உறைபனி என்னில் பொழிகிறாய்-22

Apr 2, 2024 - 13:00
 0  545
உறைபனி என்னில் பொழிகிறாய்-22

அத்தியாயம்-22

ரித்திக் நாகராஜ் சொன்னதைக் கேட்டு...என்னது எனக்கு கல்யாணமா? இது என்னப்பா தூங்கி எழுந்துவர்றதுக்குள்ள  மொத்தகுடும்பமும் என்னை பாழுங்கிணத்துல தள்ளறதுக்கு முடிவு பண்ணிட்டீங்களா?

எனக்கு முன்னாடி இரண்டு அண்ணனுங்க இருக்காங்கதான அவங்களுக்கு கல்யாணத்தைப் பண்ணுங்க...எனக்கு ஹைதரபாத் ஆபிஸ்ல தலைக்குமேல வேலையிருக்கு...என்றவன் நிமிர்ந்துப் பார்க்க மொத்தக்குடும்பமும் அவனை முறைத்துக்கொண்டு வெட்டவா? குத்தவா? என்று நின்றிருந்தனர்.

ரித்திக் தன் தந்தை தனராஜைப் பார்க்க அவரும் அப்படியேதான் பார்த்தார்...தாயை திரும்பி பார்த்தான் அவரோ முகத்தை திருப்பிக்கொண்டார்.

அங்கு மெதுவாக ரிதன்யா நடந்து வந்தாள்...ரித்திக் அவளைப் பார்த்து இவ எதுக்கு ஒரு மார்க்கமா நடந்து வர்றா என்று பார்த்திருந்தான்.  ( பார்த்தியா? சைட் அடிச்சியா? ரித்திக்)

நாகராஜ் அவளைக் காட்டி இந்தப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்லப்போற? என்று அவனிடம் கேட்டார்.

அவனோ கூலாக அவங்க வீட்லக் கொண்டுப் போய்விட்டுட்டு வந்திருங்க...சோ சிம்பிள் என்றான்.

தனராஜ் கோபத்தில் எழும்பவும் அதற்குள் நாகராஜ் தம்பி என்று அவனதுக் கையைப் பிடித்துக் கொண்டார்... ரிதன்யாவிற்கோ  நமக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு அவல நிலை? நம்ம அப்பா அண்ணன் செய்தப்பாவம் என்னை நோக்கி திரும்புதுப் போல என்று நினைத்தவளுக்கு தன்னையறியாமல் அழுகை வந்தது, கண்ணீர் கன்னத்தில் இறங்க; அது தெரியக்கூடாது என்று தலையைக் குனிந்துக் கொண்டாள்.

பெரியவர்களுக்கு அவளது கண்ணீர் தெரியத்தான் செய்தது.

எது எப்படியோ ரிதன்யாவ தான் நீ கல்யாணம் பண்ணிக்குற எனக்கு அவளைத் தெரியும், நல்லபிள்ளைதான், என்ன அவங்க அப்பாவும் அண்ணனும் செய்ததுக்கு அவ என்ன பண்ணுவா... அவ உண்டு அவ படிப்பு உண்டுனு இருந்தாள், அவளைப் போய் உன் கோபத்தைக் காண்பிக்க தூக்கிட்டுப்போயிட்ட...தப்பு உன் பேருலதான்...பாவம் அவ என்ன செய்வா?

நல்லப்பொண்ணோ? கெட்டப்பொண்ணோ? அது எனக்குத் தேவையில்லாதாது... அவ அந்தக் கொலைகாரனுங்களோட வீட்டில் உள்ளப்பொண்ணு.  அதுவே போதும் நான் வேண்டாம்னு சொல்றதுக்கு என்ற கோபத்தில் கத்த.

சரி நீ கல்யாணம் பண்ணிக்கலைனா விடு... நம்ம செய்ததுக்கு நம்மதான் பிராயசித்தம் செய்யணும் அதுதான் முறை...

வைபவ் இங்க வா..உனக்கு ரிதன்யாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? அப்பா கேட்குறேன் சொல்லுடா என்று கேட்டதும்.

அவன் யோசித்து  தலையசைக்கப்போக ரித்திக்கோ தடுத்து எதோ பேச வரவும்.

ரிதன்யா வேண்டாம் அங்கிள். இவங்க இல்லைனா அவங்கனு என்னை ஏலம் போட்டு எடுக்கறதுக்கு நான் ஒன்னும் நிலமோ? பொருளோ? இல்லை. உயிரும் உணர்வுமுள்ள மனுஷி. நான் எங்கயாவது போய் செத்துப்போறேன் என்று அவள் திரும்பி போகப்போக...

அதற்குள் சந்தனாவும் ரிஷியும் இறங்கி வந்தனர். அதைப் பார்த்ததும் எல்லோரும் அமைதியாக அமர்நதுக்கொண்டனர். ரிதன்யாவைப் பார்த்துக்கொண்டே வந்த சந்தனா யோசித்தாள் யாரு இது என்று...

ரிஷிக்கோ ஐயோ இப்போ என்ன பஞ்சாயத்து ஓடுதோ தெரியலையே? இந்த பாசமலருங்க தங்கச்சிக்கு பண்றதயெல்லாம் பண்ணிடுறானுங்க கடைசியில நம்மள கடத்திட்டு போயிடுறானுங்க... பேசமா சீக்கிரம் இவனுங்களுக்கு  கல்யாணத்தை முடிச்சுவிடணும், இல்லைனா  என் பொண்டாட்டிக்கூட குடும்ப நடத்த முடியாது..நான் எப்போ குடும்பம் நடத்தி என்  பிள்ளைகளை பள்ளிக்கூடத்துல சேர்க்கறது ரிஷி இப்பவே கண்ணைக்கட்டுதே...என்று யோசித்துக்கொண்டே வந்தான்.

சந்தனா நேரடியாகவே ரிதன்யாவின்  அருகில் வந்து ஹாய் யாரு நீங்க? அழகா இருக்கீங்க? என்று  கேட்கவும்...

ரிதன்யாவோ தான் ரித்திக்கோட லவ்வர் என்று சொல்லி அவனைப் பார்க்க... அவனோ கண்களில் அனலை கக்கினான்.

வாவ் சூப்பர் என்று சொன்ன சந்தனா அவளது கையைப் பிடித்து அப்படியாண்ணா என்று ரித்திக்கிடம் கேட்க...அவன் ஈஈஈஈ என்று சிரித்து வைத்தான்.

ரிதன்யாவின் பதிலில் எல்லோருக்கும் புரிந்தது... அவளது விருப்பம் எதுவென்றும் புரிந்தது.

நாகராஜ் ஆமாடா  ரித்திக்கும் ரிதன்யாவும் லவ் பண்றாங்க...அவ வீட்டைவிட்டு நம்ம வீட்டிற்கு வந்துட்டாமா...அதுதான் என்ன செய்யணும்னு பேசிட்டிருக்கோம்.

சந்தனாவுக்கு ஏக குஷி ஹையா சூப்பர்... ஆனா எப்படி அவங்கவீட்ல எதாவது  பிரச்சனை பண்ணுவாங்கதான... பிரச்சனை இல்லாம கல்யாணம் பண்ணுங்க... அவங்க வீட்ல உள்ளவங்களும் தேடுவாங்கதான, பாவந்தான என்று சந்தனா சொன்னதும்...

ரித்திக் ரிதன்யாவைப் பார்த்து இப்படிப்பட்ட என் தங்கைக்கு உங்க குடும்பம் என்ன பண்ணி வச்சிருக்காங்க என்று கண்களால் முறைத்துப்பார்க்க...

அவங்க வீட்ல யாருமில்லைம்மா அம்மா மட்டுந்தான்... கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல  வச்சுக்கலாம், அப்படியே ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கோம்.

ரித்திக்கிற்கு தங்கையின் முன் ஒன்னும் சொல்லமுடியாமல் பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்திருக்க...

அப்போ எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்க என்கூடத்தான அவன் பிறந்தான்...அவனுக்குமட்டும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கறீங்க என்று எப்பவும் போல ரிஸ்வான் பேச...

ரிஷியோ சந்தனாவின் காதில் அவன் அவன் இங்க  என்ன பிரச்சனையில இருக்கான்... இவனுக்கு என்ன கவலை பாரு... இவங்களுக்கு மூத்தவங்க இருண்டுபேருமே சும்மா இருக்காங்க... இவனுங்களைப் பாரு  முந்திரிக்கொட்டை மாதிரி என்று பேச...

சந்தனா சும்மா இருங்க எப்போ பாரு அவங்களை கிண்டல் பண்றதே உங்க வேலையாப்போச்சுது... என்று கண்டிக்க...

சரிம்மா தாயே விடு தெரியாம சொல்லிட்டேன் உன் பாசமலரப் பத்தி, அங்க என்ன பஞ்சாயத்துனு பாரு என்று பேச்சை மாத்தினான்.

ரிஸ்வானின் பேச்சைக் கேட்ட எல்லாருக்கும் ஒருமாதிரி சிரிப்பு வர ஆளாளாளுக்கு தலைகவிழ்ந்து சிரித்தனர்.

கேசவும்,வைபவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள.

தனராஜோ உனக்கு கல்யாணந்தானப் பண்ணனும்; உங்க அம்மாவோடத் தம்பிப் பொண்ணு ஊர்ல இருக்காளாம்; அவளும் உன்னை மாதிரித்தான் எனக்கு எப்போ கல்யாணம்னு கேட்டுக்கிட்டு இருக்காளாம்...

 பேசாம அவளையே கட்டி வைக்கிறேன் ரித்திக் ரிதன்யா கல்யாணத்தோட எங்களுக்கு செலவும் மிச்சம் என்றதும்.

ஐயோ அவளா? பத்துதான் படிக்கறா அதுக்குள்ள அவ்வளவு பேசுறா.. வேண்டாம்பா  நான் அண்ணனுங்களுக்கு அப்புறமாகவே கல்யாணம் பண்ணிக்குறேன் என்ற சோகத்தில் சொல்லவும் வீடே சேர்ந்து சிரித்தது... நெடுநாளைக்குப் பிறகு அந்த வீட்டின் சந்தோஷம் திரும்பி வந்திருந்தது

உடனே ரிஷி எழுந்தவன் சந்தனாவையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தான்.

வாசலில் விஜிம்மாவோ அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து...முதல் முதலா நம்ம வீட்டுக்கு வர்ற வலது காலை எடுத்து வச்சி வா...என்று  உள்ளே அழைக்கவும் சந்தனா ரிஷியைப் பார்க்க, இருவரும் விஜிம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

அவரோ"என்னம்மா நீ இந்த நேரத்துல இப்படி சட்டுனுலாம் குனியாத சரியா;வேற எதாவது வேலைனாலும் ரிஷிக்கிட்ட செய்ய சொல்லு என்ன...மெதுவா மேல படியேறு இல்லைனா ரூமக் கீழ மாத்திருவோம் என்று பேசிக்கொண்டிருக்க..

ரிஷியோ எதே...நானா? சரிதான் மாமியார் மருமகள் கூட்டணி வச்சா நமக்குத்தான் ஆப்பா? இது தெரிஞ்சுத்தான் இந்த ஆம்பிள்ளைங்க சேரவிட மாட்டுக்காங்களோ?

ஐயோ இது தெரியாம நான் வேற குடும்பமா சேர்ந்து வாழலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டனே...  பேசாம தனிக்குடித்தனம் போயிடலாமா? 

அதுக்கு இங்க விஜி விடமாட்டாங்க...அங்க பஞ்சபாண்டவர்கள் விடமாட்டாங்களே? மாட்டிக்கிட்டியே ரிஷி... இனி சந்நியாசம் போகமுடியாது ரிஷியாணந்தா ஆசிரமும் வைக்க முடியாது...

இல்லைனாலும் போயிடுவியா ரிஷி, இராத்திரி பகல்னு பார்க்காமல் சந்தனா உடம்புக்குள்ளவே புதையல் எடுக்குற.. அவளோட வாசனையில்லாம தூங்கிடுவ நீ, இதுல நீ சந்நியாசம் போய்டுவியாக்கும் என்று மனசாட்சி இடித்துரைக்க... அசிங்கப்பட்டான் ரிஷி... விடு விடு இதெல்லாம் கண்டுக்ககூடாது என்றுவிட்டு...

சந்தனாவை அழைத்துக்கொண்டு தனதறைக்குள் சென்றான்.

உள்ளே சென்றதும் அவனது அறையை சந்தனா சுற்றி பார்க்க... ரிஷி உங்க வீட்டளவுக்கு இங்க வசதியிருக்காதுடா எதோ எங்களால எவ்வளவு வசதி செய்து தரமுடியுமோ உனக்கு செய்து தர்றேன்டா.

சந்தனா மெதுவாக அவனது மடியில் அமர்ந்து அவனது கழுத்தோடு கைகளை மாலையாகப் போட்டவள் "ரிஷித்தான் நான் எதாவது உங்ககிட்ட கேட்டனா... நீங்க இங்க வாழும்போது நான் வாழமாட்டனா எனக்குனு எதுவும் தனியா செய்யவேண்டாம்... நான் உங்க மனைவி இந்த வீட்ல வாழவந்திருக்கேன்...

ஆளணும்னு வரலை நம்ம பிள்ளைங்க அப்பா வசதிக்கு தக்க வாழப்பழகிப்பாங்க... டோண்ட் வொரி த்தான் என்றவளது அதரங்களை அப்படியே தன் முரட்டு உதட்டினால் தொட்டு மீட்ட ஆரம்பித்தான்.

அதற்குள் விஜிம்மா அழைக்க மெதுவாக விடுவித்தவன் இறங்கி வரவும் அங்கு எல்லோரும் அமர்ந்திருந்தனர்... நந்தன் குடும்பமும் ஊருக்கு சென்று வந்திருந்தனர்...

வித்யா கர்ப்பமாக இருப்பதை அறிந்து  அவளை பார்த்துவிட்டு வந்திருந்தாள் வர்ஷா, தஞ்சாவூர் போயிட்டு வந்ததாள் அதன் எபெக்ட் அவளது முகத்தில் தெரிந்தது, சந்தனாவை பார்த்து பேசாமல் தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டுவதில் மும்முரமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாள்.

ரிஷியோ" எப்படி அண்ணி இருக்கீங்க, அங்க மாமாக்கள் எப்படி இருக்காங்க? வித்யா எப்படி இருக்கா? என்று யதார்த்தமாக பேசிக்கொண்டிருக்க...

வர்ஷாவோ பதிலேதும் சொல்லாமல் தன் வேலையிலேயே கவனமாக இருக்க... ரிஷி முதன் முறையாக வர்ஷாவின் குணம் மாறியதை அதிர்ச்சியாகப் பார்த்து அமைதியாக இருந்தான்... சந்தனாவிற்கு இது வித்தியாசமாகவே இருந்தது...

அவர்கள் வீட்டில் எந்த கோபம் இருந்தாலும் இப்படி முகத்தை திருப்பிக்கொண்டு பேசாமல் எல்லாம் போவதில்லை... இது தப்பு இது சரினு நேரடியாகவே சொல்லிவிட்டு பேசிக்கொள்வார்கள்.

விஜிம்மாதான் வர்ஷா ரிஷி உன்கிட்டதான கேட்டான் அதுக்கு நீ பதில் சொல்லிருக்கவேண்டியதுதான... அதைவிட்டுட்டு இப்படித்தான் பேசமா இருப்பியா என்ன? புதுசா இருக்கு எல்லாமே என்று கேட்கவும்.

நான் எதுக்கு பதில் சொல்லணும் என் தங்கையை மணவறை வரைக்கும் கொண்டு வந்து கேவலப்படுத்திட்டு ஓடிப்போனவருதான இவரு... என் குடும்பம்  அன்னைக்கு தலைகுனிஞ்சுதான நின்னுச்சு... ஏதோ சொந்தத்திலயே நல்ல பையனா கிடைக்கப்போய் கல்யாணம் நடந்துச்சு இல்லைனா அவ நிலமை...

அவருக்கு என்ன நல்ல வசதியான வீட்டுப்பொண்ணு கிடைச்சுதுனு ஓடிப்போயிட்டாரு... அனுபவிச்சது நாங்கதான என்று நிறுத்தாமல் பேசினாள்.

விஜிம்மா" என்ன பேசுற நீ... என்னோட அண்ணனும் தம்பியும்தான் ரிஷிக்கு வித்யாவ எடுக்கானு எங்கிட்ட சொன்னாங்க... அதுக்காகவும் என் பிறந்தவீட்ல பொண்ணெடுத்தா என் பிள்ளைங்க நல்லாயிருப்பாங்கனும் தான் ஆசைப்பட்டு எல்லா ஏற்பாடும் செய்தேன்... ஆனால் ரிஷிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே... நான்தான தப்பு பண்ணினேன். இப்போ எதுக்கு இதையெல்லாம் கிளறுர... என்று சத்தம் போடவும்...

ஓஓஓ...எங்களுக்கு இருக்குற ஆதங்கத்தை காண்பிக்ககூட எங்களுக்கு உரிமைகிடையாதா, அதுக்கும் பணக்காரங்களா இருக்கணும் போல என்று பேசியவள் தங்களுடைய அறைக்கு போய்விட...

விஜிக்கு ஆச்சர்யம் என்னடா இப்படி பேசிட்டுப் போறா உன் பொண்டாட்டி என்று நந்தனிடம் கேட்க... அவனோ தெரியலைம்மா... அவ வித்யாவ கல்யாணம் பண்ணாத ஆதங்கத்தைக் கொட்டிட்டுப் போற விடும்மா தானா சரியாகிடுவா...

தானா சரியாக அவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? பேசுறான் பாரு என்று நந்தனிடம் கேட்கவும் சந்தனாவும் ரிஷியும் சிரித்துவிட்டனர்.

இவ்வளவு நாளும் அத்தை அத்தைனு பிள்ளை பூச்சி மாதிரி என்னையவே சுத்திவந்தா; இப்போதான் தெரியுது எல்லாருடைய குணமும்... என்று வருத்தப்பட்டவர்.

ரிஷி சந்தனா வாங்க உட்காருங்க அப்பாவையும் அழைச்சிட்டுவர்றேன் சாப்பிட என்றவர் ராமகிருஷ்ணனையும் அழைத்து வந்தவர் சாப்பாடு பரிமாறினார். சந்தனா எழும்பி பரிமாறபோக நீ உட்காரு என்று அமர வைத்தவர் ஸ்வீட்ஸும் பாயசமும் எடுத்து வந்து வைத்துவிட்டு... வீட்டுக்கு முதமுதல்ல வந்திருக்க, அதுவும் நல்லசெய்தியோடு அதுதான் இனிப்பு செய்தேன் என்றவரை சந்தனாவிற்கு இப்போது மிகவும் பிடித்தது...

இங்கு வரும்போது விஜிம்மாவை நினைத்து தான் பயந்தாள் என்ன சொல்வாரோ? எப்படி நடந்துப்பாரோ? என்று... ஆனால் நினைத்ததைவிட இங்கு தலைகீழ் நடக்கின்றது.

பெற்றவளுக்கு எப்போதுமே பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்பதே பிராதான குறிக்கோள்... அதற்காகத்தான் சில இடங்களில் கொஞ்சியும், சில இடங்களில் பிள்ளைகளிடம் மிஞ்சியும் பேசுவர், நடந்துப்பர் அப்படித்தான் விஜிம்மாவும்.. .எப்போது சந்தனாவின் குடும்பத்தை எல்லாம் தெரிந்ததோ அப்போதே நம்ம பிள்ளை நன்றாக இருப்பான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது... இதற்கு பிறகு எதற்கு சண்டை சச்சரவு; அடுத்து வாரிசுவேற வரப்போகுது எனவே அவர் குஷியாக இருக்கின்றார்.

சந்தனாவிற்கு  வர்ஷா பேசியது வருத்தம் தான் என்றாலும் விஜிம்மா அவளிடம் பாசம் காண்பிக்கவும் அது  மறைந்துப்போயிற்று.

சாப்பிட்டு முடித்து ரிஷியும் சந்தனாவும் தங்களது அறைக்கு வந்துப்பார்க்க..அவளது போனில் அத்தனை மிஸ்டுகால் எடுத்துப்பார்க்க...அத்தனை பாசமலர்களும் ஆளாளாளுக்கு  அழைத்திருந்தனர். அதுபோக அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை என்று அழைப்பு வந்திருந்தது, அதை ரிஷியிடம் காண்பிக்க.

கண்களை விரித்து தினமும் இத்தனப்பேருக்கிட்டயும் பேசிட்டுத்தான் என்கிட்ட பேசுவியா... ஐயோ என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்... அதற்குள் அவள் போனை எடுத்து அழைக்கப்போக...

அதை வாங்கியவன் ரிஸ்வானுக்கு மட்டும் அழைத்து அதை ஸ்பீக்கர் மோடில் போடச்சொல்லி எல்லாருக்கிட்டயும் ஒரு வார்த்தையில் பேசிட்டு வைடா... நான் பாவமில்லை என்று கெஞ்சவும் தலையாட்டியவள் பேசி முடிக்கும்போது கிட்டத்தட்ட ஒருமணிநேரம் சென்றது...

ரிஷிக்கோ தூக்கமே வந்துவிட்டது... அடேய் பாசமலர்களா! பக்கத்துல இருந்தாதான் இந்த கொடுமைனு நாலுகிலோமீட்டர் தள்ளி என் வீட்டுல இருக்கேன்டா... இங்கயும் இதத்தான் பண்றீங்க. உங்களுக்கே நியாயமாப் படுதாடா என்று சத்தம்போட அதன்பிறகுதான் சந்தனா அவனருகில் வந்தாள்.

ரிஷியோ எதோ சிந்தனையில் இருந்தான்... பக்கத்தில் வந்தவள் அவனது தோளை தொட்டு அழைத்து என்ன யோசனை என்று கேட்க...

இல்லை  உங்க மீதி மூணு அண்ணன்களுக்கும் கல்யாணம்  ஆகுற வரைக்கும் உன்னை எங்கயாவது நாடு கடத்திட்டுப்போகலாம்னு யோசனை; அதை எப்படி செயல்படுத்தலாம்னு சிந்திச்சிங்க்...

"என்ன" என்று அவள் அதிர்ந்து வாயைப்பிளக்க... அப்படியே அவளை இழுத்து  பெட்டில் படுக்கவைத்தவன்... இந்த அத்தானை மட்டும்  இப்போ நினைப்பியாம்  என் தேவையை கவனிப்பியாம்... அப்புறம் எனக்கே எனக்குனு நேரம் ஒதுக்குவியாம்... சரியா என்க.

அவளோ அவனது பரிசத்தில் கிறங்கி கண்கள் சொருகப்படுத்திருக்க அதுவே அவனுக்கு அழைப்பாகத் தோன்ற... பூவே இங்கு வண்டினை அழைக்க, அவளது இப்போது நிலையை உணர்ந்து மெதுமெதுவாக அவளுடலை தன்வசமாக்கி தன் உடலுக்கு இணங்க மனையாளை மாற்றி மன்னவன்  அவனோ இன்பத் தேரேறினான்...

ரித்திக் ரிதன்யாவின் அறைக்குள் கதவைத் தட்டாமல் வேகமாக நுழைய அப்போதுதான் இரவுவேளை குளியலைப்போட்டு டவலோடு நின்றிருந்தாளவள்... அவன் நுழைந்ததும் பயந்து அரண்டு திரும்பியவள் ரித்திக் என்றதும் நிதானித்து "உள்ள வர்றதுக்கு முன்னாடி பெர்மிசன் கேட்டு வரவேண்டியது தான, அதுவும் ஒரு பொண்ணோட அறைக்கு வரும்போது இப்படியா வருவீங்க என்று சத்தமிட...

அடங்குடி அடிச்சேன்னா பல்லெல்லாம் பறந்திடும்; எனக்கே பாடம் நடத்துற...காலையில என்னடி சொன்ன எங்க பாப்பாகிட்ட.. நம்ம லவ் பண்றோம்னு சொன்னதுனாலதான் இப்போ கல்யாணம் கண்பார்ம் பண்ணிட்டாங்க...

"நான் உண்மையத்தான சொன்னேன்"

என்னத்தை உண்மைய சொன்ன... நீ லவ் பண்ணேன்னு சொல்லிருக்கணும்; நம்மனு சொல்லிருக்ககூடாது... உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்டி... எங்க ப்ரணவ் அண்ணேன் கல்யாணத்துலயே என்னைப் பார்த்துக் கண்ணடிச்சவதான நீ...பதினேழு வயசுலயே என்னை ரூட்டு விட்டவதான நீ.

அப்புறம் உங்க அண்ணனுக்கு எங்க சந்தனாவக் கேட்டு வந்தப்போவும் என்னைய சைட்டடிச்சது தெரியாதுனு நினைச்சியோ...நீ கேடிடி நீ சான்ஸ் கிடைச்சதும் கப்புனு பிடிச்சிகிட்ட...

இருடி கல்யாணம் முடிஞ்சது உன்னை  டாரச்சர் பண்ணியே கொல்றேன்டி இரு... நீயே நான் வேண்டாம்னு ஓடப்போறப்பாரு நான் ரித்திக் என்று சொன்னவனின் கண் அவனையும் அறியாமல் அவளது கழுத்துக்கீழே செல்ல...

டவல் இறுக கட்டியிருந்ததால் அவளது முன்னழகு இறுகிப்பிதுங்கி வெளியே தெரிய...அங்கயே நின்றது அவனது கண்... அவனது மனமோ ரித்திக் ஸ்டெடி ஸ்டெடி கண்ணை விலக்கு என்க;  அதற்குள் அவள் அவனிடம் நெருங்கி "அப்படியா உங்க எல்லாவித டார்ச்சரையும் தாங்கிக்க நான் ரெடியா இருக்கேன் ரித்திக் மச்சான் என்று தன் நாக்கை சழற்றி சொல்ல.. அவளை அப்படியே தள்ளிவிட்டான்,அவளோ கட்டிலில் மல்லாக்க விழவும்  உடுத்தியிருந்த டவல் மேல ஏறி ஏடாகூடமாக தெரிய...ஐயோ சோதிக்குறா இவ..என்று நினைத்தவன்..

உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன்..இப்பவே கல்யாணம் வேண்டாம்னு ஓடிப்போயிடு இல்லைனா உனக்குத்தான் கஷ்டம் பார்த்துக்கோ என்று கூறியவனின் குரல், வரும்போது இருந்த கம்பீரக்குரல் இல்லாமல், குழைந்து இருந்தது.

ரிதன்யாவோ அப்படியே படுத்தவாக்கிலயே இருந்து பார்க்கலாம்... எந்தக் கஷ்டமாக இருந்தாலும் பார்த்துக்கறேன் என்று கண்ணடிக்க...

போடி என்று ஆங்கிலத்தில் நாலு கெட்டவார்த்தையில் திட்டிவிட்டு வந்துவிட்டான்.

அதற்குள் அவனது போனிற்கு தகவல் வந்தது விஷ்வேஷ் நாளை ஜாமீனில் வெளியே வருகின்றான் என்று.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow