உறைபனி என்னில் பொழிகிறாய்-5

Mar 25, 2024 - 20:37
 0  456
உறைபனி என்னில் பொழிகிறாய்-5

அத்தியாயம்-5.

அடுத்தநாள் ஆபிஸிற்கு சென்ற ரிஷியை மற்றவர்கள் பார்க்கும் பார்வையே வித்தியாசமாகப்பட...புரிந்தது  அவனுக்கு.

அடேய் ஒரு நல்லவனை நல்லவனா இருக்கவிடுங்கடா...மயங்கி விழுந்த பிள்ளையை தூக்கிட்டுப் போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது ஒரு குத்தமாடா...

உண்மையா நீ யதார்த்தமாதான் உதவி செஞ்ச? அப்படித்தான? என அவன் மனசாட்சி இடித்துரைக்க...அதைக் கண்டுக்கொள்ளாமல்...பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று  தன் வேலையை பார்க்கும்போது...

(ஆமா  இதே இடத்துல ஆபிஸ்ல வேலை பாக்குறாளே, உன்னோட செக்க்ஷன்ல,அந்த மணிமாலா அவ விழுந்திருந்தா தூக்கிருப்பியா? இல்லை இப்படி பதறியடிச்சு ஓடிருப்பியா? என்னங்கடா உங்க டக்கு...வாஸ்தவம்தான்...ஒன்னு  அவ வெயிட்டுக்கு என்னால தூக்க முடியாது...இன்னொன்னு அவள் எனக்கு சம்பளம் தர்ற முதலாளியில்லையே...

அதுசரி  முதாலாளினு மட்டுந்தான் நினைச்சு நீ உதவி செஞ்ச அத நாங்க நம்பணும்...)

மனசாட்சிக்கெல்லாம் இடங்கொடுக்காத ரிஷி  உன் வேலையைப் பாரு என்று வாயைவிட்டு சொன்னவன்...தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

இரண்டுநாள் அவன் கவனமாக தனது  வேலையை செய்தாலும் மனமெல்லாம் சந்தனா எப்படி இருக்காளோ?வீட்டுக்குப் போயிட்டாங்களா? என்ற சிந்தனை ஓடினாலும், அவனால் அதை வேறு யாரிடமும் கேட்க மனதில்லை...

கேட்டாலும் தப்பாக இருக்கும் என்பதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்...

இதில் சந்தனாவிற்கும்  ரிஷியின் மீது  ஒரு சிறு ஈர்ப்பு வந்திருந்தது.

சந்தனா தனது வீட்டில் முன்னறையில் இருந்தாள், அவளது எண்ணங்கள் இங்கு இல்லை...ரிஷி அன்று அவளது காதில் சாரி சொல்லும்போது, அவன் மூச்சுக்காற்றுபட்டதும்  ஏற்பட்ட உணர்வு, அதை இப்போதும் நினைத்து சிலிர்த்தவள்...அவன் அவளைத் தூக்கிக்கொண்டு ஓடிருக்கின்றான் என்பதை கேட்டதும்,  மனதில்  ரிஷியின் முகமே வந்துப்போனது...

ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு, சொல்லத்தெரியவில்லை அவளுக்கு...அப்படியே அமர்ந்திருந்தவளின் முன்பு  அவளது அம்மா ஜமுனா வந்து  அமர்ந்து,மகளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்...

எவ்வளவு அழகு, அவ்வளவு பெரியக்குடும்பத்தின் செல்லப்பெண்...

எப்படியிருந்தவள் இப்படி அமைதியாக அதுவும் ஒரே இடத்தில்  அதிக நேரம் இருந்ததேக் கிடையாது. இப்போ என்னவென்றால் தலைகீழாக இருக்கு...அவள் மட்டுமல்ல அந்த வீடும் தான்.

சந்தனா பிறந்தபிறகு  அந்த வீட்டிலுள்ள  அத்தனைபேரின் வாழ்க்கையும் சந்தனாவின் பின்தான் ஓடியது...இப்போது  அவளை நினைத்து நினைத்து  ஏங்கி ஏங்கி ஓடுகின்றது எல்லோருடைய வாழ்க்கையும்...

ஜமுனா சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ப்ரனவின் மனைவி தனது மகளை தூக்கிக்கொண்டு  வந்தாள்...சந்தனா அவளைப் பார்த்ததும்...

" ஹாய் புஜ்ஜிமா, இங்க வாங்க" என்று தன்மேல் வைத்துக் கொண்டு, அவளோடு விளையாடிக்கொண்டிருந்தாள்...

அதற்குள் ஆண்கள் எல்லாம்  ஆபிஸிற்கு கிளம்பி வந்தனர். எல்லோரும் கிளம்பவும்"நானும் வரட்டுமா" என்று  சந்தனா கேட்க...

"அத்தனைபேரும் ஒன்றுபோல உடம்பு சரியானதுக்கு அப்புறம் ஆபிஸ்க்கு வாடா"என்க...சரி என்று தலையாட்டியவள்...ரிஷியை நான் விசாரிச்சதா சொல்லுங்கண்ணா" என யதார்த்தமாக சொல்லிவிட்டு தனது மருமகளுடன்  வேறு உலகத்திலிருந்தாள்.

ஒரு நிமிடம் அனைவரும் நின்று  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, புருவம் உயர்த்தி கொண்டனர்.( ரிஷி பையா உனக்கு கட்டம் கட்டிட்டாங்கடா...முடிஞ்சா தப்பிச்சுக்கோ)

இந்தக்குடும்பத்தில் மூத்தமகன் நாகராஜ், அவரது தம்பி தனராஜ், அவர்களது சகோதரி  பத்மஜா..

பத்மாவிற்கு திருமணம் செய்துக்கொடுத்து  

அவரது கணவரையும் தங்களது தொழிலில் சேர்த்து அவரும் ஒரு பங்குதாரராக மாற்றியிருந்தனர் அவர்களுக்கு ஒரு மகன் 

மட்டுமே , பெயர் ஆதவ்.

தனராஜ் அவரது மனைவி ரத்னா அவர்களுக்கு இரு மகன் ஒருவன் ரிஸ்வான் இன்னொருவன் ரித்திக் இருவரும் இரட்டைப்பிறவி, பிறப்பில் மட்டும், குணத்தில் எதிரெதிர்...

நாகராஜ் ஜமுனா தம்பதிகளுக்கு முதலில் மூன்று பிள்ளைகள் ப்ரனவ், வைபவ், கேசவ் இவர்கள்  எல்லோருக்கும் இளையவள் தான் சந்தனா...

இவர்கள் எல்லோரும் படித்தது அமெரிக்காவின்  ஒரு முக்கியமான யூனிவர்சிட்டியில்தான்...ஆனால் வேறு வேறு பிரிவில்...

எல்லோரும் ஒரே வீட்டில்தான், அதனால் அது வீடு என்று சொல்லமுடியாது, அரன்மணை போன்றதொரு பங்களா...

எந்தவிதத்திலும் சண்டையோ சச்சரவுகளோ அவ்வளவு சீக்கிரத்தில் வராது...

சிறியவர்களுக்குள் எப்போதாவது வந்தாலும்...ஆனாலும் விட்டுக்கொடுத்து போய்விடுவர்...

சந்தனாவைப் பொருத்தவரை எல்லா அண்ணனுங்களும் அவளுக்கு முக்கியம் யாரையும் விட்டுக் கொடுக்கமாட்டாள்...

அவர்களும் அப்படியே...

சந்தனா விசயத்தில் எல்லோரும் ஒன்றாகவே சிந்திப்பார்கள்...

அவள் ரிஷியைப் பற்றி பேசியதும் அத்தனைபேரின் சிந்தனையும் ஒன்றாக செயல்பட ஆரம்பித்தது...

அதே நேரம் காலையில் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரிஷிக்கு புரையேறியது...

விஜிம்மா அவனது தலையில் அடித்து உனக்கு வேண்டிய முக்கியமானவங்க எல்லோரும் இங்க இருக்கோம்...யாருடா உன்னை இப்படி நினைக்கிறது, என்று  தலையில் தட்டி தண்ணி குடுக்க..வாங்கி குடித்தவன்...

சந்தனா நினைக்குறாளோ? என்று யோசனையில் இருந்தவன் சாப்பிட்டு முடித்து கற்பனையிலேயே சாப்பிட்டு எழும்பியவன், யாரிடமும் சொல்லாமல் அப்படியே ஆபீசுக்கு கிளம்பி விட்டான்...

ராமகிருஷ்ணன் பையனை புரிந்து கொண்டார் சரிதான் பையன் மொத்தமாக விழுந்துட்டான் என்று மெதுவாக சொல்ல...

"என்ன சொன்னீங்க" மனைவி கேட்டதும்தான்...ஒன்னுமில்ல விழுந்திடமா போனு சொன்னேன் என்று தட்டைப்பார்த்து சாப்பிட ஆரம்பித்தார்...

ஆபிஸ் வந்தவன் தனது வேலையில் மூழ்கியிருக்க ரிஸ்வான்  அவனது கேபினிற்கே வந்து"எப்படி இருக்கீங்க ரிஷி என்று கேட்டுவிட்டு உங்களை சந்தனா விசாரிச்சதா சொல்ல சொன்னா"என்றான்.

"ஓ... எப்படி இருக்காங்க, அவங்க ஹெல்த் எப்படி இருக்கு, ஆபிஸ் எப்போ வருவாங்க" என்று யதர்த்தமாக கேட்பது போல கேட்டுவைத்தான்...

" இப்போ பரவாயில்லை, நாளைக்கு ஆபிஸ் வந்திடுவா,ஓகே ரிஷி பை" என்றவன் கிளம்பிவிட்டான்...

அடுத்த அரைமணிநேரத்தில் ப்ரணவ் வந்து ரிஸ்வான் சொன்னதையே சொல்லிவிட்டுப் போக...

"இப்போதுதான் சுதாரித்தான் ரிஷி, இது என்னடா புதுக்குழப்பம் என்று.

அடுத்தடுத்து  வைபவ், கேசவ் எல்லோரும் அவனது கேபினுக்கு வந்து  அதையே சொல்லிட்டுப் போக...

ஆபிஸிலிருக்கும் அத்தனைபேரும்  அவனது கேபினையே பார்த்திருந்தது...

என்னடா இது எல்லா போர்டு டைரக்டர்ஸும் ரிஷியை போய் பார்த்துட்டு வர்றாங்க... அதுவும் இங்க வேலைக்கு வந்து இரண்டு மாதம்கூட ஆகலை என்று பொறாமையில் பாதிபேரும்...வேறு எதாவது நமது வாய்க்கு  அவல் கிடைக்குமா என்று பாதிபேரும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்...

ரிஷிக்கு  சந்தனாவைப் பிடித்திருந்ததுதான். அழகாக இருக்கின்றாள்  முதல் நாள் கோவிலில் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது, அவள் திமிர் பிடித்த பெண் என்று தான் நினைத்தான்... 

ஆனால் அவளோ சிறு பிள்ளையின் குணமும் பூவின் மென்மையும் உடையவளென்று,  அன்று மன்னிப்பு கேட்கும் போதே தெரிந்து கொண்டான்.

ஆனால் ஸ்டேட்டஸ்னு ஒன்னு உதைக்குதே...இதுவே சாதாரணமான ஒரு பெண்ணாகயிருந்திருந்தால், இதுக்குள்ள உன்னைப் பிடிச்சிருக்குனு தன் விருப்பத்தை  சொல்லிருப்பான்...

அப்படியே இருவரும் விருப்பப்ட்டாலும், பணக்காரப் பொண்ணை வளைச்சிட்டேனு சொல்லுவானுங்க...

அதைவிட அவளோட பாசமலர் கூட்டத்தை நினைச்சாலே..உதறுது விட்டா  சந்தனாவை என் கழுத்தில் தாலியக்கட்டச் சொல்லி வீட்டோட மாப்பிள்ளையாக்கிடுவானுங்க...அலர்ட்டா இரு ரிஷி என்று தன் மனதை சந்தனாவின் நினைவிலிருந்து மீட்டு  வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்...

மறுபடியும்  அவனுக்கு எம்.டி யிடம்  இருந்து  அழைப்பு வந்தது...இனி பெரிய எம்.டி மட்டுந்தான் பாக்கி...

அனுமதி பெற்று உள்ளே சென்றவனை  நாகராஜ் வரவேற்று வாங்க ரிஷி எப்படி இருக்கீங்க?   வேலையெல்லாம் எப்படி போகுது? என்று விசாரித்தவர்.

சந்தனாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததுக்கு நன்றி...உங்ககிட்ட சொல்ல சொன்னா.

" ஓஓ"

இதுல என்ன  இருக்கு சார்...இது ஒரு உதவிதான...யாராயிருந்தாலும் உதவி பண்ணிருப்பேன் என்றவன் வேறு அலுவலக விசயங்கள் பேசியவன் தன்னுடைய இடத்திற்கு வந்தவன்.

முதல் வேலையாக இங்கிருந்து கிளம்பனும், ரிசைன் லெட்டர் கொடுத்திரு ரிஷி... அதுதான் உனக்கும் உன் வாழ்க்கைக்கும் நல்லது...

ஒரு நிமிடம் அவனது கண்களில் சந்தனா வந்து போனாள்... இது சரிவராது ரிஷி  இப்போ ஆசைப்பட்டுட்டு  பின்னாடி கஷ்டப்படுவதை விட... இந்த விருப்பத்தை முளையிலேயே கிள்ளி எறிவது தான் நல்லது. 

இங்கிருந்தால் தினமும் சந்தனாவை பார்க்க நேரிடும், தனது மனதும் அவள் பக்கமா சாஞ்சிடும்(இனிதான் சாயனுமாக்கும்,அது ஏற்கனவே சாஞ்சிதான் கிடக்கு மரமண்டை)வேண்டாம் என்று முடிவெடுத்தவன்.

ஒரு பேப்பரை எடுத்து படபடவென ரிசைன் லெட்டர் எழுதினான்...எழுதியவன், நாளைக்கு கொடுத்திடுவோம்,

கொடுத்திட்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் போயிடுவோம்...நல்ல யோசனை...என்று எழுதிய லெட்டரை தனது மேஜையின் உள்ளே வைத்தவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்...

அங்கு வீட்டிலோ விஜிம்மா  தனியாக ஒரு திட்டத்தையே போட்டு  அதன்படி செயல்படுத்திக் கொண்டிருந்தார்...

வர்ஷாவை அழைத்து"மருமகளே உன் திருவாயை மட்டும் நாளைக்கு வரைக்கும் முடிட்டு இரு, என் வீட்டுக்காரருனு  என் பிள்ளைகிட்ட  எல்லா விசயத்தையும் சொன்ன...அதுக்கப்புறம் உன் தங்கச்சி வித்யா நிலைமை  யோசிச்சிக்கோ"

" சரிங்கத்தை"

என் குடும்பத்துல  பிறந்திட்டு ஏன்டி இப்படி இருக்கீங்க...அத்தை பசங்க வர்றாங்களேனு கொஞ்சமாச்சும் கொஞ்சிப்பேசினாதான என் பசங்களும் உங்க பக்கம் திரும்பி பார்த்திருப்பானுங்க...எங்க அந்த சாமார்த்தியமிருந்தா, நான் ஏன் இப்படி நாயா பேயா அலையறேன்."

"பேசாமா மௌனவிரதம்னு" நந்தன்கிட்ட சொல்லிடுறேன். அப்படியே தலையாட்டிரு  வாயத்திறந்த கொன்றுவேன் என்றவர்...

வெளியே வந்து எங்கடி நீ பெத்தது...அவன் நம்ம திட்டத்தை தெரிஞ்சிக்காமல் இருக்கணும், இல்லைனா முதல் வேலையா சித்தப்பன்கிட்ட போய் சொல்லிடுவான் என்று  அவனைத் தேடினார்.

அதற்குள்ளாக  வேலை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டான் ரிஷி... வந்தவன் நேராக சமயலறைக்குச் சென்று அண்ணி எனக்கு ஒரு காபி கிடைக்குமா தலைவலிக்கு என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்...

அவளுக்கு காபி கலக்கிக் கொண்டு கொடுத்தவள் அமைதியாக வரவும்" அண்ணி என்ன நீங்க காபி கொடுத்துட்டு அமைதியா போறீங்க, அதிசயமாயிருக்கு, அம்மா எதுவும் பேசிட்டங்களா?

இல்லை என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு வந்து விட்டாள்...

சாப்பாடு நேரத்திலும் வர்ஷா அமைதியாகவே இருக்க அவளது கணவன் நந்தனும் "என்னடி தஞ்சாவூர் காத்து எதுவும் இந்த பக்கமா வீசலையா? உர்ர்னு இருக்க"

வர்ஷாவோ அமைதியா விஜிம்மாவைப் பார்க்க...அதுவா மௌன விரதம் இருக்காள், நாளன்னைக்கு ஊருக்கு போறோமா, அதுதான்...சாமிக்கு வேண்டிருக்கா. அங்கப்போய் சாமிக்கும்பிடுற வரைக்கும் பேசக்கூடாது அதுதான்...

குட்டிப்பையனோ"மம்மி நீ கொஞ்சம் முன்னாடி பேசினதான,இப்போ ஏன் பேசமாட்டுக்க"

"உனக்கு ஒன்னும் தெரியாதுடா சும்மா இரு, பாட்டி உனக்கு சாக்லேட்ஸ் தர்றேன்" என்றதும்  அவன் அமைதியாகிவிட்டான்.

இப்போது ரிஷிக்கு புரிந்துவிட்டது விஜி பிளான்போட்டாச்சுப் போல...

எதுவாயிருந்தாலும் பார்த்திரலாம்.

நம்ம நினைக்கறது கண்டிப்பா நடக்காது, விஜிம்மா நினைக்கறதாவது நடக்கட்டும் என்று யோசித்தவனுக்கு, அதற்குப் பின்பு சாப்பாடு தொண்டையில் இறங்கவில்லை...

மொட்டை மாடியில் போய் நின்று கொண்டான்"என்னடா இது ஆசைதானே பட்ட. ஏதோ நீ காதல் சொல்லி, அவள் காதலை ஏற்று ரெண்டு பேரும் அப்படி காதல் வானில் சிறகடித்து பறந்துட்டு, இப்போ அது தோல்வியில் முடிஞ்ச மாதிரி ரொம்ப சோகமாக முகத்தை வைத்திருக்க..விடுடா விடுடா என்றவன்.

மாடியில் மறைத்து வைத்து இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான்...

புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றிக்கொண்டிருந்தான்...

விஜிம்மாவுக்கு  மட்டும் அவன் சிகரெட் பிடிக்கறது தெரிஞ்சது.அப்புறம் கஜலெட்சமியா மாறி மிதிச்சே ரிஷியை சாணியாக்கிடுவார்.

அன்றைய இரவு அவனுக்கு தூங்கா இரவாகிப்போனது...

அடுத்தநாள்  கொஞ்சம் சோர்வாகவே வேலைக்கு சென்றவன்,நேற்று எழுதிய ரிசைன் லெட்டரை  எடுத்துக்கொண்டு சென்ற கதவைத் தட்டி அனுமதிபெற்று  உள்ளே சென்றவனுக்கோ,காஷ்மீரின் பனிமழை பெய்ததுபோன்ற உணர்வு தோன்ற  அப்படியே சில நொடி நின்றிருந்தான்...

ஹாய் ரிஷி என்று  சந்தனா வெள்ளந்தியாக சிரித்து கையசைத்ததும்...

அரவிந்த்சாமி மாதிரி புது வெள்ளைமழை இங்கு பொழிகிறதே பாட்டு படிக்காத குறையாக  தனது அக்மார்க் புன்னகையை அவளைப் பார்த்து வீசினான்...ஈஈஈஈஈஈ.

சந்தனா தலையை சரித்து" எப்படி இருக்கீங்க, நான் இல்லமா நிம்மதியாக இருந்தீங்கப் போல" என்றுகேட்கவும்...

"எப்படி இருக்கீங்க மேடம்,  உடம்புக்கு இப்போ பரவாயில்லையா"

"ஐயோ ரிஷி மேடம்னு சொல்லாதிங்க, நீங்க என்னையவிட பெரியவங்க, சந்தனானே சொல்லுங்க,சரியா"

"சட்டென்று  எதோ யோசித்தவள்,ஆமா நீங்க எதுக்கு உள்ள வந்தீங்க  அதை கேட்காமலேயே நானா பேசிட்டிருக்கேன்

சொல்லுங்க"

என்னத்த சொல்லுவான், சந்தனாவைப் பார்த்ததும் எடுத்த தீர்மானமெல்லாம் காத்துல கரைஞ்சு போச்சுது...

"ஒன்னுமில்லை மேடம்" என்றதும் சந்தனா முறைத்துப் பார்க்க...சாரி சாரி...

"ஒன்னுமில்லை சந்தனா, உங்களைப் பார்த்து ஹெல்த் எப்படி இருக்குனு கேட்டுட்டுப் போக வந்தேன், என கூறிவிட்டு  லெட்டரை தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்தான்.

ஓகே நான் என் கேபின் போறேன் என்று எழும்பியவனது கால் சேரின் வீலில் தட்டி விழப்போகவும், டேபிளை பிடிக்க எத்தனித்தவன் சந்தனாவின் கையைப்பிடிக்க  அவள் சுதாரித்து, அவனைப் பிடித்துக்கொண்டாள்...

அவ்வளவுதான் சந்தனாவின் தோளைப்பிடித்து தன்னை சமன் செய்தவன் கிளம்பிப்போக கையை எடுக்க...

"முடியவில்லை  சந்தனா அவனது நெஞ்சோடு ஒட்டிக்கொண்டிருந்தாள்"

ஆம் சந்தனா ரிஷியை கட்டிப்பிடித்திருந்தாள்...அவ்வளவுதான் அவனுக்கு  இதை ஏற்காவா? வேண்டாமா? என ஒரு நொடி நின்றவன்...தனது வலியகரத்தால் அவளை தனக்குள் இன்னும் இறுக்கினான்.

இங்கு காதல் வாய்மொழியாக சொல்லப்படவில்லை  இருவரின் இதயத்தின் உணர்வுகள் மட்டுமே வெளிப்பட்டன...

இருக்கும் இடமறிந்து  ரிஷி மெதுவாக அவளை விடுவிக்க...அவளோ இன்னும் அவனை இறுக்கிகட்டிக்கொண்டாள்....

" சந்தனா"

"ம்ம்"

இது ஆபிஸ் கொஞ்சம் விலகி நிக்குறீயா என்றதும்...அவனை அந்த நிலையிலயே ஏறிட்டுப் பார்க்க...

" ஐயோ...பார்த்தே கொல்றாளே!" என கிறங்கயவன் அப்படியே அவளது கண்களையே பார்த்து நிற்க...

இரு ஜோடி கண்களும் ஒன்றையொன்றை  கவர்ந்திழுத்து தனக்குள் அடக்க முயற்சித்தது...

சந்தனாவோ "ரிஷி ஐ லவ் யூ" என்று  மெதுவாக தனது ரோஜா இதழ்களை திறந்து மொழிய...

ரிஷியோ மயக்கமும் கிறக்கமும் கலந்த குரலில் நானும் பேபி "ஐ லவ் யூ டூ"...இருவரும் இருக்கும் இடம் மறந்து, தன்னிலை மறந்து நிற்க...

அறையின் கதவு மெலிதாக திறந்து மூடியதை இருவரும் அறியவில்லை...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow