உறைபனி என்னில் பொழிகிறாய்-7

அத்தியாயம்-7
காருக்குள் இருந்த ரிஷி கோபமுகம் காட்டவும், சந்தனா தன் மலர்முகம் வாடியவள், அப்படியே அவன் தோளில் இருந்து கரத்தை விலக்கி, அவனது மடியிலிருந்து இறங்கப்போக...
அவளது இடுப்போடு கையைப்போட்டு இழுத்தவன் எதுக்கு இறங்குற...
உங்களுக்குத்தான் என்னை பார்க்கணும்போல இல்லையே...நான் எவ்வளவு கஷ்டப்பட்டு பிடிவாதம் பிடிச்சு ரிஸ்வான் அண்ணாவத் துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கேனு தெரியுமா...அதுக்கு நீங்க திட்டுறீங்க என சொன்னவள்.
நான் என் வீட்டுக்குப் போறேன் என்று அவனிடமிருந்து விடுபட நினைக்க, அவளால் முடியவில்லை, அவனது பிடி இறுகியிருந்தது, ஆனாலும் அங்கும் இங்கும் அசைந்துப்பார்க்க முடியவில்லை...
ரிஷியின் முகத்தை இப்போது பார்த்தாள்; அவனது விழிகளில் மயக்கம் கலந்த குறும்பு இருந்தது...
கோபத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்...அவனது உதட்டருகில் அவளது காதுமடல் இருக்க,ரிஷி தனது நாவினால் அதை தொட சிலிர்த்தவள், இன்னும் முறுக்கிக் கொள்ள, அப்படியே தனது பற்களால் மெதுவாக கடித்து வைத்தான்...
கூச்சத்திலும் வெட்கத்திலும் நெளிய அவளது முன்பக்கம் முழுவதும் அவன் நெஞ்சோடு உரசியது, இருவரும் அப்படியே சிறிது நேரமிருக்க, ஏறியிறங்கிய அவளது நெஞ்சுக்கூடு அவனுக்குள் எங்கெங்கோ உணர்வுகளைத் தட்டி எழுப்பிருந்தது...
மெதுவாக அவளது கன்னத்தில் முத்தம் வைத்தவன்" இப்படி அர்த்த இராத்திரியில் வர்றது தப்பு...உங்க ரிஸ்வான் அண்ணாவும் வீட்ல யாருக்கும் தெரியாமதான் அழைச்சிட்டு வந்திருப்பான், என்னதான் இருந்தாலும் அவங்களுக்கு இப்படி வர்றது தப்பாகத்தான தெரியும்...என்ன புரியுதா?
"ம்ம்"
என்ன கோபத்துல ம்ம் சொல்றமாதிரி இருக்கு?
"இல்லை"என்று தலையாட்டினாள்.
சரி பாவம் உங்க அண்ணன் வெளிய நிக்குறான்...நாளைக்கு நான் உன்னை பார்க்க ஆபிஸ் வருவேன்...சரியா என்றவன் இறங்குடா...என்க.
அவளோ அவனது கண்களையே பார்த்து அப்படியே இருந்தவள்"நம்ம இரண்டுபேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா...இன்னைக்கு"
"என்னது ஓடிப்போயா...ஏன்மா ஏன் உங்க அண்ணனுங்க என் முதுகுல டின்னுக் கட்டிடுவானுங்க, நான் ஊருக்குப்போயிட்டு வந்து எதுனாலும் பார்த்துக்கலாம்...
பார்க்கணும் போல இருக்குணு தஞ்சாவூர் வந்திடாத தாயே நல்லாயிருப்ப...
விஜி ரூட்டே மாத்திருவாங்க அப்புறம்"
"யாரு அது விஜி" என்று முறைக்க...ஆமா இதுல மட்டும் கரெக்ட்டா இருங்க...அது எங்கம்மா, என்னைய பெத்த தாய் விஜயலெட்சுமி"
"ஓ அத்தையா"
"ஆமா உன் மாமியாரு"
அப்படி சொன்னதும் சந்தனா கிலுக்கி சிரிக்க...சிரிக்காதடி மச்சானுக்கு உள்ளுக்குள்ள என்னவோ போல இருக்கு...
அதுக்கும் அவள் சிரிக்க அவளது தலையை சரித்து இதழோடு இதழ் பொருத்தி, உயிர் குடிக்க, உயிர் இரண்டும் ஒன்றையொன்று இடமாறிக்கொண்டது...
இதற்கு மேலிருந்தால் சரிவராது என்று அவளை தனது மடியிலிருந்து இறக்குவதற்காக அவளது இடுப்பில் கை வைக்க...அது டீசர்ட்டின் உள்ளே சென்று வெண்ணெய் போன்ற வளவள இடுப்பில் தொடவும், அப்படியே உறைந்து நின்றனர் இருவரும்...
மெதுவாக டீசர்ட்டின் உள்ளே கையை மேல் நோக்கி நகர்த்தி சென்றவனின் கைகள் அவளது பூப்பந்துகளை பற்ற, பெண்ணவளோ இதை எதிர்பார்க்கவில்லை அதிர்ந்து பார்க்க...
அவளது கண்களைப் பார்த்துக்கொண்டே கையால் அழுத்த, ஒரு நொடியில் பெண்மை வெடித்து தனது இதழ்களை மெல்ல திறந்தவளின் கண்கள் காட்டிய கிறக்கத்தில்,இப்போதே அவளை ஆண்டுவிட பேராவல் அவனுக்கு...
அவ்வளவுதான் ரிஷியின் எல்லா கட்டுப்பாடுகளும் தளர்ந்து மாதுவின் மீதுள்ள போதை தலைக்கு உச்சத்தில் ஏறியது...
சிறிது முன்பு கனவில் அவளுடன் எப்படி இருந்தோம் என்ற நினைவு வேறு வர, அப்படியே சட்டையின் மேலோடு கடித்திழுக்க...
தன் கரம்கொண்டு தடுத்தவள் தன் உதடு கடித்து அந்த சுகத்தில் லயிக்க...கார் கதவை தட்டும் சத்தம் கேட்டது...
ரிஷி நொந்துப்போனான் பாதியில் விடவும் முடியாமல்,இப்போதே அவளோடு ஒன்றிவிடவேண்டும் என்று கேட்ட உடலினை கட்டுப்படுத்த இருவரும் போராடினர்...
ரிஷி அவளை விடுவித்து அவளது ஆடையைசரிசெய்து, அமைதியாக கார் கதவை திறக்க ரிஸ்வான் தனது தங்கையைப் பார்த்து "சந்துமா இதுதான் கடைசி இனி இப்படியெல்லாம் பிடிவாதம் பிடிச்சா அழைச்சிட்டு வரமாட்டேன், இது நல்லபழக்கமும் இல்லை, என பார்வை ரிஷியின் பக்கமும் இருந்தது...ரிஷிக்கும் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது"
ஏஞ்சல்மா இனி இப்படி வந்தா நான் உன்னை பார்க்க வரமாட்டேன் இது சரியில்லை தப்பு சரியா..நான் நாளைக்கு ஆபிஸிற்கு வருவேன்...இப்போ போ என்றவன் காரிலிருந்து இறங்கினான்.
காரை எடுக்கவும் சந்தனா அவனுக்கு கையைக் காட்டி விடைபெற...ரிஷிக்கு காரின் பின்னாக ஓடிச்சென்று இப்பவே சந்தனாவை வீட்டிற்குள் அழைத்து வர ஆசைதான்...
ஆனாலும் அதுசரியில்லையே என்று பெருமூச்சொன்றைவிட்டவன்...அப்படியே மெதுவாக பூனைபோல சத்தங்கேட்காமல் நடந்து தனதறைக்குள் புகுந்துக்கொண்டு, அபப்டியே படுக்கையில் விழுந்தவனுக்கு சுககனவுகளும் நல்ல நித்திரையும் வந்தது...
காலையில் எழும்பி கீழேவரவும் விஜிம்மாவின் முகம் அழுததில் வீங்கி ஒருமாதிரியாகவே இருந்தார்...
அவரைப் பார்த்ததும் பக்கத்தில் வந்து " அவரது நெற்றியை தொட்டுப் பார்த்து காய்ச்சலா விஜி, ஒரு மாதிரி இருக்க வா, ஹாஸ்பிட்டல் போகலாம்" என்று ரிஷி பேசவும்...
இல்லை வேண்டாம் சரியா போய்டும் என்று பேசியவரின் குரலும் சரியில்லை...எல்லாம் அழுததின் விளைவு...
அவனுக்கு அன்னையின் செயல் வித்தியாசமாகப்பட, நேற்று இராத்திரி விஜி நம்மள ஒருவேளை பார்த்திருப்பாங்களோ...ஐயயோ அப்படினா சமாளிக்கனுமே...எப்படி? என யோசித்து நின்றவனின் சிந்தனையை கலைத்தது விஜியின் குரல்...
" இன்னைக்கு ஆபீஸ் போறியா சீக்கிரம் வந்துரு நாங்க எல்லாரும் கிளம்பி இருப்போம்" என்று தனது பேச்சை முடித்துவிட்டார்.
ரிஷி தனது அண்ணியைப் பார்க்க வர்ஷா நால்லாதான் இருந்தாள்...நேராக ஹாலில் இருந்த ராமகிருஷ்ணனிடம் போய் நின்றவன்...
"ப்பா, நீங்க எதுவும் விஜிக்கிட்ட சண்டை போட்டீங்களா என்ன?"
என்னடா உளர்ற, என் பொண்டாட்டிகிட்ட ஏன்டா நான் சண்டைபோட போறேன்..
அதான் எனக்கும் சேர்த்து அவ சண்டை போடுறாளே. கல்யாணம் ஆகி குழந்தை குட்டி எல்லாம் பிறந்திட்டா, சண்டை போட கூட உரிமை நமக்கு கிடையாது மகனே" என சிரித்தார்...
உங்ககிட்ட வந்துக் கேட்டேன்பாரு என்னை சொல்லனும் என்று நெற்றியில் அடித்துக்கொண்டு சென்றுவிட்டான்...
அவன் சென்றதும் அவரது முகம் வேதனையில் மாறிற்று...
இரவு கதவு திறக்கும் சத்தம்கேட்டு மெதுவாக வெளியே வந்த விஜிம்மா பார்த்தது, ரிஷி மெதுவாக பதுங்கிப் பதுங்கி பார்த்து சென்றது தான்...
இந்த நேரத்துல இங்க என்ன பண்றான்? என்று அவன் பின்னால் சென்று பார்க்கவும், நடுத்தெருவில் இவனைப் பார்த்து ஒரு பெண் ஓடிவந்து கட்டிப்பிடித்ததைக் கண்டதும், அப்படியே அதிர்ச்சியில் சிலையாக நின்றுவிட்டார்...
அப்படியே தனதறைக்கு வந்து ஏங்கி ஏங்கி அழுதார்..அவரது அழுகை சத்தத்தைக் கேட்டு ராமகிருஷ்ணன் எழுந்தவர்...என்னம்மா அழற என்னாச்சு என்று பதறி கேட்கவும் தான் வெளியே நடந்ததை சொல்ல...
அவனுக்கு எது விருப்பமோ அதையே செய்துக்கட்டுமே...அவன் சந்தோஷமா இருக்கணும் அதுதான நமக்குவேணும் என்று அவர் வார்த்தைகளைவிட...
முறைத்துபார்த்த விஜிம்மா "சந்தோஷமான வாழ்க்கையைவிட நிம்மதியான வாழ்க்கை ரொம்ப முக்கியங்க, நம்ம பிள்ளைங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை குடுக்கணும்...எந்தவித தொந்தரவும் இல்லாம, அமைதியான வாழ்க்கை வாழணும்"
ரிஷிக்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை விளையாட்டா பேசறானு நினைச்சேன்...இனி என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும் நீங்க அவன்கிட்ட எதையும் உளறிடாதிங்க என்றார்.
ரிஷி அந்தப்பக்கமாக கிளம்பியதும் விஜிம்மா போன் செய்து...
தனது அண்ணனுக்கு அழைத்தார்"அண்ணே, இராத்திரிதான் கிளம்புறோம்...உன் சின்ன மருமகனுக்கு எதோ ஆபீஸ்ல வேலைன்னு போயிட்டான்...ஏற்கனவே ஏற்பாடு செய்த மாதிரி எல்லாம் இருக்கட்டும். ஆனா அதுல ஒரு சின்ன மாற்றம் இங்க இருந்து நான் தாலி வாங்கிட்டு வரேன் நிச்சயதார்த்தம் இல்லை, கல்யாணம்னு எல்லோரையும் அழைச்சிடு"
"என்னம்மா இது..இவ்வளவு அவசரமா, சரியா வருமாம்மா"
" அவசரம் தான்,ரொம்ப அவசரம் இப்போ விட்டுட்டா, பிறகு நம்ம பையன் நமக்கு இல்லனு ஆயிடுவான், அவனது வாழ்க்கைக்கு எது நல்லதோ அதுதான் நம்ம செய்கிறோம், கண்டிப்பாக என் மகன் என்ன புரிஞ்சிப்பான், நீ கவலைப்படாத"
" சரிடா எல்லாம் ஏற்பாடு செய்றேன், வைக்கிறேன்டா" என பேசி முடித்துவிட்டனர்...
இப்போது வர்ஷாவை அழைத்துக் கொண்டு தாலி வாங்கிக் கொண்டு வைத்துவிட்டார்...
அங்கே ஆபிஸ் சென்ற ரிஷியோ செமகுஷியாக வேலை செய்துக் கொண்டிருந்தான்...
எல்லோரிடமும் சிரித்து பேசி வித்தியாசமாக தெரிந்தான்...
சந்தனாவுடனான காதல் அவனுக்கு புது உலகமாகத் தெரிந்தது எல்லாமே...
மதியம் வரை அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை...பிறகுதான் யோசித்தான்...சந்தனா என்னை அழைக்கவேயில்லையே நம்மளும் போய் பார்க்கலயே என்று அவளை பார்க்கும் ஆசையில் எம்.டி அறைக்குள் சென்றவன் வெறுத்துப்போனான்...
அங்கோ நாகராஜ் அமர்ந்திருந்தார்...வாங்க ரிஷி நானே உங்களை அழைக்கணும்னு இருந்தேன், நீங்க வந்ததும் நல்லாதாப்போச்சு என்றவர்...
" உங்க வீட்டுக்கு வந்து பெரியவங்ககிட்ட முறையா பேசணுமே...எப்போ வரணும் ரிஷி சொல்லுங்க"
என்னடா ரிஷி காதலிக்க ஆரம்பிச்சு இரண்டு நாள்தான் ஆகுது; அதுக்குள்ள கல்யாணமா? என யோசித்தவன்.
காதல்னா கல்யாணம் பண்ணனும்...அதுக்குப் பேசாம கல்யாணம் பண்ணிட்டு எவ்வளவுனாலும் காதலிப்போம்...ஓகே சொல்லி வரச்சொல்லு
ரிஷி...
நேத்தே உன் கட்டுப்பாடெல்லாம் போச்சுது, இனியும் சந்தனாவை பக்கத்துல வச்சுட்டு சும்மாயிருக்க முடியாது ரிஷி சரினு தலையாட்டிரு...
ரிஷி "அது நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம் சார்...அம்மாகிட்ட கேட்டுட்டு எப்போ வரணும்னு சொல்லவா சார்"
அவருக்கு அவனது பதில் திருப்தியாக இருந்தது...பெரியவங்களிடம் கேட்டுட்டு சொல்றேன் என சொன்னதும்.
சரி ரிஷி நீங்க ஊருக்குப் போயிட்டு வந்ததும் நாள் சொல்லுங்க எங்க குடும்பத்துல இருந்து வந்து பேசுறோம்...ஓகே என்று பேச்சை முடித்துக்கொள்ள..வேற வழியின்றி வெளியே வந்தவன்.
அர்த்தராத்திரியில் வீட்டுக்கு வந்தவளுக்கு இன்னைக்கு ஆபிஸ்வர முடியலையா? என்று கோபத்தில் வந்து முடிக்க வேண்டிய வேலையை செய்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் சந்தனாவிடமிருந்து அழைப்பு வரவும், பார்த்தவன் எடுக்கவில்லை...
விஜிக்கிட்ட பொய் சொல்லிட்டு இங்க வந்தா இவ வரல...போடி அழைப்பை எடுக்காமல் இருந்தான்.
ஆனாலும் மனசுக் கேட்காமல் அழைப்பை எடுத்தவன் "தனது காதில் வைத்துவிட்டு பேசாமலேயே இருந்தான். அந்தப்பக்கம் அவளும் பேசாமல் இருக்க...அழைப்பை துண்டித்தான்...
மறுபடியும் அழைப்பு வர எடுத்தவன் "போன் பண்ணினா பேசணும் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்று கொஞ்சம் கோபத்தைக் காட்டினான்...அங்கோ அவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.
சரிதான் இப்போதான் காதலிக்கத் தொடங்கியிருக்கேன். அதுக்குள்ள சண்டையா...ஊப்ஸ், சிறிது நேரம் அவளது அழைப்பிற்காக காத்திருந்தவன்,வரவில்லை என்றதும் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்...
மேனேஜரிடம் அனுமதி பெற்று சீக்கிரமாக வீட்டிற்கு கிளம்பியவன்; தனது வண்டியை எடுக்க பார்க்கிங் லாட்டில் நின்றவன் முன்பு ஒரு கார் வந்து நிற்க...யார் என்று பார்க்க அப்படியே உறைந்து நின்றான்...
சந்தனாதான் வந்திறங்கினாள், சேலைக்கட்டி பூவெல்லாம் வைத்திருந்தாள்,தேவதை மாதிரி வந்திறங்கியவளைக் கண்டதும் இருந்தக் கோபமெல்லாம் காற்றில் கரைந்துப்போனது...
அவனை நெருங்கி வந்து நின்றவள் தனது கையில் வைத்திருந்த குங்குமம் கலந்த திருநீற்றை அவனது நெற்றியில் வைத்துவிட, அதை தட்டிவிட அவனுக்கு மனதில்லை...
விஜி மட்டும் இப்போ பார்க்கணும், ஐயோ உன் தலையில் தேங்காய் சிதறல்தான் மவனே என்று வந்த சிந்தனையை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டான். அவன் பேச தொடங்குவதற்குள்...
சந்தனா "என் மேல கோபமா, எதோ சாமிக்கு வேண்டுதலாம், ரொம்ப தூரமா கூட்டிட்டுப் போயிட்டாங்க அம்மா, அதான் இப்போ உங்களைப் பார்க்க ஓடிவந்துட்டேன்" என்று அவன் கேட்கும் முன்பாகவே இவளாக விளக்கம் சொல்ல...
"ஐயோ ஏஞ்சல் உன் மேல எனக்கு கோபம் இல்லைடா என்று அவளை தன் பக்கமா இழுத்தவன்,ரொம்ப அழகா இருக்கடா" என அவளது கன்னத்தை ஒருவிரலால் தொட்டு நிமிண்ட...
அவளுக்கோ வெட்கம் வந்து லேசாக சிரித்தாள்...சுற்றும் முற்றும் பார்க்க யாருமில்லை,இதைக் கண்டவளோ ட்ரைவர் அண்ணாவா? அப்பவே போயிட்டாங்க என்றாள்...
அதுக்கு பார்க்கலை உன் பாசமலர்ல எதாவது ஒரு நம்பராவது வந்து நிற்காங்களானு பார்த்தேன்...
"ஐய, அண்ணனுங்களை அப்படி சொல்லாதிங்க பாவம் அவங்க" என லேசாக
கண்ணை உருட்டி மிரட்ட...
அவளது கண்ணசைவிலயே சொக்கித்தான் போனான் ரிஷி...அதற்குமேல் அமைதியாக இருக்க அவன் என்ன ரிஷியா?
"கொல்லாமல் கொல்லும்
என் மாயமோகினி...
உயிருக்குள் சதிராடி
என் உதிரத்தையெல்லாம் கொதிநிலையில்
வைக்கும் காதல்காரி"
ஆக்டோபஸின் கரங்களைப் போன்று அவளை இழுத்து தனது கரத்திற்குள் வைத்து, காட்டுமுத்தம் வைக்க ஆரம்பித்தான்...
பச்சக் பச்சக் என்று சத்தம் மட்டுமே அந்த அரையிருட்டில் கேட்டது...
எப்படியும் இரண்டுநாள் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்மா என்று உளறிக் கொட்டிக் கொண்டே தனது செயலில் மும்முரமாக இறுக்க...
அவனது கரத்தை லேசாக விலக்கி வலிக்குது மெதுவாகப் பிடிங்க என்று சொன்னதும்தான், பிடியை தளர்த்தினான்...
"ஏஞ்சல்" என்று அழைத்ததும் அவனை நிமிர்ந்துப் பார்க்க..
உங்கப்பா என்கிட்ட பேசினாங்க...
ஊருக்கு போயிட்டு வந்து நம்ம விசயமா பேசி சீக்கிரமா கல்யாணம் வச்சிடுவாங்க...ஓகே வா உனக்கு என அவளிடம் கேட்க...
அவளது கண்கள் விரிந்து அப்படியா எனக்கேட்டு சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்த எனத்தெரியாமல் திண்டாட...
அவனோ தனது உதட்டினை அவளுக்கு முன் கொண்டு செல்ல...அவள் அங்க முத்தமிடச் சென்று ரிஷியின் கன்னத்தில் முத்தமிட...
இது சீட்டிங்க் உனக்கு முத்தம் கொடுக்கத் தெரியலை என்று தனது கரங்கொண்டு அவளது கீழ் உதட்டைப் பிடித்திழுத்தவன், அப்படியே அவளது உயரத்திற்கு குனிந்து, தனது தலைய சாய்த்து முன்பற்களால் அவளுக்கு வலிக்காது அந்த கீழுதட்டை கடித்திழுத்து அப்படியே சுவைக்க, கைகளோ அவளது சந்தனக்கலர் இடுப்பில் ஊர்ந்துவிளையாடியது, சந்தனாவோ இதை தாளாது பின்பக்கமிருந்து காரில் அப்படியே சாய்ந்துக்கொள்ள...
அவனுக்கு இன்னும் வசதியாக போயிற்று, இரு உடலிற்கும் இடையில் காற்றுப்புகா நிலை...
அவன் இளநியை வாய்வைத்து உறிந்து குடிப்பது போல சந்தனாவின் இதழோடு இதழ்வைத்து உயிரை தனக்குள் குடித்து நிரப்பிக்கொள்ள பிரயாத்தனப்பட்டான்....
மெல்லியவள் தன் உணர்வை அடக்க அவனது பின்பக்கம் கேசத்தினை தனது விரல் கொண்டு அழுத்திப்பிடித்துக் கொண்டாள்...
மெதுவாக அவளை விடுவித்தவன் கண்ணடித்து எப்படி நம்ம முத்தம்...என்று கேட்க, வெட்கத்தில் அவனது நெஞ்சோடு சாய்ந்துக் கொண்டாள்...
நான் ஊருக்குப்போயிட்டு வர்றவரைக்கும் இது தாங்கும்...போய்ட்டு வர்றேன்டா என்க அவளோ நிமிர்ந்துப் பார்த்து தலையசைக்க...நெற்றியில் முத்தம் வைத்து விடுவித்தவன்...போய்ட்டு வர்றேனு மனசே இல்லாமல் கிளம்பி வீடு வந்து சேர்ந்தான்...
சந்தனா அப்படியே ஆபிஸிற்குள் சென்று தனது தந்தையுடன் அமர்ந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஊருக்கு சென்ற ரிஷிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது...அதைக்கேட்டதும் "விஜி சத்தியமா உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை...என்னை நம்ப வச்சு ஏமாத்திட்ட என்று எல்லார் முன்பும் சத்தம் போட்டவன். அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்"
What's Your Reaction?






