருந்து அவளைக் காத்து ரிஷியிடம் ஒப்படைத்திருக்கிறது வாழ்க்கை.

ரிஷிக்கு சந்தனாதான் உலகம்... அவளுக்கு இப்போது ஏழாவது மாதம். ரிஷிக்கு என்று தங்களது கம்பேனியிலேயே ஒன்றை அவனுக்கு கொடுத்துவிட்டனர்...

ரிஷி வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்க...சந்தனாவின் பங்குதான் என்று எழுதிக் கொடுத்துவிட்டனர்.

சந்தனா அதை எப்பொழுதுமே பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை...மனித மனங்களை நேசிக்க கற்றுக்கொண்டவர்களுக்கு என்றுமே பணத்தின் மீதும் பொருளின் மீதும் விருப்பம் வருவதில்லை சந்தனாவும்,விஜிம்மாவும் அந்த வகைதான்.

விஜிம்மாவிற்கும் இராமகிருஷ்ணனுக்கும்  தங்களது பிள்ளைகள் நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் வாழவேண்டும் என்று நினைத்தனர்...கடவுள் அதையும் தாண்டி பொன்பொருளோடு வாழ்க என்று வாழ்த்திவிட்டார்.

இப்போது சந்தனாவிற்கு வளைகாப்பு முந்தின நாள் இரவிலிருந்தே மனைவியிடம் புலம்புகின்றான்...வளைகாப்பு முடிஞ்சதும் உன்னை இங்கயே விட்டுட்டுப்போக சொல்லுடா...உன்னைப்பார்க்காம எப்படி இருப்பேன்? என் பட்டுல...என் செல்லம்ல என்று அவளது காலை அமுக்கிவிட்டுக்கொண்டே கேட்க...

ரிஷி த்தான் அங்க அண்ணாக்களும் வரச்சொல்றாங்க...இங்க நீங்க போகவேண்டாம்னு சொல்றீங்க நான் யாரு பக்கம் பேச? 

அடியே என் பஞ்சுமுட்டாய் இங்க பாருடி. அவனுங்களை சீக்கிரம் கல்யாணம் பண்ணசொல்லுடி; அப்போதுதான் என் அவஸ்த்தை அவனுங்களுக்குப் புரியும்...என்று ஏக்கமாகச்சொல்ல.

சத்தமாக சிரித்தவள் த்தான் இந்த நேரத்துல ஒன்னுமே முடியாதுதான... அப்புறமெதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்?

அது இல்லைனாலும் உன் பக்கத்துலயாவது படுத்திருப்பேன்...உன் வாசம் எனக்கு வேணும்டி, உன்கூட ஒட்டிக்கிட்டே படுப்பேன் புரிஞ்சுக்கடி...உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ஆனாலும் இந்த பஞ்சதந்திரம் ப்ரதர்ஸ் என் வாழ்க்கையில ரொம்ப பொங்குறாங்கடா...என் வாழ்க்கைபூரா இப்படித்தான் போகும்போல அதுமட்டும் நல்லத்தெரியுது...

இதைதான் விஜி குருப்பெயர்ச்சினு சொன்னாங்களோ....ஆமா இந்த குருபெயர்ச்சி வருசவருசம் வருமா? இல்லை ஆயுளுக்கு ஒருதடவைதான் வருமா? விஜிகிட்ட கேட்கணும்...என்றான். அவனது வாயில் அடித்தவள் ரிஷிக்கு இந்த வாய்மட்டுமில்லனா  சாப்பாடே உள்ளப்போகாது...என்னா வாய்ப்பேசுறீங்க நீங்க பேசுறதுக் கேட்டு கேட்டு நம்ம பாப்பாவும் உங்களை மாதிரியே பேசப்போகுது என்றாள்.

"என் பிள்ளை என்னை மாதிரி தனி ரூட் போட்டு போகணும்டா..அதுதான் என்னைக்குமே கெத்து"

ஆமா நீங்க எப்பவுமே தனிரகம் தான் என்று அவனது கன்னத்தில் முத்தம் வைக்க...

இந்த உம்மாவையும் மிஸ் பண்ணுவேன்டா என்று ஏக்கமாகப்பேச...அப்படியேஅவனைத் தன் நெஞ்சத்தில் சாய்த்து நோ ஃபீலிங்க்...டெய்லி பார்க்கப்போறோம் இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்ட்டப்பு"

இல்லைடா எதோ உன்னை மிஸ் பண்ற ஃபீல்...அவனது தலையை அப்படியே கோதிக்கொடுக்க தூங்கிவிட்டான்...அவன் தூங்கியதும் "சின்னபிள்ளை மாதிரி பிடிவாதம்"என்று கொஞ்சிக்கொண்டாள்.

சந்தனாவின் வளைகாப்பு விழாவிற்கு ப்ரணவின் மனைவி வீட்டிலிருந்தும் வந்திருந்தனர்.

அவர்கள் குடும்பத்தை வரவேற்கும் போது தான் வைபவ் பார்த்தான் நேகாவின் தங்கை நீனாவை...அப்பவே வைபவ் அவளிடம் வீழ்ந்துவிட்டான்.

சந்தனாவின் வளைகாப்பு நல்லபடியாக நடைபெற்றது... அத்தனைபேரும் அவளுக்கு அளித்த பரிசுகள் ஏராளம். ரிஷியின் குடும்பம் அங்கு பிராதான அங்கமாக இருந்தனர் இப்போது.

சந்தனாவின் பெற்றோர் முதற்கொண்டு அத்தனைபேரும் விஜிம்மாவை அவ்வளவு அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினர்.

தங்கள் வீட்டுப்பெண்ணை  அவர்களின் பெண் போல பார்த்துக்கொள்கிறார் என்றதும் விஜிம்மாவின் மேல் அவ்வளவு மரியாதை.

வளைகாப்பு முடிந்த அடுத்த நாளிலிருந்து வைபவ் அடிக்கடி கோவா செல்ல ஆரம்பித்தான்... எல்லோருக்கும் மர்மமாகவே இருக்க...பதினைந்தே நாளில் அவன்குட்டு வெளிப்பட்டது...நேகாவின் அப்பா நேரடியாகவே அவளுக்கு அழைத்து  உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டதே பெரிய விசயம்...இதுல உன் கொழுந்தன் உன் தங்கச்சி பின்னாடி சுத்துறான் என்று புகார் வாசித்தார்.

அவளுக்கு சந்தோஷமே இப்படி ஒரு குடும்பம் அமைய தன் தங்கைக்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று ப்ரணவிடம் நேரடியாகவே பேசிவிட்டாள்..

வைபவிற்கு பிடிச்சிருந்தா நம்ம மாமாவைப் போய் பேசி முடிவு பண்ண சொல்லுங்க என்று... இப்போது வைபவ் போனில் நேகாவின் தங்கை நீனாவிடம் கடலைப் போட்டுக் கொண்டிருக்கின்றான்...ஆம் சந்தனாவின் பிரசவம் முடிந்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்தாகிவிட்டது.

ஒரு நாள் ரிஷிக்கு அலுவல் அதிகமாக இருப்பதால் சந்தனாவை மாதாந்திர செக்கப்பிற்கு அழைத்து சென்றான் ரிஸ்வான்...

அவ்வளவுதான் அங்க இருந்த ஜூனியர் டாக்டரைப் பார்த்ததும் பத்திக்கிச்சு ரிஸ்வானிற்கு...

" ஹலோ உங்க பெயர் என்ன அழகா இருக்கீங்க என்று நேரடியாகவே கேட்டுவிட...அவளோ லூசா நீ. நான் இங்க உள்ள டாக்டர் என்ன தைரியமிருந்தா பெயரென்ன அழகா இருக்கீங்கனு சொல்லுவ என்று ஏறிபேச...

ஓய் அழகா இருந்த சொன்னேன்.

அதுக்கென்ன இப்போம்... பெயர்தான கேட்டேன், எதோ போன் நம்பர் கேட்ட மாதிரி பேசுற. இஷ்டம்னா சொல்லு இல்லைனா நானே விசாரிச்சு தெரிஞ்சுக்குறேன் என்று தோளை குலுக்கிவிட்டு வெளியே சென்றுவிட...

அதன்பிறகு சந்தனாவுடன் மருத்துவமனை செல்வது யாராயிருக்கும்...நம்ம ரிஸ்வான் தான்.

அந்த டாக்டர் பெயர் பிரியங்கா என எல்லா விபரத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறான்.

கேசவிற்கு பொண்ணு பார்க்கின்றனர்... அவன்போடுற கண்டிசனுக்கு இந்த பூமியிலேயே அப்படி பொண்ணு இல்லையாம்...அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்கணுமாம், நல்ல படிச்சிருக்கணுமாம். கண்ணு பெருசா இருக்கணுமாம்....அதைவிட நிறைய முடி இருக்கணுமாம் (திருப்பதிலதான் அப்போ பொண்ணுத் தேடணும்,வேற வழி)

ரித்திக் ரிதன்யாவை ஹைதரபாத்திற்கே அழைத்து சென்று விட்டான்....தன் அண்ணனின் நிலையறிந்து மிகவும் வருந்தினாள்.

ஆம் அந்த விபத்தில் கால்கள் மிகவும் சேதமடைந்ந நிலையில் இருகால்களையும் பாதி வெட்டி அகற்றிவிட்டனர்...

மருத்துவமனையிலிருந்து வீடு வந்த பிறகு, அவனின் அம்மா நன்றாக கவனித்துக்கொண்டார்... உண்மையான அன்பினை தாங்கயியலாது, மிகவும் மனவுளைச்சல் அடைந்து, பைத்தியம் மாதிரி புலம்ப ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் தன் நிலையை எண்ணி எண்ணி, தன்னைத்தானே கொன்றான்...தற்கொலை செய்துக்கொண்டான் பைத்தியம் முற்றிய நிலையில்...

யாருக்காக சொத்து கள்ளவழியில் மாணிக்கவேல் சேர்த்தாரோ அவர்களே இல்லை...சொத்து மட்டுமே உள்ளது.

ரிதன்யா எனக்கு அந்த சொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டதால்  அவளது அம்மா அவ்வளவையும் நிர்வகிக்க திணறியதால்  விற்றுவிட்டார்...மாணிக்கவேல் கட்டிக்காத்த தொழில் சாம்ராஜ்யம் இன்று இல்லாமலேயே போய்விட்டது.

ரித்திக்கிற்கு  இப்போதுதான் நிதானம் வந்திருக்கிறது என்றாலும் அந்த முன்கோபம் இன்னும் குறைந்தபாடில்லை...தன் தங்கையின் முன் மட்டுமே அமைதியாக இருப்பான்.

ரிதன்யாவிடமோ அவன்தான் இபபோது அடிவாங்குற நிலையில இருந்தாலும் கெத்த மெயின்டெய்ன் செய்திடுவான்...இல்லையென்றால் இளமைக்கு தீனி கிடைக்காமல் பட்டினியாகதான் இருக்கணும்...அவனது நாடிப்பிடித்து வைத்திருக்கின்றாளவள்.

மூன்று மாதம் கழித்து சந்தனாவிற்கு பிரசவவலி வர...இந்த பாசமலர்கள் பண்ணின அட்டாகசத்திற்கு அந்த ஹாஸ்பிட்டலே அமளித்துமளியாகியது..

சந்தனாவை அங்கு கொண்டு வந்து சேர்த்ததும் அவளை பரிசோதித்த பிரியங்கா சீக்கிரம் டெலிவரியாகிடும் என்று சொன்னதும் விஜிம்மாவிலிருந்து ரிஸ்வான் வரைக்கும் அங்குதான் இருந்தனர்...

ரிஷிக்கு மனதில் பயமிருந்தாலும் அதை வெளிக்காட்டாது அமர்ந்திருந்தான், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் காக்க வைத்து  ரிஷி- சந்தனாவின் மகன் பிறந்தான்...

முதன் முதலில் குழந்தையை வாங்கியவனுக்கு அப்படியே உடலெல்லாம் எதோ சந்தோஷ  உணர்ச்சி பொங்கியது.

ரிஸ்வான் ஓடிப்போய் பிரியங்காவிற்கு நன்றி சொல்லி பல்லைக்காட்டி நிற்க...அவளோ போங்க சார் மருமகன் பெறந்திருக்கானு சந்தோஷப்படுங்க.

என்கிட்ட வந்து வழியாதிங்க என்றதும்...அதற்கும் சிரித்து வைத்தான் அவன்...சரியான பைத்தியம் போல என்று அவனைத் தாண்டி நடக்க.

மிஸ்.பிரியங்கா மிஸஸ் ரிஸ்வானா மாறதுக்கு ரெடியா இருங்க என்று சொல்லவும்,  அவள் விழிவிரித்து என்ன என்று அதிரவும் பறக்கும் முத்தம் ஒன்றை அவளுக்கு கொடுத்துவிட்டு, தன் மருமகனை காண ஓடினான்.

ரிஷியோ எப்படா பொண்டாட்டி பிள்ளைங்க நம்ம வீட்டுக்கு அழைத்து வருவோம்னு காவல் இருந்து இரண்டே மாதத்தில் அழைத்து வந்துவிட்டான்.

"எதுக்கு இவ்வளவு அவசரமா அங்கயிருந்து கூட்டிட்டு வந்தீங்க" என சந்தனா அலுத்துக்கொள்ள...

என் பிள்ளைய என் கையில தூக்குறதுக்கு ஒருமணிநேரம் காத்திருக்க

வேண்டியதிருக்கு  உங்க வீட்ல...என்னையும் உன்னையும்தான் அடிக்கடி பிரிச்சு வைக்கிறாங்கனா...என் பையனையும் என்னையவும்  பிரிச்சு வைக்குறாங்கடி முடியல....இனி அங்கப் போறதுக்கு தடா தான் சொல்லிட்டேன் என் பொண்டாட்டியும் பிள்ளையும் என்கூடவே இருக்கணும்னு ப்ளான் பண்ணிட்டேன்...என்றவன் தன் மகனை கையில் எடுத்து வைத்துக்கொள்ள.

அதற்குள் சந்தனாவிற்கு போன் வர எடுத்துப்பேசியவள்...அப்படியே ரிஷியைப் பார்க்க...

என்னவென்று கண்களாலயே கேட்டான்.

அவள் தயங்கி தயங்கி அது வைபவ் அண்ணனுக்கு அடுத்தவாரம் கல்யாணம்தான அதுக்கு நம்மளை நாளைக்கு கூப்பிட வர்றாங்களாம் என்றதும்தான்.

மறுபடியுமா என்றவன் தன் தலையில் கைவைத்து அமர்ந்துக்கொண்டான்.

"த்தான் நான் ஒரே ஒரு தங்கச்சி அவங்களுக்கு, நான்தான எங்க அண்ணனுக்கு எல்லாம் முன்னாடி இருந்து செய்யணும்...நீங்களும்தான ஒரே ஒரு மச்சான் அவங்களுக்கு பக்கபலமா நிக்கணும்"

அந்த ஒரே ஒரு தங்கச்சி,ஒரே ஒரு மச்சான்தான்டா உதைக்குது...என் வாழ்க்கை ஆடிமாசம் மாதிரியே போகுது...சீக்கிரம் உங்க அண்ணனுங்க எல்லோரையும் கல்யாணம் பண்ண சொல்லுடா...

அப்போதான் அத்தான்கூடவே இருப்ப...என்று அவளை இறுக கட்டிக்கொண்டு அவளது இதழில் தன் உதட்டால் கவி எழுத ஆரம்பித்தான்...சிறிது நேரம் கழித்து விடுவித்தவன் அடுத்த நிலைக்கு தாவ,அவனைத் தள்ளிவிட்டாள்.

ரிஷியோ அவனது கையிலிருந்த பிரியாணி பொட்டலத்தை யாரோ பிடுங்கியமாதிரி எஃபக்ட் குடுத்து ஏன்டா தள்ளிவிடுற என்று கேட்க "அத்தை சொல்லிவிட்டாங்க ரிஷிக்கிட்டயிருந்து பையனுக்கு ஆறுமாசம் வரைக்கும் கொஞ்சம் தள்ளியே இருனு"

எந்த அத்தை உங்க பத்மா அத்தையா?

"இல்லை விஜிம்மா"

விஜி சமயத்துல எனக்கு வில்லியா வந்திடுற...உன்கிட்ட நான் காலையிலேப் பேசிக்குறேன். அது சும்மா சொல்லிருப்பாங்கடா நீ அத்தான் பக்கத்துல வாடா செல்லம் என்று அவளை அணைத்தான்.

இப்போது ரிஷியின் கையில் சிக்கி சந்தனா  உருகிக் கரைந்துக்கொண்டிருந்தாள்.

ஐந்து வருடம் கழித்து ரிஷி-சந்தனாவின் மகன் நடுவில் உட்கார்ந்திருக்க அவனை சுற்றி வைபவ்,ரித்திக்,கேசவ்

ரிஸ்வான்,ப்ரணவின் மகள்கள் ஐந்து பேரும் அமர்ந்திருந்தனர்

ரிஸ்வான் பிரியங்காவை துரத்தி துரத்தி காதலித்து அவளையே கல்யாணம் செய்துகொண்டான்.

வைபவ் நீனாவை வெகுவிமர்சையாக திருமணம் செய்துக்கொண்டான்...கேசவ்தான் ஒருவருடம் பொண்ணுப் பார்த்து செட்டகாமல்...தனது அலுவலக விசயமாக இந்தியா வந்த மலேசியா தமிழ் பொண்ணு பார்த்து மயங்கி காதலித்து  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டான் (அவன் எதிர்பார்த்த பெரியகண், நீளமுடி, அடக்கமானப் பொண்ணு எல்லாம் ஊத்திக்கிச்சு...அவளது மனைவியும் கம்பேனியை நிர்வகிக்கிறாள்)

ரிஷி சந்தனாவிடம் என் பையன் என்னம்மா வாழ்றான் பாருடா. கொடுத்து வச்சவன்...அவனை சுத்தியும் மாமன் பொண்ணுங்க...எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலையே என்று ஏக்க பெருமூச்சுவிட்டான்.

அவனது தொடையில் கிள்ளியவள் ரொம்ப கவலைபடுறீங்கப் போல. வாங்க விஜிம்மாகிட்ட சொல்லிக்கொடுக்குறேன்.

ஐயோ...வேண்டாம்மா தாயே அவங்க வேற ஏற்கனவே என்னை வச்சு செய்றாங்க விட்டிரு என்று சொல்ல சந்தனா சிரித்தாள்...சந்தனா இரண்டாவது கர்ப்பமாக இருக்கின்றாள்...

பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கின்றாள்...

பத்மா சந்தனாவின் பையனை தன் சொந்தபேரனைப்போல பார்த்துக்கொள்கிறார்....

ஏற்கனவே அவன் பிறந்தவுடனே ரிஷி எல்லோரிடமும் கேட்டான்  நான் என் பையனுக்கு ஆதினு பேர் வைக்கப்போறேன் என்றதும்.

பத்மா உட்பட அனைவருமே வேண்டாம்...அவன் சந்தனாவை உயிரைக்கொடுத்து காப்பாற்றியது அவள் நல்லாவாழணும்னுதான்...

அவனோட எந்தவிதமான நியாபக நிழல் அவளுக்கு வரக்கூடாது...அப்படி வந்துச்சுனா அவளோட இப்போதைய வாழ்க்கை உட்பட எதிர்காலமே அவளுக்கு இல்லாமல் போய்டும்...அப்படிபட்ட ஒரு சூழ்நிலை அவளுக்கு வரக்கூடாது என்று முடிவாக சொல்லிவிட்டனர்.

ஆதியின் ஆன்மாவும் அதையேத்தான் விரும்பும் அவளது நல்வாழ்க்கையே எல்லோருக்கும் பிராதனம்...ரிஷியுமே சந்தனாவுக்கு ஆதியின் எந்தவித சுவடும் அவளது வாழ்க்கையில் வரதவாறு  பார்த்துக்கொண்டான், அவனுக்கு சந்தனா அவனுடையவள் இன்றும் என்றும்...எனவே அவளை தன் உயிருக்குள் வைத்து நேசிக்கின்றான்...அது அவர்களின் வாழ்நாள் முழுதும் தொடரும்.

            *******சுபம்*******

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow