என் தந்திரக்காரா டீஸர்

Nov 2, 2024 - 23:06
 0  308
என் தந்திரக்காரா டீஸர்

ஹாய் டியர்.

"என் தந்திரக்காரா" அமேசான் கிண்டில் நேரடி நாவல் லிங் கொடுத்திருக்கேன்.படிச்சுட்டு ரிவீய்வ் போடுங்க

டீஸர்

நிரல்யாவும் விக்ரமும் தங்கள் திருமணத்தை மறைத்துக்கொண்டு வீடு வந்தனர்.

அந்த வீட்டின் முன் வந்து இறங்கியவன் பாவம்போல நின்றுக்கொண்டான்.

அவனது கையைப்பிடித்து உள்ளே அழைத்துச்சென்றாள்.

அதைப்பார்த்த கல்பனாதேவியோ “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு நிரல்யா இப்படி யாரையோ வீட்டுக்குள்ள அழைச்சுட்டு வர்ற. கல்யாணத்திற்கு வந்த நம்ம சொந்தக்காரங்க அத்தனைபேரும் என்ன நினைப்பாங்க. உன்ன நல்லபடியா கொண்டு வந்துவிட்டுட்டுப் போயிட்டான்ல. அப்புறம் எதுக்கு அவனை நம்ம வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்திருக்க?”

“நாளைக்கு என் கல்யாணம் முடிஞ்சதும் போயிடுவான் பாட்டிம்மா”

“நாளைக்குப் போவானா? அதுவரைக்கும் இங்கதான் தங்குவானா?”

“ஆமா”

“இதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன்”

“அப்போ நானும் கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டேன் பரவாயில்லையா?”

அதற்குமேல் நிரல்யாவிடம் எதுவும் பேச முடியாது என்று கல்பனா தேவிக்கு தெரியும். அதனால் அமைதியானவர் விக்கியை முறைத்துக் கொண்டு சென்று விட்டார்.

விக்கியை அழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றவள் தனது அறையிலயே அவனைத் தங்க வைத்தாள்.

அவளது அறையவே அவனுக்குக் கொடுக்கவும் எல்லோருக்கும் அதிர்ச்சி!

உடனே அவளது சித்தப்பாவும் நட்சத்திராவின் அப்பாவுமான சுரேஷ் பாபுவந்து” நிரல்யா இவ்வளவை பெரிய அரண்மனையில் உனக்கு இவனைத் தங்க வைக்க இடமா இல்லை.நம்ம கெஸ்ட்டுக்குன்னு தங்க வைக்க இரண்டு மூணு கெஸ்ட் கவுஸ் வெளிய இருக்கே அங்க தங்கவை. உன் ரூமுல அவனைத் தங்க வைக்காத. இது சரியில்லை”

“என்ன பண்ணுவீங்க?”

“நீ என்ன என்னையே எதிர்த்துப் பேசுற?இது நல்லதுக்கில்ல ஆமா சொல்லிட்டேன்”

“சரி சொல்லிட்டீங்கள்ல கிளம்புங்க”

“நாளைக்கு உனக்கும் யஷ்வந்துக்கும் கல்யாணம். இப்படி அடுத்தவன்கூட ஒரு ரூம்ல இருக்கலாமா?”

ஏன் இருக்க்கூடாது. உன் பொண்ணு நான் கல்யாணம் பண்ணிக்கபோறவனை வளைச்சுப் போட்டுக் கட்டிக்கிட்டு எனக்கே துரோகம் செய்யலாம். நான் இதைச் செய்யக்கூடாதா. போங்க எல்லாம் எங்களுக்குத் தெரியும் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று அவரை எதிர்த்து நின்று பேசினாள்.

உடனே தேவகி ஓடி வந்து “நீ என்ன பேசுற அவர் உன் சித்தப்பா அந்த மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க அப்படி என் பொண்ணு என்ன செய்யப்பட்ட நீ உனக்கு அத்தை பையன் ஆசைப்படுற மாதிரி அவளும் ஆசைப்பட்டுட்டா அது தப்பா என்ன?

உன் புருஷன் என்ன சொட்டை தலையனை ஒருத்தி ஆசைப்படுறான்னு நீ விட்டு குடுப்பியா?

அதை எப்படி விட்டுக்கொடுப்பேன் என் புருஷன் நான் சண்டைக்கு நிக்க மாட்டேனா?

அப்போ எனக்கு வரப்போறவன் கூட இன்னொருத்தி உரசிட்டு அலைஞ்சா எனக்கு கோவமா வராதா? நான் எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பேன். 

நட்சத்திரா யஸ்வந்த்கிட்ட பேசுறதும் நீ உன்னை கூட்டிக்கொண்டு உன் ரூம்ல வச்சிக்கிறதும் ஒன்னா என்ன?”

“அடுத்தவள் கட்டிக்கப் போறவனோடு குடும்பம் நடத்திடணும்னு நினைக்கிறவளும் இதுவும் ஒன்னு இல்லதான். பட் இதுக்கு எதுக்கு நான் விளக்கம் சொல்லணும்?”

“அப்போ அவனை இங்கிருந்துப் போகச் சொல்லு”

“முடியாது என் அறையில மட்டுமில்ல என் பெட்டுலயும் படுக்கவைப்பேன். எவனும் கேட்கமுடியாது?”

என்ன உன் பெயர்ல சொத்துக்கள் இருக்குங்கற திமிரா என்ன ?

அப்போ உங்களுக்கும் அந்த திமிர் இருக்கப் போய்தானே இவ்வளவு நாளும் எல்லோரும் என்னைப் பந்தாடுனீங்க? அதே திமிர் எனக்கும் இருக்கும்னு உங்களுக்குத் தெரியலையா?

“உங்கம்மா இல்லன்னு திமிர்தான் இந்த ஆட்டம் ஆடுற?”

“அதனால்தான் இவ்வளவு நாளும் பைத்தியக்காரி மாதிரி நடத்தி அப்படியே வைக்கலாம்னு ப்ளான் பண்ணுனீங்க.உங்க திட்டம் வெறும் திட்டமாகவே முடிஞ்சுட்டுன்னு கோபமோ?”

“என்ன உளறிட்டிருக்க?”

“நான் உண்மையை சொல்லிட்டேன்னு உங்களுக்கு பயமா இருக்கா சித்தப்பா?”

“ச்சை பைத்தியத்துக்கிட்ட யாராவது பேசுவாங்களா?”

அந்த வார்த்தையில் அவள் கலங்கவும் விக்கி சத்தம் உயர்த்தினான்” நிரலோட சித்தப்பான்னு உங்களை சும்மா விடுறேன் மிஸ்டர். இல்லை இங்கிருந்துத் தூக்கிக் கீழ போட்டிருவேன். ஜாக்கிரதை. அவளை இனி பைத்தியம்னு சொன்னீங்க பல்லை உடைச்சிடுவேன். யாருன்னுகூட பார்க்கமாட்டேன்”என்று கையை உயர்த்தி முஷ்டியை மடக்கி எச்சரிக்கை செய்தான்.

அதில் சுரேஷ்பாபு அதிர்ந்தாலும் என்னடா செய்வ என்னடா செய்வ? என்று நெஞ்சை நிமர்த்தி கொண்டு அவன் அருகில் வரவும் அவரது நெஞ்சிலே கையை வைத்து அழுத்தி தள்ளுவதற்கு முயன்றான்.

உடனே நிரல்யா வேண்டாம் விக்கி விடு. இவங்க எல்லாம் எந்தக் காலத்துலயும் திருந்தமாட்டாங்க. வா நம்ம ரூமுக்குப் போகலாம் என்று அவனதுக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நேராக தனது அறைக்குள் சென்றாள்.அவனோ வாசலோடு நின்றுக்கொண்டான்.

“ஏன்டா?”

“ஒன்னு உண்மையைச் சொல்லி உள்ளக்கூட்டிட்டுப்போ. இல்லையா நீ யஷ்வந்தைக் கல்யாணம் பண்ணிக்கப்போற ப்ளான்ல இருந்தால் இது சரியில்லை. நான் கிளம்புறேன். அவனுங்களைக் கேவலப்படுத்தறேன், அவனுங்களை மதிக்காமல் நடக்குறேன்னு உன் வாழ்க்கையை நீயே சிக்கலாக்கிக்காதே புரியுதா? என்ன ப்ளான்னு என்கிட்ட சொல்லிட்டு அடுத்த திட்டம் போடு டெவில்” என்றவன் அங்கயே நின்றிருந்தான்.

அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள் அவனது கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்துச்சென்றாள்.

அதை குடும்பத்தார் எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். இப்போது எல்லோருக்கும் அவன்மேல் கொஞ்சம் மரியாதை வந்தது.

அதைப் பார்த்த நிரல்யாவோ முகத்தைச் சுழித்தவாறே அப்படியே அவனை அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுசில்கொண்டு அவனுக்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்துவிட்டு பத்திரமாக இரு.நான் காலையில் வந்துப் பார்த்துக்கிறேன். எங்கேயும் தப்பி ஓடிடக்கூடாது விக்கி. எனக்கு நல்லதுன்னு கண்டதையும் செய்து வைக்காத புரியுதா”

“ம்ம்ம்” என்று தலையாட்டினான்.

“உனக்கு இங்கவுள்ளவங்களைப் பத்தி தெரியாது. நீ அப்படியே ஓடிப்போயிட்டன்னா எதையாவது திருட்டுக்கேஸ் போட்டு உன்னைத் தூக்கி உள்ளப் போட்டு பந்தாடிருவாங்க. என் குடும்பத்தைப் பத்தி உனக்குத் தெரியாது.அதனால்தான் உன்னை கவனமாக இருக்கச் சொல்லுறேன் புரியுதா?”

“ம்ம்ம்”

“என்னடா ம்ம்ம்ன் தலையாட்டிட்டிருக்க? இங்கிருந்து ஓடிப்போற ஐடியாவுலதான் இருக்கியோ?”

ம்ம்ம் என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டினான்.

“இங்க பாரு இங்க இருந்து தப்பிச்சி எங்கேயாவது போகணும்னு நினைச்சேன்னா அது நடக்காது ஏம்னா ஏற்கனவே நீயும் நானும் இருக்க போட்டோஸ் எடுத்துட்டேன். நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமாகிட்டு இதுக்கு அப்புறம் நீ எங்க போனாலும் உன் பின்னாடியே ஓடிவருவேன். ஏன்னா என் குடும்பத்தாள்களுக்கு முன்னாடி நான் தலை குனிஞ்சு நிக்க முடியாது அவங்களுக்கு முன்னாடி நான் கெத்தா நிக்கணும் எனக்கு துரோகமும் செய்து என் முதுகுலயும் குத்துனங்க முன்னாடி நான் நல்ல வாழ்கிற மாதிரி இருக்கணும் புரியுதா புரியலையா? எனக்கு இந்த உதவி செய்ய மாட்டியா?”

“உனக்காக இந்த உதவியை செய்யுறேன் போதுமா.போ போ போய் உன் அத்தான் யஷ்வந்தகூட எப்படி ஹனிமூன் டூயட் பாடலாம்னு தூங்கி கனவு கண்ணுட்டு இரு. நான்தூங்கப்போறேன். நேத்து நைட்டுல இருந்து மனுஷனக்குத் தூக்கமில்ல”என்றவன் மெத்தையில் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டான்.

“அதைப்பார்த்தவள் சரியான எருமைக்குப்பொறந்த குட்டி எருமையா இருப்பான் போல.நம்ம ஒன்னு சொன்னால் அவன் ஒன்னு நினைச்சுட்டு செய்யுறான்”என்று தலையணையைத் தூக்கி அவன்மேல் போட்டுவிட்டு வெளியே வந்தாள்.

அங்கே இரவு நேரம் என்பதால் கல்யாணத்திற்காக போட்டிருந்த வண்ணவிளக்குகள் பிரகாசமாக எரிந்துக்கொண்டிருந்தது.

அதைப்பார்த்தவளுக்கு சிறுபுன்னகை வந்தது. இந்த சீரியல் லைட்டு மாதிரிதான் மனுஷங்களோட வாழ்க்கையும் போல!

இரவுல பளிச்சுன்னு தெரியும். பகல்ல இருக்கிற இடமே தெரியாது. பணம் இருந்தால் பளிச்சுன்னு தெரிவோம் இல்லையா அணைஞ்சுப்போன சீரியல் செட்டுத்தான். ம்ம்ம் என்று யோசனையோடு தோளைக் குலுக்கிக் கொண்டு வாசலருகில் வந்தாள்.

அப்போது ரமேஷ்பாபு மஞ்சுளாவின் கையைப்பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் வருவதற்காக படியில் ஏறினார்.மகளைப்பார்த்ததும் சந்தோசமாகச் சிரித்தார்.

ஆனால் நிரல்யாவோ பதிலுக்குச் சிரிக்காமல் அமைதியாக அங்கிருந்து விலகிப் போய்விட்டாள்.

மஞ்சுளாவோ பார்த்தீங்களா உங்க மகளோட திமிரை. இவதான் நம்ம வீட்டுல நடக்கிற பாதிப் பிரச்சனைக்குக் காரணம் தெரியுமா?

“ப்ச்ச் விடு நாளையோட அது முடிஞ்சிடும்.இனி அவளால் நமக்குப் பிரச்சனை வராதே!”

“அது ஒன்னுதான் எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும்”என்றவர் ரமேஷ்பாபுவைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு அறைக்குள் போனார்.

இதற்குமேல் இனி யாரும் இந்தப்பிரச்சனையை பேசக்கூடாது என்று கல்பனாதேவி கட்டளை போடவும் அனைவரும் கல்யாண வேலையிலும் தங்களது வேலைகளிலும் மும்முரமாகினார்

அடுத்தநாள் காலை வீடே விழாக்கோலத்தோடு இருந்தது.

அந்த பெரிய பங்களிவின் தோட்டத்தை சுற்றிலும் அடைத்துப் பந்தல் போட்டிருந்தனர்.

மூன்று கெஸ்ட் ஹவுசிலும் உள்ளவர்களுக்கு சாப்பாடு டீ என்று தனித்தனியாகக் கவனித்தனர்.

விக்ரமையும் எழுப்பிவிட்டு கல்யாணத்துக்கு வந்திருக்கும் உறவினர்போலவே அவனுக்கும் எல்லாம் கொடுத்து உபசரித்து தயாரகச் சொல்லியிருந்தனர்.

குடும்ப எல்லோரும் கல்யாணத்திற்கு வந்துவிட்டனர்.மாப்பிள்ளையும் தயாராகி வந்து அமர்ந்திருந்தான்.

அப்போது சர்வ அலங்காரத்தோடு அவளுக்கு அவங்கம்மா வைத்து விட்டுப் போன அத்தனை வைர நகைகளையும் எடுத்துப்போட்டு மணப்பெண் அலங்காரத்தோடு தோரணையாக நிரல்யா வந்து சபைக்கு முன் நின்றிருந்தாள்.

யஷ்வந்திற்கு இப்போது வேறு வழியே இல்லை.அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால்தான் வரும் சொத்துக்களை வைத்து அவனது குடும்பத்தை தூக்கி நிறுத்திடாலாம் என்று இப்போது உணர்ந்து நட்சத்திரா மீதான விருப்பத்தை விடவும் தனது எதிர்கால வாழ்க்கை ரொம்ப முக்கியம் என்று புரிந்துக்கொண்டான்.

அதனால் அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.நிரல்யா வந்ததும் ரமேஷ்பாபுக்கு ஏக சந்தோசம்.

குடும்ப கௌரவம் கீழேவிழாமல் பிடிச்சு நிறுத்திட்டோம் என்று தலைக்கணத்தோடு அங்கு உட்கார்ந்திருந்தார்.

இவரா நேத்து ஹாஸ்பிட்டலில் இருந்தார் என்று பார்க்கிறவர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு உற்சாகமாக இருந்தார்.

அதைப்பார்த்து அங்கே பாவமாக நின்றது ஒரே ஒரு பாவப்பட்ட ஜீவன்தான்.அது வேற யாருமில்லை நம்ம விக்கிதான்.

“பொய் கால்யாணத்துக்கு ஏன்டா உண்மையான புருஷன் மாதிரி பீல் பண்ணிட்டிருக்க?” என்று அவனது மானங்கெட்ட மனசு கேட்டுக்கொண்டிருக்க அதை அமைதிப்படுத்த நெஞ்சைத் தட்டிக்கொண்டிருந்தான்.

அப்போது நிரல்யா மெதுவாக நட்சத்திராவைப் பார்த்தாள்.

கண்கள் கலங்கி முகமெல்லாம் சிவந்திருந்தது. அவளது அம்மா தேவகிக்கு ஆத்திரம் வந்தும் அதை வெளிப்படுத்த முடியாது தனது கை மூஷ்டியை மடக்கிக்கொண்டு நின்றிருந்தார்.

நிரல்யா நட்சத்திராவைப் பார்த்து கண்களைக் காண்பித்து அருகில் அழைத்தாள்.

அவளருகில் வந்ததும் ”என்ன துரோகி மேடம். என் சொந்த தங்கைக்கு மேலாகத் தோழியாக பழகின எனக்கே முதுகில கத்தியை சொருகினியே. பார்த்தியா யாருக்காக என்னை ஏமாத்தணும்னு நினைச்சியோ அவனே என்னையும் என் பணத்தையும் முக்கியம்னு நினைச்சு என் கழுத்தில் தாலிகட்ட உட்கார்ந்திருக்கான்.இப்போ நீ என்ன செய்யப்போற?”

அதைக்கேட்ட நட்சத்திரா அப்போதே யஷ்வந்தினை முறைத்துப்பார்த்து “இனி இவனே என்கிட்ட வந்தாலும் எனக்கு வேண்டாம். என் காதலைவிடவும் உன் மூலமாக வரும் பணத்தைப் பெருசாக நினைச்சுத்தான் உன் பக்கத்துல இருக்கான். அவனைப் பொறுத்தவரைக்கும் நீ பணம் காய்க்கும் மரம். அதனால் ரொம்ப சந்தோசப்படாத. உனக்காக ஒன்னும் அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலை புரியுதா. பணத்தைக்காட்டி தாலிக்கட்ட வைக்கிறாங்க.ஸஆனால் அவன் உன்கூட எப்படி வாழ்வான்னு நினைச்சுப்பாருஸ.உனக்கு வாழ்நாளா நரகத்தைக் காண்பிப்பான் பார்த்துட்டே இரு” என்று ஆத்திரத்தில் சத்தமாக சபித்தாள்.

அவளது சாபத்தைக்ஸகேட்ட அனைவரும் முகம் சுழித்தனர். கல்யாணம் நடக்கப்போகிற இந்தநேரத்துல இந்தப் பொண்ணு என்ன இந்த பொண்ணு இப்படி சாபம் கொடுக்குது அதுவும் சொந்த பெரியப்பா பொண்ணுக்கு.. இவ்வளவு சாபம் கொடுக்குது.. என்னம்மா பொண்ணு இது என்று அவளையும் எல்லோரும் திட்டிக் கொண்டிருந்தனர்.

உடனே ரமேஷ் பாபு தனது தம்பி சுரேஷ் பாபு பார்த்து “டேய் உன் பொண்ணு அந்த பக்கமா மணமேடையில் இருந்து இறக்கி கூட்டிட்டு போ! என் பொண்ணுக்கு துணையாக இருப்பான்னு பார்த்தா அவளுக்கு துரோகியாக இருக்கா” என்று ரொம்ப பாசமுள்ள அப்பாவாக நடந்து கொண்டார். அதன் பிறகு அங்கு அமைதி மட்டுமே நிலவியது அவ்ளோ அமைதியான இடத்தில் யஷ்வந்த் கையில் தாலியை கொடுத்து நேரடியாக கழுத்தில் கட்டச் சொன்னார்கள்.

இங்கிலாந்து லிங்

https://www.amazon.co.uk/dp/B0DLT3W6H2

அமெரிக்கா லிங்

https://www.amazon.com/dp/B0DLT3W6H2

இந்தியா லிங்

https://www.amazon.in/dp/B0DLT3W6H2

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow