உறைபனி என்னில் பொழிகிறாய்-8

அத்தியாயம்-8
ஆபிஸ்விட்டு வீடு வந்த ரிஷிக்கு வீட்டின் சூழ்நிலை எதோ அசாதாரணமாகவே தோன்றியது...எப்பவுமே அவங்க வீடு கலகலப்பாகவே இருக்கும்...அதுவும் ஊருக்கு போகணும் என்றாலே அதகளப்படும். இன்று ஆளாளுக்கு அமைதியாக எல்லாம் எடுத்துவைத்துவிட்டு இவனுக்காக காத்திருந்தனர்...
வந்தவன் குளித்து உடைமாற்றி வரவும் வீட்டு முன்பு பெரிய கார் வந்து நின்றது...
எல்லாம் எடுத்து வைத்துவிட்டு ரிஷியை அழைக்கவும்...என்னம்மா கார் புக் பண்ணிருக்க...எப்பவும் ட்ரெயின்லதான போவோம்...நீதான ஜாலியாக இருக்கும்னு சொல்லுவ...
"இல்லை அலைச்சல் வேண்டாம்னுதான்" என்று தனது பேச்சை முடித்துவிட்டார்...
சாதரணமாக இருந்திருந்தால் விஜிம்மாவின் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடுவான்...
இப்போதோ காதல் மயக்கத்தில்,அதுவும் சந்தனாவின் நினைவிலயே இருப்பதால் கவனிக்கவில்லை...அதனால் எவ்வளவு பெரிய வாழ்க்கை சிக்கலில் விழப்போகின்றான் என்று தெரியவில்லை...
நள்ளிரவில் தஞ்சாவூர் போய் சேர்ந்ததும் எப்போதும் போல அவனது அறையில் சென்று படுத்துவிட்டான்...
காலையில் எழுந்ததும் வெளியே வந்து பார்த்தான்...வீட்டின் முன்பு பந்தல் அலங்காரம் எல்லாம் போட்டிருந்தது...வீடு முழுவதும் விருந்தாளிகள்...இப்போதுதான் சுதாரித்தான்...
விஜி நேத்துல இருந்தே சரியில்லையே? என்னமோ கோக்குமாக்கு பண்ணிவச்சிட்டாங்களோ? விசாரிடா ரிஷி...வாழ்க்கையை கவுத்துடப்போறாங்க...
உஷாராகிடு என்று தனது அப்பாவிடம் சென்று" உண்மையை சொல்லுங்கப்பா, கோவில் விசேஷத்துக்கு இப்படிதான் கல்யாண வீடு மாதிரி பந்தல் போட்டு அலங்கரிப்பாங்களா?
அவர் அமைதியாக இருக்கவும் நன்றாக புரிந்தது, என்னவோ விசயம் இருக்கு...
கோபத்தில் விஜிஇஇஇஇஇஇ என்று கத்தியவன் வீட்டின் நடு ஹாலில் நின்றிருந்தான்...இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த விஜிம்மாவோ சாதாரணமாக வந்து ஏன் சத்தம்போடுற இப்போ? உனக்கு என்னத் தெரியணும்?
இங்க என்ன பங்க்ஷன் நடக்குது, கோவில் பூஜைக்கு எப்பவும் இவ்வளவு சொந்தக்காரங்க வரமாட்டாங்களே...என்ன நடக்குதுனு இப்பவே சொல்லு...இல்லை நான் கிளம்பிபோய்கிட்டே இருப்பேன்....
ஐயோ கல்யாண மாப்பிள்ளையே இப்படி சொன்ன எப்படி என்று விஜியின் தம்பி மனைவி அதாவது வித்யாவின் அம்மா சொல்லவும்...
கல்யாணமாப்பிள்ளையா? நானா? என்று திரும்பி விஜியையும், அவர் அண்ணன் தம்பியையும் முறைத்துப் பார்க்க.
ஆமா...நீதான் கல்யாணமாப்பிள்ளை.
