தெள்ளழகே லிங்

ஹாய் டியர்ஸ்...
இதோ அமேசான் நேரடிக்கதையோடு வந்துட்டேன்.
தெள்ளழகே அமேசான் நேரடிக் கிண்டில் கதை படிச்சிட்டு உங்க ஸ்டார்ஸ்ஸை போட்டுவிட்டுங்க அப்படியே ரிவீய்வையும் தட்டிவிடுங்க.
டீஸர்...
கிருஷ்ணன் தனது நண்பனுக்குப் போன் பண்ணி வண்டியில் இருந்துக் கீழவிழுந்ததையும் அடிபட்டதையும் சொல்லிக் காரையெடுத்துட்டு வரச்சொன்னான்.
அவன் ஆக்ஸிடெண்டுன்னு சொன்னதுமே அவனோடு சேர்ந்து கூட நாலுபேரும் ஓடிவந்துவிட்டனர்.
அங்கே கூடியிருந்தவர்கள் ஒவ்வொருத்தராக கலைந்துச் செல்ல அவனது மனசு முழுக்க தனது மனைவியின் நினைவுகள் வந்து முட்டிமோதத்தான் செய்தது.
இந்த இரண்டுவருஷத்துல கடந்துப்போன வாழ்க்கையில் இருந்து மீண்டு வந்துட்டேன்னு நினைச்சிருந்தேன்.ஆனால் அப்படி இல்லை போலிருக்கே!திடீர்னு மனசுக்குள்ள வந்து உட்கார்ந்து ஆட்டுறாளே!இது சரியில்லையே என்னை வேண்டாம்னு சொன்னவளை நான் எதுக்கு நினைக்கணும்? என்று வீம்புக்கு அவளது நினைப்பை ஒதுக்கித் தள்ளினான்.
அதற்குள் நண்பர்களும் வந்துவிட உடனே காரில் ஏறி அப்படியே ஹாஸ்பிட்டல் போயிட்டான்.
பெருசா அடியில்லை என்றாலும் அங்காங்கே சிராய்ப்புகளும் தோல் வழண்டும் இருந்தது.
அதனால் நர்சுளே மருந்துப் போட்டுவிட்டனர்.
இப்போது கால் கொஞ்சம் வலிக்கவும் தாங்கித் தாங்கி நடந்தவன் இனி கல்குவாரிக்குப் போக முடியாது என்று நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்.
அவன் கைகாலெல்லாம் கட்டுப்போட்டு வருவதைப் பார்த்த அவன் அம்மா பூங்கோதை ஓடிவந்து அவனைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தார் அழுதார்.
“அந்த சிறுக்கி காலையிலயே அவங்க வீட்டுல பிரச்சனை செய்திருக்கான்னு உங்க அக்கா சொல்லும்போதே ஏதோ அசம்பாவிதம் நடக்கபோகுதுபோன்னு நினைச்சேன் நடந்துட்டு.அந்த ஊர்ப்பொறுக்கி நாயை ஒருத்தன் பொண்ணுப் பார்க்க வந்தானாம் ஒரே பிரச்சனையாம்.உன் மாமனாரு அவளையும் சேர்த்து பேசிருக்காரு.உங்க அக்கா மைதிலி போன் பண்ணிச் சொன்னாள்.அப்பவே நினைச்சேன் இப்படியாகிட்டே”என்று அழுதார்.
@@@@@@@@@@@@
ஆவுடையப்போனோ வீட்டுக்கு வந்து எல்லோரையும் சரமாரியாகத் திட்டிக்கொண்டிருந்தார்.
அவன் உள்ளே செல்லவும் நேரடியாகவே”நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க? அந்த ராதாவை வேண்டாம்னு விவாகரத்துப் பண்ணிட்ட இந்த மூணு வருஷமா அவ வேண்டான்னு ஒதுங்கியே இருந்தாச்சு.. இப்ப நம்ம மகன் தனியா இருக்கானேன்னு நம்ம ஊரிலேயே ஒரு கஷ்டப்பட்ட பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க எல்லாம் பேசி முடிச்சிருக்கேன். ஒருவாரத்துல கல்யாணம் என்கிற நிலைமையில இவன் அந்த ராதா பின்னாடி போயிட்டு இருக்கான். மறுபடியும் இவனுக்கு எதுவும் பைத்தியம் கேத்தியம் பிடிச்சுட்டா என்ன?”என்று கேட்டுச் என்று சத்தம் போட்டார்.
