உறைபனி என்னில் பொழிகிறாய்-15

அத்தியாயம்-15
அன்று காலை எழும்பியதிலிருந்தே சந்தனா சோர்வாகவே இருக்க, குளித்து முடித்து ஆபிஸிற்கு கிளம்பிய ரிஷி, அவள் இன்னும் எழும்பாமல் படுத்திருப்பதைப் பார்த்தவன் "அவளின் அருகே சென்று மெதுவாக தலையை வருடிக் கொடுக்க அப்படியே அவனது தொடைமேல் தலைவைத்துப் படுத்துக் கொண்டாள்...
ஆபிஸிற்கு கிளம்பலையா ஏன் படுத்திருக்க...என்று கேட்கவும்.
தலைசுத்துது,எழும்பவே முடியலை நான் ஆபிஸிற்கு வரலை.நீங்க போங்களேன் என்றதும்..
சோம்பேறி எழும்பி என்கூட சாப்பிடவாது செய் என்று சொல்லவும்.
"வேண்டாம் பசிக்கலை"
"இப்படியே அரைகுறை பட்டினியிலயே இரு...அப்புறம் எங்கயிருந்து பலமிருக்கும்...இராத்திரியும் தாக்குபிடிக்க முடியாது...எழும்பு" என்று அவளை எழுப்பி சாப்பிடுவதற்கு அழைத்து செல்ல...அங்கு எல்லோரும் இவர்களுக்காக காத்திருந்தனர்.
ரிஷி மட்டுமே தயாராகி வந்திருந்தான்..சந்தனா நார்மலாக வரவும்...புரிந்துக் கொண்டனர். இன்னைக்கு ஆபிஸிற்கு மட்டம் போட்டுட்டாள் என்று...வீட்ல உள்ளவங்கதான் அவளுக்கு ஏற்ற மாதிரி இருந்தாங்கனா...ரிஷியும் அப்படியே மாறிப்போனான்.
சாப்பாடு முடித்து எல்லோரும் தங்களது காரில் கிளம்பிச்செல்ல...ரிஷியும் சந்தனாவும் எப்போதும் ஒரே காரில்தான் செல்வர்...இன்று மனைவி வரவில்லை என்றதும் தனியாக சென்றான்.
பாதிவழியில் சென்றுக் கொண்டிருக்கும்போது வழியிலயே கார் நின்றுவிட்டது...இறங்கி பார்த்தவனுக்கு ஒன்றும் புரியாமல்,மெக்கானிக்கிற்கு அழைத்து சொல்லியவன் அங்கேயே நின்றிருந்தான்...
அதற்குள் வேறு காரை வீட்டிலிருந்து எடுத்துவரச்சொல்லியும் தகவல் சொல்லிவிட்டான்.
அப்போது அவனருகில் ஒரு கார் வந்து நிற்கவும்; அதிலிருந்து இறங்கியவனைக் கண்டவனின் முகத்தில் அலட்சியம் வந்தது ரிஷிக்கு.
அது வேறு யாருமல்ல விஷ்வேஷ்தான்...என்ன இங்க நின்னுட்டு இருக்க..பாதியிலேயே மக்கர் பண்ணுதா, இப்படி ஒரு நாள் நடுரோட்டுல நிப்பேனு நினைச்சேன் என்று இருபொருள்பட பேசவும்.
ரிஷிக்கு கோபம் வரத்தான் செய்தது இருந்தாலும் அமைதியாக இருந்தான், இந்த கிறுக்கன்கிட்ட எதுக்கு நாமபேசணும் என்று.
ஆனால் அவனோ "என்ன என் மேலக் கோபம் வருதா? வரணும்தான?"
நான் வேண்டாம்னு கழிச்சுப் போட்டவக் கூடதான் நீ வாழ்க்கை நடத்துற...செகண்ட் ஹண்ட்தான் அவ...என்று அவன் சொன்னதும் ரிஷிக்கு அடக்க முடியாத கோபம் வந்து அவனது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து அடித்துவிட்டான்.
விஷ்வேஷ் திருப்பி ரிஷியை அடிக்க போக பலங்கொண்ட மட்டும் தடுத்தான்.
பிச்சக்காரன்தானடா நீ, என்னைத் தொடறதுக்கு கூட உனக்கு அருகதை இல்லை...என்னைஅடிக்கறீயா நீ? என்று ஆவேசமாக வார்த்தைகளை பிரயோகித்தான் விஷ்வேஷ்.
போய் உன் மச்சான்ககிட்டயும் பொண்டாட்டிகிட்டயும் கேளு...என்னோட எச்சில் வேண்டாம்னு தான் அவங்க அத்தைப் பையன் ஆதவ் சந்தனாவை கலயாணம் பண்ணிக்க முடியாதுனு, வேற கல்யாணம் செய்திட்டு அமெரிக்காவுலயே செட்டில் ஆகிட்டான்...இவனுங்க தேடினாலும் அவன் கிடைக்கமாட்டான்.
என்னை முறைக்கறதை விட்டுட்டு போய் உன் பொண்டாட்டிகிட்டயும் அவங்க குடும்பத்துக்கிட்டயும் போய் கேளு. பணமும் சொத்துக்கும்தான சந்தனாவை லவ் பண்றமாதிரி நடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட...இதையெல்லாம் சொல்லிக்கேளு இன்னும் நிறைய சொத்துக்கள் தருவானுங்க...போடா டேய் என்று அவனைத் தள்ளிவிட்டு சென்றுவிட்டான். (என் மேலயே கைவைக்கிறீயா...இருங்கடா உங்களுக்கு வைக்குறேன்ஆப்பு என்று மனதிற்குள்ளவே கருவிக்கொண்டான்)
ரிஷிக்கோ மனமெல்லாம் ரணமாக வலித்தது...விஷ்வேஷ் சொன்ன எச்சில் பழம் என்று சொன்னது கூட அவனுக்கு வலிக்கவில்லை; சந்தனா தன்னை ஏமாற்றி இருப்பாள் என்று அவனால் நம்ப முடியவில்லை.. அவள் எப்படி இருந்தாலும் அவள் மேல் உள்ள என் காதல் உண்மைதான்... ஆனால் உண்மையை சொல்லி இருக்கலாமே என்று கோபம் ஆத்திரம் எல்லாம் வந்தது.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்...
ரிஷிக்கு இப்போது ஆத்திரம் தலைக்கேறியது,சிந்திக்கத் தவறிவிட்டான். சந்தனா ஏமாற்றிருப்பாளா?அவளது அந்தக் கள்ளமில்லா சிரிப்பில் வஞ்சனை இருக்காது என்று யோசிக்கவில்லை...
தன் நாக்கில் சனிபகவான் நர்த்தனமாடப் போகிறார் என்று அறிந்திருந்தால் நாவை அடக்கிருப்பானோ என்னவோ?
அவனுக்கு கார் வந்ததும் ஏறி அமர்ந்தவன் நேராக ஆபிஸிற்கு சென்றதும் போய் நின்றது...
தன் மாமனார் நாகராஜன் முன்னாடிதான் ஆத்திரத்தில் ஆங்காரமாக நின்றிருந்தவனைக் கண்டவர்.. என்ன ரிஷி இப்படி வந்து இருக்கீங்க? என்ன ஆச்சு? என்று பதறி எழுந்து கேட்கவும்...
விஷ்வேஷ்க்கும் சந்தனாவுக்கு என்ன சம்பந்தம்...அவன் பழகி அனுபவிச்சுட்டு வேண்டாம்னு விட்டுட்டுப் போயிட்டான் அப்படித்தான?
அப்படிப்பட்ட கேவலமானப் பொண்ணு எனக்கு வேண்டாம்னு உங்க சொந்த அக்கா மகனே அவளைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேனு, அமெரிக்காவுலயே எவளையோ கட்டிக்கிட்டு,உங்ககிட்ட இருந்து மறைஞ்சு வாழ்ந்திட்டிருக்கான்...ஹப்பா எப்படிப்பட்ட உத்தமமான பொண்ணை பெத்து வச்சிருக்கீங்க...
அப்படிப்பட்டவ என்னை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்னவொரு பெரிய பிராடுங்க நீங்க எல்லாரும்...என்று சத்தம்போட்டு பேசவும் நாகராஜிக்கும் கோபம் வந்து "என்ன பேசுறீங்க ரிஷி...கோபத்துல வார்த்தைகளை அளந்துப் பேசுங்க..என் பொண்ணு பத்திரமாத்து தங்கம்...அவ மேல எதாவது பலி போட்டு பேசுனீங்க நல்லாயிருக்காது...
அதுதான் பிச்சக்கரானுக்கு தங்கத்துல திருவோடு கிடைச்சாலும் அது வச்சு பிச்சைதான் எடுப்பானாம்...அப்படித்தான் நீங்க பண்றீங்க. அவளைப் பத்தி இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?
என் பொண்ணோட அருமை தெரியும் போது...அவள நீங்க இழந்திருப்பீங்க..என்ன கோபமானாலும் வார்த்தைகளை கவனமாக பேசுங்க என்று இறுதியில் வருத்தத்தோடு முடித்து அப்படியே சோர்ந்து அமர்ந்துவிட்டார்...
ஆமா ஆமா தங்கமா? தகரமா? இப்போதான் ஒருத்தன் வந்து என்கிட்ட கதை கதையா சொல்லிட்டுப்போறான். என் பொண்டாட்டியப் பத்தி இன்னொருத்தன் செகண்ட் ஹாண்ட்டு சொல்லுறதைக் கேட்டு வாயை மூடிட்டு சும்மா வர்றளவுக்கு உங்கப்பொண்ணு இலட்சணம் இருக்கு என்று திரும்பவும் பேசினான்.
ரிஷி சத்தம் போட்டு பேசுவது வெளியே கேட்கவும் அங்கு இருந்த சந்தனாவின் சகோதரர்களும் ரிஷி பேசத் தொடங்கம் போதே உள்ளே வந்திருந்தனர்...ரிஷி திரும்பி நாகராஜை பார்த்து நின்றதால் அவர்கள் வந்தது தெரியவில்லை...
அவர்கள் எல்லோரும்,பின்னாக நின்ற ஒரு முக்கியமான ஆளை கவனிக்கவில்லை...
சனிபகவான் மட்டுமல்ல,ராகு கேது எல்லோரும் ரிஷியை சுற்றி நின்று பார்த்தனர் போல...
இப்போது ரிஸ்வானைப் பார்த்து...அர்த்த இராத்திரியில் உன் தங்கச்சி என்னை பார்க்க வரும்போது என் மேல எவ்வளவு காதல்னு அப்படியே பூரிச்சுபோனேன்...
இப்போதான தெரியுது உன் தங்கைக்கு ஆம்பளை தேவைப்பட்டிருக்குனு...நீங்க எல்லாரும் காதலுக்கு உதவி செய்தீங்கனு நினைச்சேன், இப்போதான தெரியுது...
நீங்க எல்லாரும் மாமா வேலை பார்த்திருக்கீங்கனு என்று சொல்லி முடிக்கவில்லை...கேசவும், வைபவும் அவன் கழுத்தைப் பிடித்திருந்தனர்...ரிஷி திமிறவும்...
"ண்ணா அவங்களை விடுங்க" என்று குரல் கேட்டதும் தான் எல்லோரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்...
எதற்காக இவ்வளவு பாடுபட்டாங்களோ! அது எல்லாம் வீணாகப்போய்விட்டதே! என்று எல்லாரும் கலங்கி தவித்து அவளையே பார்த்திருந்தனர்...
ரிஷிக்கோ கோபம் ஆத்திரமெல்லாம் அவளை பார்த்ததும், வடிந்து போனது...
சந்தனாவையே பார்த்திருந்தான்...
ஆனால் அவளோ எதுக்குப்பா அவங்களை அடிக்கப்போறீங்க...என்கூட வாழும்போது நான் எப்படிபட்ட பொண்ணுனு அவர் உணரலையா? என்னோட காதல் அவரால உணர முடியலையா? நான் உண்மையா அவரோட பொண்டாட்டியா வாழந்திட்டிருக்கது புரியலையா? எவனோ எதோ சொன்னதைவச்சு காதலிச்சு கட்டினவளையே சந்தேகப்படுறாங்க, அவங்களை அடிச்சு இனி என்னாகப்போகுது...
விடுங்கப்பா என் காதல் உண்மையானது. அதை வார்த்தைகளாலயும், சாட்சியினாலயும் நிருபிக்கவேண்டிய அவசியமில்லைப்பா என்றாள்.
ரிஷியை திரும்பிக்கூட பார்க்கவில்லை அப்படியே மயங்கிச் சரிய அவளது கையிலிருந்த பொருளோன்று உருண்டு விழுந்தது...
அதற்குள் ப்ரணவ் தங்கையை கையில் தாங்கியிருந்தான்...விழுந்தப் பொருளைப் பார்த்ததும்தான் ரிஷிக்கு சிறிது புத்தி தெளிந்தது...எல்லோரும் அந்தப் பொருளையே பார்த்தவிட்டு இன்னும் நொந்துப்போயினர்...எவ்வளவு சந்தோஷமாக ரிஷியைப் பார்க்க வந்தாளோ? கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என்று.
அதற்குள் எல்லாமே கைமீறி போய்விட்டது, அதை எடுத்துப் பார்த்தவனுக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. அவனுக்கு மனைவி மீது எந்தக் கோபமும் இல்லை...இவனுங்க எல்லோரும் தன்னை ஏமாத்திட்டாங்க என்று கோபத்தில் வந்தவனது ஆங்காரம் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
வீட்டிலிருந்த சந்தனா எப்படி இங்கே வந்தாள் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
காலையில் ரிஷி கிளம்பி வரவும் சோர்வாக இருந்த சந்தனாவை ஜமுனாவும், பத்மாவும் பக்கத்தில் இருத்தி என்ன செய்து என்று விசாரித்து.. புரிந்து கொண்டனர்.
உடனே சந்தனாவிடம் விவரத்தை சொல்ல,அவளோ மெடிக்கலில் கிட் வாங்கிப் பார்த்துவிட்டு சந்தோஷத்தில் ரிஷியை இப்பவே பார்க்கணும்னு உடனே ட்ரைவரை அழைத்துக்கொண்டு ஆபிஸிற்கே வந்துவிட்டாள்...
இங்கு வரவும் ரிஷியின் சத்தம் தன் தந்தையின் இடத்திலிருந்து வரவும், அவசரமாக உள்ளே வர முற்பட.. அவளது அண்ணன்கள் ரிஷியை பார்த்து அந்தபக்கமாக திரும்பி நின்றிருக்க, சந்தனா வந்தது யாருக்கும் தெரியவில்லை...ரிஷி பேசிய அத்தனை வார்த்தைகளும் அவளது காதிலும் விழுந்திருந்தது, ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் பாதி போயிட்டு வந்தது அவளுக்கு...ரிஷியா இப்படி பேசுறது என்று அதிர்ந்து நின்றிருந்தாள்.
எதுவாக இருந்தாலும் என்கிட்ட கல்யாணம் முடிஞ்சதும் சொல்லிருக்கணும், ஏன் மறைச்சானுங்க. அப்போ எதாவது தப்பு இருக்குதான என்று கடற்கரை மணலில் படுத்துக்கொண்டே யோசித்திருந்தான்.
இங்கோ சந்தனாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
நள்ளிரவு ரிஷி தங்களது வீட்டை தட்டிக் கொண்டிருந்தான், விஜிம்மாதான் கதவைத் திறந்தார்...கதவைத் திறக்கவும் அவரைக் கட்டிக்கொண்டு "விஜி நான் ஏமாந்துப் போயிட்டேன்...நீ சொன்னதை நான் கேட்காமப் போயிட்டேன்...என்று அழுதான்...அவன் நன்கு போதையிலிருந்தான்,அவனால் நிற்ககூட முடியவில்லை...ரொம்ப புலம்பினான்.
விஜி அவனையே பார்த்திருந்தார்...
ராமகிருஷ்ணன் தான் அவனை அழைத்துக் கொண்டு அவனது அறையில் படுக்கவைத்தவர், மகனைப் பார்த்தவர் அங்கயே படுத்துவிட்டார்...
காலையில் எழும்பியவன் எங்கயிருக்கேன் என்று யோசித்துப் பார்த்தவனுக்கு சந்தனாவின் நியாபகம் வந்தது...எப்படி இருக்காளோ என்று மனது பதைக்க... நேற்று நடந்தது நியாபகம் வர, அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை மனது வலித்தது...அதோடு சேர்த்து தலையும் வலிக்க குளித்து வந்தவன்...கீழே வந்து விஜி ப்ளீஸ் எனக்கு ஒரு காபி கிடைக்குமா என்று கேட்டு முடிக்கவில்லை...விஜி அறைந்திருந்தார் ரிஷியை.
உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை சந்தேகப்புத்தி எப்படி வந்தது உனக்கு...நீதான அவ வேணும்னு தாலிக்கட்டின, நீதான அவக்கூட குடும்பம் நட்ததின உன் பொண்டாட்டியை பத்தி உனக்குத் தெரியாதா? வார்த்தைகளால் ஒரு குடும்பத்தையே அழ வச்சிட்டு வந்திருக்க...உனக்கு இருக்கறது நாக்கா? வேற என்னதுமா? என்று சாமியாடிவிட்டார்...
ரிஷி இந்த அவதாரத்தை விஜிம்மாவிடம் எதிர்ப்பார்க்கவில்லை...
கன்னத்தைப் பிடித்து அப்படியே வாயைப் பிளந்து அமர்ந்திருந்தான்.அவர்களுக்கு ரிஸ்வான் அழைத்து எல்லாவற்றையும்,முக்கியமாக சந்தனா மருத்துவமனையில் இருப்பது வரைக்கும் கூறிவிட்டான்.
அதற்குள் கதவு வேகமாகத் தட்டப்பட திறந்தவர் வாங்க என்று உள்ளே அழைக்க...அங்கு பத்மாவும் வைபவும் வந்திருந்தனர்.
வைபவ் கோபத்தில் எதுவுமே பேசாமல் ரிஷியை முறைத்துப் பார்த்திருந்தான்;
பத்மா ரிஷியின் அருகில் வந்து எப்படி இருக்க?ஒரே நாள்ல அசந்தாப்புல இருக்க என்று கன்னத்தை வாஞ்சையாக தடவினார்...
அவனோ எதுவும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்...இப்போது அவன் யாரையும் நம்பும்படியாக இல்லை.
அமைதியாக ரிஷி இருக்கவும்...பத்மா ரிஷியிடம்"விஷ்வேஷ் நேத்து உன்னை பார்த்து பேசினானாப்பா?"
ரிஷி" ம்ம்" என்று குனிந்துக்கொண்டே தலையாட்டினான்.
பத்மா"உண்மையிலயே உனக்குத் தெரிஞ்சப் பொண்ணு ஒன்னு தப்பு பண்ணிட்டானு வச்சிக்கோயேன், எதேச்சையா அவளுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் முடிஞ்சிடுச்சிடுச்சு,அந்த பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீ என்ன செய்வ"
ரிஷி அவரை நிமிர்ந்து பார்த்து என்ன லூசுத்தனமா கேள்வி கேட்டுட்டு என்று முறைத்துப் பார்க்க...
பதில் சொல்லுப்பா?
இனியாவது நல்லாயிருக்கட்டும்னு எனக்குத் தெரிந்த விசயத்தை மறைச்சிருவேன் என்றான்...
இங்க ஒருத்தன் உன்னைத் தேடி வந்து எதாவது உன் மனைவியப் பத்தி தப்பா சொல்றனா என்ன விசயம்னு படிச்ச பிள்ளைங்க நீங்களாம் யோசிக்கமாட்டீங்களா?
ஒருத்தங்க வாழ்க்கையை கெடுக்கறவிதமா ஒருத்தன் பேசினா...அவன் எப்படிப்பட்ட கேவலமான பிறவியா இருப்பானு நீ யோசிக்கலையாப்பா?
அதை விடு உன் சந்தனாவை பத்தி உனக்குத் தெரியாதா அவனுக்குத் தெரிஞ்சிறப் போகுது...
அதைவிட முக்கியமான ஒரு விசயம் பேசறதுக்குத் தான் நான் இங்க வந்தேன்...
என் பையன் ஆதி சந்தனாவை அசிங்கமான பொண்ணு அதனால வேண்டாம்னு போய்ட்டதா பேசியிருக்க.
என் ஆதியைப் பத்தி உனக்கு என்னத் தெரியும்? அவன் என் குலதெய்வமா இருக்கான் இப்போ?
ஒரு உண்மைத் தெரியுமா சந்தனா உண்மையிலேயே தப்பு பண்ணிக் கெட்டுப் போயிருந்தாக்கூட ஆதி அவளைத்தான் கல்யாணம் பண்ணிருப்பான்...ஏன்னா சந்தனாவை உண்மையா காதலிச்சான். அவ பிறக்கறதுக்கு முன்னாடி இருந்தே. அவன் உயிரோட இருந்திருந்தா உன் நிழல் கூட சந்தனாமேல படவிட்டிருக்கமாட்டான் என்றதும்.
ரிஷி சட்டென்று அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தான்...
கடவுள்கிட்ட போயிட்ட என் பிள்ளைய பத்தி தப்பா பேசறதுக்கு எவனுக்கும் உரிமையில்லை..அவனோட உயிரே சந்தனா தான்...அவன் உயிரைக்கொடுத்து அவளை காப்பாத்திட்டுப் போயிட்டான் என்று கண்கலங்கினார்.
அதற்குள் வைபவ் "அவனோட காதலுக்கு முன்னாடிலாம் நீயெல்லாம் ஒன்னுமேயில்லை. என் தங்கையோட காதலுக்கு கூட நீ தகுதியில்லாதவன் தான்...நேத்து என்னவெல்லாம் பேசின "என்று கோபத்தில் திட்டினான்.
பத்மா அதட்டினார் வைபவ் அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை.. எது எப்படி இருந்தாலும் மரியாதைக் கொடுத்துப் பேசுப்பா...
இது சந்தனாவோட வாழ்க்கை. அதுக்காகத்தான் பேச வந்திருக்கோம் நியாபகமிருக்கட்டும்..என்று வைபவை அதட்டினார்.
ரிஷிக்கு இப்போது தன்னுடைய உலகமே காலடியில் நழுவி செல்வதுப்போல உணர்ந்தான்.
What's Your Reaction?






