அன்பே கொஞ்சம் காதல் கொடு 11-15

Sep 1, 2024 - 19:36
Sep 1, 2024 - 19:34
 0  592
அன்பே கொஞ்சம் காதல் கொடு 11-15

அத்தியாயம்-11

காரில் கதிர் மற்றும் நிலா இருவரும் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருக்க கதிரின் முகம் கோபத்தில், கோபத்தின் அளவு அவனது காரின் வேகத்திலையே தெரிந்தது...

நிலா அருகில் இல்லை பின்பக்கம் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் அவ்வளவுதான் இதுக்குள்ள கடிச்சே தின்றுப்பாங்க,

சிங்கத்த ரொம்பத்தான் சீண்டிட்டமோ என்று நினைத்தவள் ...

பின்பக்கமிருந்து சத்தமாக மாம்ஸ் பசிக்குது வெளிய எங்கயாவது சாப்பிட வாங்கித்தாங்களேன்...

இதைக்கேட்டதும் காரை ஒதுக்கி நிறுத்தியவன். அவளை முறைத்துப்பார்த்து 

இங்க ஒருத்தான் இவ்வளவுக் கோபத்தில் வர்றானே ஏன்? எதுக்குனு? கேட்டியா...

அடிவாங்கப்போற பாரு பொண்டாட்டியா இருந்தாலும் என் பொசிஷனுக்கு கல்லூரியில் யாரையும் அடிக்கூடாது...

இப்படியே போனா அந்த ரூல்ஸ்ஸையும் மீற வச்சிருவ போல...ஏன்டி நான் போடுற எந்த ரூல்ஸ்ஸையும் மதிக்ககூடாதுன்னு எதாவது வேண்டுதல் வச்சிருக்கியா?

என்னைப் பார்த்த நம்ம டிபார்ட்மண்ட்லயே எல்லாரும் பயப்படுவாங்க, ஓடி ஒளிஞ்சுக்குவாங்க நீ என்னனா போனவருசத்திலிருந்தே என்னை சீண்டிக்கிட்டேயிருக்க...

அடங்காப்படி மாதிரி இருந்திட்டு என்னை மதிக்கமாட்டுக்க... 

கதவத்திறந்து கீழறங்கி  

முன்னாடி என் பக்கத்துல வந்து உட்காருடி என்றதும். 

நான் இங்கயே உட்கார்நதிருக்கேன் மாம்ஸ். எனக்கு எதுவும் வாங்கித்தர வேண்டாம். வீட்டிற்குப்போங்க என்றாள்...கதிர் செமக் கடுப்பாயிட்டான். 

நேரே வீட்டுக்கு காரை ஓட்டிச்சென்றவன். அவளை இறக்கிவிட்டுவிட்டு, நீ உள்ளப்போ நான் வர்றேன் என்றவன் மறுபடியுமாக காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்...

நிலா உள்ளே சென்றாள்...

உடைமாற்றிக்கொண்டு வந்தவள் சமையலறையில் டீ போட்டுக்கொண்டிருந்தவளுக்கு தன்னையறியாமல் சிரிப்பு.

இரண்டாவது வருசம் முதல் நாள் காலேஜிக்குப் போனா,

உடனே பாடம் நடத்தினா கடுப்பாகுமா ஆகாதா...

இனியாவையும் நிலாவையும் கதிர் அழைத்ததுமே இருவருமே எழுந்து நின்றார்கள். எல்லோரும் இவர்களையே திரும்பிப் பார்க்க...

இனியா பயந்து கடவுளே அவளுக்குத்தான மாமா நமக்கு ஹிட்லராச்சே!..இதை மறந்து அவகிட்ட பேசிட்டிருந்திருக்கனே, என்ன சொல்லப்போறாரோ முதல் நாளே எல்லார் முன்னாடியும் திட்டுவாங்க வச்சிட்டாளே என்று மெதுவாக புலம்பினாள் "நான் இங்க எல்லா விளக்கமும் சொல்லிட்டிருக்கேன். இந்த வருசம் ப்ராக்கிட்டிக்கல்ஸ் நல்ல மார்க் எடுத்தாதான் உங்களுக்கு மேல்படிப்புக்கு பயன்படும். பாடங்கள் என்னென்ன இருக்கு என்று விளக்கிட்டிருக்கேன் அதைக்கேட்காம அங்க என்ன பேச்சும் சிரிப்பும்?

இனியா சொல்லு நான் என்ன சோல்லிட்டிருந்தேன், சொல்லு?”

அவள் அமைதியாக இருக்கவும் கதிர் நிலாவைப் பார்க்க...அது நீங்க சொன்னது எதுவுமே புரியலை சார்...இன்னோரு முறை சொல்லுங்க?.... என்று ராகமாக இழுக்க.

வகுப்பில் மணவர்கள் சிரிக்க ஆரம்பிக்கவும்..செமக்கோபம் அவனுக்கு படிப்பு அப்படிங்கறது தெய்வம் மாதிரி, இப்படியா விளையாடுவாங்க...

நான் சொல்றத கேட்கமுடியாதளவுக்கு அப்படி என்ன பேசினீங்க. சொல்லு?

அதுவா என்னோடக் கல்யாணக் கதையைப் பத்தி பேசிட்டிருந்தமா...அதுல எல்லாம் மறந்திட்டேன் சார் என்றதும் இப்போது பிள்ளைங்க எல்லாரும் கலகலவென சிரித்ததும்...

கதிரின் கோவம் கரையைக் கடந்தது...

அதுதான் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா?

நிலா "அது தெரியாது சார் ஆனா எனக்கு முக்கியம் சார்"

இனியா உட்காரு...

நிலானி கெட்லாஸ்ட் ப்ரம் மை கிளாஸ்.....

இது எப்பவும் உள்ளதுதான மெதுவா வெளியப் போகும்போது அவன் அருகில் வரவும் நாக்கை துருத்திக் காண்பித்துவிட்டு வெளியே சென்றாள்...

வெளிய நின்னு வேடிக்கைப் பார்த்திட்டிருந்தவள்...தனியா வந்திட்டமே இந்த இனியாவும் வந்திருந்தா பேசிட்டாவது இருந்திருக்கலாம் என யோசிக்கும் போதே  

அவள் பின்னாடி இங்க என்ன செய்திட்டிருக்க கிளாஸ்க்கு போகமல் என்ற சத்தங்கேட்கவும், திரும்பி பார்க்க துறைத்தலைவர்(எச்.ஓ.டி).

"பனிஷ்மெண்ட் சார்" என்று நிலா சொல்லவும்

"உன்னோட வகுப்பில் யாரு பாடமெடுக்குறா" என்று அவர் கேட்கவும்.

நிலா "கதிர் சார்"   

அவருக்கு அதிர்ச்சித்தான் இவங்களுக்கு கல்யாணம் நடந்ததெல்லாம் அவருக்குத் தெரியும்.

அதனால " நீ என்ன செய்த, பனிஷ்மெண்ட் வாங்குறளவுக்கு, வா என்று உடன் அழைத்து வகுப்பினுள் நுழைந்தார். "கதிர் சார் முதல் நாள், அதுவும் முதல் வகுப்பில் வெளிய நிக்க வச்சிருக்கீங்க...

வெளிய அனுப்பாதிங்க வெளிய நின்னு வேடிக்கை பார்த்திட்டிருக்காங்க" என்று

அவர் பங்குக்கு எண்ணெயை ஊத்திட்டுப்போயிட்டாரு...

கதிர் அவளைப் பார்த்தபார்வையிலயே தெரிந்தது, மவளே வீட்டுக்கு வா உன்னை வச்சிக்குறேன் என்ற ரீதியில்..

நல்ல பிள்ளையாக அவளது இடத்தில் சென்று அமர்ந்துவிட்டாள்.

மதியம் அவள் இனியாவிடம் பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தவள், அப்படியே கதிருக்கு போனில் அழைக்க அவன் எடுக்கவேயில்லை.

மாம்ஸ்ஸ எல்லார் முன்னாடியும் மதிக்காதமாதிரி நடந்திக்கிட்டமோ என்று தோன்றியது...

மதியம் ஒரு பேராசிரியர் வந்து பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது தூக்கம் வர, நிலா மெதுவாக இனியாவிற்கு அந்தப்பக்கம் போய் தலைக்கவிழ்ந்து படுக்கவும், "நிலானி"

என்றழைக்கும் சத்தம் கேட்டதும் ச்ச என்னடா இந்த நிலாவுக்கு வந்த சோதனை என்று எழும்பி நின்றாள்.

"என்ன இங்க வந்து தூங்கற இது கிளாஸ்ரூமா இல்லனா உங்க வீடா என்ன?. வீட்ல உங்களால தூங்கமுடியலைன்னா இங்கயாவந்து தூங்குறது... "

"சாரி சார்..வீட்ல தூங்கவிடலை சார்... என்று யதார்த்தமாக சொல்ல... அவளுக்கு திருமாணமான விசயம் தெரியமாதலால் கமுக்கமாக எல்லாம் தலைக்குனிந்து சிரிக்கவும்...

அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, உட்கார் பாடத்தைக்க கவனி.. என்று அவர் நிலாவை விட்டுவிட்டார்...

ஸ்டாஃப் ரூம்ல போய் கதிரிடம் பேசிவிட்டு ஆலோசனை சொல்லிவிட்டுப்போனார்...

கதிர் ஒரு நாள்லயே இவ்வளவா என்று திகைத்தான்...

அந்தக்கோபத்தில்தான் கதிர் இருந்தான்...

அவள் டீ போட்டு முடிக்கவும் காரின் ஹார்ன் சத்தம் வெளியப்போய் கேட்டைத் திறந்தவள் அவனின் முகத்தைப்பார்க்க அவன் எதுவும் சொல்லவில்லை... 

வீட்டுக்குள் சென்று அவனுக்கு டீ எடுத்துக்கொண்டு வந்தவள் பார்த்தது டேபிளில் அவளுக்குப் பிடிச்ச தின்பண்டங்கள் இருந்தது...

அதை எடுத்துக்கொண்டு அறைக்குள் சொன்றவள் அவனிடம் நன்றி மாம்ஸ் என்கவும், அவளது காதைப் பிடித்துக்கொண்டு என்னோடக் கிளாஸ்லதான் அப்படியிருந்தனா இந்த சேஷாத்திரி மனுஷன்கிட்ட என்ன சொன்ன...

எனக்கு அட்வைஸ் கொடுத்திட்டுப் போறாரு...

நிலாக்கிட்ட கொஞ்சம் சொல்லிவைங்க.சின்னபிள்ளை நீங்கதான சார் கவனமா இருக்கனும் அப்படி இப்படினு...எனக்கு தலையும் புரியலை வாலும் புரியலை...

நிலா வகுப்பில் நடந்ததைச் சொல்லவும்...

தலையில அடிச்சிக்கிட்டான்...

லூசாடி நீ அந்த சொட்டையனவிடு உன் கிளாஸ்ல பிள்ளைங்க என்னைய பத்தி என்ன நினைச்சிருப்பாங்க?

மாம்ஸ் காதைவிடுங்க வலிக்குது ஒன்னும் நினைக்கமாட்டாங்க...

உங்களைப்பத்தி எல்லாருக்கும் தெரியும் அதைவிட நீங்க என்ன லவ் பண்ணதும் தெரியும்.

என்னது லவ் பண்ணுனேனா உன்னையவா... லூசா நீ...நா எப்போம்டி உன்னை லவ் பண்ணதா சோன்னேன்?

என்று முறைத்து நிற்க...

போங்க மாம்ஸ் காமெடி பண்ணிக்கிட்டு...

நிலா அவனருகில் வந்து இந்த சைடுல இருக்க மீசைமுடிய கடிச்சிக்கிட்டே என்ன முறைக்கறதா நினைச்சி பார்த்தீங்கதான போனவருசம் முழுவதும் அதெல்லாம் காதல் பார்வையினு எங்களுக்குத் தெரியும்...

அப்படிலாம் ஒன்னுமில்லை... எதாவது கற்பனைச் செய்திக்குட்டு...சும்மா உளறாத...  

சரி விடுங்க உங்க கண்ணுமட்டுந்தான் என்னை பார்த்திச்சு,நீங்க என்ன லவ் பண்ணலை சரியா......

இப்போ கிளாஸ்ல நடந்ததுக்கு வாங்க, அதென்ன வீட்ல தூங்கலைனு சொன்னாரு..

சேஷாத்திரி சார் என்னை சுத்திவளைச்சு சொல்றாராம்..நம்ம கல்யாண மேட்டர்லாம் தெரிஞ்சிக்கிட்டு நைட்ல தூங்கலங்கறதை....

யாருகிட்ட.. அதான் அப்படி சொன்னேன்.ம்ம்

நான் ஏன் பேசினேனு பிரண்ட்ஸக்கு தெரியும் முதல் நாளே வந்து ரம்பம் போட்டா தூக்கம் வராமா என்ன செய்யும் அதான் ...அதுவேற அவருக்கும் எனக்கும் சண்டை போனவருசத்துலயிருந்து..

அவள் சொன்னதும் கதிருக்குமே சிரிப்பு வந்தது..

சேஷாத்திரி அட்வைஸ் பண்ணினதை நினைச்சு நினைச்சு சிரித்தான்...

இரவு சமையல் செய்திட்டிருக்கும் போது போன் வரவும் வந்து எடுத்தப் பார்க்க அவங்கம்மா ஜோதிதான்... கணவன் எங்கே எனப் பார்த்து மறைவாக தனதறைக்குள் சென்று போனை எடுத்து பேசியவள் "நித்யா எப்படி இருக்கா, குட்டி பாப்பா எப்படி இருக்காங்க என கேட்டாள்"

ஜோதி சொன்னார் "அவ்வளவு சீரியஸ் ஒன்னுமில்லை, அவளுக்கு கொழுப்பு.சும்மாதான் எதோ கையிலக்கிடைச்ச மாத்திரையை எடுத்துப்போட்ருக்கா, என்னத்தை சொல்ல...

வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன் வேற என்ன செய்முடியும், உங்கப்பாவ எப்படி சமாளிக்கப்போறேனுத் தெரியலை, பயமா இருக்கு இப்படி ஒருத்தியப் பெத்துக்கிட்டு நான் படுறபாடு” ...என்று அழுதார்.

அம்மா நான் வேணா அப்பாக்கிட்ட பேசட்டுமா?

“வேண்டாம் நான் பார்த்துக்குறேன்..

அப்புறம் அவளை பார்க்கவர்றேனு மாப்பிள்ளைகுகிட்ட அடம்பிடிக்காத. உன் வாழ்க்கையைப் பாரு.

அவர் இவ்வளவு கீழே இறங்கிவர்றதே பெருசு... போதும்... அவருக்கு மரியாதைக்குடு.

உன் வால் தனத்தை அவருக்கிட்ட காண்பிக்காத, எனக்கு பயமாயிருக்கு இரண்டு பொண்ணுங்க வாழ்கையையும் நினைச்சு சரியா” என்று பேசி வைத்துவிட்டார்.

மாம்ஸ்க்கு தெரிஞ்சது அவ்வளவுதான்...நித்யாவை சரியா கணித்து வச்சிருக்காரு. என்று நினைக்கும் போது மனதின் ஓரத்தில் ஒரு வலி வரத்தான் செய்தது. 

என்னோட கதிர் மாமா என்கிட்ட திரும்பி வந்துதல சந்தோசம் அவ்வளவுதான். வேற எதையும் சிந்திக்காத எனத் தனக்குத்தானே தேற்றிக்கொண்டு கணவனைத்தேடி வெளியே வந்திருந்தாள்.

கதிர் அங்கே நடுத்தர வயதுடைய ஒரு அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான். 

இவளும் அருகில் சென்று பேச்சைக் கவனிக்க, அது வீட்டு வேலைக்கு என்று வந்திருந்தார்.

அவர்களிடம் பேசியனுப்பிவிட்டுத் திரும்பியவன் நிலாவைப் பார்க்க, யாரென்று கேட்க வேலைக்கு ஆள் பக்கத்து வீட்ல அம்மா போன் பண்ணி சொல்லிருக்காங்க, அதான் சித்ராம்மாவுக்காக உங்க வீட்டுக்கு வேலைக்கு வர்றேனு சொல்லிட்டுப்போறாங்க...

அத்தை அங்கயிருந்தே எல்லாம் சொல்லி வச்சிருக்காங்களா...சூப்பர்...எப்போயிருந்து வேலைக்கு வருவாங்க...

நாளைக்கே வர்றாங்க. காலையிலையே வந்திருவாங்க, நம்ம காலேஜ் போறதுக்கு முன்னாடியே முடிச்சிட்டுப் போயிடுவாங்க. அதுதான் நல்லது.

அப்படியே இருவரும் பேசியபடியே உள்ளே வந்ததும். அவனுக்கு பிடித்த டீயுடன் வந்தவள் அவனருகில் அமர்ந்துக்கொள்ள,

கதிர்தான் அவளைப் பார்த்திருந்தான்.

அவளை தன் மடியில் தூக்கி இருத்தியவன்

உன்னை வெளிய அனுப்பினது கஷ்டமாயிருந்துச்சா?

அவனது கண்களைப் பார்த்தவள் இல்லை எனத் தலையசைத்து, மதியம் ஏன் போன் எடுக்கலை?

நான் சாப்பிடலை அதுதான் சேஷாத்திரி சார் கிளாஸ்ல தலைவலி படுத்தேன் எழுப்பிவிட்டுட்டாரு.

" ஏன் சாப்பிடலை, நான் போன் எடுக்கலைனு கோவத்துலயா?

"அப்படியில்லை ஆனா அப்படித்தான்" என்று நிலா சொன்னதும், மனைவியை இறுக்கி கட்டிக்கொண்டான்...

இரவு உணவை தயார் செய்து உண்டு படுக்கைக்கு வரவும் கதிர் யோசனையிலிருந்தான்.

என்ன மாம்ஸ் முகம் ஒரு மாதிரியா இருக்கு, எதுவும் பிரச்சனையா?

இல்லை அப்பா நியாபகமா இருக்கு, மனசுக்கு ஒரு மாதிரியா இருக்குடி...சொல்லத்தெரியலை.

நிலா "ஊருக்கு போகலாமா நாளைக்கு?"

இப்போதைக்கு எங்கயும் நகரமுடியாது.

பி.எச்.டி பிள்ளைங்களோடது முடிக்கணும்.

நான் இல்லைனா அவங்களப் பந்தாடிருவாங்க இந்த மாசம் எங்கயும் நகரமுடியாது என்றான் கதிர்.

காலையில ஊருக்கு போன் பண்ணனும் என்று யோசனையில் இருந்தவனின், தலையை லேசாக வருடிவிட்டாள் நிலா.

அவளது மடியில் படுத்திருந்தான் முடியைக்கோதிவிட்டவாரே அவனது மீசையை பிடிக்க தட்டிவிட்டான்.

மீசையைப் பிடிக்காதடி என்று சொன்னவனது வாயை அப்படியே குனிந்து கடித்தாள்.

அதுமட்டுந்தானா அவளது செயலாக இருந்தது.

அப்படியே அவளது தலையை தன் கையால் ஆசையவிடாமல் பிடித்து அவளது இதழ்களை தனதுவாயிற்குள் வைத்திருந்தான்...

அவளை விடுவித்தவன் மடியில் திரும்பி படுத்து வயிற்றில் பற்களைக்கொண்டு கடித்திழுத்திருந்தான்...

மாம்ஸ் வலிக்குது விடுங்க என்றவாறே பின்பக்கமா சாய்ந்திருந்தாள். இப்போது நிலாவின் மேல் கதிர்.

இரவின் நிசப்தத்தில் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டது...

அத்தியாயம்-12

கதிர் நிலாவின் வாழ்க்கைத் தெள்ளத்தெளிவாகப் போய்க்கொண்டிருந்தது. நிலாவின் சேட்டைக் கல்லூரியிலும் வீட்டிலும் அதை சமாளிக்க கதிர் படும்பாடும், அவனது வாழ்க்கை நிலாவினால் அழகாக மாறிவிட்டதாக உணர்ந்தான்.

இவளோடான இந்த அழகான வாழ்க்கைக்காகதான் இவ்வளவு கஷ்டங்களும், விரக்தியும் வந்ததோ...என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான்.

எங்கும் எப்போதும் நிலாவே அவனது எண்ணங்களில் நிறைந்திருந்தாள்...

அன்று காலையில் எழுந்ததுமே கதிருக்கு மனது நிலையில்லாது தவித்தது...

ஊருக்கு அழைத்து அம்மாவிடம் பேசினான் அப்பா எப்படிம்மா இருக்காங்க என்று நலம் விசாரித்துவிட்டு கிளம்பி கல்லூரிக்கு போக தயிராகி வந்தான்...

நிலாவை அழைத்தான் தயாராகிட்டியா என்னப் பண்ற இவ்வளவு நேரமா என்று பேசவும்..நிலா நைட் ட்ரஸ்ஸோட வந்தவள்...

ஆச்சர்யமா பார்த்தாள் என்ன மாம்ஸ் எட்டு மணிக்கு ரெடியாகிட்டீங்க...சாப்பிடலையா?

ஓ..எட்டு மணிதான் ஆகுதா என்று யோசித்து நின்றான்

நிலா கொஞ்சம் பயந்து என்னச்சு உங்களுக்கு? என பதறிக்கேட்க...மணியை தப்பா பார்த்திட்டேன் போல என்றவனைக் கையைப்பிடித்து உள்ளே அழைத்து சென்று டீயைக் கையில் குடுத்து...

இங்கயே இருங்க சாப்பிட்டு போகலாம் என்றவள்,தயாராகி வந்து அவனுக்கு சாப்பாடு எடுத்து ஊட்டிவிடவும் அவன் நிலாவைத்தான் பார்த்தான், ஒரு சேயாகவும் இருக்கின்றாள் என் தாயாகவும் இருக்கின்றாள் என்று நினைத்தவன் சாப்பிட்டு முடித்து கிளம்பினார்கள்.

காரில் ஏறி அமர்ந்ததும் என்னமோ தேடினான், நிலா கேட்டாள் என்னத் தேடுறீங்க.?

கார் சாவி எங்க வைச்சேனுத் தெரியலைமா...

மாம்ஸ் கார் கதவை எப்படித்திறந்து உள்ளவந்தீங்க சாவி இல்லாம கையிலப் பாருங்க என்றதும் கையிலயே வச்சிக்கிட்டு தேடியிருக்கான்...

அவனது கையையப் பிடித்தவள் மெதுவாக முத்தம் வைத்து ஏன் இந்தப் பதட்டம்? நிதானமாகுங்க என்றாள்..

தெரியலைடா காலையிலயிருந்தே மனசு படபடன்னு இருக்கு புரியலை .

மாம்ஸ் ஹாஸ்பிட்டல் போவமா எனக்கு பயமாயிருக்கு என்று அவனது நெஞ்சை நீவிவிட..அவளது கையைப் பிடித்தவன் எனக்கு ஒன்னுமில்லடா...நான் நல்லாயிருக்கேன்...சிந்தனைதான் என்னோட கட்டுப்பாட்டுல இல்லை....என்றதும் 

அப்படியே அவனது முகத்தினைத் திருப்பி அவனது உதட்டினில் மெதுவாக முத்தம் வைத்தாள்.

திரும்ப திரும்ப முத்தம் வைத்தவள், அவனது சிந்தனையைத் தன் பக்கமா திருப்பினாள். இப்போது நிலாவின் தேகம் அவனது வசம், அவனது கைகள் செய்த மாயத்தில் மயங்கித்தான் போனாள், பத்து நிமிடம் கழித்துதான் அவளை விட்டான்.

தனது உடையினைத் திருத்தியவள் அவனது கைகளில் குத்தி ... ரொம்ப மோசம் மாம்ஸ் நீங்க என்று வெட்கப்படவே அதே சந்தோசத்தில் கல்லூரிக்கு கிளம்பினர்.  

அன்று கல்லூரியில் இரண்டு வகுப்புகள் கடந்தநிலையில் வகுப்பிற்கு இன்னும் லெக்ட்சரர்ஸ் வரவில்லை.

இனியா மெதுவாக “இன்னைக்கு மதியத்திற்கு மேல ப்ரக்டிக்கல்ஸ் இருக்கு நாலுமணி நேரமா லேப்ல நிற்கனும், இன்னைக்கு பீரியட்ஸ் வேற எப்படி சமாளிக்கப்போறனோ” என்று பேசிக்கொண்டிருக்கும் போதுதான் நிலாவிற்கு நியாபகம் வந்தது பீரீயட்ஸ்ஸா அதைபத்தி நம்ம யோசிக்கவேயில்லையே...

எப்போது என்று தியதியை நியாகப்படுத்த அது அவர்களது திருமணத்திற்கு பத்து நாட்களிற்கு முன்பு, அந்த தியதியும் கடந்து பத்து நாட்களிற்கு மேலாகிட்டு... என்ற சிந்தனையில் இருந்தவளை இனியாதான் கலைத்தாள்.

நாட்களை எண்ணியவளுக்கு மனதில் படபடப்பு, ஒருவேளை அப்படியாக இருக்குமோவென்று,இப்போதே கதிரைப் பார்க்கணும் போலத்தோன்றியது...

அவனைத்தேடி ஸ்டாஃப் ரூமிற்கு செல்ல அங்கே டிபார்ட்மெண்டில் வேறொரு பிரச்சனைப் போய்க்கொண்டிருக்கவும், கதிரிடம் நெருங்க முடியவில்லை.

கதிரின் கீழ் ஆரய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மற்ற விரிவுரையாளர்களிடமிருந்து எப்போதும் போல வரும் பிரச்னைகள்தான்.

கதிர் இங்குவந்து சேர்ந்து நான்குவருடமே ஆனநிலையில் அசுர வளர்ச்சி டாக்ட்டரேட் வாங்கி அவனுக்கு கீழ் மாணவர்கள் ஆராய்ச்சி செய்யத் தகுதியுள்ளவனாக இருக்கின்றான். சம்பளமும் அதிகம், சுற்றியிருக்கும் கல்லூரிகளிலும் அவனுக்கு அழைப்பு வரும்...

இவனுக்கு எதிராக இருப்பவர்கள் பத்துவருடத்திற்கும் மேலாக இங்க தங்களது இருக்கைகளை தேய்த்துக்கொண்டிருந்தனர்...

அவர்களுக்கில்லாத மதிப்பும் மரியாதையும் கதிருக்கு கிடைக்கும்போது அது அவர்களின் பொறாமையைத் தூண்டி சிறு சிறு அரசியல் செய்வார்கள்...

அவர்களின் துறை மட்டுமல்ல மற்றதுறை மாணவர்களிடமும் நல்ல மதிப்பு...இலக்கிற்கான முன்னோடியாக கதிர் திகழ்கிறான்.

சிறிது நேரம் அங்கயே காத்திருந்தவள் கதிரைப் பார்க்கமுடியாமல் திரும்பிவர அதற்குள்ளாக பேராசிரியர் வாஸந்தி வந்திருந்தார் வகுப்பிற்கு.

ஏற்கனவே கதிரினை அவருக்குப் பிடிக்காது தலைக்கணம் பிடித்தவன், திமிர் பிடிததவன் என்ற நிலையில்தான் கதிரினை பார்ப்பார்...

நிலா வரவும் அந்த ஆதங்கத்தை அவளிடம் காண்பித்தார்...

“இவ்வளவு நேரம் எங்க போயிருந்த, யாருக்கிட்ட அனுமதிவாங்கிட்டுப் போன, உங்க சார் இங்க வேலைப் பார்த்தால் வகுப்பிற்கு சரியா வரமாட்டீங்களோ, கதிர் சார் போடுற ரூல்ஸ் மற்றவங்களுக்குத்தானா, அவங்க மனைவிக்கு இல்லையோ” என்று கதிரைத் தாழ்த்திப் பேசவும் அவரின் அனுமதியின்றியே கோபத்தில் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டாள்.

இது வாஸந்திக்கு அவமானமாக இருக்க. கதிரை குறைத்துப் பேச இதுவொருக் காரணமாகப் போயிற்று. 

வகுப்பு முடிஞ்சதும் நேராக கதிரிடம் சென்று நிலா நடந்துக்கிட்ட முறையைக் குறையாகச் சொல்லி கொஞ்சம் கதிரிடம் தன் மதிப்பை காண்பித்துவிட்டுச் சென்றார்...

அன்றைய பிரச்சனைவேறு, வாஸந்தியின் பேச்சுவேறு அவனைக் கோபங்கொள்ளச் செய்ய...

கதிர் அட்டெண்டரிடம் நிலாவை அழைத்துவரச் சொன்னான்.அவள் வந்துதும் “என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல படிக்கவர்றியா? இல்லை மற்றவங்களை தொந்தரவு செய்ய வர்றியா.? உனக்கு படிக்க விருப்பமிருந்தா வா...இல்லைனா வராத வந்து என் கழுத்தை அறுக்காத” என்று இருந்த மொத்தக் கோபத்தையும் அவளிடம் காண்பித்தான்.

எப்போதும் எல்லாவற்றையும் சாதாரனமாக எடுத்துக்கொள்வாள். இன்று அப்படியல்ல அவள் சொல்லவந்த விசயத்தையும் சொல்லமுடியவில்லை, அதைவிடக் கதிர் அதிகமாக திட்டியதினால் வந்த அழுகைவேறு இனியா எவ்வளவு சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. அழுததின் விளைவு கண்களும் முகமும் சிவந்திருந்தது.

தலைவலி வீட்டுக்குப் போகணும் என்று துறை தலைவரிடம் கேட்டு நிற்க... அவரோ கதிரை அழைத்து நீங்கதான இவங்க கிளாஸ் இன்சார்ஜ் என்னனு பார்த்து அனுப்புங்க என்றார்...

கதிர் நிலாவைப் பார்க்க அவளது தோற்றமே வித்தியாசமாக இருந்தது.

லீவ் வேண்டாம் சார் நான் பார்த்துக்குறேன். அவளைத் தனியாக அழைத்து “என்னப் பிரச்சனை வாஸந்தி மேடம் கிளாஸ்க்கு ஏன் தாமதாமா போன?”

உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்ல வந்தேன். நீங்கதான் வெளிய வரவேயில்லை .

வெளியக் கொஞ்சநேரம் நின்னு பார்த்திட்டு போனேன் அதுதான் காரணம் என்றாள்.

ஓஓ. சரி என்ன ரொம்ப முக்கியமான விசயம்? இப்போ சொல்லு.

அவளது முகம் வெட்கத்தில் புதுவிதாமான அழகை காட்டியது. தலைசாய்த்து அவனைப் பார்த்தவள் “இப்போ சொல்லமாட்டனே. நீங்க ரொம்பத் திட்டினீங்க அதனால நாங்க உங்ககூட சண்டை, வீட்டிற்குப் போனதும் சொல்றேன், சரியா” என்று சென்றுவிட்டாள்.

நாங்க சண்டையா என்ன உளறிட்டுப் போறா... என்றுதான் யோசித்தானேத் தவிர, அதன் அர்த்தத்தை உள்வாங்கவில்லை. அவனுக்கு அர்த்தம் புரிந்திருந்தாள் பின் வரும் அனர்த்தங்களைத் தவிர்த்திருக்கலாம்...விதி வலியது...

மாலை நான்கு மணியிருக்கும் மணியரசு கதிருக்கு போனில் அழைத்துப் பார்த்துவிட்டு, அவன் எடுக்கவில்லை என்றதும் நிலாவிற்கு அழைத்தார்.

கல்லூரி விடும் நேரம் என்பதால் நிலா போனை எடுத்துப் பேசினாள் "நிலாம்மா கதிர் போன் எடுக்கலை, என்னனு பார்த்துட்டு நீ அவன்கிட்ட போனக்குடும்மா ...

கொஞ்சம் அவசரம்” என்றதும் ..

மாமா எதுவும் பிரச்சனையா என்று வராண்டாவில் நடந்துக்கொண்டே பேச ...

அதற்குள் கதிரிருந்த வகுப்பிற்கு முன் நின்று அவனை அழைக்கவும் ... 

இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு என்று எரிச்சலில்தான் வந்தான்

என்ன என்று கோபத்தில் கேட்க போனை நீட்டினாள். வாங்கிப் பேசியவன் மணியரசு விசயத்தை சொன்னதும் அவனுக்கு அதிர்ச்சி ”எப்ப சேர்த்தீங்க? மறுபடியும் என்னாச்சு? என தன் நெற்றியில் அடித்தவன். சரி நான் உடனே கிளம்பி வர்றேன். அம்மாவப் பார்த்துக்கோங்க என்று பேசி வைத்துவிட்டு...

நிலாவிடம் கிளம்பு நான் லீவ் கேட்டுட்டு வர்றேன்..நீ கார் பக்கத்துல போய் நில்லு” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் சென்றான்.

கதிர் வந்ததும் காரில் ஏறப்போக அதற்குள் தென்னவனும், சித்தார்த்தும் வந்திருந்தனர்.

மணியரசு ஜோதிக்கு தகவல் சொல்லியிருந்தார்.

தென்னவன் இறங்கியவர் கதிரிடம் வந்து நம்ம கார்ல போங்க மாப்பிள்ளை, இந்த நேரத்துல நீங்க வண்டி ஓட்டவேண்டாம்.

கதிர் நிலாவைத்தான் பார்த்தான், நம்மக் கார்லயே போகலாம் என்றான்...

தென்னவன் சரிங்க மாப்பிள்ளை உங்க காரல்யே போங்க ஆனா காரை சித்த்தார்த் ஓட்டட்டும், சாவியைக் குடுங்க என்று சொல்லவும், நிலா கணவனின் கையிலிருந்த சாவியை வாங்கி அண்ணனின் கையில் கொடுத்தாள்.

நிலாவும் கதிரும் பின்னாடி அமர்ந்திருந்தனர். சித்தார்த் காரை ஓட்டினான்.

கண்மூடி தலைசாய்த்து அமைதியாக இருந்தான், தந்தை மருத்துவமனையில் எப்படி இருக்காரோ என்ற கவலை மனதைவாட்ட எதுவும் பேசவுவில்லை.

நிலாவிற்கு இப்போது சோர்வுத்தெரிய ஆரம்பித்தது, அவனின் தோளில் சாய்ந்தாள், அதைப்பார்த்தக் கதிர் அப்படியே அவளைத் தனது மடியில் படுக்க வைத்தான். 

இதைப்பார்த்த சித்தார்த் கதிருக்கு நிலாதான் பொருத்தமா இருக்கா என்று முதன் முறையாக நினைத்தான்.

யாரும் எதுவும் சாப்பிடவில்லை, அதைவிட பசிக்கவுமில்லை. நள்ளிரவில் மதுரைக்கு வந்து சேர்ந்தனர். நிலா நல்லத்தூக்கத்திலிருந்தாள், அவளை எழுப்பிவிட்டவன், தானுமிறங்கி எவ்வளவு வேகமாக உள்ளேப்போகமுடியுமோ அவ்வளவு வேகத்தில் ஐ.சி.யூ முன்னபோய் நின்றான்.

சித்ரா, இலக்கியா,மணியரசு நின்றிருந்தனர்.

கதிரைப் பார்த்ததும் சித்ரா அடக்கி வைத்திருந்த மொத்த கவலயையும் அழுதே தீர்த்தார் .

இலக்கியா பெங்களுருவிலிருந்து விமானத்தில் வந்திருந்தாள்.

மணியரசு “டாக்டர் உன்னைத்தான் பார்க்கணும்னு சொன்னாங்க, வா என்றழைத்து செல்லவும் அதற்குள்ளாக தென்னவனும் ஜோதியும் வந்திருந்தனர்.

கதிரிடம் டாக்டர் கூறிவிட்டார். கஷ்டந்தான் எங்களால முடிஞ்சளவுக்கு முயற்சி செய்திட்டோம் இன்னைக்கு இரவுத் தாக்குபிடிச்சுதுன்னா, சரியாகிடுவாங்க பார்க்கலாம். அமைதியாக அனைவரும் அங்கேயிருக்க.

செவிலி வந்து பேஷன்ட் முழிச்சிருக்காங்க, யாரையோ கைகாட்டி கூப்பிடுறாங்க கொஞ்சம் உள்ளவாங்க எனவும் கதிரும் சித்ராவும் உள்ளே செல்ல கதிரின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டார்...

கதிருக்கு கண்ணீர் தானக வந்தது தன் அப்பா இப்போ வரைக்கும் அவருக்கு கதிர்னா உயிர். அவனுக்குமே அப்படித்தான்.

இருவரும் சிறிது நேரம் அவரருகில் நின்றுவிட்டு வெளியே வரவும், கதிரின் பார்வை நடத்தை முற்றிலுமாக மாறியது.

கணவனையே பார்த்திருந்தவளுக்கு அவனது நடத்தையிலும் பார்வையிலும் ஒரு அந்நியத்ததன்மை வந்திருந்தது.

நிலாவிற்கு பயப்பந்து வயிற்றில் உருளாரம்பித்தது...

இலக்கியா சென்று பார்த்து வந்தாள்...

நிலா உள்ளே சென்று அவரைப் பார்க்கவில்லை, அவ்வளவு மனோதிடம் அவளிடமில்லை இப்போது...

செவிலி திரும்பவும் வந்து யாரையோ தேடுறாங்க கையை கைய காண்பிக்கிறாங்க என்றதும் நிலா உள்ளே சென்றாள் ...

அவளைப் பார்த்ததும் அவரது கண்களில் ஜீவன் லேசாக சிரிக்க முயல முடியவில்லை, அவளது கரத்தில் கையைவைத்து பிடித்தவர்...

நிலா அழவும் தலையை அசைத்து அழாத என்றதும்...

நிலா அவரின் காதில் மெதுவாக பேசினாள் அவருக்கு சந்தோசம்...

தன் கையைத் தூக்கி அவளது தலையில் வைத்து ஆசிர்வதித்தார்... அப்போது கதிரும் உள்ளே வரவும், கதிரின் கைகைளைப் பிடிக்கவும் பிடித்தபிடி அப்படியே இருந்தது...

அவ்வளவுதான் தெரியும் நிலாவிற்கு மறுபடியும் வேதநாயகத்தை திரும்பி பார்க்க அவரது கண்களில் இப்போது உயிரில்லை...

மாமா... என்று நிலா போட்ட சத்தத்தில்தான் கதிர் தகப்பனைப் பார்த்து நிற்க,சித்ரா உட்பட எல்லோரும் உள்ளே வந்தனர்...

கதிர் அப்படியே உடைந்து இறுகிவிட்டான்...தனது சிறுவயது நாயகன் தன் தகப்பன், அன்பை மட்டுமே பிள்ளைகளுக்கு அதிகமாக கொடுத்தவர், வீட்டின் ஆலமரம் சரிந்தது இன்று!

அத்தியாயம்-13

கதிருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அப்படியே ஐ.சி.யூ. வின் முன்பாக போடபட்டிருந்த இருக்கையில் கண்களைமூடி தலைசாய்த்து அமர்ந்திருந்தான்.

ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் எல்லாவற்றையும் ஓடி ஓடி செய்த வேதநாயகத்தின் மகனுக்கு ஒன்றும் செய்ய ஓடாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

மணியரசும் தென்னவனும் எல்லா பொறுப்புகளையும் கையிலெடுத்திருந்தனர்...

வேதநாயகத்தின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு, மருத்துவமனைக்கு பணம் கொடுத்து முடித்து வந்தனர்.

ஆம்பலன்ஸின் உள்ளே சித்ராவும் கதிரும் இருந்தனர்...

சித்தார்த்திற்கு கதிரைப்பார்த்து ஆச்சர்யம், தன் தந்தையின் இழப்பில் தன் உணர்வையே இழந்திருந்தான், எவ்வளவு பாசம் தந்தையின் மீது. இவர்கள் குடும்பத்தையே ஒரு காலத்தில் வெறுத்திருந்தான் இப்போது தானாக மரியாதை வந்திருந்தது.

நிலாவோ அழுது அழுது சோர்ந்து, இருக்க முடியாமல் ஜோதியின் மடியில் அயர்ந்துப் படுத்துவிட்டாள்.

வீடு வந்து சேர்ந்ததும் அவனது அத்தை பிள்ளைகளும் சேர்ந்துக்கொண்டனர். என்னதான் பகையாகயிருந்தாலும் சொந்த தாய்மாமனல்லவா... எல்லாக் காரியத்திலும் கதிரின் அருகிலயே இருந்து அவனைத்தேற்றினர்...

இலக்கியா மட்டுமே அவசரத்தில் வந்திருந்தாள். அவளது கணவன் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பி அவர்களும் வந்து சேர்ந்தனர்...

அதன்பிறகு அவர்களின் வழக்கப்படி வேதநாயகத்தின் இறுதி சடங்கை, மகனாக எல்லவற்றிலும் ஒரு குறைவுமின்றி செய்தான், எல்லாம்   

முடித்து வீடு திரும்பினர்.

சித்ராவும் இலக்கியாவும் தளர்ந்து வேதநாயகத்தின் அறையிலயே முடங்கிவிட்டனர்.

மணியரசுவின் மனைவியும் பிள்ளைகளும் எல்லாவற்றையும் தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

கதிர் சென்று தனதறையில் வெறுந்தரையில் கவிழ்ந்துப் படுத்துக்கொண்டான்.

தன் தகப்பன் இப்போது சாகவேண்டியவரே இல்லையே! எப்படியெல்லாம் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் என்று வாழவேண்டியவர்.

அந்தக் குடும்பம் என்றைக்கு எங்கள் வீட்டிற்குள் நுழைந்ததோ, அன்றைகே எங்களது நிம்மதியெல்லாம் காணமல் போயிற்றே. இப்போ எங்கப்பாவும் போய்ச்சேர்ந்திட்டாரே! என்று நினைத்து நினைத்து மனதிற்குள் புழுங்கினான். அவனது கண்களில் லேசாக ஈரம்.

முற்றிலுமாக உடைந்துப் போனான். அம்மா இனி எப்படியிருப்பாங்க,அன்றில்கள் போல வாழ்ந்தாங்களே! என்று பலசிந்தனையில் உளன்றான்...

சித்ராவோ தன் இணையைப் பறிகொடுத்து துடித்துக்கொண்டிருந்தார்...எந்தவொரு சூழ்நிலையிலும் குடும்பத்தை தாங்கி நின்றவர், அவரது நிழலிலயே இவ்வளவு காலம் இருந்துவிட்டு அவர் இல்லையென்ற நிலையே அவரை வெகுவாக தளர்த்தியிருந்தது.

இலக்கியாவோ தனது அன்பானத் தகப்பனை நினைத்து தவித்தாள். வேதநாயகத்தின் செல்லப் பெண்ணல்லவா..

ஜோதிதான் நிலாவைத் எழுப்பித் தேற்றி நீதான் இப்போ எல்லாரையும் தாங்கி நிற்கனும், மருமகளா கடமையைச் செய் எழும்பு மருமகன் பக்கத்திலப் போயி இரு சமாதானப் படுத்து.

இரண்டு நாளா பட்டினியா இருக்காங்க நாங்க உன் அத்தைய கவனிச்சிக்குறோம், நீ போய் மருமகனைக் கவனி என்று அனுப்பினார்.

நிலா மெதுவாக அவர்களின் அறைக்குள் சென்று அவனதருகில் அமர்ந்தவள், அவனது முதுகை தடவிக்கொடுத்தாள், அவன் எதுவுமே பேசவேயில்லை அமைதியாவே படுத்திருந்தான்.

சிறிது நேரங்கழித்து ஜோதி சாப்பாடைத் தட்டில் வைத்துக்கொண்டு வந்து நிலாவின் கையில் கொடுத்தவிட்டுச் சென்றார்.

நிலாவோ கதிரைத் தட்டி எழுப்பி எழும்புங்க இரண்டு நாளாகப் பட்டினியா இருக்கீங்க, எழுந்து கொஞ்சமாவது சாப்பிடுங்க என்று அவள் சொல்லிமுடிக்கவில்லை....

சாப்பாடுத்தட்டு தரையில் உருளும் சத்தம் கேட்டது, சாப்பாடெல்லாம் அறைமுழுவதும் சிதறியிருந்தது.அப்படியே தட்டோடு தட்டிவிட்டிருந்தான்...

அவள் இது எதிர்பார்க்கவில்லை, சாப்பாடு வேண்டாம்னு சொன்னா சமாதனப்படுத்தி சாப்பிட வச்சிடலாம் என்றுதான் நினைத்து வந்தாள்.

சாப்பாட்டைத் தட்டிவிட்டதுமல்லாமல் கோபத்தில் எழும்பி நின்றிருந்தான்.

நிலாவிற்கோ எதுக்கு என்கிட்டக் கோபமென்று கதிரைத்தான் பார்த்திருந்தாள்.

அவனிடம் நெருங்கிப்போக அவனோ, அவளைத் தடுத்து, “இங்கயிருந்து வெளியப்போ” என்றான்.

நிலா ஒன்றும் புரியாமல் நிற்க”வெளியப்போடி” என்று கர்ஜித்தான்.

அவளோ திகைத்து நின்றாள் அவன் சொன்னது அவளுக்கு இன்னும் மூளைக்குள் செல்லவில்லை. ஏன் என்றுதான் நின்றிருந்தாள் அதற்குள்ளாக சத்தங்கேட்டு எல்லோரும் வந்தனர்.

நிலா சிலையாக நின்றிருக்க அவளது கையைப்பிடித்து அறைக்கு வெளியேக் கொண்டுவிட்டவன் “ தென்னவன் குடும்பத்தில் உள்ள யாரும் இங்கயிருக்ககூடாது.

அழாகான குருவிக்கூடு மாதிரியிருந்த எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச நச்சு பாம்புங்கதான் நீங்கயெல்லோரும். 

என்னைக்கு நீங்க எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சீங்களோ அன்னைக்குத் தொடங்கினது பிரச்சனை, கடைசியா எங்கப்பாவையே சாய்ச்சிட்டு.

வீட்டைவிட்டு வெளியேப் போங்க உங்க குடும்பத்திலிருந்து யாரும் இங்கயிருக்கக்கூடாது. இப்பவே வெளியப்போங்க" என்று பெருங்குரலில் கத்தினான் மனதின் சோகம், கோபமாக உருமாறி இப்போது தனதுயிரின் பாதியை கொன்று தின்றுக் கொண்டிருந்தது...

தென்னவனுக்கு அவமானமாக இருந்தது எதாவது கோபத்தில் பேசுவான் ஆனால் இப்போது... அதுவும் மொத்த சொந்தக்காரங்களும் கூடிநிற்கும்போது இப்படிக் கேவலப்படுத்துறான் என்றிருந்தது அவருக்கு.

கதிர் நிலாவின் கையைப்பிடித்து வெளியேவிட்டு போகச்சொல்லவுமே அவளது மனதில் பெரிதாக அடிவாங்கினாள்...

மணியரசு பேசவர அவரையும் கையால் சைகை செய்து தடுத்தவன்...பெரியப்பா உங்க மேல நிறைய மரியாதை வைச்சுருக்கேன், வேண்டாம் எதுவும் பேசாதிங்க அப்புறம் நான் எதாவது திருப்பி பேசிடுவேன், அவங்க பொண்ணையும் கூட்டிக்கிட்டுப் போகச்சொல்லுங்க...

அவங்க யாரோட நிழல்கூட இங்கபடக் கூடாது. வெளியனுப்பிட்டு வீட்டைக் கழுவி விடுங்க என்றான்.

இதையெல்லாம் இலக்கியாவின் குடும்பத்தாரும் கேட்டுக்கொண்டிருந்தானர்.

இங்கயிருந்தா இன்னும் பிரச்சனையாகும் என்று தென்னவனும் சித்தார்த்தும் வெளியே வந்துவிட்டனர்.

ஜோதி மணியரசுவிடம் என்ன அண்ணா இது “நாங்க வேணும்னா கிளம்புறோம், நிலா என்னணா செய்தாள், அவ வாழ்க்கையே இங்கேதான இருக்கு, நாங்க செய்த தப்புக்கு அவ என்ன பண்ணுவா என்றதும்...”

கதிர் “பாம்புல சின்னது பெருசு வித்தியாசம் இருக்கா என்ன, எல்லாமே விசந்தான் என்று நிலாவை பார்த்தான் ...

நிலாவின் கண்கள் எதையுமே அவனுக்கு உணர்த்தவில்லை...அவன் கையைப்பிடித்து வெளியே விடும்போதே அவளுக்கு உணர்ச்சி செத்துப்போச்சுது. கண்ணீர்கூட வரவில்லை...

அப்படியே மெதுவாக நடந்தவள் திரும்பி சித்ராவையும் இலக்கியாவையும் பார்க்க அவர்களது கண்களே சொன்னது அவர்களுக்கும் இதுதான் விருப்பம் என்று...

மணியரசு ஜோதியிடம் இப்போது ஊருக்குப் போங்க அவங்களே ஒரு உயிரைப் பறிகொடுத்திட்டு இருக்காங்க, நாம பிறகுப் பேசிக்கலாம் என்று அனுப்பி வைத்தார்.

காரில் தன் அன்னையின் மடியில் படுத்திருந்தாள் நிலா, கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீரில்லை வெறுமை மட்டுமே!

உயிர்த்துடிக்க துடிக்க வார்த்தைகளால் வதைத்துவிட்டான், குற்றுயிராக படுத்திருந்தாள்...

எல்லோருக்கும் இப்போது நினைவுகள் பின்னோக்கி சென்றது.

கதிர் தனது தந்தையின் அறைக்குள் சென்றவன், அவரை நினைத்து வருத்தப்பட்டான், எப்படி இருந்தவர், நொடிந்து நோயின் பிடியில் விழுந்து இல்லாமலேயே போய்விட்டாரே!

வேதநாயகத்திற்கு இப்போது இருக்கும் வீடும் இரண்டு வயல்களுமே பூர்வீகச் சொத்து . மீதியெல்லாமே அவரது உழைப்பில் வந்த சொத்துக்கள்.

அந்தக் காலத்துலயே சிறிது எழுதப்படிக்கத் தெரிந்து, கொஞ்சம் விவேகமுடையவர். 

சித்ரா சொந்த முறைப்பெண் விரும்பிக்கட்டிக் கொண்டார்.

மூத்த பிள்ளை ஆண் என்றதும் அவனுக்கு ஆரன்கதிர் என்று அழகான தமிழ் பெயர் வைத்தார்.

இரண்டாவது பெண் குழந்தை என்றதும் அவருக்கு அவ்வளவு சந்தோசம்...

அளவானக் குடும்பம், கஷ்டங்கள் இருந்தாலும் அதை பிள்ளைகளிடம் தெரிவிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த சொல்லுவார்.

அவர் பிள்ளைகளை அடித்ததேயில்லை, அதனால்தான் இருபிள்ளைகளும் அவர் என்ன சொல்கின்றாரோ அதையே பின்பற்றினர்.

கதிர் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தந்தையுடன் வயலுக்கு சென்று வேலை செய்வான், தந்தைக்கு உதவும் தனையன்...

மணியரசுவின் தோப்பு வயல்களை குத்தகைக்கு எடுத்து பராமரித்தனர். அதிலிருந்து சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் நல்ல நண்பர்களாயினர்...

மணியரசுவிற்கு இரண்டும் பெண்பிள்ளைகளானதால் கதிரை அவருக்கு ரொம்ப பிடிக்கும், அவர்களது இரண்டு மகள்களின் திருமணத்திற்கும் கூடப் பிறப்பின் ஸ்தானத்தில் கதிர் நின்றான்...

வேதநாயகம் மகனுக்கு நீச்சல், சிலம்பம் எல்லாமே கற்றுக்கொடுத்தார். 

அவரின் சைக்கிள்தான் கதிரின் முதல் வாகனம். அவரது டிவிஎஸ்தான் அவனது முதல் இருசக்கரவாகனம் எல்லாவற்றிலும் தந்தையைப் பின்பற்றினான். ஒழுக்கத்திலும் கூட ..

அதனால்தான் மணியரசு தைரியமாக தனது தங்கையிடம் பேசினார். ஜோதிக்கு பயம் தென்னவன் என்ன சொல்லுவாரோவென்று, இருந்தாலும் மெதுவாக கணவரிடம் பேசினார்.

அவர் யோசித்தார் கிராமத்துல எப்படி என்று தன் மகளுக்காக யோசித்தார். பார்க்கலாம் என்று பேச்சை முடித்துவிட்டார்.

கிராமத்தில் ஆட்களைவைத்து விசாரித்தவருக்கு பையனின் குணம் குடும்பம் திருப்தியாக இருந்தது, ஆனாலும் வசதியில் குறைவு அதுவும் நல்லதுக்குத்தான். அப்போதான் மருமகன் நம்மக் கட்டுப்பாட்டில் இருப்பான் என்று கதிரினை தப்பாக கணித்திருந்தார்.

இதன் காரணமாகவே ரொம்ப வருசத்திற்கு பின் ஜோதி தன் இரு பெண்களுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார் அப்போதுதான் நிலா கதிரை முதன்முறையாக பார்த்தாள்... 

கதிர்-நிலாவின் ஆர்வப்பார்வையும், நித்யாவின் அலட்சியப் பார்வையும் சந்தித்தான் .

கதிர் குடும்பம் மணியரசு வீட்டிலிருந்து வந்ததும், வேதநாயகம் மனைவி பிள்ளைகளிடம் ஆலோசனை செய்தார்.

சித்ராம்மா... அங்க ஒரு பிள்ளையப் பார்த்தோமே அது மணியோடத் தங்கைப் பொண்ணு எதோ நம்ம இலக்கியா படிச்ச படிப்பைத்தான் படிச்சிருக்கு.

வேலைப் பார்க்குது...குடும்பமும் நல்லக்குடும்பம்...

நம்மக் கதிருக்கு பேசலாமானு கேட்கிறாங்க உங்க முடிவென்ன சொல்லுங்க.

இலக்கியா அவ என் பிரண்ட்தான்பா நல்ல டேலண்ட்..என்ன சென்னையில் பிறந்து வளர்ந்தப் பொண்ணு என பேச்சை இழுக்கவும்...

சித்ரா ஒன்றும் சொல்லவில்லை. தனது கணவன் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியாக இருக்கும் என்று உறுதியாக நம்புவதால் அவரது எந்த முடிவுகளிலும் சித்ரா தலையிடுவதில்லை...

கதிரும் சிறிது யோசனையில் இருக்கவும் “என்னையா யோசனை உனக்குப் பிடிக்கலையாப்பா” என்று கேட்டார்.

பிடிக்கலைனு இல்லப்பா, தங்கச்சி சொன்ன மாதிரி அது சென்னையில் பிறந்து வளர்ந்தப் பொண்ணு. இங்க நம்ம ஊருக்கு ஒத்துவருமா? குணமும் எப்படியோ? அதுதான் யோசித்தேன் மற்றபடி நீங்க எந்த முடிவு எடுத்தாலும் சரிதான்பா.

குணத்துல என்னய்யா, ஐஞ்சு விரலும் ஒன்னுப்போலவா இருக்கு , ஒவ்வொருத்தரும் ஒவ்வொருக் குணத்துல இருப்பாங்க. நம்ம வீட்டுப் பொண்ணுனு நினைச்சா எல்லாம் சரியா வரும்யா என்றார்.

சரிப்பா எதுனாலும் உங்க விருப்பப்படி செய்ங்க ஆனா அதுக்கு முன்னாடி இலக்கியாவிற்கு கல்யாணத்தை முடிங்க நான் கல்யாணம்

செஞ்சிக்குறேன்...என்றவன் எல்லா முடிவுகளையும் தன் தந்தையின் கையில் விட்டுவிட்டான்.

அதுக்குத்தான் பேச வர்றேன் நம்ம மணிதான் ஒரு வரன் கொண்டுவந்திருக்கான்...

சென்னையில் இருந்துதான் நம்ம பிள்ளையக் கேட்கிறாங்க. பையன் மட்டும் பெங்களூருல வேலைப் பாக்குறாங்க.

ரொம்ப எதிர்பார்க்கலை பிள்ளைய பிடிச்சிக் கேட்குறாங்கய்யா. நகை பணம்னு ஆசைப்படாம நம்ம பிள்ளைக்காக கட்டிக்கிட்டுப்போன நல்ல பார்த்துப்பாங்க...

உன்னோடக் கருத்தையும் சொல்லுப்பா என்றார். நம்மளும் பையனோடக் குணத்தை விசாரிக்கனும் என்றான்..

இரண்டு பிள்ளைங்களோடக் கல்யாணத்தையும் ஒரே நேரத்தில் வைக்கலாம்னு ஆசைப்படுறேன் என்றதும். 

சித்ரா “கதிரப்பா வேண்டாம், அது அப்படி ஒரே நேரத்தில் இரண்டுக் கல்யாணம் செய்தால், ஒரு பிள்ளை வாழும் ஒரு பிள்ளை தாழும்னு சொல்லுவாங்க. நீங்க பேசிமுடிங்க அடுத்தடுத்து கல்யாணத்தை வைப்போம் “ என்றதும்

ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் என் பொண்டாட்டி எனக்கு கருத்து சொல்லிருக்கா அத நான் கேட்டுக்குறேன் என்று மனநிறைவுடனே எல்லா ஏற்பாடும் செய்தார்கள்.

இப்படியாக பேசி முடிவாகி இலக்கியாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில். ஒரு நாள் இலக்கியா வெளியே செல்லும்போது அவர்களது அத்தை மகன் வழிமறித்து கலாட்ட செய்திருந்தான்.

வேதநாயகத்தின் தங்கையின் குடும்பம் அதே ஊரில்தான் இருந்தது. அவரது பையனுக்கு இலக்கியாவை பெண் கேட்டும் அவர் தராததால் கோபமுண்டு, முக்கியமாக கதிர் மேல், கதிர்தான் வேண்டாம் என்று தடுத்திருந்தான்.

இலக்கியா சித்ராவைப்போல் பிறந்ததாள் அழகிதான், கதிர் அப்படியே வேதநாயகத்தின் நகல் அதே கம்பீரமானத் தோற்றம்.

முறைப் பையன்கள் நாங்க இங்க இருக்கும்போது ஏன் வெளியேயிருந்து மாப்பிள்ளை பார்த்தாங்க.

எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு என்று இலக்கியாவின் கையையப்பிடித்து கலாட்டா செய்தான். கதிருக்கு இந்த விசயம் தெரிந்து வந்து அடிப்பின்னி எடுத்திட்டான். 

படிக்கலைனாக்கூட பரவியில்லை, நல்ல ஒழுக்கமா இருந்தா என் தங்கச்சிய நானே உனக்கு கட்டித்தருவேன் இல்லாத பழக்கமெல்லாம் வச்சிக்கிட்டு உனக்கு என் தங்கச்சி கேட்குதோ. என் தங்கச்சி பேரு வெளிய வரக்கூடாதுன்னு தான் விட்டுட்டுப்போறேன் இல்லனா ... கொன்னு கம்மாயிலப் போட்டிருப்பேன்...ஜாக்கிரதை என்று எச்சரித்து விட்டான்.

ஒரு அழகிய நாளில் முதன் முறையாக அவர்களின் குடும்பம் சென்னை வந்திருந்தனர். இலக்கியாவிற்கு கல்யாணப் புடவை எடுக்கவும், அப்படியே கதிருக்கு நித்யாவை பேசி முடிக்கவும் வந்திருந்தனர்.

தென்னவன் வீடு அந்த ஏரியாவிலயே பெரிய வீடு

முன்பக்கம் நல்ல இடம்விட்டு பங்களாவாகக் கட்டியிருந்தார்.

கதிர் குடும்பம் உள்ளே நுழையவும் அங்கே நிலா நான்கைந்து சிறுபிள்ளைகளுடன் மாமரத்திற்கு கீழ் நின்று மரத்தின் மேல் எதையோ பார்த்துக் கொண்டு சுத்தி சுத்தி வந்தனர்.

இவர்களைப் பார்த்ததும் கிட்டே வந்தவள் இலக்கியாக்கா எப்படி இருக்கீங்க, என்ன சென்னைப் பக்கம் வந்திருக்கீங்க என்று விசாரித்தவள் எல்லோரிடமும் பேசினாள்.

கதிரைப் பார்த்து ஒரு உதவி செய்யமுடியுமா? என்று கேட்டதும். கதிர் என்னடாயிது இப்போதான் உள்ள வர்றேன் நம்மக்கிட்ட உதவினு கேட்குறா.. என்று நினைத்தவன் “என்ன உதவி சொல்லுங்க” என்று கேட்டான்.

பட்டம் விட்டோம் மரத்துல மாட்டிக்கிச்சு அதோட வாலு கிட்டதான் தொங்குது எடுக்க முடியலை உங்க வளர்த்திக்கு எடுத்திடலாம். ப்ளீஸ் என்றதும் சிரித்தவன்.

சரியென்று மரத்தினருகே வந்து எட்டி எடுத்துக்கொடுத்தான்...

அவ்வளவுதான் குட்டீஸ் பட்டத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்..

உன்னோட பட்டமில்லையா அது? என்று கதிர் கேட்க. 

இல்ல வெளியத்தெரு பசங்களோடது நான் இல்லைனா அப்பா அந்த பசங்களை உள்ள வரவிடமாட்டாங்க. பாவம் வேற பட்டம் வாங்க காசுக்கு எங்கப்போவாங்க அதான் எடுத்துக்கொடுத்தேன்...என்றதும் அவளது சிறுபிள்ளைக் குணம் அவனுக்குப் பிடித்திருந்தது.

ஓகே. ரொம்ப நன்றி பி.எம். வாங்க உள்ளப்போகலாம் என்று கதிரை அழைத்து சென்றாள் நிலா.

அது என்ன பி.எம்.? என்று தனது தலையாய சந்தேகத்தைக் கேட்கவும்...

நிலா “ பனைமரம் அதை சுருக்கி பி.எம்னு சொன்னேன். உங்க வளர்த்திக்கு அந்த பேருதான் சரியா இருக்கும் “ என்றவள் உள்ளே ஓடிவிட்டாள்...

உதவிக்கேட்டுட்டு பட்டப்பெயர் வச்சு அழைச்சிட்டுப்போரா பாரு. நல்லக் கொழுந்தியாக் கிடைச்சிருக்கா நமக்கு என்று சிரித்தான்... 

அத்தியாயம்-14

கதிரின் குடும்பத்தை உள்ளே வரவேற்று உபரசரித்து அமரவைத்திருந்தனர்.

அதற்குள்ளாக ஜோதி நித்யாவை அழைத்து வந்து உட்காரவைத்தார்.

கதிருக்கு நித்யாவைப் பார்க்கும்போது எந்தவிதமான உணர்வும் வரவில்லை.

நித்யாவின் முகத்திலும் வெட்கம் போன்ற எந்த உணர்வும் இல்லை.

ஜோதி காபி எடுத்திட்டு வந்தவர் நித்யா கையில் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னார்.

அவள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு கதிரிடம் வந்தாள், நான் காபிக் குடிக்கறதில்லை எனக்கு வேண்டாம் என்றதும்.

நிலா ஓ அப்படியா அப்போ அந்தக் காபியை நான் குடிக்கிறேன் என்று எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

கதிருக்கு சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தான். தென்னவன் நிலாவை சத்தம்போடவும் வேதநாயகம்தான் விடுங்க நம்ம வீட்டுப்பிள்ளைதான, குடிக்கட்டும் இப்படித்தான் விகல்பமில்லாமல் இருக்கனும் என்று நிலாவிற்கு சாதகமாக பேசவும், அவளுக்கு அவ்வளவு பிடித்தது நம்ம வீட்டுப்பிள்ளைனு யாரும் அவ்வளவு சீக்கிரம் சொல்லிட மாட்டாங்க எனத் தெரியும்.  

இரு வீட்டாரும் பேசிமுடிவு செய்யும்போதுதான் நிலா கவனித்தாள் கதிர் நித்யாவிற்கு கல்யாணம் பேசுறாங்க என்று.

அவளுக்குமே கதிர் தன்வீட்டு சொந்தமாக வருவதில் சந்தோசம். அக்காவுக்கு நல்ல வரன் என்று சந்தோசப்பட்டாள்.

அதன்பின் குடும்ப விசயங்கள் பேசும்போதுதான் நிலாவிற்கு 17 வயது, மெடிக்கல் படிக்கபோறாள் என்று கதிருக்குத் தெரியும், சித்தார்த் எம்.பி.ஏ படித்து வெளிநாடு செல்லப்போகின்றான் என்ற தகவலும் தெரிவித்தனர்.

தென்னவன் குடும்பத்திற்கு கதிர் குடும்பம் குறித்து வசதிக்குறைவு என்றதொரு சிறு மனதாங்கல் இருந்தது...

இலக்கியாவின் திருமணத்திற்கு நிலா வீட்டினருக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு நிலாவைமட்டும் அழைத்து வந்திருந்தனர்.

அங்கே கதிரைப் பார்த்ததும் தனது அக்கவின் வருங்கால கணவர் என்று பேசினாள் "ஹாய் பி.எம் எப்படி இருக்கீங்க, அடுத்தது உங்க கல்யாணம்தான் என்றதும் ...ஆமா என்று தலையசைத்து சிரித்தவன். 

“அந்த பி.எம் இல்லாமா வேற எதாவது கூப்பிடலாமே, நம்ம வேற சொந்தக்காரங்களாயிட்டோம்” என்றான் கதிர் ...

சரி எப்படிக்கூப்பிட என்று நிலா கேட்க...

கதிர் “மச்சான்னு கூப்பிடு அக்கா வீட்டுக்காரங்களை எங்க பழக்கத்துல அப்படித்தான் கூப்பிடுவாங்க.”

மச்சசானாஆஆஆ....ஐய...அப்படிலாம் நான் சொல்லமாட்டேன் என்று முகத்தை சுருக்கியவள் எங்கவீட்ல சொல்ற மாதிரி சொல்றேன் "மாமா"...

"அப்படியா அப்போ எங்கப்பாவ எப்படிக்கூப்பிடுவ"

மாமானு... ஓஓஓ...ஆமாயில்ல அவங்களையும் மாமான்னுதான சொல்லனும்.. ஒன்னு செய்வோம் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் "மாம்ஸ்" அப்படினே சொல்லறேன் சரியா..டீல்...ஓகே .பி.எம்

மறுபடியும் பி.எம்.ஆஆ....நீ மாம்ஸ்னே கூப்பிடு...

பி.எம்க்கு இது எவ்வளவோ பரவாயில்லை..

அது ...என்னை இப்பவே காக்கப்பிடிச்சு வச்சிக்கோங்க. உங்க கல்யாணத்துக்கு பிறகு நான்தான் எங்கக்காகிட்டயிருந்து அடிவாங்கமா கப்பாத்தனும் ....

அதற்குள் ஜோதி நிலாவை அழைக்க..சரி சரி அம்மா கூப்பிடுறாங்க நான் வர்றேன் என்று ஜோதியின் அருகே சென்று அமர்ந்துவிட்டாள்.

கதிர் "சரியான வாலு ஆட்டுவாலு அங்கயும் இங்கயும் ஆடிக்கிட்டு இருக்கா ... நல்ல மச்சினிச்சி எனக்கு என்று சிரித்தான்.

இப்படியாக நாட்கள் நகர கதிர்- நித்தியா திருமண நாளும் அழகாக விடிந்தது...

தன் அக்கவின் திருமணம், நிலாவிற்கு கொண்டாட்டமாக இருந்தது...

திருமணம் மதுரையில் வைத்துதான் நடந்தது, சென்னையில் ரிசப்ஷன் வைக்க

ஏற்பாடு செய்யப்பட்டது, கிரமாத்திலிருந்த அத்தனை உறவுகளையும் சென்னை அழைத்து சென்று திருமணம் முடிப்பதைவிட இது சுலபமாக இருக்க அதையே செய்தனர்.

கதிர் பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான். தாலிக்கட்டும்போது மட்டும் கதிருக்கு மனது தடைசொல்லியது வேண்டாமென்று, இருப்பினும் கண்களைமூடி தெய்வத்திடம் வேண்டியபின் திருமாங்கல்யம் பூட்டினான்.

திருமணம் முடித்து எல்லா சடங்குகளும் நடைபெற நித்தியா ஒட்டுதலே இல்லாமல் இருந்தாள். கதிர் எதாவது பேசவதற்கு முயன்றாலும் அவளிடம் முடியவில்லை. முகத்தில் பூரிப்புமில்லை, புதுப்பெண்ணிற்கான வெட்கமுமில்லை...

மாலை வேளையில் தென்னவன், ஜோதி , சித்தார்த் மூவரும் கிளம்பினர். நிலாவை நித்தியாவிற்கு தூணையாக மணியரசு வீட்டில் இருக்கும்படியாக விட்டுச்சென்றனர். அவள் இருந்ததோ, முழுவதும் கதிர் வீட்டீல்.

அவள் இருக்கும் இடத்தில் புன்னகைக்கு பஞ்சமிருக்காதே, அங்கேயும் அவள் அதைத்தான் செய்துக்கொண்டிருந்தாள்.

வேதநாயகம் மற்றும் சித்ராவிற்கோ நிலா மாதிரியே நித்யாவும் இப்படியே குடும்பத்தில் சந்தோசத்தைக் கொண்டுவரணும் என்று நினைத்தனர்...

மணியரசு மனைவி இரவில் அவளை அலங்கரித்து கதிரின் அறையில் விட்டார்.

உள்ளே வந்தவள். ஏற்கனவே அவளுக்கு இந்த வீட்டுச் சூழல் கொஞ்சமும் பிடிக்கவில்லை எரிச்சலில் இருந்தாள்.

மெதுவாக உள்ளே வந்தவளைப் பார்த்து கதிர் யதார்த்தமாக சிரிக்க,பதிலுக்குகூட அவனுக்கு எதிர்வினை காண்பித்தளில்லை, அவளின் எண்ணவோட்டங்களை யாராலும் கணிக்கவும் முடியவில்லை.

கதிரின் அருகில் வந்து எனக்கு தூக்கம் வருது என்றவளின் முகத்தில் கணவனுக்குண்டான எந்தவிதமான மரியாதையையும் இல்லை. அவளது நடவடிக்கையெல்லாமே வித்தியாசமாகத் தெரிந்தது, அவள் ஒரு போர்வையையும் தலையணையும் எடுத்துப்போட்டு படுத்து தூங்கிவிட்டாள்.

கதிருக்கு அவளது செயல்கள் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இப்போது நிலாதான் நியாபகத்திற்கு வந்தாள், அப்படியொரு பெண், இப்படியொரு பெண் என்று நினைத்தவன், எப்போது தூங்கினான் என்றே அவனுக்குத் தெரியாது.

யாரோ நடமாடும் சத்தத்தில் கண்விழித்துப் பார்த்தான். நித்யா தன்னுடைய பேக்கில் எல்லாம் எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள், குறிப்பாக நகைகளை.

கதிர் கட்டிலில் எழுந்தமர்ந்து அவளிடம் கேட்டான் ஏன் நகைகளை எடுத்து வைக்கிற உங்க வீட்டுக்குத்தான போறோம், 

போயிட்டு இங்கதானப்பா வரணும், இங்யே வைச்சுட்டுப்போகலாமே, அவ்வளவையும் கையிலக் கொண்டுப்போறதும் பாதுகாப்பில்லை என்றான்.

அவள் அவனது சொற்களை காதில் வாங்கியாதகவே தெரியவில்லை.

அங்கு நிலா எல்லாரோடும் வெகுவாகப் பொருந்திப் போனாள்... அங்கும் செல்லபிள்ளையாக மாறிப்போனாள்.

கதிர் நித்யாவிடம், அதன்பிறகு பேசுவதையே விட்டுவிட்டான். மதியம் உணவிற்குப்பின் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

வீடு வந்துசேர ஏழு மணியாகிட்டுது...

மாப்பிள்ளை வரவேற்பா இல்லை கடமை என்ற மாதிரித் தோன்றியது கதிருக்கு, இரண்டு நாள் அதன் பிறகு இந்தப் பக்கமே வரக்கூடாது. கதிரின் கெத்தை இவனுங்களுக்கு கண்பிக்கனும் என்று மனதில் நினைத்தான்.

நிலா எப்பவும்போல எந்தவித பணத்திமிருமில்லாமல் அவனிடம் வம்பிழுத்துக்கொண்டே சாப்பிட்டாள்.

சாப்பாடு முடிந்ததும் ஜோதி நித்யாவிடம் கேட்டார் "என்னடி முகம் ஒருமதிரியிருக்கு?

ஏன்?"

நித்யா "ஒன்றுமில்லம்மா, சரியாதூங்காதது" என்று மழுப்பியவள்.

தூங்கவில்லை என்றதும் ஜோதி வேறுநினைத்து... மகளிடம் விசாரிக்கவில்லை..

கதிரை நித்யாவின் அறைக்கு வழிகாட்டிவிட்டு வந்தான் சித்தார்த்

சிறிது நேரங்கழித்து அறைக்குள் பாலுடன் வந்தவள், அதை அவன் கையில் கொடுக்கவும் வாங்கி குடித்துவிட்டு மீதி அவளிடம் தர, அவளோ எனக்கு எச்சிலாம் பிடிக்காது, அப்புறம் என் கட்டில்ல உட்காராதிங்க என்றவள் போர்வை, தலையணையையும் எடுத்துக் கீழேப்போட்டு அங்கயே படுங்க என்றதும்.

சட்டென எழும்பி அவளை அடிக்க கையோங்கியிருந்தான் கதிர், நொடியில் பயந்தவள் பின்வாங்கவும், கையைக்கீழப்போட்டு "என்னடி நினைச்சுட்டிருக்க, நான் என்ன உங்கவீட்டுக்கு அடிமையா வந்தவன்னு நினைச்சியா, பிச்சிருவேன்” என்றவன் ஜன்னலோரத்தில் போய் நின்று இருட்டை வெறித்தான். திருமணமாகி இரண்டாம் நாளிரவே இவ்வளவா! இது சரிவாராதே...

என்ன பண்ணலாம் என யோசித்தான்.

திடீரென அவனுக்கு தூக்கம் அதிகமாகவர அப்படியே கீழே விரித்தப் போர்வையில் படுத்ததுதான் தெரியும்.

சூரியன் யாருக்கும் காத்திருக்காமல் மேலே எழும்ப...

ஜோதி சமையலறையில் வேலைக்கு வந்தவங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு ரிஷப்சனுக்கான வேலையைப் பார்க்கனும், அதற்கு முன்பாக 

சமையல் வேலை முடிக்கனும் என துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

மணி ஒன்பதை தாண்டியும் இன்னும் நித்யா வெளியே வரவில்லையென்றதும்,

அவரே வேறு வழியில்லாமல் கதவைத் தட்டிவிட்டு வந்தார்.

எந்தவிதமான பதிலும் நித்யாவின் அறைக்குள்ளிருந்து வரவில்லை என்றதும் 

இவ்வளவு நேரமா என்று யோசித்தவர்.

கலயாணமான சிறுபிள்ளைங்க அப்படித்தான் இருப்பாங்க என்று விட்டுவிட்டார்.

மறுபடியும் பத்துமணிக்கு சென்று கதவை அழுத்தமாக தட்டவும் கதவு தானக திறந்தது.

நித்யா என மீண்டும் சத்தங்கொடுக்கவும் எந்தவித பதிலும் உள்ளேயிருந்து வரவில்லை.

அங்கே கதிர் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்.

ஒருவேளை பாத்ரும்ல இருக்காளோ என்று 

மறுபடியும் மறுபடியுமா சத்தங்கொடுக்க..

கதிருமே இவ்வளவு சத்தத்திற்கு எழும்பவில்லை, தென்னவனை ஜோதி அழைக்க, அவரும் வந்து பார்த்துவிட்டு எல்லோரும் நித்யாவைத் தேட: அவளைக் காணவில்லை.

கதிரை சித்தார்த் எழுப்ப எங்கே அவன் எழும்ப. உருட்டி அசைத்து எழுப்பிப் பார்க்க அவன் எழும்பவில்லை.

தண்ணியை எடுத்து வந்து அவன்மேல் ஊற்ற மெதுவாக அசைந்துக்கொடுத்தான்.

திரும்பவும் தண்ணீர்க் கொண்டுவந்து ஊற்றவும் எழும்பினான்.

இது எதுவும் அறியாது நிலா வெளியே நின்றிருந்தாள்.

கதிர் எழும்பியதும் அவனது சட்டையைப் பிடித்து குடிகாரனாட நீ, எங்க பிள்ளையை என்னடா செய்த, இராத்திரி உன் கூடயிருந்தப் பிள்ளையைக் காணலை

என்று தென்னவன் அவனை அடித்தார் அவனுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை, ஒன்றும் புரியவுமில்லை.

சித்தார்த் என் தங்கையை என்னடா செய்த, என்று தரதரவென்று படிகளில் இழுத்து கீழேக் கொண்டு வரவும்தான் நிலா பார்த்து என்னாச்சு என்று ஓடி வந்து கதிரை பிடித்தாள்.

ஜோதி அவனை விடுடி உங்கக்காவ காணலை இவன் நல்ல குடிகாரன் மாதிரி ஏதோ மெதப்புலயே தூங்கிட்டிருக்கான், போதையில் இருக்கானோ..ஐயோ தெரியாம கட்டிக்குடுத்திட்டமே என்று அழுகை.

"ம்மா..மாம்ஸ் அப்படிலாம் பண்ணமாட்டாங்க, அவங்களுக்கு ஊர்ல நல்லப்பேரு... அவங்க மேல நம்பிக்கை வச்சுதான அக்கவை கல்யாணம் பண்ணிக்குடுத்தீங்க...விசாரிங்க முதல்ல..நீங்களே எதாவது கற்பனை பண்ணாதிங்க..அவங்களுக்கும் எதுவும் தெரியாதுப்போல” என்று சிறூபிள்ளையானாலும் தெளிவாக யோசித்தாள்.

விசாரிங்க, எதுக்கு அடிக்கீங்க? என்றவள். ஓடிச்சென்று அவளது டவலை எடுத்து வந்து அவனது ஈரத்தை துடைத்துவிட்டவள், குடிக்க சூடாகத் தண்ணீர் கொண்டுவந்துக் கொடுத்தாள்...

இப்போது கொஞ்சம் தெளிவானவன்...

எனக்கு எதுவுமேத் தெரியாது என்று நித்யா எப்படி நடந்துக்கொண்டாள் என்பதையும் விளக்கினான்.

அவன் சொல்வதை யாருமே நம்பவில்லை.

மறுபடியும் அடிக்கப்போக நிலா இடையில் வந்தாள். அப்பா உண்மைத் தெரியாம மாம்ஸ்ஸ அடிக்காதீங்க. போலிஸ்க்கு சொல்லுங்க.

ஒருவேளை அவங்க செல்றது உண்மையா இருந்ததுனா?

தலைபாரம் தாங்கமுடியாமல் கதிர் தன் கைகளில் தலையைத் தாங்கி

குனிந்து அமர்ந்திருந்தான்.

வேலையாளிடம் சென்று அவனுக்கு டீ வாங்கி வந்தவள், அவனது கையில் குடுத்து குடிங்க கொஞ்சம் தெளிவாக இருக்கும் என்று அவனருகில் நின்றாள்...

தனது மனதில் ஒரு நல்ல மனிதனாக நினைத்தவன் மற்றவர்கள் முன்பு தாழ்ந்துப்போகிறது, அவ்வளவு வலித்தது நிலாவிற்கு.

இன்னும் அவன்மேல் ஈரமாக இருக்க, ஓடிச்சென்று அவன் கொண்டு வந்திருந்த பையிலிருந்து சட்டையை எடுத்துக் கொண்டு குடுத்தாள்,மாற்றிக்கொண்டான்.

விசயம் மணியரசுக்கு சொல்லப்பட்டது. போலிசுக்கும் சொல்லி அவர்கள் வந்து விசாரிக்கும்போதும் கதிர் நடந்ததை சொன்னான்.

அவன் குடித்து வைத்த பால் கிளாஸ் எடுத்து பார்க்கவும் ஒரளவு விசயம் போலிசாருக்கு புரிந்தது.

இருந்தாலும் நம்ப முடியாது யாரையும் என்று கதிரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவனது வேலையின் மதிப்பின் காரணமாக அடிக்காமல் விசாரித்தனர்.

இரண்டு நாள் காவல் நிலையத்தில் இருந்தான். அதைவிட முதல் நாள் மதுரையில் வேதநாயகம் சித்ராவினை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கவும், அதிக மன அழுத்தத்தில் கைகால் இழுத்து அங்கயே மயங்கி விழுந்திருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, சென்னைக்கு தனது காரிலயே ஆள்வைத்து ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார் மணியரசு...

கதிர் குனிந்த தலை நிமிராமல் இருந்தான். எப்படி வாழ்ந்தவன் ஒரு பெண்ணினால் இங்கே தலைகவிழ்ந்து நிற்கின்றான்.

அவனிடம் இன்னும் தகப்பனின் நிலை சொல்லவில்லை... அவ்வளவுதான் இங்கயிருக்க எல்லோரையும் ஒருவழியாக்கிருவான்.

பணம் பாய்ந்தது எல்லா இடத்துலயும், நித்யா இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அழைத்து வந்திருந்தனர்.

அவள் செல்போன் கடைசியாக எங்கயிருந்தது என்று வைத்து தூக்கிவிட்டனர் இரண்டாவது நாளில்.

நித்தியா அவளோடு வேலைப் பார்க்கும் பையனுடன் பழக்கத்தில் இருந்ததும், அவனுடன் வாழ்வதற்காக நகையெல்லாம் எடுத்துக்கொண்டு போக திட்டம் போட்டிருக்கின்றனர். அதனால் கதிருக்கு பாலில் தூக்கமாத்திரை கலந்துக்கொடுத்து, அவன் தூங்கும்போது வெளியேறி இருக்கின்றாள் என்ற தகவலும் வந்தது...

தென்னவன் குடும்பம் இப்போது தலைக்குனிந்து நின்றது. கதிர் எழுந்தவன்

"சீ அருவறுப்பா இருக்கு இப்படி ஒரு குடும்பத்துல வந்து பெண்ணெடுத்ததுக்கு.

இதுல என்னை குடிகாரன்னு சொல்லி அடிச்ச நீ... என்று தென்னவனை மரியாதையில்லாமல் பேசி அவரது சட்டையைப் பிடித்தான்.

சித்தார்த் எங்கப்பாவை நீ அசிங்கமா பேசுவியா என்று கோபத்தில் அவனை அடிக்க வந்தான், அவன் கையைப் பிடித்து முறுக்கி பின்பக்கம் கொண்டு சென்றவன் நேத்து எனக்கு திருப்பி அடிக்கத்தெரியாமல் இல்லை. என்ன நடந்தது என்று எனக்கே யூகிக்கமுடியாமல் அதிர்ந்து நிற்கும்போது அடிச்சிட்ட.”