“அதுக்கு இப்போ என்னவாம்? எதுக்கு எல்லோரையும் பிடிச்சு விரட்டிட்டு இருக்கீங்க. அது என் மகளைப் பார்த்தேன் அவளைக் கொஞ்சினேன். அவங்கம்மாகிட்டக் குடுத்துட்டு வந்தாச்சு. இதையேன் எல்லோரும் பெருசா பேசிட்டிருக்கீங்க?”
“நீ ராதாவையும் அவ மகளே பார்த்தைத்தான் தருணிகா கவனிச்சுட்டு இப்ப அவங்க அப்பா கிட்ட போய் அழுறாளாம். இவரு எனக்கு வேண்டாம் அவங்க பொண்டாட்டியதான் இப்பவும் நேசிக்கிறாங்க காதலிக்கிறாங்க. அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால் எப்படி நான் அவரோட வாழ்வேன்? அவரோட அன்பு எனக்கு எப்படி கிடைக்கும் என்று அழுதிருக்காள். இதுக்கு இப்ப என்ன பதில் சொல்ல போற? கல்யாணத்தை நிறுத்திடுவோமா?”
“அப்பா அது ராதாவை நான் விவாகரத்து பண்ணிட்டேன்னு தெரிஞ்சுதானே சம்மதிச்சா. எனக்கு மகளும் இருக்கிறான்னு அவளைக்குத் தெரியும்தானே .அதுவும் எனக்கு இரண்டாவது கல்யாணம்னு தெரிஞ்சுதானே தருணிகா இந்த கல்யாணத்துக்கு சம்பாதிச்சா? நானும் என் மகளை நான் பார்க்கணுமே. காலமெல்லாம் அவளுக்கு என்ன செய்யணுமோ அதெல்லாம் நான் செய்வேன். அதுக்கு அவள் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் செய்வேன்,அவளை நான் பார்க்கவும் செய்வேன். இதுக்கு சம்மதம்னா கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுங்க. இல்லைன்னா அவங்க அப்பாவை வேற ஏதாவது மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்க சொல்லுங்க”
அதைக் கேட்டதும் பூங்கோதை ஓடிவந்து “என்னடா தம்பி இப்படி பேசுற அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ உன் மகளை எல்லாம் பாத்துக்கோ. அதுக்குள்ள நான் சிவலிங்கத்துக்கிட்டப் பேசி தருணிக்காவை சம்மதிக்க வைக்கிறேன். நீ தருணிக்காவையே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கோ. எத்தனை நாள் இப்படி ஒத்தையிலே இருப்ப?” என்று சூசகமாக ராதா வேண்டாம். தருணிகாதான் உன் மனைவி என்பதை கிருஷ்ணனிடம் திணிக்க முயன்றார்.
“ம்ம்ம் அதை தருணிகாவிடம் தெளிவாகப் பேசிடுங்க. என் தலையைப்போட்டு உருட்டாதிங்க. கல்யாணத்துக்கு எனக்கு சம்மதம்தான்”எனப் பேசியவன் இதற்குமேல் இங்கிருந்தால் ஏதாவது சொல்லி சண்டைதான் போடுவாங்க என்று நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டான்.
திருவிழா நேரம் என்பதால் ஆடல் பாடல் என்று பல நிகழ்வுகள் இருக்கும் அதை பார்த்துக் கொண்டு நள்ளிரவில் நண்பர்களோடு சேர்ந்து நல்ல குடித்துவிட்டுப் போதையில் இப்பொழுது தனியாக வண்டியில் வந்து கொண்டிருந்தான்.
அப்போது அவன் வரும்வழியில் டேக்ஸி ஒன்று நின்றிருக்க அதனருகில் டிரைவரும் அதில் வந்த ஒரு மனுஷனும் கையை காட்டி வண்டியில் லிப்ட்டு கேட்டார்கள்.
“என்னடா இந்த நேரத்துல டேக்ஸியில வந்திருக்கீங்க. என்ன பிரச்சனை?”என்று இறங்கிக்கேட்டான்.
“அண்ணே கிருஷ்ணாண்ணே நான் உங்க பிரண்டு மூர்த்தியோட தம்பிண்ணே!கார் திடீர்னு நின்னுட்டு.இவருக்கு நம்ம ஏரியாவுக்குத்தான் போகுணுமாம். கொஞ்சம் அங்க விட்றுறீங்களா. எனக்கு உதவியாப் போகும்”
“ஓஓ திருவிழாவுக்கு வந்த விருந்தாளியா?”
“ஆமாண்ணே”
“சரி சரி வண்டியில ஏறச்சொல்லு”
சரிண்ணே என்றதும் அவனது காரில் வந்தவரிடம் பேசி கிருஷ்ணனின் வண்டியின் பின்னாடி ஏத்திவிட்டான்.
“கொஞ்சம்தூரம் சென்றதும் உங்க பேரு என்ன?யாரு வீட்டுக்குப் போகணும்?”என்று பொதுவாக விசாரித்தான்.
“என் பேரு மோகன்சார். நான் சென்னையில் இருந்துவர்றேன் .இங்க நல்லத்தம்பி அவங்க வீட்டுக்குப்போகணும்.நான் நேரமே வந்துடலாம்னுதான் பஸ் ஏறினேன்.பஸ் ஏறின நேரமும் சரியில்லை.இங்க வந்து அன்டைம்ல இறங்கி டேக்ஸி பிடிச்ச நேரமும் சரியில்லை.எப்படியாவது ராதா அப்பாகிட்ட பேசிடணும்னுதான் ஓடிஓடிவந்திருக்கேன்”
“ராதா அப்பாவா?அவரு உங்களுக்கு யாரு?”
“அவரு எனக்கு யாரும் இல்லைங்க.அவங்க மகள் மட்டும் சம்மதிச்சா அவரு என் மாமனாராகிடுவார்”
அதைக்கேட்டதும் உடனே பைக்கை நிறுத்தியவன் அப்படியே திரும்பிப் பார்த்தான்.
“என்ன சார் வண்டியை நிறுத்திட்டீங்க?கதையை வண்டியை ஓட்டிக்கிட்டே கேட்கலாம்ல”
“இல்லை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னீங்கன்னா நல்லத்தம்பி மாமா வீட்டுக்குக் கொண்டுவிடுறேன் சார்”
“ஓ சூப்பர்.உங்களுக்கும் ராதா அப்பா மாமாவா?”
“ஆமா உங்களுக்கு எப்படி மாமாவா மாறுவார்? ராதாவை எப்படித் தெரியும்னு சொன்னால் தெரிஞ்சுப்பேன் சார்”
“அதுவா சார் ராதாவை நான் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டு அவங்க வீட்டுல பொண்ணுக் கேட்டேன். அவங்க சம்மதிக்கலை. அந்தக்கோபத்துல நான் என் பிரண்டுக்கூட பெங்களுர் போயிட்டேன். ஒரு வாரம் லீவுல வந்து பார்த்தா ராதா வேலையை ரிசைன் பண்ணிட்டா. அவங்க வீட்டுக்குபோய் பார்த்தால் ஊருக்கு போய்ட்டாங்கன்னு சொல்லிட்டாங்க, அதுதான் விசாரிச்சு அப்புறம் இங்க வந்து சேர்ந்து இருக்கேன்”
“ராதாவுக்கு உங்களைப்பிடிக்குமா? அவ உங்களைக் காதலிச்சாளா?”
“ஏன் இப்படி சந்தேகமாகக் கேட்கிறீங்க சார்?”
“இல்லை ராதாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆகிட்டுதே.ஒரு குழந்தையும் இருக்கே.அவளை எப்படி நீங்க காதலிக்க முடியும்?”
“இது என்ன சார் இப்படி கேள்வி கேக்குறீங்க? நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க ராதா ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு குழந்தைகளுக்கு தெரியும். அந்த கல்யாணத்துல அவள் நிறைய கஷ்டப்பட்டு அது வேண்டாம்னுத்னே விவாகரத்து வரைக்கும் வந்திருக்கா? அது வேற காதல் கல்யாணம் வேற சொல்லிக்கிட்டாங்க. காதலிச்சு கல்யாணம் பண்ண இப்படித்தான் பொண்டாட்டிய பாத்துப்பானா? காயப்படுத்திக் கொண்டுவிடுவானா? பெத்த பிள்ளைய பாக்காம இருப்பானா? அப்போ அவனுக்கு ராதா மேல காதலே இல்லைன்னு தெரியுது. இல்ல அப்படிப்பட்டவனோடு வாழ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா? இனி அவளோட வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கணும். அவ நல்ல மனசுக்கு நல்லா இருக்கணும்.ராதா அமைதியான சாந்தமான பொண்ணு. எல்லாத்தையும் பொறுத்துப் போற பொண்ணு. தப்புன்னா தப்புன்னு சொல்ல கூடிய பொண்ணு. அப்படிப்பட்ட பொண்ணு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ஒருமுறைதான் அவ கல்யாணம் வாழ்க்கை நாசமா போய்ட்டுன்னா அடுத்த முறை அப்டியே ஆகணும்னு இல்லையே. நான் அவளை நல்லாப் பார்த்துப்பேன். என்ன எங்க அம்மாவுக்குதான் அவள கொஞ்சம் பிடிக்கல . ஆனால் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா அவங்களுக்கு பிடிக்கும்”
“ஓஓஓ அப்போ ராதா சம்மதிச்சிட்டா. அவங்க வீட்டுலதான் சம்மதிக்கலை அப்படித்தானே”
“அந்தக்கதையை ஏன் சார் கேட்கறீங்க! ரெண்டு வருஷத்துக்கு மேல அவ பின்னாடி சுத்தி சுத்தி வந்து இதுக்கு மேல எங்க காதலை சொல்லாமல் இருந்தால் சரிபடாதுன்னு மண்ணையும் கல்லையும் பார்க்கிற மாதிரி பாத்துட்டு போயிட்டாள். எங்க அம்மா ஏற்கனவே கோவத்துல இருந்தாங்களா அவங்க வீட்டுக்கு பொண்ணு கேக்க போகணும்னு கூட்டிட்டு போயி மொத்தமா முடிஞ்சுவிட்டுட்டாங்க சார். அவளுக்கு என்னைன்னு இல்லை வேற யாரையுமே பிடிக்காது முதல் கல்யாணத்தை நினைத்து இன்னும் வேதனையில் இருப்பா போல”
“அப்போ எதுக்கு சார் அவளைத் துரத்தி வர்றீங்க? அதுதான் அவளுக்கு பிடிக்கலைல. அவங்க குடும்பத்துக்கும் பிடிக்கலை. அப்படியே விட்டுட்டு போக வேண்டியது தானே! இந்த அத்த ராத்திரி நேரத்தில ஒரு பொம்பளைய தேடி வந்திருக்கீங்க. அதுவும் கல்யாணம் ஆகி விவாகரத்தான பொண்ணை தேடி வந்திருக்கீங்க.நீங்க இந்த ஊருக்குள்ள வந்தீங்கன்னா அவளை பத்தி இந்த ஊரு எவ்வளவு தப்பா பேசும்? உங்களாலதான் மான மரியாதை போச்சு நாங்க குடும்பத்தார்கள் அவளை அடிக்க மாட்டாங்களா திட்ட மாட்டாங்களா ஏற்கனவே உங்களால் என்ன பிரச்சனை எல்லாம் அவங்க வீட்ல வந்துச்சோ தெரியலையே”
“அதையும் நான் யோசிச்சேன் சார் .ஆனால் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இனிய அவங்களை பிடிக்கவே முடியாது என்று தேடி வந்திருக்கேன். அவங்க வீட்ல உள்ளவங்களைச் சம்மதிக்க வைத்து ராதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வைங்க. என்னால் கொஞ்சம் கொஞ்சமா அவளது மனச மாத்தமுடியும். உண்மையான கல்யாணம்னா என்ன காதல்னா என்னனு அனுபவத்துல தெரிஞ்சுக்க வச்சிருவேன் சார் என்னால அவங்களை நல்லா வாழ வைக்க முடியும் அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு சார்”
“அப்படியே அவ அப்பா அம்மா சம்மதித்தாலும் அவ சமாதிக்கலைன்னா என்ன சார் பண்ணுவீங்க?”
“கட்டாய தாலி கட்டி தூக்கிட்டு போயிட வேண்டியதுதான். அப்படிப்பட்ட ஒரு பொண்ணு கிடைக்காம கொடுத்து வச்சிருக்கனும் சார். தங்கம் போல பார்த்துப்பேன் சார். எனக்கு அவளை அவ்வளவு பிடிக்கும்”என்று தனது ஆழ்ந்தக் காதலைச் சொன்னான்.
அதைப்பார்த்த கிருஷ்ணனுக்கு கடுப்பாகியது. என் பொண்டாட்டியவே தாலி கட்டி தூக்கிட்டு போறேன்னு சொல்லுறான். யாருடா இந்த கேனை பைய? என்று மேலும் கீழும் பார்த்தவன் சார் உங்க மாமனார் வீட்டிலேயே கொண்டு விடுறேன் என்று சொன்னான்.
“ரொம்ப ரொம்ப நன்றிசார். உங்களை என் வாழ்கையில் மறக்கவேமாட்டேன் சார்”
உங்க வாழ்க்கையில மட்டும் இல்ல சார் இந்த ஜென்மத்திலும் என்னை நீங்க மறக்கவே மாட்டீங்க வண்டியில ஏறுங்க பத்திரமா கொண்டு விடுவேன் என்று தலையாட்டி சொன்னான்.
கிருஷ்ணனை நம்பி மோகன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். அதுக்குப்பிறகு என்ன நடந்தது என்று மோகனுக்கு ஒன்றுமே தெரியாது.
பாவம் பயபுள்ள யாருப் பெத்தபிள்ளையே வசமா கிருஷ்ணன்கிட்டயே வந்து மாட்டிக்கிட்டான்.
அடுத்த நாள் காலையில இருந்து கிருஷ்ணன் ஒரு மார்க்கமாக சந்தோஷமாகவே சுத்திக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாருமே மீண்டும் அவனுக்கு கல்யாண களை வந்துவிட்டது போல. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான் தருணிகாவுடனானக் கல்யாணத்தை அவன் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டான் என்று நினைத்தனர்.
தருணிகாவுடனான கல்யாண வேலைகளையும் மொத்தமாக இழுத்துப்போட்டு செய்துக் கொண்டிருந்தான்.
அந்த திருவிழா முடிந்ததும் அவனுக்குக் கல்யாணம் என்று ஊரெல்லாம் பத்திரிக்கையும் அடித்துக்கொடுத்துவிட்டனர்.
மூத்த மகள் வாழ வந்த இடம் ஒரு பத்திரிக்கை வைத்து முறைப்படி கல்யாணத்திற்கு அழைக்கவும் செய்தனர் அந்த அழைப்பிதழ் இப்பொழுது ராதாவின் முன்புக் கிடந்தது.
அதைப் பார்த்தவளுக்கு இத்தனை நாளும் இல்லாத ஏதோ ஒன்று உள்ளுக்குள் உடைந்து மொத்தமாக அழுது கொண்டிருந்தாள்.
அவளது காதல் வாழ்க்கை அந்த கண்ணீரில் கரைந்து காணாத போய்க் கொண்டிருந்தது!
இந்தியா லிங்
https://www.amazon.in/dp/B0DNN42HZS
அமெரிக்கா லிங்
https://www.amazon.com/dp/B0DNN42HZS
இங்கிலாந்து லிங்
https://www.amazon.co.uk/dp/B0DNN42HZS
What's Your Reaction?






