உறைபனி என்னில் பொழிகிறாய்-3

அத்தியாயம்-3
எம்.டி அறைக்குள் நுழைந்த ரிஷிக்கு தன் கண்ணையே நம்ப முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் சிலை போல நின்றவனை" வாங்க ரிஷி எப்படி இருக்கீங்க என்று பெரியவர் கேட்கவும் அதற்கு பக்கத்தில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து சிரிக்கவா? வேண்டாமா?என்று அரைகுறை சிந்தனையிலயே சேரில் அமர்ந்திருந்தவனை, அந்த இருவரும் முறைத்துக் கொண்டிருந்தனர்...
ஹைதரபாத்திற்கு வந்த அதே எம்.டிதான் இங்கும் அமர்ந்திருந்தார் மிஸ்டர்.நாகராஜ், ஆனால் அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த இருவரும் வேறு யாருமல்ல ஒன்று சந்தனா, இன்னொன்று அவர்களது குடும்பத்தின் வாரிசான நாகராஜின் தம்பி மகன்...
கம்பேனியின் போர்டு டைரக்டர்ல அவர்களும் உண்டு.
ரிஷி இப்போது யோசித்தான் வேண்டாம் வேண்டாம்னு சிங்கத்தை அதோட கூண்டுலயே சந்திக்க வந்திருக்கப்பாரு உன் ராசி யாருக்குமே இருக்காதுடா...வாய மட்டுமில்லடா எல்லாத்தையும் சேர்த்து இழுத்து மூடிட்டி உட்காருடா என்று தனது மனதிற்குள்ளாகவே தனக்குத்தானே வச்சுக்கிட்ட ஆப் நினைத்துக் கொண்டான்...
"மிஸ்டர்.ரிஷி இவங்க என் பொண்ணு சந்தனா,அதுவும் எங்க பையன் தான் பேரு ரிஷ்வான் . இங்க சந்தனா வந்து ஒருமாதம்தான் ஆகுது...நீங்க அவளுக்கு கீழதான் வேலை பார்க்க போறீங்க"
ரிஷி மொத்தமாக நொந்தே போனான், கனவுலக்கூட நினைக்கலை சந்தனா இங்க இருப்பாள் என்று,ஆனாலும் கீழவிழுந்தும் மீசையில் மண்ணு ஒட்டலையேனு கெத்தாக அவர்களைப் பார்த்து சிரித்து " ஹலோ" சொல்ல இரண்டும் இவனைப் பார்த்து வெட்டாவா? குத்தவா? என முறைத்துக் கொண்டிருந்தனர், ரோட்டுல கொஞ்ச கெத்தாட காண்பிச்ச என்பதாக...
சென்னையில் இருக்குற எல்லாத்தையும் என் பிள்ளைங்களும் நானும் தான் பார்த்துக்குறோம்.
என்னை விட என் பிள்ளைங்க நன்றாக நிர்வாகம் பண்றாங்க..அதனால நீங்க அவங்க கன்ட்ரோல்ல தான் இருக்கப் போறீங்க ஆல் த பெஸ்ட்" என்று கைகுலுக்கியவர். அவனையே பார்க்க அவனோ சரி என்று தலையாட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
இவங்க கன்ட்ரோல்ல இருக்க நான் என்ன மெசினா என்று யோசித்தவன், வேலையை விட்டு போயிடவா என்று எண்ணம் வந்த அடுத்த நொடியே " எதுக்குப் போகணும் நான் வேலைப் பார்க்கப் போறேன், இவங்க சம்பளம் தரப்போறாங்க, இதைத்தவிர அவங்களுக்கும் எனக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லை அப்புறமென்ன. உன் வேலையை கவனிடா என்று முடிவு எடுத்தவன் தனது வேலையில் கவனம் செலுத்தினான்.
யாரு இருக்குற திசைப்பக்கங்கூட வரக்கூடாதுனு நினைச்சியோ அவங்க கோட்டைக்குள்ளயே வந்திருக்க இருந்தாலும் உன் தில்லு தனியேதான்,
காலையில கார்காரன்கிட்ட மல்லுக்கட்டிக்கிட்டு வந்தானே அது வேறயாருமில்லே ரிஷ்வானிடம்தான், உள்ளிருந்தது சந்தனா....
ஐயோ எங்கப்பார்த்தாலும் சுத்தி சுத்தி அவ அண்ணனுங்களாகவே இருக்காணுங்க, கிறுக்கணுங்க பெத்துவச்சிருக்கதபாரு தடிமாடுங்க மாதிரி என தனது மனதிற்குள்ளாகவே ஆயிரத்தெட்டு வசவுகளும் அர்ச்சனைகளும் சரளமாக வழங்கிக் கொண்டிருந்தான்...
இவனுக்கு சந்தனாவுக்கு அண்ணன் இருந்தா என்ன? தம்பி இருந்தா என்ன? யாரும் இல்லைனா என்ன?
எதுக்கு இத்தனை எரிச்சல் மனதில் வருது என்று சிந்திக்கவேயில்லை...
சந்தனா தனியா இல்லைனா? இல்லைனா வேறு எதுவோ மனதில் வந்துட்டு அவனுக்கே தெரியாது.
இப்படியாக ஒருமாதம் கடந்திருந்த நிலையில்.ரிஷியையும் மேனேஜரையும் அழைத்து தனக்கு முன்பாக உட்கார வைத்திருந்தாள் சந்தனா.
ஒரு யூனிட்ல கொஞ்சம் பிரச்சனைகள் பண்றாங்க அது விசயமாகத்தான் எச்.ஆர். எக்ஸிக்யுட்டிவ் ரிஷியை அழைத்து முன்னாடி வச்சிருக்கா...
ஏற்கனவே ஒவ்வொரு கம்பேனிக்குனு தனித்தனி சட்டதிட்டங்கள் வைத்திருப்பாங்க...அதுவும் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது கையெழுத்து வாங்கிவிட்டுத் தான் வேலைக்கே எடுப்பார்கள்...
அது முழுவதும் எச்.ஆர் குழுதான் பார்த்துக்கொள்ளும்..எப்போதும் எச்.ஆரும் கம்பேனியின்.சி.இ.ஓ அல்லது டைரக்டர்ஸ்கும் இடையில் நல்ல நட்புரவு இருக்கும்...
இப்போது என்ன செய்யலாம் என்று விவாதிக்க...அனுபவஸ்தனான ரிஷி சொல்லும் எந்த விசயத்தையும் அவள் ஏற்கவேயில்லை....
இங்க இரண்டு பேருக்கும் நல்ல நட்புறவு வரவில்லை...சொல்லப்போனால் பகையுணர்வு தான் வந்திருக்கும்போல...
ரிஷியே சந்தனாவின் சிறுபிள்ளைத்தனமான முடிவை எதிர்த்து "உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்யுங்க...இதுல எங்க குழு தலையிடாது என்று முடிவாக சொல்லிவிட்டு கோபத்தில் வெளியே வந்துவிட்டான்"
அவளுக்கோ பெரிய இவன், நானா சொன்னா கேட்கமாட்டானா....போடா டேய் என்றவள் தனது தந்தைக்கு அழைத்து எல்லாம் சொல்லிவிட்டாள்.
அடுத்த ஒருமணி நேரத்தில் சந்தனாவின் அண்ணன்கள் மற்றும் போர்டு டைரக்டர்ஸ் எல்லாரும் வந்தாகிவிட்டது.
அத்தனைபேரும் ரிஷியையும் அவனுக்கு கீழ் உள்ள குழுவையும் அழைத்து உட்காரவைத்திருந்தனர்...
அவனுக்கோ ஏகக்கடுப்பு நான் எடுத்து சொன்னதைக் கேட்கமுடியலை, ஒரு சின்னபிள்ளையை வச்சு நம்மளை சாவடிக்குறானுங்க என்று கோபத்தில் அமைதியாக இருந்தான்...
ஆளாளுக்கு கேள்விகள் கேட்டு இந்த சின்ன பிரச்சனையை சமாளிக்க முடியாமல் எங்க அத்தனை பேரையும் இங்க வரவச்சுடீங்க என்று சந்தனாவின் மூத்த அண்ணன் ப்ரணவ் பேசினான்...
ரிஷியோ அதற்கு "நாங்க சொல்ற விசயத்தை மேடம் தான் கேட்கலை அதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்" என்றதும்.
மிஸ்டர் ரிஷி நீங்க இப்படி எக்ஸ்கியூஸ் சொல்றதுக்காகவா உங்களை ஹைதரபாத்திலிருந்து மாற்றலாகி கொண்டு வந்தோம்...
"நாங்க தன்னிச்சையாக செயல்பட முடியாது சார் எங்களுக்கு மேல இருக்கு நீங்க சொல்றது தான் கேட்க முடியும்"என்று தொடங்கிய ரிஷியோ அங்கேயிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சற்று தன்னை அடக்கியவன் சந்தனாவை முறைத்துப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.
"நீங்க சொல்லிருந்த ஐடியா எல்லாம் ஓகே தான் ரிஷி..ஆனால், அதனால நமக்கு கையிலிருந்து பணம் போகும், அதுவும் கொஞ்சமில்லை கோடிக்கணக்குல, அதுதான் சந்தனா வேண்டாம்னு சொல்லிருப்பாங்க" என்று இரண்டாவது அண்ணன் வைபவ் பேசினான்.
அடேய்களா...தங்கச்சிக்குனு முட்டுக்கொடுங்கடா...அதுக்குனு இப்படியா? முடியலடா?
"சார் கோடிக்கணக்குல கையிலிருந்து பணம் போகுறது யோசிக்கறீங்க, ஆனா ஸ்ட்ரைக் பண்ணினா இதைவிட அதிகமா நஷ்டமாகத்தான செய்யும்...அதுக்கு இது பரவாயில்லை" என்று இவன் சொன்னதும்...
" ஓகே...இத நாங்க கன்சிடர் பண்றோம்,சந்தனா நீ என்ன சொல்ற, ரிஷி சொல்றதையே முடிவா எடுத்துக்குவோமா? என்று மூன்றாவது அண்ணன் கேசவ் கேட்கவும்...
"ஓகே ண்ணா" என்று தலையாட்டினாள்.
அடேய்களா இதைதாண்டா நானும் காலையில இருந்து சொன்னேன்...உங்க தங்கச்சி தப்பை மறைக்கறதுக்கு என்னா பாடுபடறீங்க...
நீங்களாம் எப்படிடா இவ்வளவு பெரிய கம்பேனிக்கு சொந்தக்காரங்களானீங்க...சந்தேகமாகவே இருக்கு என தன் தலையை பிடித்துக்கொண்டான்.
எல்லாம் முடித்து வெளியே வரவும் பின்னாடியே வந்த சந்தனா"டேய்" என்றழைக்கவும்..
ரிஷி யாருடா டேய்னு கூப்பிடுறது என்று திரும்பி பார்க்க சந்தனா...வந்த கோபத்துல எம்.டியா மட்டுமில்லைனா அறைஞ்சி பிச்சிருப்பான். அவளைக் கண்டுக்காமலயே முன்னோக்கி நடக்க..
சட்டென்று அவனது முன்னாடி மறைத்து நின்றவள் " கூப்பிட்டா காது கேட்காதா, உனக்கு, நீக்காமலயே போற, நீ என்ன பெரிய இவனா, எங்க அண்ணனுங்களையே கன்வீன்ஸ் பண்ணிட்ட, இங்கதான வேலைப்பாக்குற, உன்னைப் பார்த்துக்குறேன் இரு" என கைநீட்டிப் பேச...
ரிஷி சுற்றும் முற்றும் பார்த்தவன் ஒருத்தருமில்லை என்றதும் சட்டென்று கையோங்கி "அடிங்க டேய்னா கூப்பிடுற, அப்படி என்ன செஞ்சிருவ,
வேலைவிட்டு எடுப்பியா, போடி இங்க இல்லைனா வேற வேலை அவ்வளவுதான்" என்று அவளை அடிக்க போக ஒரு நிமிடம் பயந்து ஓரடி பின்னோக்கி சென்றவள், தன் கண்களை மூடி பயந்து வெடவெடனு நனைந்தக்கோழி மாதிரி நிற்கவும்...
அப்படி அவளைப் பார்த்தவுடனே சிறிது மனமிறங்கியவன், கையை கீழப்போட்டு நீ பெரிய இவளா இருந்தா அடக்கிகிட்டு உட்காரு சரியா...என்கிட்டவந்து காண்பிக்காத காலையில இருந்து டென்சன்படுத்திட்டு போடி...மரியாதையில்லாம இனி கூப்பிட்ட தனது ஒரு விரலை காண்பித்து கொன்னுடுவேன் என்று சொன்னான்.
இப்போது கண்ணை உருட்டி "போடியா? நான் உன்னோட முதலாளிடா, என்னையவே டி போட்டுக்கூப்பிடுற, உனக்கு வேலையே இல்லாம பண்றேன் பாரு.ஏன்டா நான் முடிவெடுத்தா அதை நீ சரினு சொல்லமாட்டியாடா"
"மறுபடியும் டா போட்டு பேசுற, சொன்னா புரியாதா லூசு குடும்பமாடி நீங்கெல்லாம், மரியாதைனா என்னனு உனக்குத் தெரியலை, உங்கண்ணனுங்க அதுக்குமேல, நல்ல வேலைனு இங்க வந்து சேர்ந்தேன் பாரு என்னை சொல்லணும்" என தலையிலடித்துக் கொண்டவன்.
திரும்பி தனது இடத்திற்கு வந்து வேலைப்பார்த்துக் கொண்டிருந்தவனை மறுபடியும் எம்.டி அழைக்கவும் கடுப்பாகிட்டான்.
ரிஷி சிறிது கோபத்தில் இவளுக்கு இன்னைக்கு ஒரு காட்டு காட்டணும், காலையில இருந்து மனுஷனை படுத்துறா என்று கோபத்திலயே எம்.டி அறைக்குள் நுழைய அங்கு நாகராஜ் அமர்ந்திருந்தார்...
"வாங்க ரிஷி உட்காருங்க, என்று அழைத்து உட்கார வைத்தவர், அவனது முகத்தைப் பார்த்து சந்தனா காலையிலிருந்து ரொம்பப்படுத்திடளா , அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்றதும்...அவரது மகன்கள் மூன்று பேரும் வந்தனர், சந்தனா மட்டும் அங்கில்லை.
சாரி ரிஷி என்று அவர்களும் மன்னிப்பு கேட்க...காலையில இருந்து நம்மளை சுத்தல்ல விட்டானுங்க, இப்போ வந்து சாரி சொல்றானுங்க, இவனுங்க பண்றதைப் பார்த்து சரியான பைத்தியாக்கரனுங்கனு நினைச்சமே என்று மனதிற்குள் பலவித சிந்தனைகள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல் லேசாக அசட்டு சிரிப்பு சிரிக்க.
நீங்க என்ன நினைக்கறீங்கனு புரியுது, எங்களைப் பார்த்து லூசுக்குடும்பம்னு நினைச்சீங்களா? என நாகராஜ் கேட்டு அமைதியாக இருக்கவும்.
ரிஷி கண்களில் அதிர்ச்சியை காண்பிக்க
அதைக் கண்டுக்கொண்டவர்" ஓ அப்படித்தான் போல"
ப்ரணவ் " அப்பா ப்ளீஸ்"
கொஞ்சம் இலகுவானவர் " சந்தனா எதாவது முடிவெடுத்து உங்ககிட்ட சொன்னா, சரினு சொல்லிடுங்க, அந்த விபரத்தை தயவுசெய்து எங்ககிட்ட சொல்லுங்க, அவகிட்ட ஆர்கியூ பண்ணாதிங்க,"
இப்போது ரிஷிக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்....ஊப்ஸ் என்று தன்னை சமன்செய்தவன் என்னதான் சொல்லவர்றாங்கனு பார்ப்போம் என்று ஸ்டெடியா உட்கார்ந்திருந்தான்.
"அவ இப்போதான் கொஞ்சம் நார்மலாயிருக்கா, ஒரு அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கா அதனால தான், கொஞ்சம் அவளது சிந்தனைகளை மாற்றதான் அலுவலகத்துல பெரிய பொசிஷன் கொடுத்து வச்சிருக்கோம்" என்ற தகவலை சொல்லவும்...
இப்போதுதான் யோசித்தான் அவளது நடவடிக்கைகளை " ச்ச கடைசியில ஒரு அரைகுறைகிட்டப்போய் என்னுடைய திறமையை காண்பிச்சுருக்கேன் பாரு என்று நொந்துக் கொண்டான்.
"தயவு செய்து சந்தானவை தப்பா நினைக்காதிங்க ரிஷி அவ பி.பி.ஏ கோல்டு மெடலிஸ்ட். எம்.பி.ஏ டிஸ்கண்டினியூ செய்ய வேண்டிய சூழ்நிலை செம ஷார்ப், எங்க குடும்பத்து ஒரே பெண் வாரிசு, அவளை உயிர்ப்போடு மீண்டும் மீட்கறதுக்குத்தான் இந்த ஏற்பாடு...இங்க அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. உங்ககிட்ட மட்டுமே சொல்றோம்"
"ஓ..சாரி சார். இனி கவனமாக இருக்கேன்"( ரிஷி உன்கிட்ட மட்டும் சொல்றாங்கனா, எதுக்குனு யோசிக்க மாட்டியா)
நீங்க எதோ திட்டுனீங்கனு...உங்களை வேலையை விட்டு எடுக்கணும்னு ஒரே அழுகை...தயவு செய்து ஒரு மன்னிப்பு சந்தனாகிட்ட கேட்டுருங்களேன்..
" என்னது மன்னிப்பா" என்று டென்சனாகிட்டான்...
" ப்ளீஸ் எங்களுக்காக, உங்க மேல எந்த தப்புமிருக்காதுனு எங்களுக்குத் தெரியும் " என்று சந்தனாவின் தந்தை சொல்லவும்.
அவ்வளவு பெரிய மனுஷன் இவ்வளவு இறங்கி கேட்குறாரு போனாப்போகுது ஒரு மன்னிப்புத்தான கேட்டுட்டுப் போவோம் என்று எழுந்து விடைப்பெற்று,
சந்தனா எங்கே என்று தேடிப்போக அவளோ மேனஜரின் அறையிலிருந்தாள்...அவளிடம் சென்றவன் "சந்தனா மேடம்" என்றதும்...
திமிறாக பார்த்தவள் பதிலேதும் சொல்லாமல், தன்னைடைய வேலையில் கவனமாக இருப்பது போல காண்பித்துக்கொள்ள...
அவளைக் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. மெதுவாக குனிந்து அவளது காதில் "சாரி" என்று சொல்லவும் அவனது மூச்சுக்காற்று அப்படியே அவளது காதில் பட சிலிர்த்தாள்...
இப்போது மெதுவாக கண்களை உயர்த்தி அவனைப் பார்க்க இரு கண்களும் அப்படியே அவனைப் பார்த்து நிலைத்து நின்றது...
ரிஷி மறுபடியும் "உங்களை திட்டுனது தப்புதான், அதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்றதும் அவளுள் எதுவோ அசைய தலையை அசைத்து "ம்ம்" என்றாள்...
உடனே வெளியே வந்து தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
அன்று மாலை வீட்டிற்கு வந்ததும் உடைமாற்றி வந்து தனது அண்ணன் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்க, மனதெல்லாம் சந்தனாவின் அந்தப் பார்வையே மனதில் வந்து வந்துப் போனது...
ரிஷியால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை, அப்படியே சோபாவில் படுத்து சந்தனாவைப் பற்றிய சிந்தனையிலயே உளன்றான்...
இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் என்ன பிரச்சனையோ, நல்லதான இருக்கா...என்ன அதிர்ச்சியினால் இப்படி இருக்காளோ,எவ்வளவு அழகு...
குட்டிப்பையன் அவனிடம் எதோ கேட்டுக்கொண்டிருக்க இவன் "சந்தனா" என்று சொல்லவும்...
பக்கத்திலிருந்த வர்ஷா ரிஷி என்ன பெயர் சொன்னீங்க "சந்தனா" அது யாரு...
இப்போது சுதாரித்தவன் என்ன அண்ணி சொன்னீங்க என்று அவளிடமே திருப்பி கேட்டான்.
சின்னவன் டோராக்கு யாரு பெயர் வச்சானு கேட்டதுக்கு...நீங்க சந்தனானு சொன்னீங்க... அதான் அது யாருனு கேட்டேன் என்று சத்தமாக பேசவும்...
ரிஷி ஐயோ இது விஜி காதுல விழுந்துச்சுன்னா போச்சே...ஏன் அண்ணி கத்துறீங்க...அவனை ஏமாத்தறதுக்கு ஒரு பெயரைச் சொன்னேன், இதுக்கு எதுக்கு கத்துறீங்க....
"ஓ அப்படியா" என்றவள் அவனை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே சமயலறைக்குள் புகுந்துக்கொண்டாள்...
ரிஷியே" ஹப்பாடா தப்பிச்சேன், போலிஸ் கூட பரவாயில்லை, ஒரு வார்த்தைக்கு எவ்வளவு விசாரனை"
இரவு சாப்பாட்டிற்கு எல்லோரும் அமர்ந்திருக்கவும் "யாருடா அது சந்தனா"என்று விஜிம்மா கேட்கவும் அவனுக்கு புரையேறியது, தண்ணியக் குடித்துக்கொண்டே கண்ணை உருட்டி எப்படி சமாளிக்கலாம் என்று யோசிக்க...
" என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா "
" ம்ம்" என்றவன் பதறி "இல்லை" என்றதும்...
அபிநந்தன் அவனது காதருகில் "நீயாவது தப்பிச்சிடுறா தம்பி...தஞ்சாவூர்க்காரன்க கிட்டயிருந்து"
ராமகிருஷ்ணன்"ரிஷி பையா என்னடா நடக்குது"
"ப்பா ஒன்னுமில்லுப்பா ஆபிஸ் நியாபகத்துல இருந்தேன், என் பாஸ் பெயர் சந்தனா, அது வாயில வந்துட்டு, இதுக்கு ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா பார்த்து வைக்கறீங்க...
அவனது பதில் விஜயலெட்சுமிக்கு திருப்தியாக இல்லை, சிறிது கலங்கினார்.
What's Your Reaction?






