உறைபனி என்னில் பொழிகிறாய்-25

அத்தியாயம்-25
என்ன மச்சான் வசதியா என்னைக் கடத்திட்டு வந்துட்டேனு ரொம்ப சந்தோஷமா இருக்கியா...
என்ன உன்னை மச்சானு கூப்பிடுறேனுப் பாக்குறியா? எங்கவீட்டு கடைக்குட்டி உன் தங்கச்சியத்தான் கல்யாணம் பண்ணியிருக்கான்... அப்போ நீ எனக்கு மச்சான் முறைதானே.
எனக்கு ஒரே ஒரு வருத்தம் மச்சான். உனக்கு இன்னொரு தங்கச்சி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் பரவாயில்லை விடு.
ரிஸ்வான் இவ்வளவு பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. எந்தவித பதட்டமும் எந்தவித அலட்டலும் இல்லாமல் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்து கொண்டு பேசினான்.
விஷ்வேஷ் இதைப்பார்த்து என்னடா இது ரிஸ்வான் அமைதியானவன், எந்தவிதமான வம்புத்தும்பிற்கும் போக மாட்டான்... அந்த வீட்டிலேயே அவன்தான் அமைதினு கேள்விப்பட்டனே... இப்போ என்னடான்னா இவன் இவ்வளவு பேசுறான் பயமே இல்லாமல் இருக்கான் எனக் குழம்பி நிற்க.
அவனருகில் நின்றிருந்தவர்களும் என்னடா நடக்குது இங்க என்று யோசிக்கவும்.
அடேய் நீ ஜாமீனில் விடுதலையாகி வர்றேன்னு தெரிந்ததுமே நாங்க எல்லாம் அலார்ட் மோடுக்கு மாறிட்டோம்டா கிறுக்குப்பயலே...
சும்மா இருக்க எங்கவீட்டுப் பொண்ணு மேல ஆசைப்படுவ, எங்க ஆதி அத்தானை கொன்னுப்போடுவ இதையெல்லாம் பார்த்திட்டு இன்னும் சும்மா இருக்க நாங்க என்ன வெத்துவேட்டா...எங்க குடும்பத்துக்காக உன்னை கொன்னுப்போடவும் தயங்கமாட்டேன் என்றதும்...
விஷ்வேஷ் ஆத்திரத்தில் ரிஸ்வானை அடிக்கவர, விஷ்வேஷை தள்ளிவிட்டான்.
அதற்குள் அவனோடு இருந்த அடியாட்கள் ரிஸ்வானைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்...
எனக்கு நீ மட்டுமில்லை உன்கூடப்பிறப்பு அத்தனைபேரும் வேணும், நீதான் தூண்டில் புழு உன்னை வச்சு அத்தனைபேரையும் பிடிக்கணும் உன் ஒட்டுமொத்தக்குடும்பமும் நாசமா போகணும், உங்க அழகான இளவரசினு பொத்தி வச்சுருக்க உங்க அருமை தங்கச்சி உட்பட என்றதும்.
டேய் நாயே நீ நடுரோட்டுல கேட்க ஆளில்லாம செத்துக்கிடக்கப்போற பாருடா என்று கத்தினான் ரிஸ்வான்.
சரியா சொன்ன மச்சான் என்று குரல் கேட்கவும் எல்லோரும் திரும்பி பார்க்க அங்க ரிஷி நின்றிருந்தான்...
விஷ்வேஷ் இதை எதிர்ப்பார்க்கவில்லை.
அப்படியே அதிர்ந்து நிற்கும் அந்த ஒரு நிமிடத்தில் ரிஷி அவனது முகத்தில் குத்தவும் கீழே விழுந்தான்.
அதற்குள் சுத்தியிருந்த ரௌடிகள் ரிஷியை தாக்கவர, கையிலிருந்த சுருள் கத்தியால் சரமரியாக தாக்கினான் ரிஷி.
ஒவ்வொருவரும் சுருண்டு விழ, விஷ்வேஷ் தனது துப்பாக்கியை எடுத்து ரிஸ்வானின் தலையில் வைத்துவிட்டான், அவனுக்கு எல்லாரும் இங்கு வரணும் என்று எதிர்பார்க்க ரிஷி வந்ததும்...ஒருத்தனையாவது கொன்றனும் என்ற வெறி... ரிஷி கொஞ்சம் நிதானமாகினான்.
என்ன செய்யவென்று யோசித்தவன் ரிஸ்வானுக்கு கண்களை காண்பிக்க, விஷ்வேஷின் தொடைக்கு இடையே ஒரு எத்துவிட்டான் அவ்வளவுதான்,
விஷ்வேஷின் துப்பாக்கி எங்குப்போனது, எங்கு விழுந்தது என்று தெரியாது. அவனும் கீழே விழுந்தான்.
மிகவும் ரௌத்திரமானவன் கிட்டக் கிடந்த கட்டையைக்கொண்டு ரிஸ்வானை அடிக்க முன் நெற்றியில் பட்டு ரத்தம் வந்ததும்... ரிஷிக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்தது என்றுத் தெரியாது அதற்குள்ளாக வெளியே இருந்து கேசவ் உள்ளே வந்திருந்தான்...
ரிஷியும் கேசவும்தான் வந்திருந்தனர்...
எல்லாம் ரிஷியின் திட்டம் தான். விஷ்வேஷ் வெளியே வர்றான் ரிஷிக்குத் தெரிந்ததும் அவன் செய்த முதல் காரியம் ப்ரண்ட்ஸ் மூலமாக அவனின் எல்லாக் காரிலும் டிடெக்டர் பொருத்தியது மட்டுமல்லாமல், அவனது கெஸ்ட் ஹவுஸ், பண்ணைவீடு என்று எல்லா இடத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணித்து தனக்கு தகவல் கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருந்தான்...
அவனது மொத்த நடவடிக்கையும் ரிஷிக்குத் தெரியும்படி செய்திருந்தான் பணம் இருந்தால் மார்க்கமுண்டு என்று தியரியை பயன்படுத்திருந்தான்.
கேசவும் தன் கையில் துப்பாக்கியோடு நுழைய ஓடித்தப்பினர் ரௌடிகள் எல்லாம்... விஷ்வேஷ் இப்போது ரிஷியின் கையில்...நையப்புடைத்துவிட்டான்.
முதல்தடவை என்னையக் கடத்தும் போதே சொல்லித்தானடா உன்னை அடிச்சேன்... அட விளாங்காதவனே இன்னுமாட என்கிட்ட அடிவாங்கணும்னு ஆசைப்படுவ என்று அடிச்ச அடியில் அவன் வெளியே ஓடிப்போய் தன் காரை எடுத்துக்கொண்டு ஓட...பின்னாடியே இவர்கள் மூவரும் ஓடினர் அதற்குள் காரில் ஏறி பறந்துவிட்டான்.
ரிஷி இப்போதுதான் ரிஸ்வானைப் பார்த்து அவனது இரத்தத்தை துடைத்து விட்டவன் அவர்களது வண்டியிலிருந்த பர்ஸ் எய்ட் பாக்ஸில் இருந்து மருந்து எடுத்து போட்டுவிடவும் கேசவிற்கும் ரிஸ்வானிற்குமே கண்கள் கலங்கியது... ரிஷியின் அன்பில் நெகிழ்ந்திருந்தனர்.
என்ன மச்சான் எப்படி அந்த நாய்கிட்ட மாட்டிகிட்டீங்க.. கவனமா இருக்கவேண்டியதுதான என்றதும்.
கவனமாத்தான் இருந்தேன் த்தான் வெளியே வரும்போது ஒரு பொண்ணு வழித்தெரியலை அண்ணானு கேட்டுச்சு அதான் உதவினு போனேன் தூக்கிட்டாங்க.
மச்சான் உங்களுக்கு இருக்குற ஒரு தங்கச்சியவே இங்க பார்த்துக்க பாடாய் படுறோம். இதுல ஊர்ல இருக்குற தங்கச்சியெல்லாம் தத்தெடுத்துடாதிங்க பாஸ்; எங்களால முடியாது என்றதும் இருந்த சூழ்நிலை மறந்து இருவரும் சிரிக்கவும் ரிஸ்வானுக்கு வலிக்க ஆரம்பித்தது... உடனே அவனை ஹாஸ்பிட்டலிற்கு அழைத்து சென்று தையல் போட்டுவிட்டு,விட்டிற்கு வந்தனர்...
அதற்குள் கேசவிற்கும் ரித்திக்கிற்கும் தங்களது மொபைலில் தகவல் வந்ததும்... கேசவ் பார்த்து அதை ரிஷிக்கும் ரிஸ்வானிற்கும் காண்பிக்க.
இதுக்குள்ளவா எப்படி நடந்தது என்று வாயைப்பிளக்க.
அது ரித்திக்கோட ப்ளான் இது நாங்க அன்னைக்கே ஏற்பாடு பண்ணினது...
"வந்த தகவல் இதுதான் பிரபல பிஸினஸ்மேனாகிய விஷ்வேஷ் தனது காரில் செல்லும்போது எதிரே வந்த சரக்கு லாரி மோதி விபத்தில் சிக்கிக்கொண்டார்.
இந்த விபத்தில் அவரது கார் முழுவதுமாக சேதமடைந்தது...அவரை மீட்டு பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..அவர் இப்போதுதான் ஒரு கொலை குற்றத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்"
பிழைச்சு வர வாய்ப்பில்லை... அப்படியே வந்தாலும் பிரயோஜனமில்லை என்றதும், ரிஷி மச்சான் சூப்பரா பிளான் போட்டிருக்கீங்க...பரவாயில்லை இந்த ரித்திக் மச்சானுக்கும் கொஞ்சம் மூளையிருந்திருக்கு; உங்களை மாதிரியில்லப்பா என்றவன் திரும்பி பார்க்க
இரண்டுபேரும் அவனை முறைத்துப் பார்க்க...
உங்க தங்கச்சி என்னை ரொம்ப தேடிருப்பா நான் அவகிட்டப்போறேன் என்று திரும்பி பார்க்காமல் செல்ல...இருவரும் சிரித்தனர்.
ஏற்கனவே எல்லோரும் களைப்பில் தூங்கிவிட்டனர். அதனால் யாருக்கும் தெரியாமலேயே அவரவர் அறைக்குள் செல்ல...
ரிஷியை பிடித்துக்கொண்டாள் சந்தனா இவ்வளவு நேரம் எங்கப்போனீங்க என்று உடனே அவளை இழுத்து தன் நெஞ்சுக்குள் அழுத்தியவன் இப்போ நீ என்னோட பாதுகாப்புல இருக்கடா... என்று நினைத்துக்கொண்டு அவளை இன்னும் இறுக்க...
த்தான் ரொம்ப இறுக்காதிங்க பாப்பாக்கு இடிக்கப்போகுது என்றதும்...அப்போ மெதுவா கட்டிப்பிடிக்கிறேன்டா என்றவன் அவளை முத்தமிட்டு முத்தமிட்டு தன் கட்டுப்பாட்டில் வைத்து வேறு எந்தக்கேள்வியும் கேட்காதளவு பார்த்துக்கொண்டான்.
இங்கு ரித்திக்கின் அறையிலோ ரிதன்யா தன்னுடயை சேலையை கழட்ட முயற்சிக்க...முடியாமல் தவித்தாள். அவளது ப்ளவுஸில் பின்பக்கமாக கொக்கி இருக்க கழட்ட முடியாமல் தவித்தவள்...
கண்ணாடியைப் பார்த்து முயற்சி செய்தாள்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்தவன் அருகில் வந்து அப்படியே அந்தக் கொக்கிகளை சட்சட்டென்று கழட்டிவிட்டுப் போய், தன்னுடைய ட்ரஸ்ஸை கழட்டிப்போட்டுவிட்டு வெறும் ஷார்ட்ஸ்ஸோடு நின்றான்...
ப்ளவுஸ் கழட்டியாச்சு இனி சேலையை மாற்றிவிட நினைத்து தயங்கி நின்றாள்.
ரொம்ப நேரமாக அவள் அசையாமல் நின்றிருப்பதை பார்த்தவன். அவளையே பார்த்திருந்தான் என்னதான் செய்கின்றாள் என்று...
மெதுவாக நீங்க வெளியபோங்க நான் ட்ரஸ் மாத்தனும் என்றதும்...
முகத்தை சுருக்கி ட்ரஸ்தான மாத்தனும்"என்று கேட்க...அவளோ ஆமாம் என்று தலையசைக்க...
ஓகே என்று எழும்பி கதவுப்பக்கம் சென்றதும். நிம்மதியானவள் திரும்பி சேலையை கழட்ட, பின்பக்கமாக இருந்து சேலையை முற்றிலும் கையோடு எடுத்து தூர எறிந்திருந்தான்.
கதவுப்பக்கம் சென்றது தாழ்போடத்தான், அவன் என்னைக்கு ரிதன்யா சொன்னதை நல்லபிள்ளையாக கேட்டிருக்கான்.
"ஐயோ! என்ன பன்றீங்க என்று கத்தியவள்,திரும்பி வெளியதானப் போனீங்க" என்று பார்க்க கதவு பூட்டப்பட்டிருந்தது.
அப்படியே பின்பக்கமா நகர்ந்து செல்ல டேபிள் தட்டி நின்றவள்...ரித்திக் தள்ளிப்போங்க நான் நான்...
நான் நான்.... அடுத்து என்ன என்று அவன் கேட்கவும்.
ஒன்னுமில்லை என்றாள்...
அப்படியா பார்த்தா அப்படித் தெரியலையே நிறைய இருக்கே என்று பார்வை வேறு சொல்ல.
ஒன்னுமில்லைனா ஒன்னுமில்லைனு அர்த்தம் என்று அவனைத் தள்ளிவிட... எங்கே அவன் அப்படியே நிற்கவும்,அவனை சுற்றி செல்ல முயற்சிக்க, சட்டென்று அவளை தன் கையில் தூக்கியவன்" காலையில சிம்பன்ஸி மாதிரி இருக்கேன்னு சொன்னதான...அந்த சிம்பன்ஸி என்ன பண்ணும்னு உனக்கு காண்பிக்குறேன்.
அவனது கையிலிருந்தே அவள் துள்ள, அவளது அங்கங்களும் அதற்கேற்றவாரு அசைந்தாட...சும்மாவே அவனது கண்கள் அவளைப்பந்தாடும் இப்போது கேட்கவா வேணும் பார்வையிலேயே தின்றான் அவளை...
என்னை வேண்டாம்னு சொன்னதான போடா டேய்... இறக்கிவிடுடா எனக்குத் தாலிக்கட்டிட்டா எல்லாம் சரியாகிடுமா , என்று கேட்டாள்.
ஆமாயில்லை சரியாகாதுதான்...என்ன செய்யலாம் என்று சிறிது யோசிக்க.
என்னை இறக்கிவிடுங்க என்றதும்,அவளை கட்டிலில் விட்டவன் தாலி மட்டும் கட்டினா சரியாகாது, அதனால இதையும் சேர்த்து பண்ணினா எல்லாம் சரியாப்போகும் என்று அவளின் மேல் படுத்தவன்...அப்படியே அழுத்தம் கொடுத்தான்.
ரித்திக் என்று மூச்சுத்திணறி சொல்லவும் சரிந்துப்படுக்க...அவள் எழுந்து நான் என்னோட ரூமிற்குப்போறேன் என்று கிளம்ப...அவன் அவளைத் தடுக்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தனது கைகளை தலைக்குமேல் கட்டிக்கொண்டு பார்த்திருந்தான்..
அப்படியே கதவருகே சென்றவள் நம்ம போறோம்னு சொன்னவுடனே அமைதியா இருக்காங்களே? இது ரித்திக் குணமில்லையே? என்று யோசனையோடவே கதவருகில் சென்று திறந்துப்பார்க்க...அது பூட்டப்பட்டிருந்தது.
அதானப் பார்த்தேன் இவன் கேடிக்கெல்லாம் கேடியாச்சே இப்போ தெரியுது ஏன் அமைதியா இருக்காங்கனு...நேரடியாக காலை தரையில் அழுந்த தொப் தொப்பென்று ஊன்றி நடந்தவள்...கதவைத்திறங்க நான் அங்கப்போறேன் என்று சொல்ல.
அவனோ யாரோ யாருக்கிட்டயோ பேசுறாங்க என்ற ரீதியில் இருக்க.
கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவளுக்கு அழுகை அழுகையாக வரவும் கண்ணீரைத் துடைத்து துடைத்து அமர்ந்திருந்தாள்...
சிறிது நேரம் பார்த்திருந்தவன் சாவியை கோபத்தில் சுவற்றில் தூக்கியெறிந்துவிட்டு கவிழ்ந்து படுத்துவிட்டான். அது அவளது காலில் வந்து விழுந்தது...
மெதுவாக அதை எடுத்தவள் கதவைத்திறந்துவிட்டு அப்படியே நின்றவளுக்கு போக மனமில்லாமல் அங்கயே மடங்கி அமர்ந்துவிட்டாள்.
அவளது கால்கள் அவனை விட்டு செல்ல மறுத்தன, மூளையோ போவென்று சொல்ல மனமோ அவனிடம் இருக்கச்சொல்லியது.
அப்படியே அமர்ந்தவள் எழுந்து அவனின் அருகில் சென்று தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
கல்நெஞ்சக்காரன், உன் மனசுல காதலே இல்லையா என்மேல? எப்பவும் பாரு என்னை அழவைக்குற.. ஏங்க வைக்குற... இவ்வளவு நாளும் என்னை பார்க்காம தள்ளிவச்ச என்று அடிக்க.
அது அவனுக்கு மசாஜ் செய்வது போன்று இருந்தது, ஆனால் அவளுடைய வார்த்தைகள் மனதை சம்மட்டியால் அடித்ததுப்போன்று இருந்தது.
அடித்து ஓய்ந்தவள் அமைதியா கட்டிலில் அமரவும் அப்படியே பின்பக்கமாக இருந்து, அவளது கைகளுக்கு ஊடாக தன் கையை நுழைத்து அவளைக் கட்டிக்கொண்டான்...அதில் அவளது முன்பக்கம் முழுவதும் அவனின் வலியக்கரத்தினிற்குள் அழுத்தி பிடிக்கப்பட... சுகவேதனை அவளுக்கு...
அதற்குமேல் பேசவும் சண்டையிடவும் ரித்திக்கிற்கு விருப்பமில்லாததால் அப்படியே அவளது முகத்தைப் பக்கவாட்டில் திருப்பி அவளது உதடுகளை தன் இளமைக்கு உணவாக்கினான்.
ரிதன்யாவின் கண்கள் அதற்கு மறுமொழியாக கிறங்கி மூடிக்கொண்டு அந்த முத்தத்தில் மூழ்க ஆரம்பித்தாள்.
ஏற்கனவே சேலையில்லாத அந்த இடுப்பில்
அவனது கரம்படவும் அப்படியே குழைந்தாள் அவள்...மெது மெதுவாக அவளது மீதியிருந்த ஆடையையும் கழட்ட...அவள் கரங்கொண்டுத் தடுக்க, பிடிவாதக்காரனவன் ஜெயித்தான்.
அவனையே ஆடையாக நினைத்து கட்டிக்கொண்டவள் "சின்னபிள்ளை சின்னபிள்ளைனு சொல்லிட்டு, இப்படித்தான் செய்வாங்களா" என்றுகேட்க..
யாரு சின்னபிள்ளை? நீயா? மூணுவருஷம் முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கலாமா? இப்பவேனு? கேட்ட ஆளுதான நீ...பதினெட்டு வயசு முடிஞ்சுட்டு எல்லாத்துக்கும் தயாருனு சிக்னல் கொடுத்தவதான நீ.
உன்னை ஹைதரபாத்துக்கு தூக்கிட்டுப்போன அன்னைக்கே தெரிஞ்சுப்போச்சு நீ எவ்வளவு பெரிய பொண்ணுனு...என்று கிறக்கமாகப் பேச, தன் முகத்தை அவனது நெஞ்சுக்குள் புதைக்க.
ஆடைகளற்ற இருவரது மேனியும் சிக்கிமுக்கி கல்லானது...உரசி உரசி காதல் தீயை தானகப்பற்றி எறியச்செய்தது.
ரித்திக்கின் உள்ளத்தில் மறைந்திருந்த காதல் மோகமாக மாறி ரிதன்யாவை முற்றுகையிட்டது.
அவளது மேனியில் அவனது பத்து விரல்களும் தனது சுகத்தை தேடித் தேடி அலைந்து... அவளது செந்தாமரை மேனியை ஒரு இடம் பாக்கியில்லாமல் தொட்டு தொட்டு மீட்டியது.
அவளது கனவு நாயகன் சேரமுடியுமோ? முடியாதோ? என்று ஏக்கத்திலேயே வைத்திருந்த வாழ்க்கை இப்போது ஒரே கட்டிலில் இருவரையும் ஒன்றாக உருளச்செய்தது...
அவனது மேலே ஏறி அமர்ந்தவள்...என்னை வேண்டாம்னு சொல்லுவ? சொல்லுவ? என்று அவனது கன்னத்தில் அடிக்க...அவளது கையைப்பிடித்தவன் அப்படியே அவளது இரு கையை விரித்துப்பிடித்து வைக்க...அவளது முன்னழகு பெட்டகம் அவனை என்னமோ செய்ய, அவளை தன் வயிற்றிற்கு நகர்த்தியவன். எம்பி பற்கள் கொண்டு கடித்து இழுத்து வாயில் வைத்துக்கொள்ள...அவ்வளவுதான் அவளது கோபத்தின் வேகமெல்லாம் காணமல் போனது.
மொத்தமாக அவளை கீழ் சரித்து மூங்கில் போன்ற கால்களுக்கிடையில் உரசி உரசி தீ மூட்டி அந்த மூங்கில் காட்டையே மோகத்தீயை பற்றவைத்து தான் குளிர்காய்ந்தான்....இருவரும் ஒன்றாக கலந்து காதலின் காமம் கற்று விடைதெரியாத கேள்விகளுக்கு தன்னுடைய உடல்மொழியால் பதில் சொல்ல முயற்சித்தான்.
எல்லாம் முடிந்து எழுந்தவன் தன்னுடைய மொபைலை எடுத்துப்பார்க்க அங்கோ விஷ்வேஷின் தகவல் வந்திருந்தது.. தன் மனைவியைப் பார்த்தான் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்...ரொம்ப சந்தோஷப்பட்டான்.
ஒரு நச்சுப்பாம்பை நசுக்கி அதனிடமிருந்து தன் குடும்பத்தையும் தன் தங்கையையும் காப்பாற்றியாகிவிட்டது என்று நிம்மதி அடைந்தான்.
What's Your Reaction?






