உறைபனி என்னில் பொழிகிறாய்-1

உறைபனி என்னில் பொழிகிறாய்
அகிலா ஐயாதுரை
அத்தியாயம்-1
சென்னையின் வாகன நெரிசலில் மெயின் ரோடு சிக்னலில் காத்திருக்கும்போது பின்பக்கம் அமர்ந்திருந்த தன் அம்மாவிடம் "இப்போ உங்களுக்கு சந்தோஷமா, நல்லத் தூங்கிட்டிருந்தவனை எழுப்பி, இந்த குளிருல குளிக்கச் சொல்லி என்ன டார்ச்சர் செய்து கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க...அப்படியென்ன வேண்டுதல் உங்களுக்கு, அதுதான் உங்க ஆத்துக்காரர் பேங்கில் வேலைப் பார்த்து சேர்த்து வச்சுருக்காருதான, உங்க பையங்க நாங்க நல்லா சம்பதிக்குறோம், வேறென்னமா வேண்டிக்கப்போற, சாமிய வேற சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதம்மா"என்று எரிச்சலில் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி என்ற அபிரிஷி.
"அப்பாவை அழைச்சுட்டு வந்திருக்காலாம்தான, இந்த ட்ரபிக்லா பொறுமையாக போக அவரால் மட்டுந்தான் முடியும்"என்று மறுபடியும் புலம்பியபடியே வர பின்னாடியிருந்த விஜயெலட்சுமி சிறிது நேரம் அமைதியாகவே வந்தார் , அவனது புலம்பல் தாங்க முடியாமல் அவனது முதுகில் ஒன்று போட்டார்.
ம்ம்மா அடிக்காதம்மா...பின்னாடி இருந்து பொம்பளை பிள்ளைங்கலாம் பாக்குறாங்க பாரு என்று சொல்லவும்.
அதுதான் ஹெல்மெட் போட்ருக்கியே.உன் முகம் என்ன வெளியவா தெரியப்போகுது...சும்மா கத்தாதடா சிக்னல் விழுந்துட்டு வண்டிய எடு என்றார்.
வர வர நீ ரொம்ப அறிவாளி ஆகிட்டே வர்றம்மா...இவ்வளவு அறிவு உனக்கு தேவையில்லை குறைச்சுக்கோ என்று முனங்கியவாறே வண்டியை எடுத்தான்.
கோவிலில் இறங்கி தனையனை உள்ளே அழைக்க, அவன் அவரை முறைத்துக்கொண்டே கடவுள் நம்பிக்கையில்லாத என்னைய உள்ளக் கூப்பிடுறப் பாரு, அதுக்காகவே உன் தைரியத்தை பாரட்டுறேன் விஜி" என்றவன் அங்கயே நிற்கவும்...அவனை முறைத்துப் பார்த்தவர் நீ வந்தாதான் உள்ளப் போவேன்னு பிடிவாதமாக நிற்க,காலையிலயே நோ வயலன்ஸ் உனக்காக வர்றேன் என்று அன்னையோடு நடந்து சென்றவனை, இரு ஜோடி கண்கள் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தன.
அந்த கண்களுக்கு சொந்தமானவள் சிறிது நாட்களுக்குப்பின் இன்று தான் வெளியுலகிற்கு வந்திருக்கிறாள். அதுவும் ரிஷியும் விஜயலெட்சுமியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு லேசாக அவளது கண்கள் விரியத்தான் செய்தது.
அவளருகில் வந்த அவளது அம்மா, வாம்மா உள்ளப்போகலாம் என்று கையைப் பிடித்து அழைத்து சென்றார்.
ரிஷியின் அம்மா அருகில் நிற்க, அவனருகில் அந்தப்பெண் வந்து நின்றாள்.
அவளது பெயருக்கு அர்ச்சனைக்கு கொடுக்கும்போது அவள் பெயர் "சந்தனா" என்று சொல்லும் போது தான் ரிஷி திரும்பி பார்க்க...
எந்தவித சலனமும் இல்லாமல் முகத்திலும் கண்களிலும் சோகத்தின் உருவமாக நின்றிருந்த அவளை கண்டதும்... சிறிது புருவம் உயர்த்திப் பார்த்தான்.
சந்தனா பெயருக்கு ஏற்றவாறு சந்தன நிறம் கொண்டவள் தான், எந்தவித ஒப்பனையுமின்றி இருக்கும் இயற்கையின் அழகி. ஆனால் அந்த வயதுக்கே உண்டான எந்தவித அலைப்புருதலும் கண்களில் இல்லை. சுவாரஷ்யமும் முகத்தில் இல்லை,சாமி கும்பிடச் சொல்லுறீயா கும்பிடுறேன்... சாஷ்டாங்கமா விழ சொல்றீயா விழறேன்...என்ற ரீதியில் நின்றிருந்தாள்.
கண்கள் எங்கயோ அடிக்கடி வெறித்திருந்தது.
அர்ச்சனை முடிந்து தட்டைக் கொடுக்கவும் அவளது அம்மாதான், அவளது நெற்றியில் திருநீறிடப் போக உடனே தடுத்து நிறுத்தியவள் வேண்டாம்மா, இதெல்லாம் எதுக்கு என்றவள் வெளியே சென்று நிற்க, அவளது அருகில் இரண்டுபேர் வந்து நின்றனர்.
அவர்கள் அவளது தலையை வாஞ்சையாக தடவி விட, இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி புரிந்துக்கொண்டான்
அது அவளது அண்ணன்கள் என்று அதைப் பார்த்ததும் ரிஷிக்கு உடனே சின்னத்தம்பி படம் நியாபகத்திற்கு வரவும் சத்தமாக சிரித்துவிட்டான், அவனது சிரிப்பு அந்த காலை நேரத்தில் சத்தமாக கேட்கவும் எல்லோரும் ரிஷியைப் பார்த்து முறைத்தனர்.
தனது பின்னந்தலையில் லேசாக தட்டிக்கொண்டு "ஐயோ ரிஷி சத்தமா சிரிச்சுட்டயே... சமாளி என்று அசட்டு சிரிப்பு சிரித்து குனிந்துக் கொள்ளவும், விஜயலட்சுமி அவனை தீர்க்கமாக பார்த்து என்னடா இப்படி சிரித்து, என் மானத்தை வாங்கற. சாமி கும்பிட பிடிக்கலைனா அமைதியாக இரு என்று அதட்டவும்,
கண்களால் சும்மா மா...என்று சமாதானம் பேசினான்.
சாமி தரிசனம் முடித்து கிளம்பி வரவும், வெளியே அந்த சந்தானாவின் குடும்பம் முழுவதும் நின்றிருந்தது, ஏதோ வேண்டுதல் போல அதற்காக கோவிலுக்கு வருபவர்களுக்கு பார்சல் வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
அவளை சுற்றித்தான் அவளது அண்ணன்கள் மூவரும் நின்றிருந்தனர், யாரும் அவளது அருகில் நெருங்கிவிட முடியாதபடி.
தனது அம்மாவின் தோளைத்தட்டி"விஜி அங்கப்பாரு; சின்னத்தம்பி குஷ்பு நிக்குது பாரு என்றதும்..
குஷ்பு வா? இங்கயா? என்ன உளறுரான்? என்று திரும்பி பார்க்க, அங்கே சந்தனாவும் அவளை சுற்றி அவளது அம்மா, அண்ணன்கள் என்று ஒரு பட்டாளமே நின்றிருந்தது...
அவனது தோளில் லேசாக தட்டியவர், உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான், கொடுத்து வச்ச பெண், எவ்வளவு பாசமான சொந்தங்கள் அவளுக்கு, அதைப்போய் பரிகாசம் பண்ற பாரு உன்னை என்றவர் அவனை இழுத்துக்கொண்டு செல்ல முயற்சிக்க...இரும்மா என்ன நடக்குதுனு பார்த்திட்டு வர்றேன்.
சத்தியமா இந்த வீட்டுக்கு மருமகனாகப் போறவனின் நிலையை நினைச்சிப் பார்த்தேன்மா....அவன் ஜாதகத்துல கண்டக சனி இருந்தா மட்டுந்தான் இந்த வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ணுவான், ஐயோ! யாரு பெத்தபிள்ளையோ? மாட்டிக்கிட்டு முழிக்கப்போகுது என்றவனின் பேச்சை தனது காருக்குள் போவதற்காக வந்த சந்தனா முழுதாகக் கேட்டுவிடவும்...
கோபத்தில் அவன் முன் நின்றிருந்தவள் ரிஷியை பார்த்த பார்வையில் பொசுங்கிடுவான்போல...அப்படி முறைத்தவள் "ராஸ்கல் அறிவில்லை அடுத்தவங்களை, அதுவும் உனக்குத் தெரியாதவங்களை பற்றி வெறும் கண்ணால் பார்த்ததை வச்சு எடைபோடுற, மேனர்ஸ் இல்ல " என்றவள் தனது காருக்குள் சென்று அமர்ந்துவிட.
எப்பா என்ன பார்வைடா சாமி...பார்த்தே மனுஷனைக் கொன்றுவாப் போல என்று மனதில் நினைத்தவன், அவள் பேசியதைக்கேட்டு கோபம் வர, அவளது காரின் அருகில் சென்று குனிந்து "நான் நாகரீகமாகத்தான் பேசினேன், ஆனால் நீ தான் மரியாதை இல்லாத வார்த்தையை பயன்படுத்துற. உனக்கு மரியாதைனா என்னனுத் தெரியாதா? என்று எகிறியவனை, இழுத்துக் கொண்டு வந்தார் விஜிம்மா. கோபத்தில் தனது வண்டியை எடுத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தனர்.
வீடு வந்து எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு சமயலறையில் நின்றிருந்த தனது மருமகளிடம் சென்றவர் அவளுடன் பேசிக்கொண்டிருக்க,
காபிக்காக உள்ளே வந்த ரிஷியை இப்போது பிடித்துக்கொண்டார் விஜிம்மா.
கோயிலுக்கு போகும் போதே குறை சொல்லிக்கிட்டே உள்ளே வந்த...வந்ததுமில்லாமல், அங்க வந்த ஒரு பொம்பளை பிள்ளைக்கிட்ட வம்பு இழுக்குற.
என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல இன்னையிலிருந்து உனக்கு குரு பார்வை தொடங்குதாம்... அதனாலதான் சரி காலையில கோயிலுக்கு போயிட்டு வந்துருவோம்னு அழைச்சிட்டுப் போனேன். இனியாவது பொறுப்பாக இரு, முன் கோபத்தையும், விளையாட்டுத்தனத்தையும் விடு, உனக்கு பொண்ணு பார்க்க தொடங்கப் போறோம்"
இதைக் கேட்டதும் தான் ரிஷி என்னது பொண்ணு பார்க்கப் தொடங்கப் போறீங்களா... ஏன்மா நான் நல்லா இருக்கது உங்களுக்கு பிடிக்கலையா...இதுக்குத்தான் ஹைதராபாத்ல இருந்தவனை அவசரமா லீவு போட்டு வரச் சொன்னீங்களா? என தனது அம்மாவையும், அண்ணியையும் முறைத்தவன்...நான் சாயங்காலமே கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு, தனது அறைக்குள் சென்று முடங்கிவிட்டான்.
மருமகள் மாமியாரைப் பார்த்து கண்களை உயர்த்தி என்ன செய்யவென்று கேட்டுக்கொள்ள...அவரோ கண்ணசைத்து பார்த்துக்கலாம் என்று தைரியமாக சொன்னார்.
அந்தவீட்டின் தலைவர் ராமகிருஷ்ணன்,அவரது மனைவி விஜயலெட்சுமி.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் அபிநந்தன் அவனது மனைவி வர்ஷா, அவர்களுக்கு ஒரு குட்டிப்பையன்...இரண்டாவது மகன்தான் அபிரிஷி எம்.பி.ஏ. முடித்துவிட்டு ஹைதரபாத் நகரில் ஒரு பிரபலமான கம்பேனியில் வேலை பார்க்கின்றான், நல்ல சம்பளம்.
ஆனால் திருமணம் என்றால் மட்டும் காத தூரம் ஓடுவான்...இப்போதைக்கு வேண்டாம் கொஞ்சநாள் பேச்சிலர் லைஃப் நல்லா என்சாய் பண்ணனும்னு அவனோட ஆசை. அதுவுமில்லாமல் தனக்குனு ஒருத்தி வந்தா அவளை நல்லா பார்த்துக்கணும், அதுக்கு நல்ல சம்பாத்தியம் பண்ணி சேர்த்து வச்சுட்டுத்தான் பொண்ணுபார்க்க ஆரம்பிக்கணும்னு, என திட்டம் நிறைய போட்டு வச்சிருக்கான்...இங்க என்னடானா எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா அழிக்குறமாதிரி பொண்ணு பார்க்கப் போறாங்களாமா என்று கறுவிக் கொண்டே மாலையிலயே கிளம்பி ஹைதரபாத் சென்றுவிட்டான்.
வர்ஷாவோ தனது அத்தையிடம் வந்தவள் "என்னத்தை ரிஷி கிளம்பிட்டான். நம்ம போட்ட பிளான் எதுவும் சரியில்லை போல என்ன செய்ய...அப்பாகிட்ட வேற வர்றோம்னு சொல்லிட்டனே" என்று கவலையாக தன் அத்தையிடம் கேட்க.
அதுதான் நானும் யோசிக்குறேன்...என் தம்பிக்கிட்ட என்ன பதில் சொல்றதுனு, உன்னை மாதிரியே சின்ன தம்பி பொண்ணையும் என் வீட்டு மருமகளாக கொண்டு வந்துட்டம்னா.
குடும்பம் ஒன்றாக இருக்கும். சின்னவன் வந்தவன் பிடிகொடுக்காமல் ஓடி போயிட்டானே... அடுத்த தடவை வரும் போது எப்படியாவது இந்த கல்யாண பேச்சை முடித்து இருக்கணும்... அதுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு" என்று மாமியாரும் மருமகளும் ரிஷியை திருமண வாழ்வில் தள்ளிவிட திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
ஹைதராபாத் வந்து சேர்ந்து, தனது வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவனுக்கு அந்தக் கம்பெனியின் மேனேஜரிடமிருந்து அழைப்பு வர அவரை சென்று பார்த்து வந்தவனுக்கு.... மண்டை வெடிச்சிடும் போல இருந்தது.
ஆம் அந்த கம்பெனியை சென்னையில் உள்ள பிரபலமான தொழிலதிபர் ஒருவர் வாங்கி விட்டாரென்றும், நிறைய வேலை ஆட்களை மாற்றப்போகிறார்கள் என்றும்...அதனால் ஆட்குறைப்பு இருக்கும் என்று தகவல் சொல்லியிருந்தார்.
ஏனென்றால் ரிஷி அங்கு வேலை செய்ய ஆரம்பித்து இரண்டு வருடம் மட்டுமே ஆகியிருந்தது என்பதால் அந்த ஆட்குறைப்பில் அவனும் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று மறைமுகமாக உணர்த்தி இருந்தார்.
இப்பொழுது ரிஷி தனது அம்மாவை நினைத்துக் கொண்டான்.விஜயலட்சுமி குருபெயர்ச்சினு சொன்னியேம்மா. சனிப்பெயர்ச்சியும் சேர்ந்து இருக்கிறது என்று அந்த ஜோசியக்காரன் உன்கிட்ட சொல்லாம விட்டுட்டானேம்மா என்று நினைத்தவன் தனது அம்மாவிற்கு அழைத்து நேரடியாகவே சொல்லிவிட்டான்.
இனி எங்கேயாவது கோயிலுக்கு அந்த பெயர்ச்சி இந்த பெயர்ச்சினு கூட்டிட்டு போன, உன்னை தத்து கொடுத்திடுவேன் பார்த்துக்கோ...என்று கடிந்துக் கொண்டான்.
அவனுக்குத் தெரியவில்லை அவனே அவனுக்கு ஆப்புத் தேடி செல்லப்போகின்றான் என்று.
ஆம் அடுத்த நாள் அவன் வேலைப்பார்க்கின்ற கம்பேனியின் புது எம்.டி வந்திருந்தார்.
அவராகவே எல்லா ஊழியர்களையும் அழைத்து நேரடியாகவேப் பேசினார் ஆட்குறைப்பு பற்றியும் அதனால் அவர்களுக்கு உண்டான எல்லாமே இந்த மாதத்திற்குள்ளாகவே செட்டில்மென்ட் முடித்துக் கொடுத்துவிடவும் பேசினார்.
ரிஷியோ இருக்கிறவனுக்கு ஒருவேளை இல்லாதவனுக்கு ஆயிரம் வேலை என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு வேலையில் ஈடுபட்ட போது எம்.டியிடம் இருந்து நேரடியாக அவனுக்கு அழைப்பு வந்தது, அவரைப்போய் பார்க்கவேண்டும் என்று.
என்னத்தை சொல்லிடப் போறானுங்க நீங்க இங்க வேலை செய்ததுக்கு நன்றி..இனி வேற எங்கயாவது பார்த்துக்கோங்க...நல்ல பாலிஷ்போட்ட வார்த்தைகள் வரும் அவ்வளவுதான்...இதக் கேட்கறதுக்கு, எதுக்கு அங்க போகணும் என்று நினைத்து போகவில்லை.
இரண்டாம் முறை அழைப்பு மேனேஜர் மூலமாக ரிஷிக்கு வந்தது, என்னடா இவனுங்களோட ரோதனையாப் போச்சுது என்று எழும்பி எம்.டியின் அறைக்கு சென்றவன் அனுமதி பெற்று உள்ளே செல்ல.
அங்க அவனது அப்பா வயசில் ஒருவர் கோல்டன் பிரேம் போட்ட கண்ணாடியுடன் பணத்தின் செழுமையை பறைசாற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அவனைக் கண்டதும் எப்படி இருக்கீங்க ரிஷி என்று அவனை பெயர் சொல்லி அழைத்து விசாரிக்கவும், ஆள் லேசுபட்டவரில்லை, நம்மளைபற்றி ஏ டு செட் தெரிந்துதான் வந்திருக்காரு என்று புரிந்தவன்.
அவருக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கவும் மேனேஜர் வந்ததும் .எம்.டி கேட்டார் என்ன மேனேஜர் சார் நீங்க ரிஷிக்கிட்ட விசயத்தை சொல்லலையா?
மேனஜரோ இல்லை சார், நீங்களே சொல்றதுதான் நல்லதுனு தோணுச்சு அதுதான் என்றதும் எம்.டி சத்தமாக சிரித்துக்கொண்டு ஒரு கவர் எடுத்து அவனிடம் கொடுத்தார்.
வாழ்த்துகள் ரிஷி. எங்க சென்னை கம்பேனியில் எச்.ஆர் மேனேஜராக உங்களை ப்ரோமோட் செய்திருக்கோம். உங்களுக்கு விருப்பம்னா அடுத்த மாதத்திலிருந்து அங்க சேர்ந்திடுங்க...உங்களை மாதிரியான நல்ல வேலையாட்கள் எங்களுக்குத் தேவை என்றதும்.
அவன் சிறிது யோசித்தவன் "சாரி சார் என்னோட முடிவை யோசிச்சுத் தான் சொல்லமுடியும்,ஏன்னா அந்த வேலையில் சேரும்போது எனக்கு என்ன சாதகம் பாதகம் என யோசித்து தான் சொல்லுவேன் பரவாயில்லையா? என்று நேரடியாகவே கேட்டான்.
அதனால் ஒன்னுமில்லை...நீங்க உங்களுக்குத் தேவையான நேரம் எடுத்து யோசிங்க. இந்த மாதக்கடைசி வரைக்கும் உங்களுக்கு நாளும் நேரமும் இருக்கு என்று சொல்லவும், அவர்மேல் சிறிது நம்பிக்கை வரப்பெற்றவன் விடைப்பெற்று தனதிடத்திற்கு சென்றான்.
அன்றிரவே தனது அம்மாவிற்கு அழைத்து பேசியவன், வேலை விஷயமாக யோசித்து ஒரு முடிவெடுத்திருந்தான்...அந்த முடிவு தான் அவனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போடப்போகுது என்று தெரியாமல் போயிற்று ரிஷிக்கு.
What's Your Reaction?