நிலாவைப் பார்த்தான் “ரொம்ப நன்றி. நீ செய்த உதவிக்கு மறக்க மாட்டேன். சின்ன பிள்ளைனாலும் நீ தான் நியாயமா நடந்துக்கிட்ட அதுக்காக” என்று நன்றி சொன்னான்.

அதற்குள்ளாக பெங்களூருவிலிருந்து நித்தியாவும் அவளுடன் இருந்த அந்தப்பையனையும் அழைத்து வந்தாகிற்று.

ஜோதிதான் ஓடிப்போயி அவளை சரமாரியாக அடித்தார். நாயே ஓடிப்போகணும்னா கல்யாணத்திற்கு முன்னாடி போகவேண்டியதுதான. இப்படியா செய்வ குடும்ப மானத்தை வாங்கிட்டியே என்று அழுதார்.

இப்போது கதிர் பேசினான். “இந்தக் குடும்பத்து மேல நான் எதாவது வழக்குப்போட முடியுமா, என் வாழ்கை , எங்களது குடும்ப மரியாதை எல்லாம் இவங்களாலப் போச்சுது” என்று கேட்டான்...

கதிர் நித்யாவின் அருகில் வந்தவன்.சீ..நீயெல்லாம் ஒரு பெண்ணா...

என் பக்கத்துல நிற்ககூட தகுதியில்லாத எச்சில் நீ என்று முடிக்கும் முன்பே, நித்யா தரையில் விழுந்திருந்தாள்.

ஆம் கதிர் முதல்முறையாக ஒரு பெண்ணை அறைந்திருந்தான்...

காதலிக்க தெரிஞ்சவளுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஓடிப்போகத் தெரியலையா...

நகையும் பணமும் வேணும்ல அதான் ...இதுதான் நான் உன்னைப் பார்க்கறது கடைசி இதுக்கு பிறகு என் கண்ணுலப் பட்ட, நீ உயிரோடவே இருக்கமாட்ட என்றான்.

இப்படியாக அவளுக்கும் கதிருக்கும் எந்தவிதமான சொந்தமில்லை என்று காவல்நிலையத்தில் எழுதி வாங்கிக்கொண்டான்.

மணியரசுதான் முன்னாடி வந்து "கதிரு உன் போன் எங்கய்யா, என்றார் "

வேதநாயகத்தின் நிலையைக் கதிரிடம் சொல்ல முயற்சித்தப்போது, அது எடுக்கப்படவில்லை அதனால் கேட்டார்.

அது இன்ஸ்பெக்டரிடம் இருந்தது அவரிடமிருந்து வாங்கி வந்தான்.

மணியரசு எல்லோர் முன்னாடியும் அவனிட்ம் மன்னிப்புக்கேட்டார். என்னை மன்னிச்சுருய்யா, உன் வாழ்க்கையை இப்படி சிரழிச்சிட்டேன்.

சீக்கிரம் வா நம்ம ஊருக்குப்போகணும், உங்கப்பன ஆஸ்பத்திரியில சேர்த்திட்டுத்தான் வந்தேன் என்றதும்.

கதிர் பதற்றமானான் என்னச்சி பெரியப்பா அப்பாவுக்கு என்று கேட்டு தலையிலடித்தான்.

அவர் விசயத்தை சொல்லவும், தென்னவனிடம் வந்தவன் "எங்கப்பவுக்கு மட்டும் எதாவது ஆச்சுது, உங்க குடும்பத்துல ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன், கொழுத்திருவேன்" என எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் கிளம்பினான்.

தென்னவன் குடும்பத்தாரின் அவசரப்புத்தியால் கதிரின் குடும்பம் மொத்தமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

நிலாவிற்கோ கதிரைப் பார்த்துப் பார்த்து அழுகை.

மனைவி ஓடிப்போயிவிட்டாள் என்பது எப்படிப்பட்ட ஒரு அவமானம், அதுவும் ஒழுக்கத்தினை உயிராக கடைபிடிக்கும் ஒருவனுக்கு...

காரின் அருகே சென்று கதிரிடம் பேசினாள்" மன்னிசிருங்க, அவங்க செய்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கைகூப்பினாள் வண்டி நகரத்தொடங்கியது , கதிரின் கண்கள் இலக்கற்று வெறித்திருந்தது... 

அத்தியாயம்-15

கதிர் சென்றதும் நிலாவிற்கு ஏனோ மனதிற்குள் அவனது ஓய்ந்த தோற்றம் வலியைக்கொடுத்தது...

தென்னவன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி நித்யாவிடமிருந்த மொத்த நகையை வாங்கியிருந்தார். 

இனி இவளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இப்படியொரு பிள்ளை எனக்கு பிறக்கவேயில்லைனு நினச்சிக்கிறோம், என்றதும் எல்லோரும் கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டனர்

நிலா தன் தகப்பனின் அருகே மண்டியிட்டு 

"நீங்க கதிர் மாமாகிட்ட மெதுவா விசாரிச்சிருக்கலாமே, ஏன் அவரை அடிச்சீங்க, தப்பு பண்ணிட்டு இங்கேயேவா படுத்திருப்பாங்க யோசிக்கவேயில்லையா நீங்க, சரி இங்கதான் போலிஸ்கிட்ட மாமாவ கூட்டிட்டுப் போகச்சொன்னீங்க, மதுரையில எதுக்குப்பா பெரிய மாமாவையும் அத்தையும் போலிஸ்கிட்ட விசாரிக்க சொன்னீங்க... பணம் இல்லப்பா ... பாவம்பா மாமா ஒரு தப்புமே செய்யாம இரண்டு நாள் போலிஸ் ஸ்டேசன்ல இருக்க வச்சீட்டீங்களே, ஒரு மன்னிப்பாவது கேட்டிருக்கலாமே, தப்பு பண்ணது நம்ம அக்கப்பா...

வேதநாயகம் மாமா இப்போ ஆபத்தான நிலையில் இருக்காங்க...பேரலைஸ் ஆகிட்டுதாம்...எப்படிப்பா ...ஏன் இந்தளவுக்கு செய்தீங்க உங்கபிள்ளையக் காணும்னு தேடுனீங்களே...

கதிர்மாமா அவங்களுக்கும் பிள்ளைதான, அவருக்காக அவங்க எவ்வளவு துடிச்சிருப்பாங்க...

உங்க யாரையும் எனக்கு இப்போ பிடிக்கலைப்பா... எப்பவும் நீங்க இப்படித்தான்...

அடுத்தவங்களுக்கு வலிக்கும்னு நினைக்கறதே இல்லை...”

என்றவள் தனதறைக்குள் சென்று படுத்துவிட்டாள்...

கதிரோ காரில் தன் தந்தையை நினைத்து ரொம்ப வேதனைப்பட்டான், எப்படி இருக்காங்களோவென்று...

தனது கையைமூடி வைத்திருந்தவன், இப்போது மெதுவாக திறந்து பார்க்க அவன் நித்யா கழுத்தில் கட்டியத்தாலி இருந்தது...

காவல் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, நித்யாவிடம் நான் கட்டினத்தாலி எங்கடி என்று கேட்கவும், அதுவும் அவளது கழுத்தில் இருந்தது, அருவறுத்துப் போனான், இதைப் போடக்கூட உனக்கு அருகதையில்லை என்றவன், அவனே கழுத்திலிருந்து அத்து எடுத்துவிட்டான்... அப்படியே மதுரையில் ஆற்றைக்கடந்து செல்லும்போது, அதை தூக்கி எறிந்தவன் இனி என் வாழ்க்கையில் திருமணம் என்பதில்லை என்று நினைத்த நொடி சட்டென்று நிலாவின் முகம் அவன் கண்ணில் மின்னி மறைந்தது...

வேண்டாம் அந்தக் குடும்பத்தை நினைக்கவே அருவறுப்பாக இருக்கு என்று எல்லா நினைவுகளையும் மனதிலிருந்து தூக்கி எறிந்தான்.

மருத்துவமனையில் தன் தந்தையைக் கண்டவன், மொத்த சக்தியும் இழந்தவன் போல அவரை வைத்திருந்த ஐ.சி.யூவின் முன் மண்டியிட்டு கதறினான்...

எல்லா சூழ்நிலையிலும் அவனைத் தாங்கியவர், இப்போது அந்த தோள்கள் அவனுக்கு ஆதரவாகத் தேவை. ஆனால் அவரோ எழும்பிவர முடியாத நிலை...வருவார என்றதொரு நிலையில்...

சித்ரா மகனைக் கண்டதும் இருந்த மொத்தக் கவலையையும் அழுதேக் கரைத்தார். யாருக்கு யார் ஆறுதல் சொல்லவென்று இருவரும் கைகைளைப் பற்றியபடியே அமர்ந்திருந்தனர்...

இலக்கியாவும் அவளது கணவனும்தான் எல்லாம் இருந்து பார்த்தனர்.

ஏற்கனவே திருமணத்திற்காக கல்லூரியில் ஒருமாதம் விடுமுறை எடுத்திருந்தான்.

ஒருவாரம் கடந்த நிலையில்தான் வேதநாயகம் கண்களையே திறந்தார், அவர் மருத்தவமனையிலிருந்து வீட்டிற்கு வரவே ஒருமாதத்திற்கு மேலாகியது. ஆனாலும் அவரால் ஒரு கையையும்,காலையும் உபயோகிக்க முடியாத நிலை, பேச்சும் அந்தக் கம்பீரமாக வரவில்லை, திக்கித்திணறித்தான் பேசமுடியும்...

ஊரில் அவனால் தலைக்காட்ட முடியவில்லை. கதிர் பொண்டாட்டி ஓடிப்போயிடுச்சாம், இவனால முடியலையாம் அதான் அந்தபிள்ளை ஓடிப்போச்சாம் என்ற பலவித பேச்சுக்கள் வேறு, ஒரு நாள் முடியாத சூழலில் குடித்துவிட்டு தோப்பு வீட்டில் படுத்திருந்தான்.

சித்ரா தேடிச்சென்று பார்த்துவிட்டு, நிலைமையை யூகித்தவர், மணியரசுவிடம் வந்து அவனது கல்யாண வாழ்க்கைதான் தொடங்கியதும் முடிஞ்சுப்போச்சு, இப்படியே விட்டா அவனும் தொலைஞ்சுப் போயிடுவான்

அவன்கிட்ட நீங்கப் பேசுங்க கொஞ்சம் என்றார்.

மணியரசு கதிரிடம் சமாதானம் பேசி கொஞ்ச நாள் வெளியூருக்கு எங்கயாவது போறியா என்றுக்கேட்டு உதவி செய்தார்.

அதன்பின்பாக அந்தக்கல்லூரித் தலைவரிடம் பேசினான் அவரின் தம்பித்தான் இப்போது வேலைப்பார்க்கும் கல்லூரியில் அவனின் துறைத்தலைவர்.

அவன் அந்தக்கல்லூரியில் வேலையைவிட்டு சென்னைக்கு செல்ல, அதே நேரத்தில் நிலா மதுரையில் கதிர் வேலைப்பார்த்த கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பில் முதல் வருடம் சேர்ந்திருந்தாள்...

இங்கே சேர்ந்து பிறகுதான் தெரியும் கதிர் இல்லையென்று, அவருக்காகத்தான இங்கவந்தேன் என்ன செய்யிறது என்று யோசித்தவள், அங்கயே ஹாஸ்டலில் தங்கிப் படித்தாள்.

எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வந்து கிட்டதட்ட ஒருமாதம் கடந்த நிலையில் வீட்டின் சூழ்நிலை சிறிது மாறியதும், தன் தந்தையின் முன் நின்றவள் எனக்கு மெடிக்கல் படிக்கப் பிடிக்கலை, 

கதிர் மாமா மதுரையில் வேலைப்பார்த்த கல்லூரியில்தான் படிக்கப்போறேன் சேர்த்துவிடுங்க என்று நின்றாள்.

யாருக்குமே விருப்பமில்லை, ஆனால் அவளது பிடிவாதம் ஜெயித்தது...

அங்கே சேர்ந்ததும் தனது மாமாவிற்கு தகவல் சொன்னாள். இடையில் ஒரு நாள் கதிரின் ஊருக்கு வந்தவள், தனது மாமாவிடம் கேட்டாள் "என்னை வேதநாயகம் மாமாவிட்டுக்கு கூட்டிட்டுப் போங்களேன், அவங்களை நான் பார்க்கனும் என்று கேட்டாள்.

இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகும் நீ அங்கப்போறது நல்லாயிருக்காதுடாம்மா...

சிறிது யோசித்தவள் "நான் போவேன் அவங்க என்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க. நீங்க அங்க அழைச்சிட்டுப்போங்க" என்று பிடிவாதம் பிடிக்கவும் ...

வேற வழியில்லாமல் இருவரும் கதிரின் வீட்டினுள்ளே நூழைய சித்ரா நிலாவைப் பார்த்ததும், பதற்றமானார்.

இப்போதான் கொஞ்சம் தெளிஞ்சு வர்றோம் அதுக்குள்ள இந்த பிள்ளை என்ன இங்கவந்திருக்கு என்று நினைத்தவர், அப்படியே கேட்டும்விட்டார் நிலாவிடம்...

“அக்காவை நம்பினதுனால கொஞ்சம் அப்பா அவரசப்பட்டுட்டாங்க... 

அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். மாமாவ நான் பாக்கட்டுமா” என்று கேட்டு நின்றாள்.

சித்ரா என்ன செய்வார் வீட்டுக்கு வந்தவங்களை விரட்டிப் பழக்கம் இல்லையே! உள்ளே அழைத்துச் சென்றார்.

வேதநாயகத்தை பார்த்ததும் நிலா சத்தமாக அழுதுவிட்டாள்... எப்படியிருந்தவர் உடல் இழைத்துப் போய், ஆளே அடையாளந் தெரியாமல் பார்க்க பார்க்க வேதனைப்பட்டாள். எவ்வளவு கம்பீரமா இருந்தாங்க என்று உடைந்தழுதாள்.

நிலாவைப் பார்த்ததும் எழும்ப முயற்சிக்க

மகளாகத் அவரைத் தாங்கி அமர வைத்தாள்.

மணியரசுக்கு புரிந்தது நிலா இங்கவந்து படிக்கறதுக்கு கண்டிப்பா காரணமிருக்கு என்றுணர்ந்தவர் அமைதியாக இருந்தார்.

திரும்ப வீட்டிற்கு வந்ததும் நேரடியாகவே கேட்டார். சென்னையில் இல்லாத படிப்பும் காலேஜிம் மதுரையில் இருக்குனா இங்க படிக்க வந்த?

நிலா அமைதியாகவே இருந்தாள், நிலாப் பொண்ணு பதில் சொல்லு என்று கொஞ்சம் இறுகியக் குரலில் கேட்கவும்

நிமிர்ந்து "நான் கதிர் மாமாவக் கல்யாணம் பண்ணிக்கனும் அதுக்குத்தான் இங்க வந்தேன். அதுக்குள்ள அவங்க சென்னைப் போயிட்டாங்க"

மணியரசு "என்னப்பேசுற நீ, பதினேழு வயசுல பேசற பேச்சா இது"

நிலா "ஓ அப்படியா, அப்போ எந்த வயசுலப் பேசலாம், பதினெட்டு வயசு முடிஞ்சு பேசலாமா, இல்ல இருபத்தியோரு வயசுல பேசலாமா அதுவுமில்லைனா இன்னும் பத்து வருசம் கழித்து பேசலாமா. ஆகமொத்தம் எப்போ பேசினாலும் இதைத்தான் பேசப்போறேன். அதுக்கெதுக்கு வருசத்தை கடத்தனும்.

பதினெட்டு முடிஞ்சவுடனே கதிர் மாமாகிட்டப் பேசுங்க"

இவளது பேச்சைக் கேட்டதும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார். இது என்னடா புது சோதனை என்றுதான் நினைத்தார்.

நீங்க செய்ததை நீங்களே சரிபண்ண வாய்ப்பு நான் தர்றேன்.

இன்னும் மூணு வருசம் இங்கதானப் படிக்கப்போறேன் என்றாள்.

இரண்டாவது வருடம் படிக்கும்போது, கதிரினை சென்னைக்குப் பார்க்க சென்றவர்கள் அவனது மறுதிருமணத்திற்காக கேட்க அவன் எனக்கு திருமணமே வேண்டாம் என்று பதிலளித்துவிட்டான்...

இந்தப்பதில் நிலாவிடம் சொல்லப்பட அவ நானும் கதிர் மாமாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன் என்றுவிட்டாள்.

கதிரின் நிலையோ மிகவும் மோசம். புதுக் கல்லூரியில் தன்னை நிருபிக்க வேண்டும் அதற்காக இரவும் பகலும் உழைத்தான், பி.எச்.டியில் கவனத்தினை செலுத்தி மூன்று வருடத்திற்குள் முடித்து அந்தக்கல்லூரியில் ஒரு நிரந்தரமானதொரு இடத்தில் இருக்க போராடினான். ஊருக்கு வரவேமாட்டேன் என்று சங்கல்பம் எடுத்திருந்தான்...

அதைவிட தன்னுடைய உணர்வுகளைக் கொன்றுக் கொண்டிருந்தான்...

தனியாக அப்பார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான்.

பக்கத்தில் யாரோ மாமா வென்றோ மாம்ஸ் என்றோ அழைத்தால் போதும், மனதில் நிலா வந்து அன்றைய தினம் முழுவதும் அவனது எண்ணத்தின் ஆக்கிரமிப்பில் உலா வருவாள்.

அவன் இளமையையும் சிலசமயம் நிலாவின் நினைவு கொல்லும்...அவன் கடைசியாக பார்க்கும்போது அவள் சிறுபெண்.

இப்போதோ மருத்துவபடிப்பின் இறுதியில் இருப்பாள் என்று நினைத்துக்கொள்வான்.

அவனது உயிரின் ஆழத்தில் அவள் நிறைந்திருப்பதை அப்போதும் உணரவில்லை, இப்போதும் உணர்ந்தானில்லை.

மூன்று வருடம் கழித்து கல்லூரியில் ஸ்திரமான நிலையில் நல்ல சம்பளம், நினைத்தயிடத்தை அடைந்தாயிற்று. ஆனால் வாழ்க்கையோ கிணத்தில் போட்டக் கல்லாக இருந்தது.

நான்காம் வருடம் முதல் நாள் கல்லூரிக்குள் அவன் நுழையும்போதே மனதில் ஒரு சந்தோசப் படபடப்பு. ஏன் இப்படி உணர்கிறோம்? 

எதனால்? அவனது கேள்விக்கு விடை அவன் வகுப்பில் நுழைந்ததுமே கண்டுக்கொண்டான்.

எம்.எஸ்ஸி.வேதியியல் முதலாமாண்டு மாணவர்களின் வகுப்பிற்கு நுழைந்தவன் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு மாணவர்களை ஒரு முறை கண்களை சுழற்றி நோட்டம் விட்டவனது கண்கள் சட்டென்று ஓரிடத்தில் நிலைக்க, அனைவரது கண்களும் அங்கயேச் செல்ல

அங்கு அமர்ந்திருந்தது நம் நிலா...

அவனது பார்வையைப் புரிந்ததும் எழுந்து நின்றாள்.

இனி சமாளிக்கவில்லை என்றால் கதிரின் பெயர் கெடும் "சட்டென்று நீங்க எப்படி இங்க" எனக்கேட்டான்.

நான் பி.எஸ்.ஸி மதுரையில் படித்தேன் என்று படித்த கல்லூரியின் பெயரைச்சொல்லவும், அது அவன் முதலில் வேலைப்பார்த்த கல்லூரி...

ஓஓ..நீங்க டாக்டராகிருப்பீங்கனு நினைத்தேன் என்றவன். வகுப்பில் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தினான்...

வெளியே வந்ததுதான் மூச்சுவிட்டான்..இந்த ஆட்டுவாலு ஏன் இங்கவந்தா... அதுவும் என்னோட டிபார்ட்மெண்டிற்கு, வளர்ந்திருக்கா, குட்டைமுடி நீளமா வளர்த்திருக்கா...

வேறெதோ மாற்றம் அவளிடம் அவளது முகத்தை திரும்பவும் மணக்கண்ணில் ஓட்டிப்பார்க்க, சிறிதானதொரு வைரமூக்குத்தி கூர்ந்துப்பார்த்தால் தெரியுமளவிற்கு போட்டிருந்தாள்.

அவனுக்குப் பிடித்த மாதிரியே அத்தனையையும் மாற்றியிருக்கின்றாள்...

கதிர் வெளியே சென்றதும் அருகிலிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, ஒரு பெண் கேட்டாள் சாரை உனக்கு ஏற்கனவேத் தெரியுமா? எனக்கேட்க. நிலா சொன்ன பதிலில் அந்தப்பெண் திருதிருவென விழித்தாள்.

ஆமா... அவங்க எனக்குத் தெரிஞ்சவங்கதான் ...

கொஞ்சம் தூரத்து சொந்தம் மட்டுந்தான் வேறெதுவுமில்லை. அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் என்று சொல்லிக் கண்ணடித்தாள்...

அதிர்ச்சியானவள் வேறுயாருமில்லை..அவளது தோழி இனியாதான்.

முதல் ஒருவாரம் நிலா எந்தவிதமான சேட்டையையும் அரங்கேற்றாமல் நல்லபிள்ளையாக வகுப்பில் இருந்துக்கொண்டாள்.

ஆனால் முக்கியமான ஒரு வேலையைமட்டும் சரியாகச்செய்தாள் அது கதிரைப் பார்வையாலே தின்றுக்கொண்டிருந்தாள்...

கதிரும் இரண்டு நாள் நம்ம ஆட்டுவாலு எந்த சேட்டையும் பண்ணாம இகருக்காளே எங்கயோ இடிக்குதே என்று அவளைப் பார்த்த நாளிலிருந்து கவனத்தை சிதறவிட்டுக்கொண்டிருந்தான்.

அதன்பின்பு புரிந்துக்கொண்டான். நிலா அமைதியாக இருப்பதெல்லாம் காரணமாகத்தான் என்று.

கடைசி பெஞ்சில் இருப்பதால் கதிரை பார்த்து கண்ணடித்து வைத்தாள், சட்டென்று பாடத்தை நிறுத்தியவன் "நிலா கெட்டவுட் ஃப்ரம் மை கிளாஸ்" என்று சொல்லியவன் அவளை முறைத்துப் பார்த்தான், தானாக வெளியே சென்றுவிட்டாள்.

வகுப்பு முடிந்து வெளியே வந்தவன் என்னை வந்து ஸ்டாஃப் ரூம்ல பாரு என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

கதிருக்கு அங்கு ஹிட்லர் என்றுப் பெயர்.

நிலா அலட்டிக்காமல் உள்ளே வரவும் 

இனியா என்னடி ஹிட்லர் உன்னை வெளிய அனுப்பிட்டாரு என்ன செஞ்ச நானும் உன்கூடத்தான இருந்தேன்...

கண்ணடிக்கறதெல்லாமா உன்கிட்ட சொல்லிட்டு செய்வாங்க...

என்னது!..இப்போது அதிர்ச்சியானாள் இனியா...

யோசித்தவள் இப்போ போனால் சரியா இருக்காது.. ம்ம் மதியம் போய் பார்க்கலாம் என்று சாப்பாட்டு நேரத்தில் கதிரின் முன் சென்று நின்றாள்...

சார் கூப்பிட்டுங்களே! என்று அவன் முன்பாக நிற்கவும் கதிருக்கு இப்போ ஒன்றும் சொல்லமுடியாத நிலை...

எல்லாரும் அங்கேதான் இருந்தனர்.

ஒன்னுமில்லை கொஞ்சம் வகுப்புல கவனமா இருங்க. வேறெதுவுமில்லை நீங்க போங்க என அவளை அனுப்பிவிட்டான்...

நிலா வந்து சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கவும் இனியா நிலாவிடம் "சார் என்ன சொன்னாங்க"

நிலா "அதுவா நல்லச் சாப்பிட்டு தெம்பா வந்து சைட்டடிக்கச் சொன்னாங்க"

இனியா அவ முதுகில் ஒன்றுவைத்து பிசாசு எதுக்காவது ஒழுங்கா பதில் சொல்றியா என்று சண்டைப்போட்டுவிட்டு நிலாவைப் பார்க்க அவளது கண்கள் கலங்கியிருந்தது.

இனியா பதறி "என்னப்பா இது, சார் எதாவது சொன்னா இப்படியா அழுவாங்க"

நிலா "ச்ச், அப்படி எதுவும் என்னை திட்டமாட்டாங்க, இது வேற"

இனியா " ஓஓ"

இருவரும் பேசியபடியே வகுப்பிற்குள் போகவும் சேஷாத்திரி வந்தார்.

வந்தவர் உடனே பாடம் எடுக்க ஆரம்பிக்கவும், கவனத்தை திசை திருப்பினாள்...

இப்படியாக நாட்கள் நகர, நிலா மட்டும் கதிரின் வகுப்பில் அடிக்கடி வெளியே நிற்பாள், வெளியே நின்றும் ஒரு நாள் வகுப்பு முடிந்து கதிர் வெளியே வந்தவன்.

அவன் கோபமாக நிலாவைதா திட்டுவதற்கு வரவும் கண்ணடித்துவிட்டு உதட்டை குவித்து முத்த செய்கை செய்ய அரண்டுவிட்டான் கதிர் சுற்றிமுற்றி யாராவது பார்த்திட்டாங்களா என தலையை இடதும் வலதும் திருப்பி பார்க்க,

"அதெல்லாம் யாரும் பார்க்கல, பார்க்குற மாதிரியா குடுப்போம்" என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்...

கதிருக்கோ நிலாவை கண்டிப்பாக தள்ளியே வைக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்...

நிலா கதிரின் மூளையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தாள்...

சின்னப்பெண், அதைவிட அந்தக் குடும்பத்திலிருந்து மறுபடியுமா வேண்டாம் என்று தனக்குத்தானே கோபம் என்ற வேலியைப் போட்டுக்கொண்டான்.

அடுத்து வந்த நாட்களில் நிலாவை பார்ப்பதைக்கூட தவிர்த்தான் வகுப்பிலும், கல்லூரியிலும்.

நிலாவிற்கு அவனை எப்படி அனுக என்றுத் தெரியவில்லை...

ஆசிரியர்களின் அறையும் லேப்பும் ஒரே இடத்தில்தான்.

அன்று ப்ராடிக்கல்ஸ் நடந்துக்கொண்டிருக்க நிலாவின் அருகிலிருந்தப் பையன் ஆசிட் எடுத்துவிட்டு மறதியில் சட்டென்று ட்ராப்பரை உதறிவிட்டான். அது நிலாவின் கரங்களில் பட்டுவிட்டது, ஒரு நொடியில் துடித்துவிட்டாள்.

முதலுதவி அவளுக்குமே தெரியும் என்பதால் உடனே தண்ணீர் திறந்துவிட்டு கழுவவும், கதிர் உள்ளே நுழைந்து அவளது கரத்தைப் பிடித்து என்ன பட்டுச்சு என்றான்.

அவன் வந்துக்கேட்டதும்தான் இனியாவே கவனித்தாள்.

நிலா "இல்ல பர்ஸ்ட் ஏய்ட் பண்ணிட்டேன்" என்றாலும் சிறிது பேஸ் எடுத்து கரைத்து ஊற்றினான் அவளது கையில் சிறு பொட்டாக பட்டிருந்தது.

அருகில் நின்ற இனியாவிற்கு கூட அவள் கை உதறியது தெரியாது. ஆனால் கதிர் அவனது அறையிலிருந்து பார்த்து வந்திருந்தான்

இவ்வளவு பக்கத்துல பக்கத்துல நிற்க வச்சது யாரு, ப்ராக்டிக்கல்ஸ் இன்சார்ஜ் யாரு என்றதும் சேஷாத்திரி வந்தார் ..

நிலா கதிர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow