உறைபனி என்னில் பொழிகிறாய்-17

Mar 30, 2024 - 18:29
 0  492
உறைபனி என்னில் பொழிகிறாய்-17

அத்தியாயம்-17

மாணிக்கவேல் மிகவும் தைரியமாகவே பொண்ணுக்கேட்டு வந்திருந்தார்.

அவர் இருந்த தோரணையிலயே பொண்ணு எங்களுக்கு வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியது...விஷ்வேஷ் அழகன் தான் பணத்தின் செழுமையை அவனிடம் காணமுடியும்.

மாணிக்கவேல் குடும்பத்தை வரவேற்று உபசரித்து பேச அமர்ந்த நாகராஜ் என்ன மாணிக்கவேல் சார் தாம்புலத்தட்டோடு வந்திருக்கீங்க...வீட்ல எதுவும் விசேஷமா என்று கேட்டதும்.

அது உங்கப் பையன் ப்ரணவ் கல்யாணத்துல  உங்க பொண்ணை பாரத்திருக்கான்போல, அதான் என் பையனுக்கு உங்க பொண்ணை கேட்டு வந்திருக்கேன் என் குடும்பத்தோட...என் பையனும் நல்ல படிச்சிருக்கான், ஒரு பையன்தான், பிள்ளைங்க விருப்பம்தான நமக்கு முக்கியம்...சரி இதுக்கு எதுக்கு நாளைக் கடத்துவானேன், நல்லக் காரியத்தை ஏன் தள்ளிப்போடுவானேனு உடனே வந்திட்டேன் என்று சொல்லியவர் சிரித்தார்.

நாகராஜ் மெதுவாக மன்னிக்கணும் சார்... உங்களுக்கு எப்படி உங்கபிள்ளைங்க விருப்பம் முக்கியமோ அப்படித்தான் என் பிள்ளைங்க விருப்பம்தான் எனக்கு முக்கியம்...அதுதவிர என் தங்கச்சிப் பையன் ஆதிக்குத் தான் என் பொண்ணைக் கொடுக்குறதா சின்னவயசுலயே முடிவு பண்ணிட்டோம், பொண்ணு இல்லைனு சொல்றதுக்காக மன்னிக்கணும் என்று தன் மறுப்பை நாசுக்காக சொன்னார்.

உடனே விஷ்வேஷ் எழும்பி அதெப்படி அங்கிள் உங்க தங்கச்சிப் பையனுக்குனு நீங்கதான பேசிருப்பீங்க... இப்போ அது இல்லைனு சொல்லி எனக்கு கட்டிக்கொடுங்க அங்கிள்...அவனைவிட நான் நல்ல சாய்ஸ் அங்கிள்...கண்டிப்பா உங்கப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்கும்...வேணா கேட்டுப்பாருங்களேன் என்று எந்தவித மரியாதையும் இல்லாமல் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவாறே நாகராஜிடம் பேசினான்.

இப்போது ரித்திக் எதுவோ சொல்ல வாயெடுக்க...ஜமுனா அவனது கையைப் பிடித்து வேண்டாம் என்று தலையசைக்கவும் விட்டுவிட்டான்...அவன் ஆதிக் கூட சந்தனா விசயமாக சிறுவயதிலிருந்தே சண்டைப்போட்டாலும், ஆதியைத்தான் ரித்திக்கிற்கு பிடிக்கும்.

ஆதிதான் சந்தனாவுக்கு நல்ல மாப்பிள்ளை,உயிரா பார்த்துப்பான் எனத் தெரியும்.

இப்போது நாகராஜ் இல்லைத் தம்பி அது சரிவராது...எங்க இரண்டு பிள்ளைங்களும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க...

அதனால அவங்க விருப்பப்படி தான் நடக்கும் என்று இறுதியாக உறுதியாக பேசி முடித்துவிட்டார்.

அப்போதுதான் சந்தனா வெளியே வர, விஷ்வேஷ்  அப்படியே எல்லோரின் முன்பும்... ப்ளீஸ் அங்கிள் சந்தனாவை எனக்கு குடுங்களேன்.. நான் நல்லா பார்த்துப்பேன்...உங்க தங்கை பையனைவிட ரொம்ப ரொம்ப நல்ல பார்த்துப்பேன் என்று எல்லோரின் முன்பும் சிறுபிள்ளைப் போல கேட்கவும்...

ரித்திக்கோ அவ  என்ன பொம்மையா நீ கேட்டதும் குடுக்கறதுக்கு...எங்க வீட்டு இளவரசி, உணர்வுள்ள மனுஷி அவளுக்கு யாரைப்பிடிக்குதோ அவங்களைத்தான் கல்யாணம் பண்ணி வைப்போம்...இந்த ஜென்மத்துல ஆதி அத்தானைத்தான் அவளுக்குப் பிடிச்சிருக்கு...ஒன்னு பண்ணுங்க வேணும்னா அடுத்த ஜென்மத்துல ட்ரை பண்ணிப்பாருங்களேன் என்று சொல்லவும் மற்ற எல்லோரும் லேசாக சிரித்தனர்...

விஷ்வேஷிற்கோ கேவலப்படுத்துறான் என்று தெரிந்தது...

நாகராஜ் தான் ரித்திக் இது என்ன புதுப்பழக்கம் பெரியவங்க பேசும்போது குறுக்க பேசுறது என்று கடிந்துக்கொள்ள...சாரிப்பா என்று தலைகுனிந்து நின்றான்.

இதுவும் விஷ்வேஷிற்கு ஒரு குட்டாக இருந்தது...பெரியவங்க பேசும்போது குறுக்க மறுக்க பேசறது தப்பு என்று.

இப்போதுதான் விஷ்வேஷ் ஆதியை நிமிர்ந்து பார்த்தான். அங்கு ஆதியும் சந்தனாவும் கண்களாலயே காதலை பரிமாற்றம் செய்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்தவனுக்கு அப்படியே நெஞ்செல்லாம் எரிந்ததுப் போல உணர்வு..சட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட, மாணிக்கவேல்  எங்களுக்குத் இது  தெரியாது நாகராஜ் மன்னிச்சிடுங்க என்று சாதரணமாகவே பேசிச்சென்றார்.

உள்ளுக்குள் எரிமலையாக கொதித்து தான் சென்றார்...அவருக்கு இந்த என்.சி.குரூப் ஆப் கம்பேனியில்...எப்படியாவது ஒரு முக்கியமான ஆளாக மாறனும்னு நினைத்து தான் காய் நகர்த்தினார்..அவருக்கு எல்லாம் தெரியும் தன் மகனை வைத்து காய் நகர்த்தினார்...அது முடியாமல் போகவே அடுத்து தன் மகள் இருக்கின்றாள், இவனுங்கள்ள ஒருத்தருக்காவது கட்டிக்கொடுத்திடனும் என்று திட்டம்போட்டுத்தான் அமைதியாக வந்தார்.

மாணிக்கவேல் ஏற்கனவே நிறைய ஏற்றுமதி இறுக்குமதியில் கணக்கு காட்டாமல் இருந்ததால்...ஆதியும் வைபவும் நாகராஜிடம் எல்லாவற்றையும் கூறியிருந்தனர்.

அவங்க பங்கையும் அந்த கம்பேனியில் இருந்து நம்மளே வாங்கி அதை முழுசா நம்மளோடதாவே மாத்திடுங்க என்று  சின்னவர்களுக்கு  ஆலோசனை கூறிவிட்டு தான் அதிலிருந்து விலகிவிட்டார்...

இதுவரைக்குள்ளது மட்டுமே நாகராஜ் மற்றும் குடும்பத்தாருக்குத் தெரியும்...

அடுத்தடுத்து நடந்தவைகள் ஏதேச்சையாக நடந்தது என்றே இன்றளவும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணிக்கவேல் குடும்பம் வந்து சென்றதும் உடனே பெரியவர்கள் பேசி ஒரு மாதத்திற்குள் ஆதி-சந்தனா திருமணத்தை நடத்தி முடிக்க முழுமூச்சாக வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

அன்றிரவு நல்லத் தூக்கத்தில் இருந்த சந்தனாவை யாரோ தூக்குவதுப்போல உணர பதறி விழிக்க...ஆதியின் கையிலிருந்தாள், அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டே அமைதியாக அவன் கையிலயே இருக்க.

மொட்டை மாடியில் இறக்கிவிட்டவன்,

அப்படியே அவளை பின்னாக இருந்து இறுக அணைத்து: சந்து டார்லிங் இப்போ நீ என்ன நினைக்குற என்று ஆதி கேட்கவும்.

உங்களுக்கு பைத்தியம் முத்திப்போச்சு...சீக்கிரம் வைத்தியம் பார்க்கணும்னு தோணுது த்தான்.

அவள் தலையில் லேசாகத் தட்டியவன்...ஏன்டி உங்க ஒருத்தருக்குமே இந்த ரொமான்டிக் ஃபீல்னா என்னனேத் தெரியாதா? இதுல வேற ஒருத்தன் லவ் மேரேஜ்... இவன்லா என்னத்தை லவ் பண்ணிருப்பான்...சரி சரி அதவிடு...உனக்கு ஒரு ஃபீலிங்கும் வரலையாடா என்று ஆதி ஏக்கமாக கேட்கவும்.

திரும்பியவள் லூசாத்தான் நீங்க...பாதி தூக்கத்துல மொட்டைமாடிக்குத் தூக்கிட்டு வந்து ஃபீலிங்க் வந்துச்சா? வரலையானு கேட்டுட்டு இருக்கீங்க...என்றவளை முறைத்துப் பார்க்க.

அப்படியே அவனது தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

அப்படித்தான்   நல்ல தூங்குமா ராசாத்தி...தாலாட்டுப்பாடவா? சந்துமா இன்னும் ஒருமாசத்துல நமக்கு கல்யாணம் அடுத்தவருசம் இதே நேரத்துல என் பிள்ளைக்கு தாலாட்டுப்பாடணும்னு, அத்தான் ஒரு பிளானோட களத்துல இறங்கியிருக்கேன்டா. இப்படித்தூங்குனா அத்தானோட பிளான்லாம் என்னகறதுடா?

அவனது நெஞ்சிலிருந்து தலையை சரித்து தன் ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்து...த்தான் மணி என்னனுப் பாருங்களேன்.

மணியா பனிரெண்டுடா...

கொஞ்சமாவது மனசாட்சி இருக்கத்தான்...பேய் வரக்கூடிய நேரத்துல ஒருத்தியத் தூக்கிட்டு வந்துட்டு,டயலாக்கா பேசுறீங்களே என்று சிணுங்கியவளின்.

தலையை நிமிர்த்தியவன் அவளது கண்களை பார்த்து...பேசறுதுதான தப்பு என்றவன்...அப்படியே அவளது இதழ்களை முற்றுகையிட்டான்.

இதை எதிர்பார்க்காத சந்தனாவோ தன் கண்களை விரித்து ஆதியைப் பார்க்க, அவனோ கண்களை மூடு என்று கண்களாலயே சைகை செய்து அவனும் கண்களை மூடி முத்தத்தை ரசிக்க ஆரம்பித்தான்.

ஆதியின் கைகளுக்குள் பாந்தமாக நின்றுக்கொண்டாள் சந்தனா...பின் மெதுவாக அவளை விடுவித்து தன் கண்களைத் திறந்துப் பார்த்தவன்...இன்னும் லயித்தான்...சந்தனாவோ கண்களை மூடி முதல் முத்தத்தில் திளைத்திருந்தாள்.

அப்போதுதான் உணர்ந்தாள்  அவளது கைவிரலைப் பிடித்து மோதிரம் போட்டுக் கொண்டிருந்தான் ஆதி...வாவ் சுப்பர் த்தான் என தன் கண்களை விரித்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள்.

பின் அவளது கையில் ஒரு மோதிரத்தைக் கொடுத்து தனக்கு போடச் சொன்னவன் தனது விரலை நீட்டவும்...அதில் எழுதியிருந்ததை படித்துப்பார்க்க அதில் சந்தனா என்று எழுதியிருந்தது...அவளது விரலில் இருந்த மோதிரத்தில் ஆதி என்று  இரண்டுபேரோட பெயர்களும் மாற்றி மாற்றி எழுதியிருந்தது. அவனுக்கு அதை போட்டுவிட்டவள் அப்படியே அவனது விரலில் முத்தம் வைக்க...

கஞ்சம்டி நீ...நான் எங்க கொடுத்தேன்..நீ எங்க கொடுக்குறபாரு என்று அலுத்துக்கொண்டான்.

கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்குறேன் த்தான்...

அதுக்கு இன்னும் ஒருருஉஉஉ  மாசம் இருக்கு என்று இழுக்க.

ஒருருஉஉஉஉ மாசமில்லை..

ஜஸ்ட் ஒருமாசந்தான்.. ஓடிப்போயிடும் என்று சொல்லி சிரிக்க...

ஆமா..ஆமா..வா குளிருதுப்பாரு  உள்ளப்போகலாம் என்று இழுக்க..அவள் அப்படியே நின்றாள்...

"என்ன..வா" என்று ஆதி அழைக்க...

"வரும்போது எப்படி வந்தேன்...ம்ம்ம்" என்று சந்தனா கேள்வியோடு முடிக்க...சட்டென்று குனிந்து அவளைத் தூக்கியவன்...ரொம்ப ஈஸியா தூக்கிடலாம் உன்னை...

சாப்பிடுறியா எப்படி...நாளையிலயிருந்து  நான் ஊட்டிவிடுறேன் நிறய சாப்பிடு அத்தான் மாதிரி ஸ்ட்ராங்கா ஆகிடுவ...

"சரி"என்றவளை தூக்கிக்கொண்டு அவளது அறையில் விட்டுவிட்டு திரும்பியவன், மெல்ல கதவருகில் நின்று...

தனது அறையை சுட்டிக்காட்டி அடுத்தமாசத்துல இருந்து அதுதான் நம்ம ரூம் நியாபகம் வச்சிக்கோடா என்று கிறக்கமாக கூறியவனை...

முதுகைத் திருப்பி போய் தூங்குங்க நேரமாகிட்டு என்று அனுப்பிவிட...மனமே இல்லாமல் தன்னறைக்கு போனான்.

அடுத்த நாள் கல்லூரி முடிந்து வீடுவரும்போது வீட்டில் யாருமில்லை..அமைதியாக இருந்தது, வந்தவள் வேலைக்காரங்களிடம் கேட்டதற்கு தெரியலைம்மா என்றுவிட்டனர்...

நேகா தான் வீட்டில் இருந்தாள் "அண்ணி எல்லோரும் எங்க போய்ட்டாங்க, வீட்ல அம்மாக்கூட இல்லையே...நான் வரும்போது  யாராவது ஒருத்தர் இருப்பாங்களே அத்தையவும் காணலை என்று கேட்டதும்..

அவள் உளறிக்கொட்டிவிட்டாள்

எல்லோரும் ஹாஸ்பிட்டலுக்குப் போயிருக்காங்க...

அவ்வளவுதான் யாருக்கு? என்னாச்சு? அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அங்கமல்லவா அவளுக்கு...பதறி அழுதுகொண்டே கேட்கவும், திருமணமாகி பத்து நாளேயான அவளுக்கு இங்குள்ளவர்களைப் பற்றி சரியாகத் தெரிய வாய்ப்பில்லை என்பதால்.

ஆதவ் ப்ரதருக்குத் தான் எதோ ஆக்ஸிடெண்டுனு சொன்னாங்க..ப்ரணவ்.

அவ்வளவுதான் சந்தனாவுக்கு என்ன செய்யவென்றுத் தெரியாமல்...தன்னுடைய போனில் இருந்து ஆதிக்கு அழைத்துப்பார்க்க...அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

அவ்வளவுதான் தன் தந்தைக்கு அழைத்து விவரம் கேட்டு நேராக மருத்துவமனைக்கே சென்றுவிட்டாள்...

அங்கு சென்றவள்  பார்த்தது, ஆதி மயக்கத்தில் இருக்க, காலில் கட்டுப்போட்டிருந்தது. இப்போதுதான் ஆப்பரேஷன் செய்து கொண்டு வந்திருந்தனர்...ஆம் கார் ஆக்ஸிடெண்ட்...ஆதி சென்ற காரில் இன்னோரு மினி லாரி மோதியிருந்தது.

சீட்பெல்ட் போட்டு ஓட்டியதால் பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருந்தான். காலில் மட்டும் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது...

அவனைப் பார்த்தவுடன் ஓடிச் சென்று  அவனது முகம் முழுவதும் முத்தம் வைத்து  ஒரே அழுகை...அவளை சமாதானப்படுத்துவதற்குள் ஒருவழியாகிவிட்டனர்.

இப்படியாக ஒரு பெரிய ஆபத்திலிருந்து  தப்பியிருந்தான். அவர்களது திருமணமும் தடைப்பட்டது.

ஆதிக்கு கண்டிப்பாக ஆறுமாத காலம் ரெஸ்ட் தேவை என்பதால், வீட்டிலிருந்தான்.

சந்தனாதான் அப்படியே சோர்ந்துப் போனாள்...அவனருகிலயே இருந்தாள்...வலிக்குதா த்தான் என்று  மணிக்கொருதரம் கேட்பாள்...

ஒரு நாள்  அவளை அருகில் இருத்தி எனக்கு ஒன்னுமாகலை...சரியா நான் நல்லாயிருக்கேன்...இன்னும் கொஞ்சநாள்ல எழுந்து நடந்துருவேன். நீ கவலைப்படுறமாதிரி ஒன்னுமில்லை.

புரியுதாடா என்று அவளது தலையை வாஞ்சையாக கோதிக்கொடுத்தான்.

பெரியவர்கள் அவர்களது ஜாதகத்தை கொண்டுபோய் திருமணத்தை எப்போது வைக்கலாம் என்று கேட்கபோக...அங்கயோ பெரிய குண்டாக தலையில் தூக்கிப் போட்டுவிட்டனர்.

ஆதியின் ஜாதகப்படி இன்னும் ஒரு வருடம் கழித்துதான் திருமணத்தை வைக்கவேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டனர்.

ஏற்கனவே ஆதிக்கு அடிப்பட்டிருந்ததால் இதுவும் நல்லதுக்குத் தான்...எப்படியும் அவங்க இரண்டுபேருக்கும்தான் கல்யாணம் நடக்கப்போகுது. இப்போ என்ன இன்னும் ஒரு வருடம் கழித்து வைக்கணும் அவ்வளவுதான் என்று ஆதிக்கு சமாதானம் சொல்லியிருந்தனர்.

அதற்குள் ப்ரணவின் மனைவி நேகாவும் கர்ப்பமாக இருக்க...ஒரேடியாக குழந்தைப்பிறந்தபிறகு வீட்டுல சுபகாரியம் வைக்கலாம் என்று பெரியவர்கள் பேசி முடிவெடுத்துவிட்டனர்.

இப்படியாக நாட்கள் செல்ல சந்தனாவின் படிப்பு முடிந்து கடைசி பரிட்சை அன்றுக் அவளைக் காணவில்லை...அவள் வரும் நேரமாகியதும் அவளுக்கு  அழைக்க  அவளது மொபைலை எடுத்தது விஷ்வேஷ்...

உடனே சுதாரித்து  செயல்பட்டு மாணிக்கவேலை மிரட்டி சந்தனா இருக்கும் இடம் கண்டுபிடித்து அங்கு செல்ல...சந்தனாவை அடித்து மிரட்டி உட்கார வைத்திருந்தான்.

அப்படி என்கிட்ட இல்லாதது உன் அத்தைபையன்கிட்ட என்னடி அதியசயமா இருக்கு...அவனைவிட நான் அழகாத்தானடி இருக்கேன்...நீ அழகிதான் என்னையவ மயக்கிட்டயே...அதுக்காக உன்னை உன் நொத்தைப்பையன் அந்த ஆதிய மாதிரிலாம் தாங்கித்தடவ மாட்டேன்...இந்த அழகெல்லாம் கட்டிலுக்கு மட்டுந்தான்...இருடி உன்னை எப்படியாவது கல்யாணம் பண்ணி உங்கண்ணனுங்களுக்கு ஒருபாடம் கத்துக்கொடுக்குறேன்...என்று பேசி அவளை அடித்திருந்தான்.

ரித்திக் அப்போழுது வெளியூருக்கு சென்றுவிட்டான்.

மற்ற நான்குபேரும் ஆதிக்குத்தெரியாமல் சந்தனாவை அவனிடமிருந்து மீட்டு...

அவனை நையப்புடைத்திருந்தனர்.

சந்தனாவிடம் வெளியே சொல்ல வேண்டாம் என்றிருந்தனர்...அதுவும் ஆதிக்கும் ரித்திக்கிற்கும் கண்டிப்பாக தெரியவேக் கூடாது என்று...தன் குடும்ப நலனுக்காக அவளும் வெளியே மூச்சுவிடவில்லை.

அப்போதே அவனை எதாவது செய்திருந்தாள்...ஒரு உயிரின் இழப்பைத் தடுத்திருக்கலாம். அடிப்பட்ட பாம்பு மீண்டும் படமெடுத்து ஆடும்போது மொத்தக் குடும்பமும் ஸ்தம்பித்தது.

அடுத்த இரண்டாவது மாதத்திலேயே சந்தானாவை எம்.பி.ஏ படிப்பதற்கு அமெரிக்காவில் ப்ரணவ் படித்த கல்லூரியிலேயே  ஏற்பாடு செய்து அவளை அங்கு அனுப்புவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டனர்...

ஆதிதான்" டேய் சதிகாரர்களா...ஏன்டா என் சந்தனாவ என்கிட்டயிருந்து பிரிக்கறீங்க...நான் என்னடா உங்களுக்கு பாவம் செய்தேன்...

ப்ரணவைப் பார்த்து உனக்கு மாப்பிள்ளைத் தோழனா நின்றிருக்கேன், நான் செய்த உதவிக்கு இதுதான் பிரதிபலனாடா .

இப்போதானடா நல்ல நடக்க ஆம்பிச்சிருக்கேன்...என் சந்துவ கூட்டிட்டு வெளியலாம் சுத்துறதுக்கு ப்ளான் போட்டேன்...அது உங்களுக்கு பொறுக்கலையா? இனி எவனுக்கும் மாப்பிள்ளை தோழனா நிக்கமாட்டேன்டா என்று சபதமெடுத்தான் அதுவே பலிக்கப்போவது தெரியாமல்.

வீட்டையே இரண்டாக்கினான்...யாருகிட்ட கேட்டுடா அவளை அங்கபடிக்க வைக்க ஏற்பாடு செய்தீங்க என்று கேட்டான்...

வைபவ் "மச்சான் ஒன்னு பண்ணு, நீயும் புதுசா பிஸினஸ் கோர்ஸ் எதாவது  படிக்க சந்தனாக்கூடவே போயேன்...

இரண்டுபேரும் சேர்ந்துப் படிங்க.. ஜெக ஜோதியா இருக்கும்"

ஹே இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே...தேங்க்ஸ் மச்சான் என்று அவனை கட்டிக்கொண்டு...கன்னத்தில் பச்சக்கென்று முத்தம் வைக்க.

அடேய்...எத்தனை தடவ சொல்றது கிஸ் பண்ணாதனு...பாக்குறவங்க தப்பா நினைக்குறாங்கடா...அன்னைக்கு  ஆபிஸ்ல முத்தம் கொடுக்கும்போது அந்த பிஏ பார்த்திட்டு ஓரு மாதிரி முகத்தை சுழிச்சிட்டு போறாடா...வெளியப்போய் என்னத்தை சொல்லி வச்சாளோ என்று தலையில் அடித்துக்கொண்டான். வெளிய தெரிஞ்சா எனக்கு பொண்ணுதரமாட்டாங்கடா.

பத்தடி தள்ளியே இரு என்று அவனைத் தள்ளிவிட்டான்.

சந்தனா அமெரிக்கா கிளம்புவதற்கு முன் ஆதியிடம் வந்தவள்...அவனைக் இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அத்தான்...நீங்களும் அங்க வந்திருங்க சேர்ந்து படிக்கலாம் என்று விசும்ப...

கொடுமைடா  சேர்ந்து ஹனிமூன் போகற நேரத்துல படிக்க அனுப்புறான் உங்க அண்ணன்...என் வில்லன்.

புரிஞ்சிக்கோடி இப்பவே இருபத்தியெட்டு வயசாகிட்டுதுடி...இன்னும் இரண்டு வருசத்தக்குள்ள உன்னை கல்யாணம் பண்ணி...என் பிள்ளைக்கு அம்மாக்குறதுதான்  இந்த ஆதியோட  இலட்சியமே...ஒத்துழைச்சிரு தங்கம் என்று அவளது கன்னத்தில் முத்தம் வைக்க...வைபவ் உள்ளே வந்தான்.

இவன் ஒரு விவஸ்தை கெட்டவன் கொஞ்மாவது இங்கிதமிருக்கா பாரு, தங்கச்சியும் மச்சானும் ரொம்ப நாள் பிரிஞ்சிருக்க போறாங்களே, இரண்டுபேரும் ஒரு மார்க்கமா இருப்பாங்களேனு யோசிக்கறானப் பாரு நம்மளை பிரிக்கதுக்குனே வருவான் என நொடித்துக்கொள்ள...அவனோ அடங்குடா பிளைட்டுக்கு நேரமாகிட்டுது சீக்கிரம் வாங்க என்றான்.

சந்தனா இப்போதுதான் சிரித்தாள்...சிரிக்கும் அவளிதழை தன் உதட்டிற்குள் கொண்டுவந்தவன், சிறிது நேரம் கழித்தே விட்டான்.

 வெளியே சென்ற சந்தனா ஆதியைப் பார்த்து திரும்பி கண்ணடித்து முத்தம் டபுள் ஸ்ட்ராங் த்தான் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்...

ஆதியோ ஏக்கப்பார்வை பார்த்து நின்றான்.அவனின் உயிருக்குள் அல்லவா சந்தனா சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றாள் எப்படி பிரிந்திருக்கப் போறமோ என்று துடித்தான்.

பிறந்ததிலிருந்தே பிரிந்ததில்லை...இந்தப் பிரிவு நிரந்தரப்பிரிவுக்கு ஒத்திகையாக கடவுள் கொடுத்தாரோ என்னவோ.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow