உறைபனி என்னில் பொழிகிறாய்-11

அத்தியாயம்-11
ரிஷியும் சந்தனாவும் ஓருயிர் இரு உடலாய் படுத்திருந்தனர், ரிஷியின் முதுகின் மேல் சந்தனா படுத்திருந்தாள்...
ப்ளவுஸ் இல்லை சேலையில்லை குளித்து முடித்து அவனது டவலையே மார்போடு சேர்த்து கட்டிக் கொண்டு படுத்திருக்க, அவனோ பெட்சீட்டை தனக்கு இடுப்புவரை மூடி படுத்திருந்தான்.
மணி என்னவென்றுக் கூட பார்க்கவில்லை...உடல் அசதியில் பசியின் உணர்வின்றி தூங்கிக்கொண்டிருக்க...
சந்தனாவின் செல்போன் அலறியது எடுத்துப்பார்க்க...ரிஸ்வான் அண்ணன்தான் அழைத்திருந்தான்.
உடனே ரிஷியோ என்ன பாசமலர் நம்பர் ஃபோரா...வெளிய இருந்துகிட்டு எதுக்கு இங்க போன். கதவைத்தட்டினா திறக்கப் போறோம்...இவனுங்க அலும்புத் தாங்கலை...
அது எப்படி கதவைத் தட்டுவாங்க...நமக்கு கல்யாணம்மாகிட்டு...அதுவும் பர்ஸ்ட்நைட் ரூம்ல இருக்கோம்...அதுதான் போன் பண்றாங்க...
என்னங்கடா இது கதவைத் தட்டக் கூடாதாம்...போன் மட்டும் பண்ணலாமா...இரண்டுமே கரடி வேலைதான இதுல என்ன இங்கிதமிருக்கு என்று பேசியவனின் முதுகிலிருந்து எழும்பியவளின் கையில் போனை எடுத்துக் கொடுத்தான்.
அவள் அழைப்பை ஏற்று காதில் வைக்கவும் " சந்துமா நேரமாகிட்டுப்பாரு...
சென்னையில இருந்து எல்லாரும் எனக்கு கால் பண்ணி கேட்குறாங்கடா...மணி பனிரெண்டு.பெரியப்பா இங்க என்னாச்சோனு கவலைப்படுறாங்க"
" சாரிண்ணா தூங்கிட்டோம்"
"உனக்கு இன்னும் தூங்கணும்னா தூங்கு நான் பெரியப்பாகிட்ட சொல்லிடுறேன் டா"
"இல்லைணா, நான் எழும்பிட்டேன். ரிஷியை எழுப்பிட்டு வர்றேன், நீங்களும் ரெடியாகிடுங்க"என்று அழைப்பைத் துண்டித்தாள்.
ரிஷி அதற்குள்
"என்னவாம் உன் பாசமலருக்கு" என்று கேட்டதும்.
அவனது முதுகில் கடித்து வைத்தவள்...எப்போ பாரு எங்க அண்ணனுங்களை எதாவது சொல்றீங்க..
அவங்க எல்லோரும் உங்களுக்கு அத்தான்...பெயரைச் சொல்லி அத்தான் சொல்லுங்க..என்று சிணுங்க...
"புதுமனைவி அதுவும் காதல் மனைவி சொன்னா கேட்கலாம்தான்...ஆனா பாரு எனக்கு இந்த அத்தான் பொத்தான்லா வரமாட்டுக்கே...என்ன செய்யறது"என்று ஒன்னும் தெரியாத பிள்ளைப்போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்க.
எழுந்து தனது இடுப்பில் கைவைத்து "அப்போ கூப்பிடமாட்டீங்க அப்படித்தான" என்று முறைத்து நின்றவளை, தன் தலைசாய்த்து ரசித்துப் பார்த்தான்...
அந்தப் பார்வையில் இனம்புரியாத உணர்வு தோன்ற அப்படியே அமைதியாக நின்றவளை...கண்களால் இங்க வா என்றழைக்க...ம்ஹூம் என்று தலையாட்ட...பிடிறா என்று அவன் கையை நீட்டவும்...பயந்து பின்னாக போனவளின் மார்பில் கட்டியிருந்து டவல் நழுவிவிழ அவசரமாக தன் கரம் கொண்டு பிடித்து நின்றவளின் ஓவியநிலையே, அவனை பித்துக் கொள்ள வைக்க...தனது கண்களை இறுக மூடி நின்றாள்...
ரிஷி சட்டென்று எழுந்து அவளருகில் செல்ல...அவளோ கண்களால் அவனிடம் வேண்டாம் என்று சைகை செய்துக்கொண்டே பின்னாடி நகர...இறுதியில் சுவற்றில் மோதி நின்றிருந்தாள்...
ரிஷி ப்ளீஸ்...அண்ணா வெயிட் பண்ணுவாங்க...என்று சிணுங்கியவளின் இந்த டகால்டி வேலையெல்லாம், இதுல சொல்லக்கூடாது டியர் என்று நெருங்கியவனை, ஒரு கையில் டவலைப் பிடித்துக் கொண்டு மறுகையால் அவனது நெஞ்சில் கைவைத்து...விலகுங்க ரெடியாகணும் என்று கொஞ்சிப்பேசிட...அது அவனுக்கு இன்ப அழைப்பாகத் தோன்ற...
அப்படியே சுவற்றோடு சாய்த்து அவளது மேனியில் ஒட்டி நின்றவன் அப்படியே அவளது கையில் பிடித்து வைத்துக்கொண்டே மறைத்த டவலை உருவி எடுத்துவிட்டான்...
ரிஷி என்று செல்ல சிணுங்கள் சிணுங்கியவளின் பேச்சுக்கள் கொஞ்சல் மொழியாக அவனுக்கு கேட்க...
ரிஷியானந்தா தன் லீலையை மறுபடியும் தொடங்கிவிட்டார்...ஆடையில்லாத சந்தனாவின் உடலில் சாரைப்பாம்பாக ரிஷி சுற்றி வளைத்துப் பின்னிக் கொண்டான்...
காட்டுத்தனமா பிடித்து, காட்டுமுத்தம் வைத்து...உடலில் மட்டுமல்ல அவளை கடித்து தின்றும் ஆதிவாசியானான் ரிஷி...
காதலனவனின் உடலில் தன் மெல்லிய உதடுகளினால் முத்தம் வைத்து சந்தனா எண்ணிக்கொள்ள...
நான் என்ன முத்தத்திக்குனே பேங்க் ஆரம்பிக்கப்போறேனா என்ன? எண்ணி எண்ணித் தர்ற என்று மனைவியை சீண்ட...கடித்து வைத்துவிட்டாள். எப்போ பாரு விளையாட்டாவே பேசுறது...
ஆஆஆஆ...செல்ல இராட்சஷி கடிக்காதடி என்று அவளை தள்ளியவன்...அவள் செய்ததை அவன் தொடங்கினான்...
கடிச்சா வைக்குற இரு என்று...இவர்களின் காதல் விளையாட்டுக்கள் நீண்டுக்கொண்டு செல்ல...ஒருவழியாக சந்தனாவிடம் தான் எவ்வளவு மயங்கி கிடக்கிறோம் என்பதை நிருபித்து அவளை ஆட்க்கொண்டான்...
குளித்து முடித்து இருவரும் வெளியே வரும் போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது...ராமகிருஷ்ணன் மகனை அறிந்துதான் பழங்களும் ஸ்வீட்ஸும் கொடுத்தாரோ என்னவோ? அதுவே அவர்களின் காதல் விளையாட்டுக்கு சக்தியை அளித்திருந்தது...
வெளியே வந்ததும் தன் அண்ணனைத் தேடினாள்...ரிஷியிடம் மெதுவாக அண்ணா எங்க காணோம் என்று கேட்டாள்.
அவனும் ப்பா "ரிஸ்வானை எங்க" என்று கேட்டான்...
ரொம்ப நேரமா உங்களுக்காக காத்திருந்தாருடா...பாவம் இங்க ஏஸிவேற இல்லையா ரொம்ப கஷ்டமாயிட்டு அவங்களுக்கு...என்கிட்ட கார்லபோய் இருக்கட்டுமானு கேட்டாங்க...நான்தான் சரினு அனுப்பி வச்சேன். கார்லதான் இருப்பாங்க...என்றதும், சந்தனா வெளிய ஓடிப் போய் காரில் பார்க்க...
பாவம் இரவு தூங்கலைப் போலயிருக்கு காரிலேயே தூங்கிட்டான். அதைப் பார்த்ததும் சந்தனாவுக்கு கண்கள் கலங்கியது என்னாலதான அண்ணனுக்கு இந்த நிலமை என்று...
அதற்குள் ரிஷியும் வெளியே வந்திருந்தான்...ரிஸ்வானோ அவனது உயரத்திற்கு காரில் கால் நீட்டி படுக்க முடியாமல்,தன்னை குறுக்கிப் படுத்திருந்தான்...
அண்ணா சாப்டாங்களானு தெரியலையே என்று ரிஷியைப் பார்த்துக் கூறியவள்...மாமனாரைப் பார்த்தாள்.
எல்லாம் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி சாப்டாச்சும்மா..நீங்க இரண்டுபேரும் போய் சாப்பிடுங்க...உங்க வீட்ல இருந்து நிறைய தடவை போன் பண்ணிட்டாங்க...
சரி என இருவரும் சாப்பிட்டு வரவும் ரிஸ்வானும் முழித்துவிட்டான்...அவனைக் கண்டதும் அவனிடம் ஓடிச் சென்றவள் "சாரிண்ணா..என்னாலதான...நீங்க இங்க இருக்கும்படி ஆகிடுச்சு"
"இதுல என்னடா இருக்கு, நீ எதுக்குப் ஃபீல் பண்ற...உனக்காக இருக்காம? வேற யாருக்காக காத்திருக்கப் போறோம்.
ரிஷிகிட்ட கேளுடா எப்போ கிளம்பலாம்னு...அம்மா ஒரே புலம்பல்..பிள்ளைங்களை சீக்கிரம் கூட்டிட்டுவானு"...
ஒருவழியாக மூவரும் சென்னைக் கிளம்பவும், அப்பா வாங்க உங்களை மாமா வீட்ல விட்டுட்டு அப்படியே போறோம் என்றான்...
ராமகிருஷ்ணன்"ஏன்டா ரிஷி நேத்து வாங்குன அடிய அதுக்குள்ள மறந்துட்டியா...திரும்பவும் அடிவாங்க ரெடியாகிட்டப் போல"
"ப்பா இமேஜை டேமேஜ் பண்ணாதிங்க" என்று ரிஷி சிரிக்க...இருவருக்குமேத் தெரியும் விஜி அவர்களது வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர் என்று...
நேராக கிளம்பி விஜிம்மா இருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தியதும்...
ராமகிருஷ்ணன் உள்ளே சென்று விஜியிடம் விசயத்தை சொல்ல...அவர் அசைந்துக் கொடுத்தாரில்லை...நீங்களும் உங்க பிள்ளைக்குத்தான சப்போர்ட் பண்றீங்க பேசாதிங்க போங்க என்றவரின் முகமெல்லாம் வீங்கியிருந்தது..இரவும் அழுதிருப்பார் போல.
ரிஷி மட்டும் இறங்கி நின்றவன் விஜிம்மா வெளியே வரவில்லை என்றதும்" யம்மா விஜி உன் புள்ளை ரிஷி வந்திருக்கேன் பாரு...கொஞ்சம் வந்து அந்த முகத்தை காண்பிச்சிட்டுப் போன நல்லாயிருக்கும் என்று சத்தமாக" கூப்பிட்டான்...
அவன் கூப்பிடுவதைப் பார்த்து காரிலிருந்த ரிஸ்வானும் சந்தனாவும் சிரிக்க...அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது ஹான்...நீங்க செய்து வச்ச வேலையாலதான் இவ்வளவும்...மூச்ச் என்றவன் மறுபடியும் வீட்டை நோக்கி சத்தம் போட்டான்" யம்மா பத்ரகாளி கொஞ்சம் மலையிறங்கி, இந்த பக்தனுக்கு இறங்கக் கூடாதா? பாவம் சின்னபையன் அறியாப் பையன் செய்த தப்பை மன்னிக்க கூடாதா? என பேசவும்...
அவனால் அம்மாவைப் பார்க்காமல் இங்கிருந்து நகரமுடியாது என்று எல்லோருக்குமேத் தெரியும்...
திரும்பவும் "யம்மா...நான் பெத்த என் ராசாத்தியில...கொஞ்சம் வெளியவர்றது, உங்க திருமுகத்தை கொஞ்சம் காண்பிக்கறது" என்றவன் திரும்பி பார்க்க அங்கு வித்யாவும் அவனின் சொந்தத்தில் உள்ள பெரியப்பாவின் மகனும் ஜோடியாக வந்துக் கொண்டிருந்தனர்.
வித்யாவின் கழுத்தில் புதுதாலி...அதைப் பார்த்ததும் கொஞ்சம் ஆசுவாசம் வந்திருந்தது...நம்மளால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போகாம இருந்துச்சே அதுக்கே நிம்மதி வருதுடா ரிஷி என்று சிறிது சமாதானமானவன்...
இனி விஜியை சமாளிச்சிடலாம்னு நம்பிக்கை வந்திருந்தது...
அருகில் வந்த வித்யாவைப் பார்த்து சிரிக்கவா? வேண்டாமா? என சிம்பன்ஸி மாதிரி இரண்டும்கெ ட்டான் நிலையில் இருந்தான்...
அதற்குள் ரிஷி அத்தான் எப்படி இருக்கீங்க உங்க மனைவி வரலையா என்று வித்யாவே கேட்கவும்...
ரிஷி சந்தனாவை அழைத்தான் வெளியே வந்த சந்தனாவைப் பார்த்ததும்...வித்யாவின் கண்கள் ஒரு நொடி ஆச்சர்யத்தில் விரிந்து.
அழகா இருக்காங்க அத்தான்..வாழ்த்துகள் என்று கைக்கொடுத்தவள் சந்தனாவையும் பார்த்து சிரித்தாள்...
ஏன் இங்க நிக்குறீங்க உள்ள வாங்க என்று அவர்களை உள்ளே அழைத்தாள்.
அவளிடம் ரிஷி சந்தனா திருமண விசயமட்டுமே சொல்லப்பட்டிருந்தது...வேறு எதுவும் சொல்லிருக்கவில்லை.
ரிஷி அத்தான் தான் தன் கணவனாக வரப்போகின்றான் என்ற பிம்பம்
நேற்றே உடைக்கப்பட்டதால் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு...சொந்தத்திலேயே இருந்த மாப்பிள்ளை ஏற்பாடாக தலையைசைத்துவிட்டாள்...இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் என்று.
வர்ஷா வித்யா இருவரும் ரொம்ப அருமையான குணத்தில் வளர்க்கப்பட்ட பெண்பிள்ளைகள்...ஒரே வீட்டுப்பிள்ளைகள்...அதனால்தான் விஜிம்மா இருவரையும் தன் வீட்டு மருமகளாக்க முயற்சித்தார்...அவருக்கு பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற சிலவரைமுறை வைத்திருந்தார்...அதை முதல் பார்வையிலேயே உடைத்தெறிந்துவிட்டாள் சந்தனா..நள்ளிரவு நேரம் ஒரு ஆணைத் தேடி வரும் பெண்ணை அவருக்குப் பிடிக்கவில்லை.
உண்மையான அன்பு எல்லா வரைமுறைகளையும் மீற வைக்கும் என்பதை புரியவில்லை...ஒரு வேளை காதலித்து திருமணம் செய்திருந்தால் புரிந்திருப்பாரோ என்னவோ.
ரிஷி"நீங்க உள்ளப்போங்க நாங்க வர்றோம் என்று சொல்லவும், அவர்கள் உள்ளே செல்ல..விஜி மெதுவாக வெளியே வந்து நின்றார், பின்னாடி ராமகிருஷ்ணன் நின்றிருந்தார்...
"என் குலசாமியே இங்க வா என்று அவரது அருகில் சென்று அவரது தோளில் கையைப்போட்டு...விஜி என்றதும் சத்தமாக அழுதேவிட்டார்.சந்தனாவை கண்ணை காண்பித்தான்...அவ்வளவுதான் ஓடிவந்து அவனருகில் நிற்கவும் இருவரும் விஜிம்மாவின் காலில் விழவும்...
என்ன செய்யவென்று யோசித்தவர்...நல்லாயிருங்க என்று ஆசிர்வதித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
விஜிம்மாவுக்குத் தெரியும் அவர் வெளியே செல்லாதவரை ரிஷி அங்கதான் இருப்பான் என்று அதற்காகத்தான் வெளியே வந்திருந்தார்.
ரிஷிக்குமே மனம் பாரமாக இருந்தது.. நந்தனுக்கு கோபம். எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கலாம்தான.அப்போ அண்ணனா அவனுக்கு என் மேல நம்பிக்கை இல்லைப்போல என்று கோபம்...ஆகமொத்தம் எல்லோரின் மனதிலும் வருத்தம்.
காரில் அமர்ந்ததும் அப்படியே தலையை பின்பக்கமாக சாய்த்து படுத்துக் கொண்டான்...
ரிஷிக்கு கஷ்டமாகத்தான் இருந்தது, எல்லோரும் இருந்தும், இல்லாத மாதிரி அதுவும் யாரோ மாதிரி இப்படி வரவேண்டியதிருக்கே என்று...
சந்தனாவிற்குமே வருத்தம் என்னதான் பிறந்தவீட்டு சொந்தங்கள் இருந்தாலும், கல்யாணமாகி சந்தோசமாக புகுந்தவீடு போகவேண்டியவள் இப்போது தன்னுடைய வீட்டிற்கே திரும்பி வருகின்றாள்...
இப்படியாக பயணம் தொடர,சென்னை வந்து சேர்ந்ததும் சந்தனாவின் குடும்பம் மொத்தமும் அவர்கள் இருவரையும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
What's Your Reaction?






