உன் நினைவே என் சுவாசமடி 26-28

அத்தியாயம்-26
இப்போதெல்லாம் அனுராதா தான் மோனலுடன் படுத்துக்கொள்வார்.
நிறைமாதம் வேறு ஏற்கனவே பயந்தவள் வேறு என்று அவளுக்கு என்னத்தேவையோ கேட்கமாட்டாள்,
அனுமாவ எதுக்கு தொந்தரவு செய்யனும்னு இராத்திரி எழும்பி கிட்சன் போவா இரண்டு முன்று நாள் பார்த்துவிட்டு அவரே மோனலின் அறைக்கு வந்து படுத்துக்கொண்டார்.
அன்று அப்படித்தான் மோனலுக்கு எதோ வாஷ்ரும் போகனும்னு போயிட்டு வந்தவளுக்கு ஒருமாதிரியாகவே இருக்க அவளுக்கே என்ன செய்யுது என சொல்லத் தெரியாமல் இருக்க அப்படியே கட்டிலில் ரெம்ப நேரமாக அமர்ந்தவாக்கிலயே இருக்க, அனுராதா எழும்பி என்னடா செய்து என்று கேட்கவும்.
தெரியலம்மா ஆன ஒரு மாதிரி இருக்கு பயமாவும் இருக்கு என்று சொல்ல, அனுராதா புரிந்துக்கொண்டார்.
நீ இரு கொஞ்சம் சூடா தண்ணிக்குடி என்று தண்ணி சுடவச்சுக்குடுத்தார்.
அவளது முகம் தெளிவில்லாமல் பயத்துடனே இருக்க. ஒன்னுமில்லடா
வயிறு எதாவது வலிச்சா என்கிட்ட சொல்லனும் ,நீயா அமைதியா இருக்கக்கூடாது என சொன்னவர்.
அருகிலயே அமர்ந்திருந்தார். சிறிது நேரத்திலயே அவள் அணிந்திருந்த நைட் ட்ரஸ் கலர் மாறியதை உணர்ந்தவள் அனுமா என சத்தமிட பார்த்தவருக்குமே பயம். ஒன்னமில்லடா ஒன்னுமில்ல என அவளை சமாதானப்படுத்தி வா நம்ம ஹாஸ்பிட்டல் போயிடலாம் என சொன்னவர் ஜீவாவின் அறையைத் தட்டி அவனை எழுப்பி வந்து பார்க்க சொன்னவர் ஆனந்தராஜை எழுப்பி கார் ரெடி பண்ணுங்க என்று சொன்னவர். மறுபடியுமாக மோனலிடம் வந்தார்
அவள் இருப்பதைப்பார்த்து பயந்தார்.
மோனல் என்று அழைத்தும் பதில் வராதிருக்க அவள் கன்னத்தில் லேசாக தட்டவும் உணர்வு வந்தவள்.
ஜீவா அங்கு நிற்கவும் பெரிய மச்சான்
எதுவும் பிரச்சனையா என் குட்டீஸ்ங்க நல்லாயிருப்பாங்கள,ஒன்னுமில்லல ஒரே இரத்தம் என்று அழ , அவன் அவளது அருகில் வந்து வா ஹாஸ்பிட்டல் போகலாம் என அவள் கைப்பிடித்து தூக்கியவன் சுனிதாவை கண்ணைக்காமித்து பயப்படாத , எல்லாம் ரெடியா வை என்று சொல்லி அங்கயிருந்து அவளை விரட்டினான்.
அடுத்த பத்தவது நிமிடத்தில் மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
ப்ளீட் ஆகிட்டதால வலிவரவில்லை அதுக்காக காத்திருக்கவும்,அதிகமாக பயந்தாள்.
நேரமாக ஆக ரெம்ப பயந்தவள் அழ ஆரம்பிக்க அவளது பிபி அதிகமாகவும்,
டாக்டர்ஸ் பயந்தாங்க,
பெரிய டாக்டர் ஜீவாவை அழைத்து அவள் பக்கத்துல உட்கார்ந்து கொஞ்சம் பேசுங்க,ஸ்கேன் எல்லாம் எடுக்கனும் இவங்க இப்படி அழுத உள்ள இருக்க குட்டீஸ்க்குத்தான் ரிஸ்க் என்று சொல்லிவிட்டார்.
அப்போதுதான் ஜீவா தன் தம்பிக்கு அழைத்தான் காலையில் தூக்க கலக்கத்துல ஃபோன் எடுத்தவன்.
செய்தியைக்கேட்டு பதறி எழும்பி வாடகை கார் புக் செய்து கிளம்பிவிட்டான்.
அனுராதா அவளது கையைப்பிடித்து உனக்கு பாப்பா இரண்டும் பத்ரமா வேணும்ல கொஞ்சம் அழாதடா, நீ அழுதா பிள்ளைங்களுக்குத்தான் கஷ்டம் என்று கூற கொஞ்சம் அமைதியாக இருந்தாள்.
ஸ்கேன் எடுக்கறத்க்குள்ள அவ்வளவு பயம் ஏற்கனவே தர்ஷனா இப்படித்தான் இரத்தம் வெளியேறி இறந்தாளா. அவளுக்கு அதுதான் கண்முன் வந்து வந்து போனது.
அனிஷாவின் பிரசவத்தின்போதும் அவளுக்கும் கடைசி வரைக்கும் வலியில் அழுது ரெம்ப சீரியஸான நேரத்துலதான்
சாரா பாப்பா பிறந்தாள். எல்லாம் இப்போ வந்து அவள் கண்முன் நின்று பயமுறுத்தியது.
ஸ்கேன்ல பிள்ளைங்க நல்லா இருக்காங்க என்று அறிக்கைவரவும் ,மருத்துவர் நார்மலாகும் கொஞ்சம் நடக்க சொல்லுங்க எனவும் நடந்தாள் அந்த வராண்டாவிலயே நடந்தாள்.
மனசு இப்போ ஜெபாவிற்காக தேடியது.
ஃபோன் அவள் கையில் இல்லை எடுத்திட்டு வரல. நடக்க நடக்க அவளுக்கு வலி ஆரம்பித்ததும் தான்.
வலியின் வேதனை தாங்கமுடியாது உருளாத குறைதான்.
சிறுபிள்ளையைவிட அழுது ஆர்ப்பாட்டம் அவளால் தாங்கொன்னா வேதனை,
அவளுக்கும் முடியவில்லை .
இப்போதும் பல்ஸ் ரேட் இறங்கவும் என்ன செய்ய என்று ஜீவாவை கேட்க அவன் தம்பிக்கு மறுபடியுமாக அழைக்க,
அவனது போன் சவிட்ச் ஆஃப்.
லேபர் வர்டுக்கு போய் அங்க உள்ள மருத்துவரிடம் ஆலோசனை செய்தான்.
நார்மலுக்குத்தான் முயற்சி பண்றோம்,அது அவங்க கையிலதான் இருக்கு. இல்லனா வேற முயற்சி பண்ணனும் இரண்டு குழந்தைங்க அப்படின்னாலே ரிஸ்க்கதான்.
உங்க தம்பி எப்போ வருவாங்க சொல்லுங்க. வலி இன்னும் அதிகமாகும் இதையே அவங்களால தாங்க முடியல,
ஜீவா " கொஞ்சம் பாருங்க,தம்பி வந்ததும் முடிவு செய்திடலாம் "என்று வெளியே வந்தவன்.மோனலை பார்க்க அவள் ஆவியற்று படுத்திருந்தாள்.
மனசுக்குள்ளாகவே வீட்டில் எல்லோரும் பிரர்த்தானை செய்தனர் .
தாயும் சேயும் மூன்று உயிரும் நலமாக வரவேண்டும் என்று. மோனலின் நிலைதான் கொஞ்சம் கஷ்டம்.
அதிகாலை கிளம்பியவன் மருத்துவமனை வந்து சேர கிட்டதட்ட மதியம் ஒரு மணி ஆகிற்று.
அவளுக்கு பிள்ளைங்களுக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயம் அவளை ஆட்கொள்ளவும் ,மருத்துவர்களுக்கு பெரியசவாலாக இருந்தது.
ஜெபா உள்ள நுழைந்து அவளைப் பார்த்தவனுக்கு அப்படி இருந்தது.. ஓயந்துபோய் அழுது ,அவனைக் கண்டதும்தான் உயிர்பெற்று எழும்பிய ஓவியம்போல் எழுந்து அமர்ந்தவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
டாக்டர்ஸ் மற்றவர்களை வெளிய போகச்சொல்லிவிட்டு ஜெபாவை மட்டும் உள்ளே அனுமதித்திருந்தனர்.
வலிக்கும் போதெல்லாம் மோனல் தாங்காது பைத்தியமாகத குறைதான் அவனை பிச்சு பிராண்டி ஒருவழி ஆக்கிவிட்டாள் ஒரு கட்டத்திற்குமேல் அவள் மயங்கவும்,ஜெபா ஆப்ரேஷன் செய்தே பிள்ளைங்களை வெளிய எடுங்க, போதும் அவ படுறது எனக்கு அவளும் முக்கியம்,குழந்தையும் முக்கியம், என கண்கள் கலங்க சொல்லியே விட்டான்.
அவர்கள் இதைமாதிரி எத்தனை பிரசவம் பார்த்திருப்பார்கள்,எத்தனை தம்பதிகளை கண்டிருப்பார்கள்.
ஜெபாவை பார்த்து சிரித்த சீனியர் டாக்டர் ஒரு போலிஸ் ஆபிசர் நீங்களே இப்படி பயப்படலாமா என்று கேட்கவும.
இதுல போலிஸ் ,கலெக்கடர்னு என்ன வித்தியாசம் எல்லாருமே மனைவி மேல அன்புதான் வைச்சுருப்பாங்க,எல்லாரையும் போலதான் இரத்தமும் சதையும் உள்ள மனுசங்க, நம்மளோட உயிர் சொந்தம் துடிக்கும் போது தானாகவே எங்க மனசும் துடிக்கும். ஆனா அது வெளிய தெரியவதில்லை இந்த காக்கி ட்ரஸ் மறைச்சுறது அவ்வளவுதான் என்றான்.
அதற்குள்ளாக மோனல் சிறிது விழித்திருக்க ,ஜெபாவை அங்கிருந்த மறைவில் சிறிது இருக்க சொல்லி டாக்டர் கூறினார்,நீங்க பக்கத்துல இருந்தா ரெம்ப பண்றாங்க, சரியா நான் கூப்பிடும்போது வாங்க என்றுசொல்லி சென்றவர் அடுத்த பத்தவாது நிமிடத்தில் ஜெபாவை சத்தமாக அழைத்தார்.
அவன் வந்து பார்க்க டாக்டர் ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு
தொப்புள் கொடியை வெட்ட சொல்லவும்,அவன் கைகள் நடுங்கியது
செவிலியர் பின்போடவும் அவனை வெட்டசொன்னார் எப்படியோ வெட்டியவன் தன் பிள்ளளையை பார்க்க அது ஆண் குழந்தை.
ஹப்பா மூச்சு சீராகவிட்டவன் மோனலை பார்க்க, அவள் அரை உயிராக கிடக்க அவன் கண்களில் கண்ணீர் தானக வந்தது.
அடுத்தும் தனியாக இருந்தவன் இரண்டவது பிள்ளை சத்தமாக அழுதுகொண்டே பிறக்கவும் மருத்துவர் அழைக்கும் முன் வந்தவிட்டான்.
இப்பொழுது பார்த்தான் அது பெண் குழந்தை ,தொப்புள் கொடியை வெட்டி மோனலைப்பார்க்க அவள் மயக்கத்தில்.
சீனியர் டாக்டர் நீங்க இனி வெளிய போங்க எல்லாம் முடிந்து பிள்ளைங்களை உங்ககிட்ட தருவாங்க.அவன் இப்போதும் மனைவியைத்தான் பார்த்திருந்தான்.அதைக் கண்டுக்கொண்ட டாக்டரா உங்க மனைவி நல்லா இருக்காங்க கவலைப்படாதீங்க என்று அவனை வெளிய அனுப்பினார்.
அவன் வெளியே வரவும் ஜீவா அவனை அணைத்துக் கொண்டான். ஜெபாவிற்கு பேசவே முடியலை அழுதான் அவங்கம்மா கையைபிடித்து கண்ணில் வைத்துக்கொண்டு.
இரு பிள்ளைகளின் தகப்பனாக உணர்ந்த தருணம் அது அதை எப்படி வார்த்தையால் உணர்த்த முடியும் வெளியே போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தவன் அனுராதாவின் கையையும் அவனை ஆறுதல் படுத்த வந்த ஆனந்தராஜின் கையையும் இப்போது ஒன்றாக பிடித்து முத்தமிட்டான்.
என்ன பிள்ளைங்கடா என்றை சாரு கேட்டதற்கு சைகயாலே தன் கைவிரல்களை அசைத்து ஆணும் பெண்ணும் ஒவ்வொன்று என்று. அங்கு நின்றிருந்த ஐந்து பேருக்குமே மகிழ்ச்சி.
ஜீவாவிற்கு ஏக குஷி பெண் குழந்தை ஒன்று எனவும்,அவனுக்கு இரண்டும் ஆண்குழந்தை தன் தங்கையைப்போல தன்னிடம் ஒட்டுதல் காமிக்க பெண் குழந்தை வேண்டும் என்று முடியவில்லை. இப்பொழுது தன் தம்பிக்கு இரண்டு அதிலும் ஒன்று பெண் என்றதும்.
மருத்துவமனை முழுமைக்கும் லட்டு வழங்கியாயிற்று...
ஜெபாதான் பிரசவ வார்டு முன் தவமிருந்தான் தன் உயிரின் பாதிக்காக.
ஒரு இரண்டு மணிநேரம் கழித்து அவளை ரூமிற்கு குழந்தைகளோடு சேர்த்து கொண்டுவந்து கிடத்தினர்.
அப்பா எட்வர்டு ரோஜாவின் நிறத்தில் இரண்டு குழந்தைகள் அப்படி தூக்கம்,பொதிந்து வைக்கப்பட்ட பனிரோஜாக்கள்.
ஜெபா தொட்டு தொட்டு பார்க்க நெளிந்துக்கொடுக்கும்போது அவ்வளவு அழகு. மனையாள் இன்னும் மயக்கத்தில், அவள் கைப்பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
நேரமாகியும் அவள் எழும்பவில்லை என்றதும் பயந்து மறுபடியும் டாக்டரிடம் சென்று நின்றான், அவனைப் பார்த்ததும் சீனியர் டாக்டர் சிரித்தவர் " என்ன சார் என்று கேட்கவும்.
" மனைவி இன்னும் முழிக்கலை அதான்...."
" அயோ அவங்களுக்கு இரண்டு பேபி பிறந்திருக்கு பாவம் அவங்க அவங்களாவே எழும்பட்டும் பெயின் தெரியாம இருப்பாங்க, எழும்பினா வலி தெரியும் எது பெட்டர் நீங்களே சொல்லுங்க "
இல்ல இருக்கட்டும் லேட்டா முழிக்கட்டும்னு கிளம்பி அறைக்குள் வரவும் ,அவனது பெண் அழுகின்ற சத்தம்தான் விறுவிறுவென்று உள்ளே சென்று பார்க்க சாரதாதான் கையில் வைத்திருந்தாங்க.
அனுராதா அவனைப்பார்த்து " உன் பையன சமாளிக்கலாம் போல ,உன் பொண்ணு ஊரையே அழுது கூப்பிடுதா,சமாளிக்க முடியல "என சொல்லவும்,
மோனல் மகளின் அழுகை சத்தத்தில் லேசாக கண்திறந்து பார்த்தாள்,
ஜெபா சேவகன் போல ஓடி அவள் பக்கத்தில் நின்று டாலி என்று அவளுக்கு வலிக்குமோ என்று அவ்வளவு ஹஸ்கி வாய்ஸ்ல அழைத்தான்.
அவனது குரலைக்கேட்டு கண்களை நன்றாக திறக்க அவன் அவளது கையை பிடித்துக்கொண்டான்.
இரு அம்மாக்களும் நாசுக்காக வெளியே செல்ல ஜெபா அவளது பெட்டில் அவளருகில் அமர்ந்துக் கொண்டு
தலையைத் தடவிக்கொடுத்தான்." ரெம்ப வலிக்குதாடா "
அவள் தலயை மட்டும் ஆட்டி ஆமாம் என்க.கண்களை சுழற்றி பிள்ளைகளைத்தேடுவதைக் கண்டவன்
தொட்டிலில் இருந்த மகனை மெதுவாக தூக்கி அவள் பக்கத்தில் கிடத்தவும் , அவ்வளவு பூரிப்பு அவள் முகத்தில்,பேச ஆவியற்று சைகையினாலயே இன்னொரு பாப்பா எங்கனு கேட்கவும்
ஜெபா சாராதாவை அழைக்க அவர் பிள்ளையோடு உள்ளே வந்து " உன் பொண்ண சமாளிக்க நா இப்பவே பழகனும்போல என்னா அழுகை அழறா என மோனலிடம் புகார் அளித்தார் இப்பவே.
ஜெபாவிற்கு சந்தோசத்தில் வாய்விட்டு சிரித்தான்.
இவ்வளவு நேரம் மனைவியை பற்றிய கவலையில் இருந்தவன்,இப்போதான் தெளிந்து பிள்ளைகளை பற்றிய பேச்சில் மனங்கனிந்து சிரித்தான்.
மோனல் உதடுகள் எல்லாம் காய்ந்து,தண்ணி வேணும் என்க,செவிலியர் வந்து தண்ணிலாம் இப்போதைக்கு குடிக்ககூடாதும்மா,ட்ரிப்ஸ் முடிஞ்சதும் சொல்றோம் அதுக்குப்புறம்தான் எதுனாலும்
குடிக்கலாமா என்று கூறவும்,மோனல் கண்மூடி படுத்துக்கொண்டாள்.
அவளது அருகில் யாரோ அமரவும் கண்விழிக்கும் முன்னே அவளது காய்ந்த உதடுகளை தன் உதட்டால் ஈரப்படுத்திக் கொண்டிருந்தான் ஜெபா.
அத்தியாயம்-27
தன் மனையாளின் கண்களைப்பார்த்தான், அது நிறைவாய் சொன்னது ஆயிரம் நன்றிகளை.
தன் உதட்டை அவளிடமிருந்து பிரித்து எடுத்தவன் " டாலி ரெம்ப வலிக்குதாடா "
அவளுக்கு கண்கள் கலங்கியது " வலிச்சது ஆன இப்போ சந்தோசமா இருக்கு எனக்கே எனக்கு என இரண்டு
உயிர் வந்திருக்கு ,ரெம்ப சந்தோசம் "
அவளது நெற்றியில் முத்தமிட்டவன்,
அருகிலயே அமர்ந்திருந்தான்.
இப்படியாக மூன்று நாள் மருத்துவமனை வாசம் முடிந்து தாயையும் சேயையும் வீட்டிற்கு அழைத்து வந்தாகிற்று.
ஜீவாவின் குட்டீஸ் இரண்டும் சித்திக்கும் பிள்ளைகளுக்கும் எப்பவும் காவல்தான். அங்க இங்க நகரவிடமாட்டானுங்க.
பாப்பா பாப்பா என பிள்ளைங்க பக்கத்துலயே உட்கார்ந்து பார்த்துகிட்டே இருப்பாங்க. யார் சொல்றதும் கேட்கறதே இல்ல சுனிதா வந்து சத்தம்போட்டாதான் எழும்பி போவாங்க.
மோனலுக்குமே இன்னும் பிள்ளைகளை
சரியா பார்க்க வரமாட்டுக்கு. ஒரு பிள்ளைனாலே அவ்வளவு பார்க்கனும், இரண்டுபிள்ளை என்ற போது கஷ்டபட்டாள். குட்டிப்பையன் சமத்தா பால் குடிச்சு தூங்குவான் குட்டிப்பொண்ணுக்கு அம்மாவின் கைச்சூடு எப்பவும் வேண்டும் வேலைக்கு வேற ஆள் வைத்தாகிற்று.
வீட்ல எப்பவும் பிள்ளைங்க சத்தமாகத்தான் இருந்தது ஜெபாவிற்கு ஏக குஷி .
மனைவி பிள்ளைகளுடன் இருக்க கசக்குமா என்ன. அதுல வேற எப்பவும் மனைவியின் பக்கத்துலயே அவளை ஒட்டி உட்கார்ந்துக்கிட்டு, அவளை சீண்டிவிட்டு கிண்டல் கேலி செய்திட்டே இருக்கறது.
அவளை ஆசையாக பார்த்து பார்த்து இருந்தான். சாராதா தான் அவனை சத்தம் போடுவார் நீ வெளிய வந்து இரு
என, ஜெபா அவர் சொன்ன கொஞ்சநேரம் வெளிய இருப்பான். பின் பிள்ளைகள் சத்தம் கேட்கவும் மறுபடியும் உள்ள போயிடுவான்.
மோனல் ஏன் இப்படி மானத்தை வாங்குறீங்க. அத்தை என்னையதான் சத்தம் போடுறாங்க, கொஞ்ச நாளைக்கு இப்படி பக்கத்துல உட்காரகூடாதுன்னு சத்தம் போடுறாங்க என்று சினுங்க.
பக்கத்துல இருந்தா என்னவாம் என் பொண்டாட்டி என் குட்டீஸ் நான் பக்கத்துல இருப்பேனு சொல்லு, அப்படித்தான குட்டீஸ் என்கவும்,
மோனல் " இது உங்கம்மாகிட்ட சொல்லுங்க பார்ப்போம் "
பெரியவங்க எதாவது காரணத்தோட சொல்லுவாங்க, அவங்கிட்ட போய் எதிர்த்து பேசலாமா என அந்தர் பல்டி அடித்தான்.
மோனல் நீங்க பொழைச்சிப்பீங்க,
என்கவும் அவள் உதடுகளை தன் கரம்கொண்டு பிடித்தவன் ,என்னடி சிரிப்பு எங்கிட்ட தனியா மாட்டுவல பார்த்துக்குறேன்.
" என்ன பார்த்துப்பீங்க, நான் இப்போ இரண்டு பாடிகார்டு வச்சிருக்கேன் பார்த்துக்கோங்க " என்றவளிடம்.
அவன் " என் பிள்ளைங்க சமத்துடி, நான் சொல்றது கேட்டுப்பாங்க என சொல்லி முடிக்கவில்லை "அவனது மகள் அழ ஆரம்பித்துவிட்டாள்.
மோனல் கண்களாலே பாரு உன் பொண்ணு எவ்வளவு சமத்து என்று காமிக்க. என்னடி பாப்பா இப்படி அழறா,
என விழிவிரித்தான்.
அவள் பிள்ளையை எடுத்து பசியாற்ற
அவன்தான் மனையாளின் அழகில் சொக்கிப் போனான்.
ஒருவார விடுமுறை பிள்ளைகளுடன் சீக்கிரம் முடிந்துவிட்டது. திரும்பவும் மதுரைக்கு செல்வதற்கு எல்லாம் எடுத்து வைத்தவனின் முகம் ஒரு மாதிரி இருக்கவும் " ஏன்டா கிளம்பும்போது முகத்தை இப்படி வச்சிருக்க, முன்னாடிலாம் இருன்னு சொன்னாக்கூட எனக்கு அங்க வேலையிருக்கு, லீவ் போடமுடியாது அப்படினு, ஆனை குதிரைனு கதைவிடுவ இப்போ என்னடானா ட்யூட்டி போறதுக்கு இவ்வளவு யோசிக்குற " என ஜீவா அவனை வெறுப்பேத்திட்டிருந்தான்.
பிள்ளைகளைவிட்டு போறதுக்கு மனசே இல்லை. மோனலிடம் வந்து அமர்ந்தவன் மெதுவாக இன்னும் ஒருவாரம் லீவ் எழுதி குடுக்கட்டா என ரகசியம் பேசியவனின் முதுகில் ஒன்றுபோட்டார் சாரதா,
" என்ன சாரும்மா அடிச்சுட்டீங்க சின்ன பிள்ளையிலக்கூட நீங்க அடிச்சதில்ல " என்று புகார் வாசித்தான் .
உன் பிள்ளைங்கள நாங்க நல்லா பார்த்துப்போம் , நீ முதல்ல இங்கயிருந்து கிளம்பு ,ஜீவா பிள்ளைங்களக்கூட எங்களால சமாளிக்க முடியுது, உன் தொந்தரவுதான் அதிகம், போயி
கிளம்பு " என விரட்டியவர் மோனல்கிட்ட கம்பிளையின்ட் " அவன் பிள்ளைங்கள பார்த்தவுடனே எப்படி மாறிட்டான் பாரு.
குடும்பத்துல பெரிய போலிஸ்காரனு அவ்வளவு மரியாதை,வேலையில புலி,
இங்கப்பாரு எப்படி நடந்துக்கறான் , சின்னபிள்ளைங்களவிட மோசம் "என.
மறுபடியும் ஜெபா அறைக்குள் வரவும் சாரதா முறைத்தார், அவரின் நாடியைப்பிடித்து
"நோ கோபம் ,நான் கிளம்பிட்டேன் குட்டீஸப்பார்த்திட்டுப் போறேனே எனக் கெஞ்சவும், மோனல் சிரித்துவிட்டார் சத்தமாக, பிள்ளைங்க இரண்டையும் மாற்றி மாற்றி கொஞ்சியவன் கிளம்பி கண்களினாலே மனைவியிடம் விடைப்பெற்று சென்றான்.
அவனில்லாமல் மோனலுக்குமே ஏதோ போல இருக்க ,வாரத்திற்கு ஒரு முறை
வந்து பிள்ளைகளை பார்த்து செல்வான்.
இப்படியாக ஒன்றரை மாதம் கடந்து பிள்ளைகளுக்கு பெயர் வைக்கவேண்டும் என்று குடும்பத்தில் எல்லோரும் ஆலோசனை செய்ய
மோனல் ஜெபாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டாள் உங்க விருப்பபடி எப்படி செய்யனுமோ அப்படி செய்ங்க என்று.
ஜெபா பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன்,காலையில் சர்ச்ல பேரு வைக்க நம்ம குடும்பம் மட்டும் இருப்போம்.
அதுக்கு அப்புறமா விருந்து எல்லாமே நம்ம வீட்ல வச்சுக்கலாம் என்று முடிவு செய்தவன் மோனலைப்பார்க்க அவளுக்குமே அதில் சம்மதம்.
அப்படியாக ஒரு நல்ல நாளில் சர்ச்ல இரண்டு குழந்தைகளின் பெயரை வாசிக்க கொடுக்கும்போதுதான் மோனல் நிமிர்ந்து கனவனின் முகம் காணவும் " இது சர்ச் இப்படிலாம் என்ன சைட் அடிக்காத,வீட்ல வச்சுக்க "
அவளுக்கு வெட்கம் கலந்த சிரிப்பு,
எல்லாம் முடித்து வீட்டிற்குள் நூழையவும் பிள்ளைகளை ஆளுக்கொரு பாட்டி வைத்திருக்க,
ஜெபா அவனின் பெற்றோர் பெயரும் மோனலின் தாய் தந்தையரின் பெயரும் பிள்ளைகளுக்கு வர்ற மாதிரி பெயர் தெரிவு செய்து வைத்திருந்தான்.
'அட்ரியன் சரண்'
'ஆல்பி தர்ஷிதா'இதுதான் குட்டீசுக்கு வச்ச பேரு.
அறைக்குள் சென்ற மோனல் ஜெபாவை இறுக கட்டிப்பிடுத்து கொண்டவள்
" நன்றி மச்சான் ,நான் எதுவும் சொல்லாமலயே எனக்காக பார்த்து பார்த்து செய்றீங்க என அவனுக்கு கன்னத்தில் மெல்ல முத்தம் வைக்க ,அவனே எப்போட வாய்ப்பு கிடைக்கும்னு இருந்தான் இப்போது கிடைத்த வாய்ப்பை எப்படி நழுவ விடுவான்.
அவளின் இடுப்பை தனது கரத்தினால் வளைத்து பிடித்து தனக்கு வாகாக நிறுத்தியவன் " டாலி மச்சான உன் பக்கத்துல கூட உன் மாமியாருங்க வரவிடமாட்டுக்காங்க, குட்டீஸ்ஸ மட்டும் பார்த்திட்டு போயிடுறேன், என் பொண்டாட்டிய பார்க்க கஷ்டப்படுறேன் பாரு " என முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு பேச,
அவள் அவன் பேசவதை தலையை உயர்த்திக் கேட்டுக்கொண்டிருந்தாள். அதுவே அவனுக்கு வசதியாகிப்போயிற்று.
அவளது கண்களை ஊடுருவிப்பார்த்தவன் " முன்னைவிட ரெம்ப அழகா இருக்கடி , இப்போதான் பஞ்சு பொதிமாதிரி இருக்க, என்று தன்னோடு சேர்த்து அணைக்கவும்.
மயக்கமும் கிறக்கமுமாக அவளது உதட்டினை மெதுவாக தன் நாவல் தொட சிலிர்த்தவள்,கொஞ்சம் தன்னை எக்கி அவனோடு இன்னும் ஒட்டி நின்றாள்,அவனது கரங்கள் இப்போது அவளது சேலையினூடே உள்ள வெற்றிடையில் நுழைந்து மெதுவாக நகர அவளது கரங்கள் தடுத்தும் முடியாமல் போக அவன் போக்கிற்கு விட்டுவிட்டாள்,
அப்படியே அவளை சுவற்றோடு நிறுத்தி அவனது உதடுகள் பெண்ணவளின் உடைமறைக்காத தோளில் ஊர்வலம் போக,முன்பைவிட இப்போது அவளது ஹார்மோன்களின் நிலை சட்டென்று எகிற, உணர்வுகளின் உயர்நிலையில் இருந்தாள்,அவன் முன்னேறி மேலாடையை நீக்கப்போக அதற்குள்ளாக அவர்கள் மகளின் அழுகை உச்சஸ்தாயில் கேட்க மோனல் சட்டென்று மாயவலையினின்று வெளிவர முயற்சிக்க அவன் அவளது அதரங்களை சிறிது கடித்து திண்றே விடுவித்தான்.
சட்டென்று வெளியே போகப்போனவளின் சேலையை சரிசெய்தே அனுப்பினான்.
மகளை கையில் ஏந்தி அறைக்குள் வந்தவள் அவளுக்கு பசியாற்ற ,ஜெபா சிரித்துக் கொண்டு நின்றான்.
மதியம் எல்லா சொந்தங்களும் வர ஆரம்பிக்க வீட்டில் எல்லாரும் பம்பரமாக சுழன்று கவனிக்க, பிள்ளைகளை ஆசிர்வதித்துவிட்டு சொந்தங்கள் கடந்து செல்ல , மோனலும் பிள்ளைகளும் ஒரு வழியாகிவிட்டனர்.
சொந்தங்கள் பிள்ளைகளை தூக்கியது,எல்லாருடைய சத்தம் என பிள்ளைகள் இரண்டும் அழுகை சமாளிக்க முடியாமல் மோனல் திணறி அழவே ஆரம்பித்துவிட்டாள், பிள்ளைகள் அழுவதைக்கூட தாங்கிக்க முடியாதவள் அவ்வளவு மென்மையானவள்.
அவளும் அழுது பிள்ளைகளும் அழ ஜெபா திண்டாடிப்போனான்.
ஜீவா செக் பண்ணிட்டு " ஒன்னும் இல்லம்மா ,நிறையபேரு இன்னைக்கு பிள்ளைங்கள தூக்கிருப்பாங்கல உடம்பு வலியாயிருக்கும், தூங்கினா
சரியாயிடும் "
இரவு ஒரு மணிக்கு மேலதான் பிள்ளைங்க தூங்க ஆரம்பிக்க, ஹப்பாடா எல்லாருக்கும் ஒரு ஆசுவாசம்.
மோனல்தான் இப்போது கிறங்கிப்போனாள் ,அவளையும் தூங்க சொல்லிவிட்டு எல்லோரும் மெதுவா தூங்க செல்ல, மோனல்தான் ஜெபாவின் நெஞ்சில் சாய்ந்து விசும்ப தொடங்கினாள்.
அவன் அவளது தலையை தடவிக்கொடுத்தான், ஏன்டா பிள்ளைங்க அழறதுக்கலாமா அழுவாங்க இப்போ பாரு உன் முகமெல்லாம் வீங்கி ,என்கூட வந்துட்டா தனியா பிள்ளைங்கள சமாளிக்கனுமே எப்படி .
உங்களுக்கு தெரியாது மச்சான் இது என்னோட கனவாகவே இருந்துச்சு.
தாத்தவும் ஆச்சியும் ஒவ்வொரு தடவையும் வந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பத்தி பேசும்போதும் சின்ன ஆசை வரும்,பிறகு அவங்க பதில் சொல்லாம போயிட்டாங்கனு கேட்கும்போது ரெம்ப வருத்தமா இருக்கும்.
அதுக்கப்புறம் கல்யாணம் பேச வர்றாங்கனு சொன்னாலும் காதுல வாங்கிக்கமாட்டேன்.
அனிஷா பேச்சு எப்பவுமே உங்க குடும்பம் அதை சுற்றியே இருக்கும்.
நீங்க என் மனசுக்குள்ள மெதுவா வந்துட்டீங்க.
ஜெபா " மெதுவாவா , ஆன ரியல் லைஃப்ல அதிரடியாலா உன் வாழ்க்கையில வந்தேன் "
மோனல் இப்போ அவன நிமிர்ந்து பார்க்க" சாரி ஒரு ப்ளோல பேசிட்டேன் நீ சொல்லும்மா "
" உங்கள பார்க்கனும்போல இருந்துச்சு, அப்புறம் உண்மையிலயே உங்ககூட வாழனும்னு ரெம்ப ஆசை, சிலசமயம் நடக்க வாய்பில்லைனு தெரியும்,
என் குடும்பம் பத்தி தெரிஞ்சா கண்டிப்பா நீங்க என்ன திரும்பிக்கூட பர்க்க மாட்டீங்கனு தோணும்.
உங்களை நேர்ல ஒரு தடவையாவது பார்க்கனும்னு தான் அனிஷாக்கூட வர்ற பிளான் எல்லாம் போட்டும் பலனில்லை, அப்பறமா நானே என் மனச சமாதானம் செய்துக்கிட்டேன்.
என்னால வேறயாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது , அதனால மனசுக்குள்ள உங்களை நினச்சுப்பேன், அடிக்கடி மெயில்ல வச்சிருக்க உங்க ஃபோட்டோ பர்த்துப்பேன், உங்ககூட வாழற மாதிரி நிறைய கற்பனை செய்திருக்கேன், நம்ம இரண்டுபேருக்கும் கல்யாணம் முடிஞ்சு, நமக்கு நிறை குழந்தைங்க இருக்குற மாதிரியெல்லாம்.
என்னோட சைக்கலாஜிக்கல் பிரச்சனை எனக்குத்தெரியும்,அனிஷாவிற்கும் தெரியும்.
நீங்க இங்க ட்ரான்ஸபர்ல வர்றது எனக்குத் தெரியும் , நான் காலேஜ்ல இருந்து ஹாஸ்டலுக்கு போகும்போது சரியான டைம்ல வண்டியில உட்கார்ந்து என்ன பார்க்குறதெல்லாம் தெரியும், மனசுக்குள்ள சந்தோசமா இருக்கும், ஆனா பயமாகவும் இருக்கும் ,உங்களுக்கு நான் சரியானவ இல்லனு எனக்கு தெரியும். நீங்க கல்யாணத்தை நிறுத்த வந்திருக்கீங்கனு நினச்சா ,கடைசியில தாலிக்டடுறவரைக்கும் உங்க மனைவியா என்ன மாற்றி கூட்டிட்டுப்போவிங்க என சத்தியமா நான் கனவுலக்கூட நினைக்கல "
ஜெபா கோவமாக அவளை விலக்கி ,அவள் கண்களைப்பார்த்தான்
இப்போ இல்ல மச்சான் அப்போ என்க.
" லூசாடி நீ இப்படித்தான் தப்பு தப்பா யோசிப்பியா, காதல்னா எல்லா குறைகளோடவும் பிடிச்சு ஏத்துக்கனும், அதைவிட முக்கியம் உண்மையான அன்பு அவங்கிட்ட குறைகளைத் தேடாது "
அவளது முகம் மாறவும் சரிவிடு அதான் இப்போ எல்லாம் சரியாகிடுச்சுல்ல,பழச போட்டு ஏன் நினைக்கிற , இப்போ நான் உன் பக்கத்துல இருக்கது நிஜம்,நம்ம பிள்ளைங்க அது நிஜம், இனியுள்ள வாழ்க்கையும் நிஜம் அத உன் மனசுல நல்ல பதியவை.
ஆமா சில சமயம் என்னால நம்பவே முடியாது பிள்ளைங்களை தொட்டு தொட்டு பார்ப்பேன் என் வாழ்க்கையும்
நான் நினைச்சமாதிரி மாறிட்டு என.
ரெம்ப சந்தோசமா இருக்கும்.
அதான் இப்போ பிள்ளைங்க அழுதவுடனே தாங்கிக்க முடியல .
"நீ தூங்கு அப்புறம் குட்டீஸ் முழிச்சா தூங்க முடியாது "
அனிஷாவிற்கு எப்படி நீங்க என்ன காதலிக்கறது தெரியும். அது ரெம்ப நாளா எனக்கு அதுல சந்தேகம்.
ஜெபா " அதுவா ஐயா உனக்குத் தெரியாமலயே உன்னை விதவிதமா போட்டோ எடுத்து வச்சிருந்தேன் என்னோட மொபைல்ல, அது எப்பவும் என் மொபைல்ல யாரும் வீட்ல பொதுவா எடுக்க மாட்டாங்க, அவளுக்கு பையன் பிறந்தப்போ பார்க்க வந்தேனா, சாரா பாப்பா மொபைல்ல எடுத்து விளையாடிட்டா, உன்னோட ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்திட்டுப்போய் அனிஷாகிட்ட போட்டுக்குடுத்திட்டா, மோனல் அத்தை ஃபோட்டோ மாமா மொபைல்ல பார்த்தேனு கதை கதையா சொல்லிருக்கா போல ,அனிஷா சரியா கெஸ் பண்ணிட்டா "
மோனல் " இந்த விசயமா அனி எங்கிட்ட எதுவுமே கேட்கலையே "
ஜெபா " அத நானே உங்கிட்ட சொல்லுவேனு நினைச்சிருப்பா ,விடு அதுவா இப்போ முக்கியம் "
"பின்ன எது முக்கியம் "
இப்போதான் உன் இரண்டு மாமியாருங்களும் அமைதியா இருக்காங்க.
எதோ நான் உன்ன கடிச்சு திண்றமாதிரியே அவா பக்கத்துல போகாத ,உக்காரதனு ஏகப்பட்ட ரூல்ஸ். எப்பா முடியல உன்ன இன்னைக்குத்தான் இவ்வளவு நெருக்கமா பார்க்க முடியது.
மோனல் சிரிக்கவும் அவளது உதட்டை பிடிச்சவன் சத்தமா சிரிக்காத என் மகள் முழிச்சிக்க போறா என அவளது உதட்டினை தன் உதட்டோடு ஒட்டிக்கொண்டவன், அவளை சாய்த்து அவள் மீது இவன் சாய்ந்துப் படுத்துக்கொண்டவன் , அவளது கழுத்தில் முகத்தை வைத்து தேய்த்தவன் இப்போலாம் உன்கிட்ட வேற வாசமடிக்குதுடி என நன்றாக வாசம் பிடித்தவன் மெதுவாக கீழ இறங்கி கடித்து வைத்தான் ,அவளோ அவனது கேசத்தை பிடித்து வலிக்க இழுத்து
" மச்சான் விடுங்க "
தன் தலையை தூக்கி பார்த்தவன்
" எனக்கு வேணும் ,விடலாம் முடியாது போடி "
அவன் தலையை தள்ளிவிட அவன் மீண்டுமாக கடித்து வைக்க துள்ளியவளை அவனது ஒரு கரம் கொண்டு அடக்கியவன் , மெதுவாக அவன் வேலையைக் காட்ட , முத்தம் முத்தம் என தேகமெங்கும் முத்தமிட்டவன், அவள் மீது படுத்தவன்,
அவளது பெண்மையை தன் கரங்களில் பற்ற, அவளது கண்கள் தன்னாக சொக்கியது, அவளும் அவனுக்கு விட்டுக்கொடுத்து இளக, அவளது ஆடையைக் கழட்டி ,அவளது ஆடையில்லா தேகத்தில் தன் கரங்களை படரவிட்டு அவளை
தன் உணவாக்கி கொள்ளும் நேரம்
கதவு தட்டப்பட மோனல்தான் அவனைத்தள்ளி விட்டு தன் நைட்டியை அவசரமாக மாட்டிக்கொண்டு கதவை திறக்கப்போனாள்.
அத்தியாயம்-28
மோனல் கதவைத் திறக்கவும் அங்க அனுராதா நின்றிருந்தார். என்னம்மா எனக்கேட்க.
பிள்ளைங்க எப்படி இருக்காங்க, துங்குறாங்களா என பார்க்க வந்தேன்மா, பிள்ளைகளை பார்த்துவிட்டு மோனலிடம் ரெம்ப நேரம் தூங்குறாங்கனு அப்படியே விட்டுறாத,பிள்ளைகளுக்கு தொண்டை காய்ஞ்சி போயிடும்,எடுத்து பசியாத்தி தூங்கப்போடு என சொன்னவர்
ஜெபாவைப் பார்க்க மோனலைத் தனியாக அழைத்துப்போனவர் என்ன பேசினாரோ திரும்ப வந்த மோனல் அமைதியாக படுத்துக் கொண்டாள்.
ஜெபா மெதுவாக தலையை தூக்கி பார்க்கவும் என்ன உன் மாமியாரு தனியா ரகசியம் பேசினாங்க.
ஒன்னுமில்லையே என தூங்கப்போக,
என்ன டாலி தூங்கப்போற மச்சான கொஞ்சம் கவனிக்கறது என்றதும்.
மோனல் " அதுக்குத்தான் இவ்வளவு நேரமும் அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க உங்கம்மா ,பேசாம படுத்து தூங்குங்க, இல்லன்னா உங்க மகளை எழுப்பிவிட்ருவேன் அப்புறம் நீங்கதான் அவளை பார்த்துக்கனும் எப்படி வசதி "
இராட்சஷி பழிவாங்குற இருடி உன்ன நான் கவனிச்சுக்குறேன் என படுத்து தூங்க போனவன். பக்கத்துலயாவது வந்து படுடி , அதுக்கு கூட அனுமதி இல்லையா எனக் கேட்கவும் ,மெதுவாக வந்து அவனது அருகில் அவன்மீது கையைப்போட்டு படுத்துக்கொண்டாள்.
படுத்திருந்தவளுக்கு திடீரென்று ஞாபகம் வந்தவளாக அவனைத் தள்ளிவிட்டு கீழ இறங்கவும்,இப்போ என்னடி பிர்ச்சனை நான் தான் ஒன்னுமே பண்ணலையே,அமைதியாதான படுத்திருக்கேன் என்றவனை,இருங்க வர்றேன் என்று சொன்னவள் கப்போர்டை திறந்து ஒரு பார்சலை எடுத்து வரவும் தான் கவனித்தான் அது வளைகாப்பு அன்று அவன் கொடுத்த பரிசு.
நீங்கதான மச்சான் சொன்னீங்க குட்டீஸ் பிறந்தபிறகு திறந்துப்பாருனு அப்படியே வச்சுட்டேனா மறந்திட்டு ,என திறக்க
உள்ளே இரண்டு வெள்ளிக் கிண்ணம் கரண்டு வெள்ளிக் கரண்டி பிள்ளைங்களுக்கு தங்க கொலுசு,அதைவிட
அவளுக்கும் வளையல் தங்கத்துல இருந்தது.
அப்படியே ஆச்சர்யம்,வளையல் அப்போவே போட்விட்ருக்கலாம்,ஏன் தரலை என்றாள்.
ஜெபா " அதுவா நான் கடையில வாங்கும்போது அம்மாகிட்ட கேட்டேன் அம்மா சொன்னாங்க, அப்போ போடுற வளையல் பிள்ளைங்களுக்கு அழிச்சு நகை செய்திடனுமாம். என்னோட கிஃப்ட்
எப்பவும் உன் கையில இருக்கனும்னு நினைச்சேன் அதுதான்டா "
மோனல் " சோ ஸ்வீட் என அவன் கண்ணத்தை கிள்ளி முத்தம் வைக்க"
ஜெபா " இந்த முத்தமெல்லாம் எனக்கு வேண்டாம் "
மோனல் " கள்ள சிரிப்பு சிரித்தவள் அவன் கன்னத்தை பிடித்து கடித்து வைத்தாள் "
ஜெபா " உனக்கு முத்தம் கொடுக்கவே தெரியலடி, நான் சொல்லித்தர்றேன் பாரு" என்று அவனுக்கு தெரிந்ததை அவளுக்கு சொல்லிக்கொடுத் பின்னே விட்டான்.
காலையில் எழும்பியதும் சாரதா தான் ஜெபாவிடம் பேசினார் " பிள்ளைங்க பிறந்து இன்னும் இரண்டு மாசங்கூட முடியல மதுரைக்கு உன் கூட கூட்டிட்டு போறேன்னு பிடிவாதம் பிடிச்ச, இப்போ தாராளமா உன் பிள்ளைங்களையும்,
பொண்டாட்டியையும் அழைச்சிட்டு போடா,
நீயே அவங்களை கவனிச்சிக்கோ "
ஜெபா அரண்டுட்டான் " அம்மா பரததேவதை, சாரும்மா என் பிள்ளைங்கள கூட்டிட்டு போறேனு சொன்னது தப்பா, அதுக்கு இப்படியா பழிவாங்கனும், போதும் நேத்து ஒரு நாள் பட்டதே போதும், இனி என்கூட அழைச்சிட்டு போறேனு சொல்லவே மாட்டேன் "
ஜிவாவிற்கோ சிரிப்பை அடக்கமுடியலை, சுனிதா வாயை மூடி சிரிக்க,
அனுராதாவும் தன் பங்கிற்கு பேசினார்
" உன் குடும்பத்தை உன்னோடவே அழைச்சிட்டுப்போ, உன் பிள்ளைங்க ஒரு பக்கம் அழுதா , உன் பொண்டாட்டி ஒரு பக்கம் அழுவா நீதான் அவங்களுக்கு சரி , சமாதனம் படுத்திருவ என்றவர் , ஆனந்தராஜிடம் திரும்பி
அப்படித்தானங்க என்க அவரும் அதற்கு ஆமாம் என்று தலையாட்ட.
ஜெபா " குடும்பமா சேர்ந்து பழிவாங்குறீங்க ,என் பிள்ளைங்க வளரட்டும் சொல்லிக்குடுத்து உங்கள ஓடவைக்கிறேன் என்க."
அதற்குள்ளாக மோனல் மகன் அழுதான் என்று எழும்பி வந்தாள்.
ஜெபா அமைதியாக இருப்பதை பார்த்து
" எதுவும் பிரச்சனையா என்று பதட்டமாக கேட்க "
சாரதா பதில் சொன்னார் " அதுவா அவன் எஏதோ கெட்ட கனவு கண்டானாம்,
அதைத்தான் பேசிட்டிருந்தோம். நீ பிள்ளைங்களோட அவன்கூட மதுரைக்கு போறியா "
மோனல் " அதெப்படி முடியும் , நான் எப்படி இரண்டுபேரையும் தனியா சமாளிப்பேன், நான் போகமாட்டேன் "
அவளே சொல்லிட்டா வரலைனு நீ மட்டும் கிளம்பி போ என்று அனுராதா சொல்லிவிட்டார்
ஜீவாகிட்ட கேட்டான் " இவங்க இரண்டுபேரும் மோனலுக்கு மாமியாரா இல்ல எனக்கு மாமியாரா,என்கிட்ட அராஜகம் பண்றாங்க.
ஜீவா " அந்த சந்தேகம் எனக்கும் ரெம்ப நாளா இருக்குடா தம்பி "
ஜெபா " அப்போ நீயும் இவங்களால பாதிக்கப்பட்டிருக்க "
ஜீவா " ரெம்ப , இன்னும் பாதிப்பு கூடிகிட்டே இருக்கு, பிள்ளைங்களை கண்டிக்கறேனு அதட்டியோ ,அடிச்சோ பாரு இரண்டுபேரும் காளியாட்டம் ஆடிருவாங்கடா " என்க
அண்ணனும், தம்பியும் ஒன்றாக சிரித்துவிட்டனர்.
ஜெபாவும் கிளம்பி மதுரைக்கு சென்றுவிட்டான்
இப்படியாக நாட்கள் நகர்ந்து சென்று ஒரு வருடமாகியது ,பிள்ளைகள் ஒரளவு சமாளிக்க முடிந்தது மோனலினால்.
ஜெபாவிற்கு மறுபடியுமாக சென்னைக்கு மாற்றல் வந்தது, கிரைம் பிரான்ச்ல. வீட்டிற்கு வந்தவன் மோனலிடம் கேட்டான் என் கூடவே சென்னை வர்றியா பிள்ளைங்களை கூட்டிக்கிட்டு, ஒரு வருசமா பிரிந்து இருந்திட்டோம் என கேட்கவும் அவளுக்கு என்ன கனவன்கூட இருக்க கசக்கமா சரி என சந்தோசமாக தலையாட்ட.
ஆன அத்தைங்க இரண்டு பேர்கிட்டயும் கேட்கனும், எப்படியும் விடமாட்டாங்க, நீங்க பேசிப்பாருங்களேன்.
அவன் எல்லோரையும் அழைத்து பேசினான், வீட்டில் ஆட்சேபனை எழும்பியது எப்படி பிள்ளைங்களை சமாளிப்பா , முடியாது உன் பொண்டாட்டிய வேணாக் கூட்டிட்டுப்போ ,பிள்ளைங்கள நாங்க பார்த்துக்குறோம் என்க .
ஜெபாவுக்கு என்ன செய்யனு தெரியலை இது என்னடா புது சோதனை என்று நினைத்தவன் மோனலிடம் கண்காட்ட , அவா நான் பேசலப்பா என கைவிரித்துவிட, இறுதியாக அவனே பேசினான்
" என் மனைவி பிள்ளைங்களோட இருக்க எனக்கும் ஆசையா இருக்காதா,எனக்கு அங்க வீடெல்லாம் தர்றாங்க, நான் கூட்டிட்டுப்போறேன் சமாளிக்க முடியலன்னா நீங்க யாராவது ஒருத்தர் எங்ககூட வந்து இருங்க என்றான் ".
இதற்கு இரண்டுபேரும் சம்மதிக்க மொத்தக்குடும்பமும் சென்னைக்கு பிராயாணப்பட்டது.
யாருக்கு சந்தோசமோ இல்லையோ ஜெபாவிற்கு டபுள் சந்தோசம், வாரத்திற்கு ஒரு நாள் பிள்ளைங்கள பார்த்திட்டு வந்து அந்த வாரம் முழுவதும் பிள்ளை பொண்டாட்டினு பார்க்க எண்ணினாலும் பார்க்க முடியாம தவிச்சுட்டு இருந்தான்.
இப்போ கூடவே இருக்காங்க எனும்போது சந்தோசத்தற்கு கேட்கவா வேணும்.
இரண்டு வாரம் மொத்தக் குடும்பமும் சென்னையில் அவர்களுக்கு வீட்டை எல்லாம் சரி பண்ணிக் கொடுத்து, எல்லாவற்றையும் ஒதுக்கி பிள்ளைங்களுக்கு எல்லாம் சரிபார்த்து கொடுத்திட்டு , சென்னையை சுற்றிப்பார்த்துவிட்டுத்தான் கிளம்பினார்கள்.
ஊருக்கு கிளம்புவதற்கு முன்னாடி ஆயிரத்தெட்டு அட்வைஸ் மோனலுக்கும் ஜெபாவிற்கும், முக்கியமா பிள்ளைங்களுக்கான அறிவுரைத்தான்.
மோனல் எல்லாவற்றிற்கும் தலையை தலைய ஆட்டி சரி என்ற பிறகே மனசே இல்லமல் ஊருக்கு சென்றனர்.
இரவு நல்ல விளையாடிட்டு இரண்டு குட்டீசும் செம தூக்கம், ஜெபா நேரமாகி வரவும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்துக் காத்திருந்தாள் மனையாள்.
சாப்பிட ஆரம்பித்தவன் மோனலும் அருகில் அமர அவளுக்கும் ஊட்டிவிட்டான், ரெம்ப நாளாச்சுதுல இப்படி தனியா சாப்பிட்டு எனக் கேட்டுக் கொண்டே அவளைப்பார்க்க.
ஆமா அதுக்காக பிள்ளைங்களுக்கு இயற்கையா கிடைக்கூடிய அன்பு கிடைக்கனும், ஆச்சி தாத்தா,பெரியம்மா பெரியப்பா ,இரண்டு அண்ணனுங்க அத்தை அத்தைபிள்ளைங்க இப்படி எல்லா சொந்தத்தின் அன்பும் பாசமும்
என்னொட பிள்ளைங்களுக்கு அங்க கிடைச்சுது.
நான் எதெல்லாம் இல்லாமா ஏங்கி ஏங்கி தவிச்சனோ , அது எல்லாமே என் பிள்ளைங்களுக்கு கடவுள் அள்ளி அள்ளி குடுத்திருக்காங்க.
அதனாலதான் நீங்க ஆறுமாசத்துல மதுரைக்கு கூப்பிட்டும் வரல. நீங்க வாரத்திற்கு ஒரு முறை வர்றது உங்களுக்கு கஷ்டமிருக்காது என்று சொல்லவும்,
ஜெபாவுமே அதுவும் சரிதான் நானே கல்யாணத்திற்கு முன்னாடிலாம் எல்லாரையும் ரெம்ப மிஸ் பண்ணுவேன்,
அடிக்கடி வீட்டுக்குப்போவேன் ஆனா ஒரு நாளைக்குமேல நிக்கமுடியாது வேலை இருக்குனு ஓடிவந்திருவேன்.
சாப்பிட்டு முடித்ததும் அறைக்குள் செல்ல அனது செல்லமகள் பெட்டில் உருண்டு உருண்டு படுத்தாள்.
ஜெபாவினது சத்தம் கேட்கவும் லேசாக அரைக்கண் போட்டுப்பார்த்து அப்பாவைக் கண்டதும் ஓடிவந்து அவனது நெஞ்சில் படுத்துக்கொண்டாள்.
" தர்ஷி பாப்பா அப்படியே எங்க பாப்பா மாதிரியே பண்ணுது, அத்தைக்காரி மாதிரி சேட்டை பண்ணுவா போல " என்று மகளை தட்டி தூங்க வைத்தான்.
மோனல் கண்ணெடுக்காமல் பார்க்கவும்
" அப்பாவையும் மகளையும் கண்ணு வைக்காத "
அவள் தலையசைத்து எங்கப்பா இப்போ உயிரோட இருந்திருந்தா " எங்க மோனல் மாதிரி சேட்டை பண்றா அப்படினு சொல்லிருப்பாங்கள "
அவ்வளவுதான் அவளை சட்டென்று தன் பக்கம் இழுத்து தன்னோடு தோளில் சாய்த்துக்கொண்டான்.
மகளை அவளது இடத்தில் படுக்க வைத்தவன். தன் மனைவியை கவனிக்க ஆரம்பித்தான்.
" டாலி இன்னும் பழசை நினைச்சுட்டே இருப்பியா "
மோனல் " அது எப்படி மறக்கும் அம்மா அப்பா மறக்கூடிய உறவா ,இருந்திருந்தா நல்லாயிருக்கும் என அடிக்கடி
தோணும் "
" நான் கொஞ்சநேரத்திற்கு மறக்க வைக்கட்டா " அவள் வெட்க பார்வை பார்த்து, குனிந்துக் கொண்டாள்.
அவ்வளவுதான் ஜெபா அவளை தன் கையில் தூக்கிக்கொண்டு பக்கத்து அறைக்குப்போக,மோனல் ஐயோ பிள்ளைங்க ஒத்தையில தூங்குறாங்க மச்சான்.
அப்படிங்கற நம்ம இங்க படுத்துப்போம்
என அவளை இறக்கிவிட்டவன் ,
கட்டில் படுத்துக்கொண்டு அவள் கையைப்பிடித்து இழுத்து தன்மீது போட்டுக்கொண்டவன்.
வெயிட் போட்டுட்டடி, ஆனாலும் நல்லா இருக்கு என்ன. அவள் அவனது வாயை கையால் மூடவும் என்னடி அசிங்கமா பேசுன மாதிரி வாயை மூடுற, என அவளது காதில் பல ரகசிய வர்த்தைகளை பேசியவன் இப்போ எப்படி வாயை மூடுவ என்க.
ச்சீ ,போலிஸ்காரர் வர வர ரெம்ப கெட்டுப்போயிட்டார்.
" அப்படிங்கற "
மோனல் "ம்ம், ஆமா " என தலையசைக்க.
அது உன்னை பிரிஞ்சிருந்த ஏக்கம்டி, எவ்வளவு கெட்டுப்போயிருக்கேனு பார்ப்பமா "
மோனல் " ஐய ரெம்ப கெட்டப்பையன் நீங்க "
அதையும் பார்த்திருவோமா என்று அவளை இழுத்து அவளது கழுத்தில் கடித்து வைத்தவன், இன்னும் கீழ் இறங்கி கடிக்க ,கூச்சத்தில் நெளிந்தவளை ,கெட்டப்பையன் இப்படித்தான் செய்வான் என்று அவளை தனக்குள் இறுக்கி வைத்தவன்
உள்ளம் முழுவதும் காதலும் அன்பும் நிறைந்த இருவரும் ஒருவரை ஒருவர்
கண்களினால் பேசிக்கொள்ள
அவளது அதரங்களை தன் உதட்டினால் மெதுவாக இழுக்க,கீழுதடு அவன் வசம் கடித்து இழுத்து முத்தம் வைக்க ,பெண்ணவள் தன் கரத்தினால் அவனது தோளை பற்றிக்கொள்ள,
உடைகளைந்து
தன்னவளின் பெண்மை திண்று
கீழிறங்கி நாவினால் நாபித்தொட்டு
உச்சம் பெற்று
பெண்ணவளின் உடலை இயக்கினான்
பெண்ணவள் துடித்து கிளர்ந்து
நாயகனின் கைப்பாவையாக
நாயகனோ வேகம் கொண்டான்
வேகம் தாளாது பெண்ணவள்
காவலன் அவன் கேசம் பற்ற
இன்னும் வேகம் கொண்டு
உயிராக கலந்தனர் இருவரும்.
அப்படியே மூச்சு வாங்க மோனலின் தலைக்கோதி ,உடலெங்கும் முத்தம் வைத்து தன் மார்பில் போட்டுக்கொணண்டான் அவளை.இருவரும் தேகச்சூட்டினை இடமாற்றிக்கொண்டு படுத்திருந்தனர்.
மோனல் மெதுவாக எழும்பியவள் ஹீட்டர் வைத்துக் குளித்து வந்து பிள்ளைகளை கவனித்து படுத்து தூங்கப்போக , மெதுவாக மீண்டும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து தூங்கலானான்.
அவனுக்கு இப்போது பொறுப்பு கூடியதால் , இரவு வர தாமதமாகியது.
ஆனாலும் மோனல் சமாளித்தாள்.
சரண் அமைதியாக இருப்பான்
மோனலைப்போல, தர்ஷிதா ரெம்ப சேட்டை இருவர் மேலையும் உயிரையே வைத்திருக்கா, அவளுக்கான முதல் சொந்தமல்லவா.
ஜெபாவிற்கு அவள்தான் உயிர், அவனது நினைவு எல்லாமே அவளும் குழந்தைகளுமாக மாறிப்போனது. மோனலின்றி அவனுக்கு ஒன்றும் ஓடாது, தனிமையின் தேவை என மனயாளை தன் கைவளைவிலயே வைத்திருப்பான்,
ஜெபாவிடம் ஒரு நாள் கேட்டாள் மும்பைக்கு எங்க வீட்டுக்கு ஒரு நாள் போயிட்டு வருவோமா,எனக்கும் கல்யாணமாகி குழந்தைங்களோட நல்லா இருக்கேன் என காமிக்கனும் என்று சொல்ல, அடுத்த மாதத்தில் ஒரு நாள் மும்பைக்கு தன் கனவன் பிள்ளை சகிதமாக சென்றவளுக்கு முகங்கொள்ளா சந்தோசம்.
சரவணன்- தர்ஷனா வாழ்ந்த அந்த வீட்டிற்கு செல்லவுமே , மனதில் அவளுக்கு ஒரு நிம்மதி.
அவர்களைப் பார்ப்பதற்கு மேனலின் அம்மா பாட்டியும் தாய்மாமக்களும் வந்து பிள்ளைகளை பார்த்து வாழ்த்தி சென்றனர்
வக்கீலும் வந்து பார்த்துவிட்டு சென்றார்.
நாயகியை அவர் வீட்டிற்கு சென்று பார்த்து வந்தாள், இரண்டு பிள்ளைகளும் இல்லாமல் தனியாக கொடுமையான வாழ்க்கை அது .
அவரவர் செய்தது அவரவருக்கு, நன்மை செய்தாள் நன்மை,தீமை செய்தாள் தீமை.
ரஞ்சிதாவிற்கு இன்னும் மோனல் மேல உள்ள வஞ்சம் போகவில்லை,
அவளது தங்கைக்காக வக்கீலிடம் பேசி கொஞ்சம் கல்யாணத்திற்கு நகை பணம் தந்து உதவுவதாக பேசிருந்தாள்.
ஆனால் வரன்தான் அமையவில்லை தகப்பன் இல்லை ,அண்ணன்காரன் ஜெயிலில், ரஞ்சிதாவின் குணம் ஊரெங்கும் பிரசித்தம் சொந்தங்களுடன் ஒட்டுவதில்லை அதனால் வரன்கள் வந்தாலும் தட்டிப்போனது.
மோனல் யாருக்கும் எந்தவிதமான கெடுதலும் நினைக்கவில்லை,செய்யவும் இல்லை அதனால் அவள் குணத்திற்கு தக்க நல்ல கனவன், நல்ல குடும்பம் குழந்தைகள் என ஆசிர்வதித்திருந்தார்.
யாருமற்றவளாக வாழ்ந்தவளுக்கு ஜெபா என்ற உயிரின் மூலம் கனவன் குழந்தை தனக்கென தனி சொந்தங்கள் என சுற்றம் சூழ இப்போது ஆலமரமாக நிற்கிறாள் மோனல் என்ற தூய்மையான உள்ளம் கொண்ட மனுஷி.
இப்போது ஜெபா என்ற ஆண்மகனை ஒற்ற பார்வையில் வீழ்த்தி,சுயநலமற்ற காதலால் அவனது மனைவியாகி அவனது நினைவாகி,உயிருமாகி, அவனுக்காக அவளும், அவளுக்காக அவனும் எண்ணம் கொண்டு வாழ்கின்றனர்
அவளது என்னம் போல எதிர்காலமும் இன்னும் நன்றாக அமையும்.
முற்றும்
What's Your Reaction?






