உறைபனி என்னில் பொழிகிறாய்-6

அத்தியாயம்-6
ரிஷி சந்தனாவை மெதுவாக விடுவிக்க, அவளோ அப்படியேதான் இருந்தாள்...
ரிஷியோ அவளை எப்படி விடுவிக்க என்று தெரியாமல் முழித்தவனுக்கு, அது அப்படியே தொடர்ந்தால் நல்லாதான் இருக்கும் என மனது ஏங்கினாலும்...
இது சரியில்லையே என்று மனது ஒருபக்கம் இடித்துரைக்கத்தான் செய்தது...
சந்தனா என மெதுவாக அழைக்க...அவளோ பதில் சொல்லாது இருந்தாள்.
மெதுவாக அவளது முகத்தை தன் கரத்தினால் நிமிர்த்த அவளோ தனது கண்களை இறுகமூடியிருந்தாள்...ஹப்பா அதுவே ரிஷிக்கு ஆயிரம் உணர்வுகளை எழுப்பியது...
தேவதைப்பெண்ணவள் கண்மூடி சிறுபிள்ளையாக நின்றிருக்க பித்தங்கலங்கிய ரிஷிக்கு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், அப்படியே அவளது அதரங்களை தனது உதட்டினால் தீண்ட பெண்ணவளின் உடலோ உணர்வுகளினால் துடிக்க ஆரம்பிக்க...
அதை தனது உடலால் உணர்ந்தவன், ஒரு கையால் அவளது முதுகோடு அணைத்துப் பிடித்து, மறுகையால் அவளது பின்னந்தலையை பிடித்திருந்தவன்...
அவளது வாயோடு வாய் வைத்து தொடங்கிய முத்தத்தை தொடர, அவளோ அவனுக்கு ஈடுகொடுத்து தனது காலை லேசாக எம்பி நிற்க,வண்ணத்து பூச்சியிடம் தேனெடுப்பது எப்படி என்பதை கற்றிருப்பான் போல, பூவைக்கு வலிக்காது அவளது இதழ்த்தேனை பருகிக்கொண்டிருந்தான்...
அவளது நெஞ்சமோ மன்னவனின் நெஞ்சோடு சிக்கிமுக்கி கல்லாக உரசி அவனுக்கு உடலிலும் உள்ளத்திலும் தீ மூட்டியது...
அதில் மங்கையவளோ குளிர்காய்ந்துக்கொண்டிருந்தாள்...எவ்வளவு நேரமென்று தெரியாது இருவரும் மயங்கி கிறங்கி நின்றிருந்தனர்
வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டுத்தான் அந்த மாயவலையிலிருந்து சட்டென்று ரிஷி வெளியே வந்து...
ஐயோ என்று சத்தமிட்டவன் அவளை வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து பிரித்தெடுக்க...சந்தனா பயந்து விழிக்க, உடனே அவளது கன்னத்தில் தட்டியவன்..
வெளியே கதவை தட்டுறாங்கப்பாரு என அவளது முடியை எல்லாம் சரி செய்தவன், அவளை படபடவென இழுத்து சேரில் அமர்த்தி, தன் கரத்தால் முகத்தை துடைத்து கலைந்த கேசத்தை வாரியவன்...
" எஸ் கம் இன்" என்று சொன்னான்...சந்தனா இப்போது எதுவும் பேசும் நிலையில் இல்லை...
பி.ஏ வந்திருந்தான்...அலுவலக விசயமாக பேசவும், அதற்கு ரிஷியே பதில் சொல்ல...
சந்தனா அதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்...
அவன் சென்றதும் சந்தனா அவனை ஏறிட்டுப்பார்த்தாள், ஆனால் அவள் கண்களோ ஒருவித பயத்தைக் காட்டியது, அவளது கைகள் பதற்றத்தில் டேபிளில் இருந்த பென் ஹால்டரே பிடிக்க...
அதைப் பார்த்திருந்தவனோ மெதுவாக அவளது கையைப் பற்றியவன்...அப்படியே தடவிக்கொடுத்துக்கொண்டே அவளது கண்களைப் பார்க்க...
அவளோ அவனது பார்வையை தவிர்த்து வேறுபக்கம் பார்த்தாள். இது வேலைக்காகாது என்று புரிந்து மெதுவாக எழும்பி, அவளுக்கு பின்பக்கமா போய் நின்றவன். குனிந்து அவளது தோளைபிடித்து மெதுவாக அழுத்தி, அப்படியே அவளது தலையின் மீது தன் நாடியை வைத்து " ஏன் இந்த பதற்றம், நீ எதுவும் தப்பு பண்ணலை, என் மேலுள்ள காதலை வெளிப்படுத்தியிருக்க, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக காதலை சொல்லுவாங்க, அவங்க அவங்களுக்கு பிடிச்சமாதிரி எக்ஸ்பிரஸ் பண்ணுவாங்க, நீ எனக்கு பிடிச்சமாதிரி சொல்லிட்ட அவ்வளவுதான்"
சந்தனா அப்படியே அவனது கைகளை பிடித்துக் கொண்டாள்.
" நான்தான் உனக்கு நன்றி சொல்லணும், என் காதலை உணரவச்சதுக்கு" என ஆத்மார்த்தமாக சொன்னான்.
சிறிது நேரம் அப்படியே இருந்தார்கள், பின் மெதுவாக ரிஷி விலக, அப்படி நிமிர்ந்து அவனைப் பார்க்க...குனிந்து நெற்றியில் முத்தம் வைத்தவன் " ஐ லவ் யூ டியர்" என்றதும்..சந்தனாவின் முகம் அப்படியே பிராகாசித்தது...
வந்து ரொம்ப நேரமாகிட்டு நான் என்னோட கேபினிற்கு போறேன் என்று கூறியவன்...கதவைத் திறக்க அப்போதுதான் அவளது பாசமலர்கள் எல்லாம் சேர்ந்து வந்தனர்...
ரிஷி அவர்களுக்கு தலையாட்டிவிட்டு வந்தவன், கிட்டதட்ட அரைமணி நேரமா அங்கயிருந்திருப்போம்...அதுவரைக்கும் ஒரு பாசமலர் கூடவா எட்டிப்பார்க்கலை...
இவனுங்களுக்கு தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்காங்களா? இல்லை உண்மையிலயே தெரியாதா?எப்பா மண்டைக்காய வைக்கிறாங்கடா என தன் தலையை குலுக்கியவன்...வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்...
இவ்வளவு நாள் இருந்த குழப்பம் போய் ஒரு தெளிவு வந்திருந்தது. அதைவிட சந்தனாவின் நெருக்கம் ஒரு காதலனாக அவனுக்குப் பிடித்திருந்தது...அவளின் இதழின் மென்மை, அவளது கண்கள் என்று இப்போதும் அவனை பைத்தியம் பிடிக்க வைக்கிறது...
இப்போது தனது பாக்கெட்டில் கைவிட்டவனுக்கு எதுவோ தட்டுபட, எடுத்துப் பார்த்தான் , அவன் வேலைவேண்டாம் என்று எழுதிவைத்திருந்த லெட்டர்... க்கும் இதுக்கு இனி என்ன வேலை என்ற குப்பையில் வீசினான்.
சந்தனாவோ தன் மனதினை வெளிப்படுத்திவிட்டதால் நிம்மதியாக வேலைப்பார்த்தாலும்...தனது உதட்டினை தொட்டுத்தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க,பக்கத்தில் இருந்த ரிஸ்வானுக்கு ஒன்றும் புரியாமல் தங்கையை பார்த்துக் கொண்டிருந்தான்...
அவனது இரட்டை ரித்திக் என்றால் இதற்குள் தங்கையை கண்டுபிடித்திருப்பான்...அவன் தனித்து இயங்குபவன் அதனால்தான் ஹைதரபாத் ஆபிஸ் அவன் கையிலிருக்கு,அவனுக்கு உதவியாக தனராஜ் அங்கிருக்கின்றார்.
சந்தனா லிப் பார்ம் கொண்டு வரலையா...லிப்ஸ் ட்ரையா இருக்கா..இரு யாரையாவது வாங்கிட்டு வரச் சொல்றேன் என்று போனை கையில் எடுக்கவும்...
பதறி இல்லண்ணா, அது ஒன்னுமில்லை சும்மா என்று உளறிக் கொட்டினாள்.
"அப்புறம் ஏன்" வேலைய பாருடா...நிறைய பெண்டிங் பாரு என்று அவளது கவனத்தை திசைதிருப்பினான்.
இரண்டாவது அண்ணன் கேசவ் தனது தந்தையுடன் அமர்ந்திருந்தான்...
" என்ன டாடி இது, நீங்க முடிவே எடுத்திட்டீங்களா? கொஞ்சம் நிதானமாக பார்ப்போமா...இன்னும் கொஞ்ச நாள் பார்த்திட்டு அப்புறமா" என்று இழுக்க...
கேசவ் நான் ஏற்கனவே ஹைதரபாத்ல வச்சே எல்லாம் விசாரிச்சிட்டேன்டா...எந்த அல்லரை சில்லரையும் கிடையாது நல்ல குடும்பம்பா, பணத்துல வேணா குறைவா இருக்கலாம், ஆனால் அவன் குணத்துல அக்மார்க் நல்லபையன்டா...
நம்ம பிள்ளையையும் நம்ம பார்க்கணும், அவளோட குணத்துக்கு வெளியே வேண்டாம்னு தான் இந்த ஏற்பாடு. நானா எல்லாம் அவன்கிட்ட பேசணும்னு இருந்தேன்.அதுக்குள்ளவே இப்படி நடந்துடுச்சு.
சரிப்பா உங்க விருப்பம்போல பார்த்துக்கோங்க, என் கண்ணுல பட்டதை உங்ககிட்ட சொல்லிட்டேன்.எனக்கு வெளிய மீட்டிங்க் இருக்கு போயிட்டு வர்றேன் என்று கிளம்பிவிட்டான்.
நாகராஜோ தனது சிந்தனையில் இருந்தார்...
மாலை ஆபிஸ்விட்டுக் கிளம்பும்போது சந்தனாவை பார்த்து விட்டுப் போவோம் என்று அவளது கேபினுக்குள் செல்ல...
அங்கோ அவள் பக்கத்தில் போட்டிருந்த ஒற்றை குஷன் சோபாவில் சாய்ந்து தூங்கியிருக்க, ரிஸ்வான் "சொல்லுங்க ரிஷி, எதுவும் முக்கியமான விசயமா என்று கேட்க,அவனது பார்வையோ காதலியை பாசமாக வருடி சென்றது, தேவதை ஒன்று சயனத்தில் இருப்பது போன்று" அவளோட அண்ணன் முன்னாடியே இப்படி பார்த்து வைக்கறீயே...உன் எலும்பை எண்ணாமல் விட்ருக்காங்கப் பாரு அதச்சொல்லணும்...
அவனது பார்வையை அறிந்தவன், தூங்கிட்டா கொஞ்சம் டயர்டா இருந்தா, அதான்...
அதற்குள் கேசவ் வந்து எட்டிப் பார்த்து ரிஸ்வானை பார்த்து தலையசைக்க அவன் வெளியே சென்றுவிட்டான்...
இதுதான்டா சரியான வாய்ப்பு என்று தனது செல்போனை எடுத்து தூங்கிக் கொண்டிருக்கும் சந்தனாவை போட்டோ எடுத்துக்கொண்டவன்...
சட்டென்று எழும்பி சந்தனாவின் அருகில் சென்று மெத்தென்றிருந்த கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தம் வைக்கவும், சந்தனா மெதுவாக சிரித்து மீசை குத்துது ரிஷி என்க...
ஐயோ தெரியாமல் முத்தங்கொடுக்கணும்னு கொடுத்தால் முழிச்சிட்டிருந்திருக்காளா! என விழித்து நிற்க.
அவளோ மெதுவாக கண்ணைத் திறந்துப் பார்த்தவள்...மறு கன்னத்தையும் காண்பிக்க.
திரும்பி கதவைப் பார்க்க நீங்க வெளியப்போற வரைக்கும் யாரும் வரமாட்டாங்க என சந்தனா கூறியதும் அதிர்ந்து பார்த்தான்.
"என்ன சொல்ற"
அவள் எதுவுமே பேசாமல் தனது மறுகன்னத்தை காண்பிக்க முத்தம் வைத்தவன், லேசாக சிரித்து தங்கச்சி லவ் பண்றதுக்கு பாசமலர்கள் காவலாக்கும் ...என்று தன் நெற்றியில் அடித்துக்கொண்டவன்...
நாளைக்கு நான் லீவு அம்மாச்சி வீட்ல எதோ பூஜையாம் மூணு நாள் அங்கதான் இருப்பேன்...திங்கள்கிழமை தான் வருவேன் சரியா என்றதும்...
சந்தனாவின் முகம்வாடியது...
"ஓய் ஏஞ்சல் என்னாச்சு"
ஒன்னுமில்லை என்று தலையசைக்கவும்,பார்க்கணும்போல இருந்தா வீடியோ கால் பண்ணு ஓகேவா. என் நம்பர் இருக்கா உன்கிட்ட?
அவளோ புன்னகைத்து ப்ரணவ் அண்ணா மொபைல்ல இருந்து ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போதே சுட்டுட்டேன், என்று கண்ணடித்தாள்...அதைக்கேட்டு சிரித்தவன்" பை டேக் கேர்" என சொல்லிவிட்டு எழும்பியவனின் கையைப்பிடித்து இழுத்தவள்...அதில் முத்தம் வைக்க.
ஹப்பா ரோஜாவின் பனித்துளி கையில் பட்ட சிலிர்ப்பு அவனுக்கு...ஏனோ அவளைவிட்டு நகர்வதற்குகூட விருப்பமில்லாமல் நின்றிருக்க, அதற்குள் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் விலகி நின்றான்...
ரிஸ்வான் எதுவும் சொல்லாமல் வந்து அமர, நான் கிளம்புறேன் சார் என்றதும் அவனும் ஒன்றுமே சொல்லாமல் தலையாட்டினான்.
ரிஷிக்கு எதுவோ மனதை பிசைந்தது...சந்தனாவை இப்போதே தூக்கிட்டு வந்திருவோமா? அவளோடவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது...
வண்டியை எடுத்துக் கொண்டு எப்படி வீடு வந்தான் என்று தெரியாது, எண்ணங்களும், உணர்வுகளும் அவன் வசமே இல்லை, இவ்வளவா அவளை தேடுகிறோம்? என்ற சிந்தனையிலயே வீடு வந்தவன், தனது படுக்கையில் வந்து விழுந்து அப்படியே அமைதியாக கண்மூடி படுத்திருக்க...
யாரோ அவனை தட்டி எழுப்பியது போல தோன்றவும்,யாரது நல்ல சந்தோஷ உணர்வை ரசிக்கவிடாமல் நம்மளை எழுப்புறது என்று கண்விழித்துப் பார்க்க விஜிம்மா நின்றிருந்தார்.
காதல் மயக்கம் போய் தாய்பாசம் வந்ததும் சட்டென்று எழும்பி" விஜி என்ன என்னோட ரூம் பக்கம் வந்திருக்க"
"ஹான். இது என் வீடு நான் எங்க வேணாலும் வருவேன்...நீ என்ன இப்படி அமைதியா வந்துப் படுத்திருக்க அதச்சொல்லு"
"தலைவலிம்மா அதான்" என்று முகத்தை வலியில் இருப்பதுபோல வைத்தான்.
"ஓஓ..சரி படுத்து ரெஸ்ட் எடு, உனக்கு என்னதெல்லாம் எடுத்து வைக்கனும்னு சொல்லு நான் பேக் பண்ணி வைக்குறேன்"
"எதுக்கு"
"நாளைக்கு ஊருக்குப்போறதுக்கு"
" ஊருக்கா நான் வரலை, எனக்கு லீவுத்தரமாட்டேனு சொல்லிட்டாங்க. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க"
"லீவுத் தரலையா? அதை இப்பதான் சொல்லுவியா, அதெல்லாம் எனக்கு தெரியாது நாளைக்கு நீ என்கூட எப்படியும் வர்ற அவ்வளவுதான்"
"விஜி அது எப்படி வர முடியும், லீவு தர மாட்டாங்க, அதையும் மீறி லீவு எடுத்தால் வேலையை விட்டு எடுத்துடுவாங்க" என்று பொய் சொன்னான். அவனுக்கு இப்போது சந்தனாவைப் பார்க்காமல் மூணு நாள் இருக்கணும் என்பதை நினைக்கவே முடியவில்லை...
அப்போ அந்த வேலையை விட்ரு, ஊர்ல இருக்க நிலத்தையெல்லாம் பார்த்திட்டு அங்கயே இரு, வசதியா இருக்கும் என்று விஜிம்மாவும் எகிற...
" என்ன விஜி வேலையை விட்டு வந்துடுனு பொசுக்குன்னு சொல்லிட்ட... எவ்வளவு நல்ல வேலை தெரியுமா....
நாளைக்கு நீங்க எல்லாரும் கிளம்பி போங்க. நான் ஆபீஸ் போயிட்டு எப்படியாவது கெஞ்சி லீவு கேட்டு வாங்கிட்டு சாயங்காலம் கிளம்பி ஊருக்கு வரேன்."
"அவனை முறைத்துப் பார்த்தவர் நீ ஆபிஸ் போயிட்டு, லீவு போட்டுட்டு வா; சாயங்காலமா எல்லாரும் சேர்ந்து போகலாம் சரியா, டேய் நான் உனக்கு அம்மாடா, நீ எந்த வழியில எப்படி போவனு எனக்குத் தெரியும், சரியா தலைவலி போய்ட்டுனா சாப்பிடவா... இல்லன்னா அப்படியே படுத்து தூங்கு" என கோபத்தில் பேசிவிட்டு கீழே சென்றுவிட்டார்...
ஆமா இந்த விஜி பேசும்போது நான் வேலையவிட்டா யாருக்கோ நல்லதுனு பேசினாங்களே...என்னவா இருக்கும்...எதுவா இருந்தா என்ன
பார்த்துக்கலாம் என்று படுத்தவனுக்கு பசி வயிற்றை கிள்ள...
கீழே சென்று மெதுவாக எட்டிப்பார்க்க அங்க எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்...
அமைதியாக சென்று அமர்ந்தவன் அண்ணி எனக்கு சாப்பாடு போடுங்க பசியிலதான் தலைவலிக்குது என்று முகத்தை சுளித்தான்...
விஜிம்மாதான் எழும்பி சாப்பாடு போட்டார். அமைதியாக நல்லபிள்ளைப் போல சாப்பிட்டு எழுந்தவன் தன்னுடைய அறைக்குள் வந்து முடங்கிவிட்டான்...
நள்ளிரவு நேரம் சந்தனாவுடன் கனவில் பலமார்க்கமாக இருக்க...அந்த கனவில் மண் அள்ளிப்போட்டது போனின் அழைப்பு.
அழைப்பை அவன் எடுக்கவில்லை என்றதும் இந்த அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்க...
அடேய் தூக்கத்துலக் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டீங்களா டா என்று போனை எடுத்து காதில் வைக்க...
அந்தப்பக்கமிருந்து" சந்தனா பேசுறேன்" என்றதும் தான்...துள்ளி எழுந்தவன். இந்த நேரத்துல போன் பண்ணிருக்க என்னம்மா என்று வாஞ்சையாக கேட்க...
" உங்களை பார்க்கணும்போல இருக்கு"
அப்படியே உருகிப் போய் விட்டான் அந்த காதலன்...இரு வீடியோ கால் பண்றேன் என்றதும் அவசரமாக வேண்டாம் என்க...
"நீதானம்மா பார்க்கணும்னு சொன்ன"
அவளோ அதற்கு நேர்ல பார்க்கனும்னு சொன்னேன் என்று சிணுங்கிணாள்...
ஐயோ இப்போ பக்கத்துல இருந்தா நல்லாயிருந்திருக்குமே என்று தோன்றினாலும்" இப்போ எப்படி நேர்ல பார்க்க முடியும்"
நீங்க வெளிய வாங்க நாங்க உங்க வீட்டுக்கு முன்னாடிதான் நிக்குறோம்...என்றதும்தான்...
"என்னது எங்க வீட்டு முன்னாடியா, என்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க கார் நின்றிருந்தது"
ஐயோ எங்க வீட்டு சி.சி.டி.வி முழிச்சிக்கப்போகுது...இவ எப்படி இங்க வந்தாளோ..என்று பதறியவன் மெதுவாக கதவைத்திறந்து கேட் சாவியை எடுத்துக்கொண்டுப்போக...
அவனுக்குப் பின்னாடியே ஒரு உருவம் இருட்டில் மறைந்துப் போனது..
ரிஷி வெளியே சென்றதும் அவனைக் கண்டு ஓடி வந்து கட்டிக்கொண்டாள் சந்தனா...
அவளைப் பார்த்ததும் அவனது பயமெல்லாம் எங்கு போனது என்று தெரியாது. அவனும் அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டு நின்றான்.
"சந்தனா ரோட்டுல நிக்கிறீங்க காருக்குள்ள வாங்க" என சத்தம் கேட்டதும் ஒரு நொடி அதிர்ந்தவன்...அது ரிஸ்வானோட சத்தம் என்றதும் சுதாரித்து அவளை தன்னிடமிருந்து விலக்கினான்.
சந்தனாவோ அவனது கையைப்பிடித்து இழுத்து காருக்குள் தள்ளியவள் அவனது மடியில் அமர்ந்து அவனது கழுத்தோடு கையைப் போட்டு அமர்ந்துக் கொண்டாள்...
" என்ன பழக்கம் இது இந்த இராத்திரியில வந்திருக்க என்று லேசாக கோபமுகம் காட்டினான் ரீஷி...
ரிஷிக்கு பின்னாடியே வந்த அந்த உருவம் சந்தனாவும் ரிஷியும் கட்டிப்பிடித்துக்கொண்டு ரோட்டில் நிற்பதைக் கண்டதும், கண்ணீர் கண்களோடு தனதறைக்கு சென்று என்ன செய்யலாம் என்று புது திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது...
What's Your Reaction?






