இதழ் வழி இதயம் நுழைந்தாள்2

Ethal2

Dec 23, 2023 - 23:56
Dec 23, 2023 - 23:58
 0  2724
இதழ் வழி இதயம் நுழைந்தாள்2

2 இதழ் வழி இதயம் நுழைந்தாள் 

கல்யாணம் என்ற வார்த்தை யோகி சஞ்சுவுக்கு கெட்டவார்த்தை போல கேட்டு முகத்தை அஷ்டகோணலாக சுளித்து கொண்டனர். 

தாத்தா: கல்யாணம்தான் படவாஸ்

சஞ்சு: கண்டிப்பா கல்யாணம் பண்ணியே ஆவணுமா தாத்தா

எஸ் அதுவும் ஒரு வாரத்துல...

யோகி: என்னால கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது..  உங்க  விளையாட்டு முடிஞ்சதுன்னா விடுங்க எனக்கு வேலை இருக்கு யோகி எழும்பி அறைக்கு போக ஆரம்பித்து விட்டான்...அதை கண்ட சஞ்சய் 

அவன் கழண்டு போயிட்டான் சஞ்சு நீயும் எஸ்ஸாகிடு, நின்ன கோணை கொண்டைக்காரி எவளையாவது பிடிச்சி, கல்யாணம் பண்ணி வச்சாலும் வைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு என்று சஞசய் யோகி பின்னால் ஓட ஆரம்பிததான்...



இதையும் கேட்டுட்டு போங்கடா படவாஸ்..இருவர் நடையும் நின்றது 

கல்யாணம் முடியாம இந்த வீட்டுல இரண்டு பேருக்கும் இடம் கிடையாது .. 

யோகி சூப்பர் இனி புல்  டைம் மஜா தான் ,மசாலாதான்...இதுகளுக்கு அட்டெனென்ஸ் போடதான் வீட்டுக்கு வரணும் ,அவரே நல்ல ஆஃபர் தர்றார் அப்படியே லக்கேஜ் எடுத்துட்டு கிளம்பிடுவோம்டா....

ரொம்ப அவசரபடாத இப்போ குணடு போடுவார் பாரு..

பருப்பு சாம்பார் அடிக்கடி வைக்காதீங்கன்னு சொன்னா கேட்கிறார்களா என்ற சஞ்சய் காலில் பெருவிரல் பெயர்ந்து ரத்தம் வந்தது ...

ஏன்டா மிதிச்ச ....

வாய் மேல மிதிக்க நினைச்சேன், கால் எட்டலை அதான் கால்ல மிதிச்சேன்..யோகி தன் தலையை மட்டும் திருப்பி..

எனக்கும் இங்க வந்துட்டு வந்துட்டு போக அலைச்சல் தான்.. நான் ஹெஸ்ட் ஹவுஸ்லயே இருந்துக்கிறேன் என்றான் தாத்தாவை ஜெயித்து விடும் நினைப்பில்..

கெஸ்ட் ஹவுஸ் கீ இதுவா பாரு யோகி?. அத்தனை சாவியையும் கையில் வைத்து ஆட்டினார் முதியவர் .. அதில் யோகி, சஞ்சீவ் அறை சாவி, பைக் கார்சாவி முதல் அடக்கம்..  சஞ்சய் யோகியை விட்டுவிட்டு ஓடி வந்து தாத்தா அருகில் நின்றவன்.. 



தாத்தா அவன்தான உங்கள எதிர்த்து பேசினது..  என் கார் சாவிய எதுக்கு எடுத்து வச்சிருக்கிங்க...கொடுங்க தாத்தா  சஞ்சு வாங்க போனான்.. அதை கையில் மூடி வைத்து கொண்டவர்...

உட்காருங்க பேசலாம் , அதுக்கு பிறகு ஆபிஸ் போகணுமா இல்ல வெளிய போகணும்மான்னு  முடிவு பண்ணலாம்...

நீங்க ஓவரா பண்றீங்க.. நாங்க கம்பெனிய கையில எடுத்து பிறகு எவ்வளவு லாபம்னு உங்களுக்கே தெரியும்.. சும்மா ஒன்னும் இல்லாத சப்ப விஷயத்துக்கு பில்டப் கொடுக்க வேண்டாம் நானும் அவனும் இல்லேன்னா அத்தனை கம்பெனியும் மூடத்தான் வேணும்... 

தெரியும் படவா !! ஆனா பணத்தை மட்டும் வச்சி என்ன செய்ய ,இப்படி ஒழுக்கம் இல்லாத பசங்களா  வச்சி  என்னத்துக்கு..

இப்போ என்னதான் பண்ண சொல்றீங்க , போகணும் அவ்வளவுதான என் சேரை பிரிச்சி கொடுங்க ஒரேயடியா போயிடுறேன் அத்தனை பேருக்கும் யோகியின் பேச்சு பிடிக்கவில்லை என்பது அவர்கள் முகம் மாறியதில் தெரிந்தது ..ஏன் சஞ்சய் கூட ஏன்டா என்பது போல் யோகியை பார்த்தான்  ... 



சேர்தான பிரிச்சிடலாம் ஆனா அதுக்கு நீ கல்யாணம் பண்ணணும்..

முடியாதுன்னா...

இந்த சொத்துல ஒரு பைசா உங்க இரண்டு பேருக்கும் கிடையாது...

வாட்??  

என்னாது சொத்து கிடையாதா?? என்று சஞ்சீவ்  பியூஸ பிடிங்கி விட்டுட்டானே கிழவன் என்று தலைபாடாக அடித்து கொண்டு நின்றான் .. 

எஸ் மை டியர் படவாஸ், அடுத்த திங்கள் கிழமை இரண்டுபேரும் பொண்டாட்டியோட இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சா.. இந்த சொத்துக்களை  அனுபவிக்கலாம்..  இல்லை பெட்டியை எடுத்துட்டு வெளிய போகலாம்...ஏன்னா இங்க உள்ள அத்தனை சொத்தும்  என் பேர்லையும் ,என் மனைவி பேர்லையும் இருக்கு .. நான் மட்டும் ம்ஹூம்னு தலையாட்டினேன், அத்தனையும் முடிஞ்சி 



சரி தாத்தா  வெளிய போய் வாழ, பணம் தருவீங்களா? என்று சஞ்சய் விட்டால் போதும் காசோடு ஓடி விடுகிறேன் எனபது போல் கேட்டான்...

என் பேச்சு கேட்காத எவனுக்கும் ஒரு பைசா கிடையாது..

அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறது தாத்தா..

பிச்சை எடுங்கடா.. கையில காசும் ,பணக்காரங்கிற திமிரும் தான கண்டமேனிக்கு அலைய சொல்லுது.. சோத்துக்கு தெரு தெருவாக அலைங்க அப்போ அடங்காம முறுக்கி நிற்கிற ரத்தம் சுண்டி போகும், தானா தவறு புரியும்...

ஏதோ ஊர்ல எவனும் பண்ணாத தப்ப நாங்க பண்ணின மாதிரி பேசாதீங்க  எல்லாரும் தெரியாம பண்றாங்க நாங்க தெரிஞ்சு பண்றோம் அதுக்கு இவ்வளவு ரியாக்ட் தேவையில்லை .. சஞ்சு சாவியை வாங்கி கொடு..



தர முடியாது படவா, எவனும் தப்பு  பண்ணட்டும், என் வீட்டு பசங்க பண்ண கூடாது.. நான் சொன்னது போல கல்யாணம் பண்ணினா .. இங்க இருங்க இல்லை வெளிய போங்க...அம்மாடி மருமகள்களா இவன்க கல்யாணம் கட்டுற வரை, ரூம் சாவி கூட உங்க கிட்ட இருக்கட்டும் குளிக்க, தூங்க சாவியை கொடுங்க போதும் என்றதும் சஞ்சய் தாத்தாவை நைஸ் பண்ண பின்னால் போய்விட்டான் ,யோகி வெளியே கோவத்தில் நடக்க ஆரம்பித்து விட்டான் ..

ஆபீஸ்,  அவன் போகும் இடம் அனைத்தும் கிருஷ்ணன் கேட் போட்டு விட்டார் இரண்டு நாள் நண்பர்கள் கூட தங்கினான் ..அவர்கள் கல்யாணம் கட்டி உடனே டைவர்ஸ் பண்ணிடு முடிஞ்சது என ஒரு ஐடியாவை கொடுத்தனர்..இது நல்லா இருக்கே என்ற யோகி  சஞசய்யிடம் அதை கூறினான் ..அவனும் அதுதான் நமக்கு சரியா வரும் யோகி அப்படியே பண்ணிடலாம் .. 

தங்களுக்கு பெண்களை தேட சொல்லி வீட்டில் தாயிடம் கூறிவிட்டார்கள் அதற்கு பதில் ..   உங்களுக்கு பெண் தேடி அவங்களுடைய வீட்டில் இப்படி ஒரு மகனை பெத்து விட்டு என்ன எண்ணத்தில் பெண் கேட்க வந்தீர்கள் என்று அவமானப்பட முடியாது  ரெடிமேட் பதில் ஒன்றுபோல் அத்தனை பேர் வாயிலும் வந்தது.. அவர்கள் சதுரங்க வேட்டை தெரியாமல்....

நீங்களா பார்த்து எந்த பொண்ண கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்தாலும் சரிதான் ஆனா ஒரு வாரத்துல அது நடக்கணும்,  இல்லை நான் சொன்னது நடக்கும்..சொத்துல ஒரு பைசா இரண்டு பேருக்கும் கிடையாது  கிருஷ்ணா தன் அறைக்கு  சென்றுவிட்டார்...



அவர் சொன்னது போல் செய்து விடுவார் வக்கீலிடம் குடும்ப சொத்தை கோவிலுக்கு எழுதி கொடுக்க போவதாக  டாக்குமெண்ட் போட சொல்லி இருக்கிறார்... திருமணம் நடக்கவில்லை சொத்து கை விட்டு சென்று விடும் என்பது இருவருக்கும் நன்றாக புரிந்து விட்டது..  

ஒரு வாரமாக பெண் தேடுகின்றனர்.. ஆசைக்கும் ,பணத்துக்கும் வந்தவர்கள் கூட தாலி எனறதும் வேலி தாண்டி ஓடினர்..அப்படி என்னதான்டா இருக்கு இந்த தாலியில என குடுமியை பிடித்த தன் தாத்தாவை கொலை கூட பண்ண முடியாது பேரன்கள் இருவரும் சல்லடை போட்டு பெண்ணை தேடுகினறனர்... இவர்கள் ஒப்பந்த திருமணத்தில் சிறப்பு அம்சங்கள்.. 

அவர்களை திருமணத்தை முடித்த கையோடு  பணத்தை கொடுத்து ஓரம் கட்டுவது..அதற்கு தாத்தா மறுத்தால் வீட்டில் தங்கள் சல்லாப வாழ்க்கைக்கு தொல்லை இல்லாது ஒதுங்கி கொள்ள வேண்டும்... புருஷன் உரிமை எடுக்க கூடாது, அவர்களும் பொண்டாட்டிக்கு எந்த சேவையும் செய்ய மாட்டார்கள், இதற்கு எந்தபெண் ஒத்து வருவாள்.. 

என்னடா சஞ்சு நாளைக்கு லாஸ்ட் டேட் ஒருத்தியும் கிடைக்க மாட்டைக்கிறா..கிழம் வேற சொன்னா சொன்னபடி செய்வாரே என்னடா பண்றது என்று தன் முன்னால் இருந்த விஸ்கியை மடக்மடக்காக யோகி குடித்தான்...

நாம தேடுறது எல்லாம் ஹை கிளாஸ் யோகி, அதுல உள்ள பொண்ணுங்க நம்மளவிட ஷார்ப் , பேசாம மிடில் கிளாஸ்ல பார்க்க சொல்லுவோம் ஏதாவது தேறும்..

எஸ் அதுதான் பெஸ்ட் ஐடியா,  நீயும் உன் சர்க்கிள்ல தேடு நானும் என் சர்க்கிள்ல தேடுறேன்..  கொஞ்ச நாள் நமக்கு பொண்டாட்டியா நடிச்சிட்டு போகட்டும்..

அது முடியாதே தாத்தா கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண வைப்பார்..

பச் இவர யாரு இவ்வளவு அறிவாளியா பிறக்க சொன்னது ச்சை ஒரு வாரமா ஹெஸ்ட் ஹவுஸ் பக்கம் கூட போகலை உடம்பு டெம்ட் ஆகி நிற்கிது.. 

ஹிஹி நான் ஆபிஸ்லயே ஒன்ன கொண்டு வந்து வேலை முடிச்சிட்டேன்..  நம்மாள அது இல்லாம முடியாதுப்பா என்றான் சஞ்சய்  பல் தெரிய சிரித்தபடி..அவன் முகம் கொப்பளிக்க குத்திய யோகி.. 

உன்ன எத்தனை தடவைடா சொல்லியிருக்கேன் ஆபிஸ்ல இத வச்சிக்காதன்னு..

நான் என்னடா பண்ண,  அத்தனை சாவியும் ஓல்ட்மேன் கைவசம் டேங்க் புல் ஆகி போச்சி மண்டை சூடாகுது ,வழி தெரியலை ..ஆமா நமக்கு எப்படி  வாழ்கை முழுசுக்கும் ஒருத்தி போதும்டா ..

எனக்கும் அதே டவுட்தான் சஞ்சு.. நாம என்ன வர்றவளுக்கு புருஷனாவா இருக்க போறோம் கான்ட்ராக்ட் கல்யாணம் தான..அவங்களுக்கு பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிட்டு , கொஞ்ச நாள்ல ஏதாவது காரணம் சொல்லி பிரிஞ்சிடலாம் இதுக்கு ஒத்து போற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்..

கிடைக்குமா ஒரு நாள் நைட்டுக்குள்ள..

தேடி பார்ப்போம் கிடைச்சா லக்தான்.. இல்லை வேற வழி பார்ப்போம் என்று தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமும் பெண்களை தேடினர்....

கடைசி நாள் கிருஷ்ணன் சொத்தை கோவிலுக்கு எழுதி வைக்க வக்கீலை வர வைத்து விட்டார்..ஆனால் அவர் பேரன்களோ திருமண கோலத்தில் வந்து வாசலில் இறங்கினர்.. 

இரவு முழுவதும் குடித்து வெறித்து வழி தெரியாது தவித்தவர்களுக்கு காலையில் வழியும் கிடைத்தது ,பெண்ணும் கிடைத்தது..

யோகி அருகில் குழந்தையா குமரியா என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் ஒருத்தி நின்றாள் அனுரெட்டி..  ஆந்திரா சமர்சிமா ரெட்டி டானுக்கெல்லாம் டானின் மகள்.. 

சஞ்சய் அருகில் நின்றவள்   மதுரையில் கொலை பண்ண ஆள் சப்ளை செய்யும் மருதுவின்

 ஒரே மகள் கிருத்திகா ..  

சென்னையில் இருவேறு திசையில் இறங்கி திருட்டு முழி முழித்த இருபெண்களில் அனுரெட்டி யோகி கண்ணிலும் , கிருத்திகா ,சஞ்சய் கண்ணிலும் பட்டுவிட,  அப்படியே அமுக்கி பிடித்து காண்ராக்ட் கல்யாணத்தை பற்றி பேசவும்.. இதுக்கு தான காத்திருந்தோம் என  அவர்களும் சிலபல புது கண்டிஷன்களோடு திருமணத்துக்கு ஒத்து கொண்டனர்..அப்படியே போய் ரிஜிஸ்டர் ஆபிஸில் குளிக்காமல் திருமணத்தை முடித்துவிட்டு வந்துவிட்டனர்...

கண்ணாடி ஜாடிக்குள் இருப்பது பூதம் என தெரியாமல் ஆண்கள் இருவரும்  பெண்கள் கழுத்தில் மாலையிட்டு கரம்பிடித்தார்கள்.. 

இதழ் வழி இதயம் நுழைந்து இதழில் தடம் பதிப்பாள்.....

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow