இதழ் வழி இதயம் நுழைந்தாள் 3
Ethal3

3 இதழ் வழி இதயம் நுழைந்தாள்
தாத்தா இப்படி ஒரு கல்யாணத்தை வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டார் யோகி குட்டை டவுசர் கையில்லாத ஆர்ம் பனியனில் மாலையோடு நின்றான்,சஞ்சய் வாக்கிங் போன உடையோடு நின்றான்
அம்மாடி மருமகள்களா கல்யாணத்தை பண்ணிட்டான்க போல ஆர்த்தி தட்டை எடுத்துட்டு வாங்க ,அப்படியே நான் கொடுத்த பத்திரத்தையும் எடுத்துட்டு வாங்க
சரிங்க மாமா லட்சுமி, வாணி மாமனார் சொன்னதை செய்து வந்தனர்
இப்போ உள்ள வரலாமான்னு கேளு சஞ்சய் யோகி சஞ்சுவிடம் சத்தம் கொடுத்தான்.. அவன் பின்னால் மாலையின் ஒவ்வொரு இதழையும் பயத்தில் பிய்த்து போட்டு கொண்டு எல்லாரையும் மிரட்சி கலந்த பார்வையோடு அனுரெட்டி பார்த்தவள் யோகியையும் பார்த்தாள், அவன் அப்படி ஒருவர் இருப்பதே தெரியாதது போல் செல்போனில் விரலை ஓட விட்டுக்கொண்டிருந்தான்
இன்னும் எவ்வளவு நேரம் இங்க நிற்கணும்னு கேளு சஞ்சு
என்ன அவசரம் படவா இரு ,பேத்தி உன் பேர் என்ன?
அனு ரெட்டி பேச்சில் ஆந்திர மாநிலம் கலந்து தெரியவும்..
ஆந்திராவா?
ஆமா
எங்க பிடிச்ச படவா இவள
கல்யாணம் பண்ணியாச்சு ,இது ரிஜிஸ்டர் பண்ணின சர்டிபிகேட் சும்மா நிற்க வச்சி குறுக்கு விசாரணை பண்ணாதீங்க
உங்கள நம்ப முடியாது படவாஸ் நான் கேட்டு எனக்கு திருப்தியான பதில் வந்தா தான் உள்ள விடுவேன்..
தாத்தா இது அநியாயம் பார்த்துக்க, கல்யாணம் பண்ண சொன்ன ,ஊர் ஊரா அலைஞ்சு ஊர் பேர் தெரியாத ஒருத்தியை கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்தாச்சி, இப்ப உள்ள வர விடாம பண்ணினா எப்படி? தாவணியில் முனையை கையில் வைத்து சுற்றி கொண்டு திமிரான பார்வையோடு நாலாபுறமும் வேடிக்கை பார்த்து கொண்டு நின்ற கிருத்திகாவை பார்த்த சஞ்சு
கொஞ்சம் வெட்க படு நம்ப மாட்டைக்கிறார் பாரு
அதெல்லாம் நீ போட்ட கன்டிஷன்ல இல்லை, அத்தோட வெட்கம் எல்லாம் வராதுப்பா, நீயே எனக்கும் சேர்த்து படு வீடு படு சோக்கா இருக்கு, உன் வூடா?
இல்லை என் தாத்தா வூடு , தூ, வீடு உன்கூட சேர்ந்த அரை மணி நேரத்தில் பாஷை கூட மாறிடுச்சு
கிருத்திகா : ஆமா இன்னும் பெருசு ,எவ்வளவு நேரம் நிற்க விடும்
அவர் வயசு என்ன ,நீ பெருசுங்கிற...
இந்தா சும்மா அது இதுன்னு குறை கண்டுபிடிக்காத, நான் என் அப்பன்காரனையே வா போன்னுதான் கூப்பிடுவேன்
இது சரி வராது
வராதுன்னா போ கழுத்துல தாலி கட்டினதுக்கு ஒரு ஐம்பது லட்சம் ,கையை பிடிச்சிட்டு நிற்கிறதுக்கு ஒரு பத்து லட்சம், இப்படி வெயில்ல காய விட்டதுக்கு ஒரு அரை லட்சம் கணக்கு முடி இடத்தை காலி பண்றேன்.
இது பகல் கொள்ளை, எல்லாம் பேசி முடிச்ச பிறகு இப்படி சொன்னா எப்படி?
என்ன பேசின நீ, கல்யாணம் முடிஞ்சா உன்ன தொல்லை பண்ண மாட்டேன் நான் ஊர்ல மேய்வேன் நீ கண்டுக்க கூடாதுன்னு சொன்ன வேற என்ன சொல்லி கூட்டி வந்த, அது மட்டும் தான் அப்போதைய மெயின் விஷயமாக இருந்தது இப்போது தாலி கட்டிய மனைவி அவன் அண்ணன் யோகி பக்கத்தில் அடங்கி ஒடுங்கி பவ்யமாக பெண் நிற்பது போல் தன் அருகில் உள்ள பெண்ணும் இருக்கு வேண்டும் என்ற தீடிர் ஆசை,
சரி சொல்லாம விட்டுட்டேன் ,அதுக்கு எல்லாத்துக்கும் காசு கறக்க பார்க்கிறீயா
நீ சொல்லாம விட்டதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது , என் உடம்புல என் அப்பன் ரத்தம் ஓடுது
ஏன் இப்டிதான் பகல் கொள்ளை அடிப்பானா
இல்லை கந்து வட்டி கொடுப்பான் , கொடுக்கலை எலும்பை உடைச்சி கொடுப்பான், அப்பவும் கொடுக்கல உயிரை எடுத்துட்டு உடலை கொடுப்பான் ,கொடுத்து கொடுத்து சிவந்த கை , வசங்கெட்ட தனமாக போய் சேறு என புதைக்குழிக்குளிக்குள் விழுந்து விட்டோமோ என சஞ்சுவுக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்தது
நீயும் முன்னாடியே இதை எல்லாம் சொல்லி இருக்கணும்,
காசு வாசம் வந்தாதான் எனக்கு இப்படி கணக்கு வரும், பை பெர்த் மிஸ்டேக் தம்பி
இருடி இந்த கிழவனை அனுப்பிட்டு உனக்கு இருக்கு ,
டி சொன்னதுக்கு ஆயிரம் கொடு
ரொம்ப காஸ்ட்லி டியா இருக்கு, சஞ்சுவுக்கு இப்பத்தான் யோகி ஏன் கல்யாணம் வேண்டாம் என ஓடினான் என்பது புரிந்தது
டைவர்ஸ் தந்துடுவ தான உன் பேர் என்ன சொன்ன?
கிருத்திகா
தனு இல்லை கிருத்திகா
எனக்கு தனுதான் வருது விடு
அப்போ அதுக்கும்
என் சொத்து எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு போயிடுவ போல
எவ்வளவு தேறும்?
ஒரு
ஒரு கோடியா?
இல்லை எனக்கு மட்டும் நூறு கோடி வரும்
அடேங்கப்பா அவ்வளவா?
இப்போ உனக்கு என்மேல மரியாதை வருதுல்ல
இல்லை இதை எப்படி சுருட்டலாம்னு யோசிக்கிறேன் , சரி வா வலது கால் வச்சி உள்ள போவோம் வந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.
என்ன வேலை?
அதான் கிடைக்கிறதை சுருட்டிட்டு ஓடுறது,
நல்லா தமாஸ் பண்ற நான் உனக்கு தாலி கட்டி இருக்கேன் நீ என் வொய்ப்
அடிக்கடி நீயே சொல்லிக்க உனக்கும் வழி இல்லை எனக்கும் வழி இல்லை இதை கட்டியாச்சி சும்மா புருஷன் பொண்டாட்டி கதை ஓட்டுன டங்காஸ் ஆகி போகும்
இவ கிட்ட மனுஷன் பேசுவானா உள்ள வா ,சஞ்சு யாருன்னு காட்டுறேன்
நீ என்னத்த காட்டினாலும் கிருத்திகா அசர மாட்டா
என்னத்த காட்டினாலுமா சஞ்சு ஒரு விதமாக கிருத்திகாவை பார்த்தான்
உன் பார்வை போற விதம் சரியில்லை , அறுத்துடுவேன். ஆமா உன் பேர என்ன சொன்ன சஞ்சுவா கு
போதும் பட்ட டேமேஜ் விட்டிரு சஞ்சு, தான் பொண்ணுங்க அடக்கம் ஒடுக்கமா இருக்குமுன்னு சொல்லுவாங்களே அதுக்கு அர்த்தம் உனக்கு தெரியுமா
ஏன் தெரியலன்னா சொல்லி கொடுக்க போறியா, ஆம்பளை கூடதான் கட்டுபாடா ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இருக்கணும்னு சொல்றாங்க, நீ என்ன இருக்கவா செஞ்ச இல்லை இருக்க போறியா, இரண்டும் இல்லை அதனால உனக்கு என்ன சொல்ல தகுதி இல்லை ,எனக்கு காசு தேவைப்பட்டது நீ சொன்னதுக்கு ஒத்து கிட்டு கூட வந்திருக்கேன், தாலி கட்டிட்டோம்னு எங்கிட்ட உன் அதிகாரம் சில்வாலித்தனம் எல்லாம் காட்டின தலை எடுக்க அருவா சீவின கை சீவி எடுத்துடுவேன்,
என்ன கொஞ்சம் அமைதியா போனா ஓவரா பேசுற, என் சொல் பேச்சு கேட்டு இருந்தாதான் காசு இல்லை செத்த கொசு கூட கிடையாது ரொம்ப தான் ஒன் வேயா பேசிட்டு போற,
நீ பொண்டாட்டின்னு உரிமை எடுத்துட கூடாதுல,
என் கூட ராத்திரி பாட்னரா வரவே ஒரு தகுதி வேணும், அப்ட்ரால் நல்லா கேட்டுக்க அப்ட்ரால் லுக் உள்ள உன்னகிட்ட பொண்டாட்டி உரிமை எடுத்தா அதை விட பெரிய காமெடி எதுவும் இல்லை
அப்போ அந்த பாட்னர் பேரட்ல ஒன்ன பிடிச்சி தாலி கட்டியிருக்க வேண்டியதுதான
அதான் எவளும் ஒத்து வரலையே
அப்போ நான்தான் உனக்கு வாழ்க்கையும் கொடுத்திருக்கேன் ,உன் சொத்து வரவும் உதவி செஞ்சிருக்கேன் ..நீதான் எனக்கு கீழ , ஆரம்பமே இருவரும் எதிரி படை போல் கொம்பு சீவி கொண்டு நின்றனர்
தாத்தா: பேத்தி உன் பேர் என்ன?
உன்னதான் கீரி கூப்பிடுறார் பேர் சொல்லு சண்டையில் இடை நிறுத்தி சஞ்சு கீர்த்தியை திசை திருப்ப வேண்டியதாகி போச்சி
கிருத்திகா: ஒரு தரம் தான் சொல்லுவேன் ஒயாம சொல்ல வச்சா அதுக்கும் காசு போடுவேன்
சரி சொல்லு
கிருத்திகா பெருசு
தாத்தா சொல்லன்னு ஏற்கனவே சொன்னேல்ல
அட படவா விடு நீ உனக்கு தோணுறபடியே சொல்லு நீதான் இந்த வீட்டுக்கு சின்ன மருமக,
அப்போ சொத்து பிரிக்கும் போது கூட தருவியா பெருசு
அதைப்பத்தி தான் பேச போறேன்,அனு இங்க வா
யோகி:அவள எதுக்கு கூப்பிடுறீங்க எதுவா இருந்தாலும் எங்கிட்ட பேசுங்க யோகி அனுவை விடாது கையை பிடித்து தன் அருகில் நிறுத்தினான்
தாத்தா:சொத்து வேணுமா வேண்டாமா படவா
இதை ஒன்ன வச்சிக்கிட்டு இவர் பண்ற எரிச்சல் அனு கையை விட்டான்
இதுல எங்க வீட்டு சொத்து முழுவதும் இருக்கு, இன்னையிலிருந்து இதுக்கு பவர் அனு, கிருத்திகாதான் என்று தாத்தா பிரமிட் மம்மி ஒன்றை எழுப்பி விட்டு விட்டார்
பேரன்கள் இருவரும் மயக்கம் போடாத குறையாக அதிர்ந்து நின்றனர்.
What's Your Reaction?