உனக்கும் வித்யாவுக்கும் நாளைக்கு காலையில் முதல் முஹூர்த்தத்தில் கல்யாணம். தாலியெல்லாம் நானே வாங்கிட்டுவந்துட்டேன்...
"ம்மா..என்னோட வாழ்க்கையை நீ எப்படி முடிவு பண்ணுவ.ஏற்கனவே சொல்லிருக்கேன். வித்யாவுக்கும் எனக்கும் ஒத்துவராது, அதைவிட வித்யா இல்லை உலகத்துல வேற எந்த பொண்ணை பார்த்தாலும் எனக்குப் பிடிக்காது...நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்...ஏன்னா நான் வேறொரு பொண்ணை விரும்புறேன்"
விஜிம்மா" தெரியும், அந்த வாழ்க்கை உனக்கு சரிவராது, நீ நிம்மதியா, நல்லா வாழணும்னு ஆசைப்படுறேன்...அதுக்கு வித்யா மாதிரிப் பொண்ணுதான் சரியா இருக்கும். அவதான் நம்ம வீட்டு இரண்டாவது மருமக"
ரிஷி"அப்பா நீயே அவ கழுத்துல தாலியக்கட்டு...என்னால முடியாது. நான் இப்பவே சென்னை போறேன்"
"அப்படி போனனா, நான் உயிரோடவே இருக்கமாட்டேன்...சொந்தபந்தங்க முன்னாடி நான் கேவலப்பட்டு நிக்கறதுக்கு அதுக்கு சாகுறதே மேல்" என்று அழ ஆரம்பித்துவிட்டார்...
அவர் அழுததும் மனசுக் கேட்காமல் அப்படியே சோபாவில் அமர்ந்தவன் "விஜி உன்கிட்ட இருந்து சத்தியமா இதை எதிர்பார்க்கலை...என்னை நம்ப வச்சு ஏமாத்திட்ட என்று கோபத்தில் கத்தியவன்.
தனதறைக்குள் சென்று கதவைடைத்துக் கொண்டு படுத்துவிட்டான்.
மனமெங்கும் பாரம் விஜி ஏன் இப்படி செய்தாங்க. நான் உன் வார்த்தைக்கு கட்டுப்படுறேன்...அதுக்காக தாலிக்கட்டலாம் முடியாது என அப்படியே படுத்திருந்தான்.இதிலிருந்து எப்படி வெளிய வர என்று யோசித்தான்.
கதவைத்திறந்து வெளியேப்போக எத்தனிக்க...வெளியே நின்றிருந்த இரண்டுபேர்..மாப்பிள்ளைத்தம்பி எங்க போறீங்க...நாங்களும் கூட வர்றோம் துணைக்கு என்று அவனுடன் செல்ல எத்தனிக்க...
ரிஷி"விஜி உன் அண்ணன் தம்பிக்கூட சேராதனு சொன்னா கேட்டீயா. பாரு வில்லனுங்க மாதிரியே யோசிக்குறானுங்க...
எதுக்கு இப்போ இந்த தடியன்களை வாசல்ல நிற்க வச்சுருக்கு, நான் எங்கப் போனாலும் பின்னாடியே வர்றானுங்க.நான் ஒன்னும் கேவலமான பிறவியில்லை ஓடிப்போய் ஒழிஞ்சிக்கறதுக்கு. இதைவிட யாரும் என்னை கேவலப்படுத்திருக்க முடியாது...பெத்தபிள்ளைக்கு இப்படி ஒரு கல்யாணத்தை யாரும் நடத்திருக்கமாட்டாங்க.எனக்கு வேண்டாம்னா வேண்டாம்தான் அது என்ன நடந்தாலும் சரிதான்"என கோபத்தில் கத்திக்கொண்டே உள்ளே சென்றவனுக்கு என்ன செய்ய என்று மூளை சிந்திக்க மறுத்தது...
இப்போது அவனது அறைகதவு தட்டும் சத்தம் கேட்டதும் திறக்காமல் அப்படியே படுத்திருந்தான்.கோபமும் ஆற்றாமையும் அவனை வாட்டியது... நம்மவீடாக இருந்தா விஜிக்கிட்ட சண்டைப் போடலாம்...
இங்கவந்து எல்லார் முன்னாடியும் அவங்களை கேவலப்படுத்த முடியாது.விஜி ரொம்ப பாசமான அம்மா...எந்த இடத்துலயும் பிள்ளைங்களை தரக்குறைவா நடத்துனதே இல்லை...
மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் வேகமாகப் போய் திறக்க நந்தனும் அவனது மகனும் நின்றிருந்தனர்...
சின்னவன் சித்தப்பா என்று அவனிடம் தாவி ஏறியவனோ அவனது தோளில் தலைசாய்த்துக் கொண்டு படுத்துவிட்டான்...
நந்தன் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தவன் "ஏன் ரிஷி வித்யா வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்குற, அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க, ஏன் பிடிவாதம் பண்ற" என்று வினவவும்...
"உண்மைய சொல்லு வர்ஷாவ பிடிச்சுத்தான் கல்யாணம் செய்தியா"
" வர்ஷா நல்ல மனைவி அந்த வகையில் அவளை எனக்குப் பிடிக்கும்"
"பார்த்தியா மலுப்பலா பதில் சொல்ற.
எனக்குத் தெரியும் நீ நம்ம வீட்டு பக்கத்துவீட்டுப் பொண்ணு அந்த ராதாவை லவ் பண்ணினதான"
"ஷ்ஷ் அது எதுக்குடா இப்போ சின்னவனை வச்சுட்டு, வர்ஷாகிட்டப் போய் பத்தவைச்சிருவாண்டா"
"ஏன் பொண்டாட்டிக்கு இவ்வளவு பயப்படுற, அப்போ அண்ணி வெளியதான் நல்லவங்களா...விஜி இப்படி ஏமாந்துப் போய் கல்யாணம் பண்ணி வச்சுட்டு...அடுத்தவளையும் எனக்கு கட்டிவைக்கப்பாக்குறாங்க பாரு"
நந்தன் "விளையாடதடா சீரியஸ்ஸா கேட்குறேன், கல்யாணத்துல எதுவும் குழப்பம் பண்ணாத, தயவு செய்து வித்யாவை கல்யாணம் பண்ணிக்கோடா..நல்ல பொண்ணுடா"
"நந்து உன் தூதுவர் வேலையை இங்கக்கொண்டு வராத, உங்கம்மாகிட்டயும் உன் மாமான்காரங்ககிட்டயும் சொல்லு, அவங்க பாச்சா எதுவும் என்கிட்ட பலிக்காதுனு" நான் மனசு வச்சாமட்டுந்தான் தாலிக்கட்ட முடியும் போ...என்று சின்னவனை இறக்கிவிட்டு கட்டிலில் கவிழ்ந்துப் படுத்துவிட்டான்.
சந்தனாவின் முகம்தான் நியாபகத்திற்கு வந்தது...அவளது குழந்தை முகம் அப்படியே அவனைப் பார்த்து கண்சிமிட்டியது...
சட்டென்று தனது போனைத்தேட நேத்து இராத்திரி வரைக்கும் என்கிட்டதான இருந்துச்சு...சந்து பேபிகிட்டே சாட் பண்ணிட்டுத்தான படுத்தேன்...என்று அவனது அறை முழுவதும் தேடியவன் கண்ணில்மாட்டவே இல்லை...
இதுவும் விஜி வேலையாகத்தான் இருக்கும், இது சரிப்படாது பேசாமல் வித்யாகிட்ட நேரடியாகவே பேசிருவோம் அதுதான் நல்லது...
நேராக கீழிறங்கியவன் வித்யாவை அழைத்தான், உடனே வந்த வித்யாவை ரிஷியின் அருகில் நெருங்கவிடாமல் "எதுக்கு அவளை இப்போ கூப்பிடுற, எதுவா இருந்தாலும் நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் பேசு"
"ஓஓ"
உங்க விருப்பத்துக்கு கல்யாணம் முடிச்சாலும் வாழப்போறது நான்தான்...சத்தியமா நான் சந்தோஷமா வாழமாட்டேன், அவளும் நிம்மதியா இருக்கமாட்டாள்...என்றதும் பெற்றவளாக வித்யாவின் தாய் பதறினார்.
அண்ணி வேண்டாம் எல்லா ஏற்பாட்டையும் நிறுத்துங்க, எனக்கு என் பொண்ணோட வாழ்க்கைதான் முக்கியம் உங்க பிடிவாதத்திற்காக எங்கப்பொண்ணை கிணத்துலபிடிச்சு தள்ளமுடியாது என்று அழுதேவிட்டார்...
எல்லோரும் ஒரு நிமிடம் அப்படியே அமைதியாக இருக்க.
ராமகிருஷ்ணனும் "அவனோட வாழ்க்கையில நீ எதுக்கு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறம்மா? விட்டுறு...அவன் விருப்பட்ட பிள்ளையவே கட்டிக்கட்டுமே"
எல்லோரும் அவரிடமே பேசவும், அப்படியே அமைதியாக விஜிம்மா தனதறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்...
எல்லோரும் பதறி கதவை தட்டி அழைக்க அவர் ஜன்னல் எல்லாவற்றையும் மூடிக்கொண்டார்...
ரிஷிக்குமே இப்போது பயம் வந்தது...பிள்ளைகள் விசயத்தில் விஜி எப்படியென்றுதான் அவனுக்குத்தெரியுமே..
ஓடிச்சென்று கதவை பலமாக தட்டியும் எந்தவிதத்திலும் பலனில்லை...
"விஜி நான் வித்யாவையே கல்யாணம் பண்ணிக்குறேன் கதவைத் திறம்மா என்று ரிஷி கத்தினான்....ரொம்ப நேரம் கத்தி சத்தம்போட்டு முடியாமல் ஓயவும் தான் மெல்ல கதவைத்திறந்தார்"
வெளியே ரிஷி தன் தலையில் கைவைத்துக்
கொண்டு அமர்ந்திருந்தான்.ஒரு நொடி தனது தாயை ஏறிட்டுப்பார்த்தவனின் கண்களில் உயிர்ப்பில்லை...நீ என்ன வேணுமோ நடத்து என்ற ரீதியில் எழுந்து மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்.
கல்யாண வேலைகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நன்றாக நடந்தது...
மாலையில் மாப்பிளை அழைப்பும் வரவேற்பும் வைத்திருந்ததாலும், பொண்ணும் மாப்பிள்ளைக்கும் ஒரே ஊர் என்பதாலும் மொத்த சொந்தமும் அங்குதான் இருந்தது.
ரிஷி சாப்பிடக்கூட இல்லை மாலையில் அவனது அறைக்கு வந்து உடைகள் மற்றும் மாலை எல்லாவற்றையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனார் ராமகிருஷ்ணன் ,அவரது அருகில் விஜிம்மா நின்றிருந்தார்..
இருவரும் மகனின் அருகில் வரவும் கைவைத்து தடுத்து சைகை செய்தவன் போங்க என்றுவிட்டான்...
ராமகிருஷ்ணன் மனைவியை ஏறிட்டுப்பார்க்க"இப்போ கஷ்டமாகத்தான் இருக்கும், பின்னாடி அம்மா செய்ததுதான் நல்லதுனு நினைப்பான்...வாங்க அவன் கிளம்பி வருவான்" என்று மற்ற வேலைகளை கவனிக்கப் போய்விட்டார்...
ரிஷி உடையை மாற்றிவிட்டு கண்ணாடியில் பார்க்க, அருகில் சந்தனா நிற்பது போன்று தோன்ற, முடியாமல் பீரோவில் கையை ஓங்கி குத்தினான்...ஒன்றும் செய்யயியலாத தன் கையாலகதனத்தை நினைத்து நினைத்து வெம்பினான்...
மனது சந்தனா சந்தனா என்று அடித்துக்கொண்டிருந்தது...
வரவேற்பு மண்டபத்தில் வைத்து அவனது முகத்தை பார்த்த வித்யாவிற்கு பயம்தான் வந்தது...
வரவேற்பில் மேடையில் நிற்கும்போதே இப்படியே இங்கிருந்து ஓடிப்போயிட்டா என்ன? என்று யோசித்தாலும் தனது அம்மா ஏதாவது முட்டாள் தனமாக செய்துவிட்டாள் என்ன செய்வது...அதுதான் இப்போது மனதில் ஓடியது...
எல்லாம் நல்லபடியாக முடிந்து எல்லோரும் ஒரே குடும்பம் என்பதால் வீட்டிற்கே சென்றுவிட்டனர்...
ரிஷி சாப்பிடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, மொட்டைமாடியில் சிகரெட் ஊதித்தள்ளிக் கொண்டிருந்தான்...நிலையில்லா மனதை சமன்படுத்த முடியாமல்.விடிந்தாள் வித்யா கழுத்தில் தாலிக்கட்டணும் என்பதை நினைக்கும்போதே வேப்பங்காயாக உள்ளமெல்லாம் கசந்தது...
அந்த நேரம் மேலவந்த விஜி அவன் சாப்பிடவேயில்லை என்றதும் பால் கொண்டுவந்தவர் அவன் கையிலிருந்த சிகரெட்டைப் வெறிக்கப்பார்க்க...
அவன் அதை எறிந்துவிடாமல் இன்னும் புகைத்துக் கொண்டிருக்க, விஜி புரிந்துக்கொண்டார்...தீராக்கோபத்தில் இருக்கின்றான் என்று, பாலை அவனுக்கு முன் நீட்ட, தட்டிவிட்டவன்...
நான் ஒரு பொண்ணை காதலிக்குறேனு தெரிஞ்சே எல்லாம் ஏற்பாடு பண்ணிருக்க. சந்தனாதான் என் உயிர், அன்னைக்கு நீ இராத்திரி எங்களைப் பார்த்திருக்க, அப்படித்தான?
ஆமா? அர்த்த இராத்திரியில உன்னைப் பார்க்க அண்ணனோட வர்றா...எப்படிப்பட்ட குடும்பம் அது..என்று சீறீனார்.
விஜி என்ன பேசற..அவ ரொம்ப நல்லப்பொண்ணு.ஒரு நாள் பார்த்துட்டு இப்படி சொல்லாத...
எனக்கு அது தேவையில்லை அந்தக்குடும்பம் உனக்கு வேண்டாம்..
நம்மளுக்கு அவங்க வாழ்க்கை முறை சரிவராது அவ்வளவுதான்...மறந்திட்டு நாளைக்கு வித்யா கழுத்துல தாலிக்கட்டப்பாரு...
அவன் அமைதியாக நிற்கவும், கீழே இறங்கி சென்றுவிட்டார்...
சிறிது நேரம் கழித்து ரிஷி கீழே இறங்கி வர...யாரோ அவனது அருகில் நெருங்கி வர்றமாதிரி தோணவும் திரும்பி பார்க்க...அதற்குள் அவன் மயங்கியிருந்தான்.
காலையில் விஜியும் நந்தனும் ரிஷியின் அறைக்கு வந்துப்பார்க்க, அவனைக் காணவில்லை...அறை கதவு திறந்தே இருந்தது.
எங்குத் தேடியும் காணவில்லை...மெதுவாக மாப்பிள்ளை பையன் ஓடிப்போயிட்டான் என்று தகவல் பரவியது...
மகனை காணவில்லை என்றதும் விஜி அப்படியே மயங்கியே விழுந்துவிட்டார் அதிர்ச்சியில்...ரிஷி ஓடிப்போக வாய்பில்லை என்று எல்லோரும் நினைத்திருக்க...எப்படி நடந்தது. அவனது செருப்பு முதற்கொண்டு அங்குதான் இருக்கு என்று சந்தேகம் வேறு வந்தது எல்லோருக்கும்.
ரிஷியோ அரை மயக்கத்தில் காரில் சொகுசாக படுக்கவைக்கப்பட்டிருந்தான்.
What's Your Reaction?






