உறைபனி என்னில் பொழிகிறாய்-21

அத்தியாயம்-21
ரித்திக் அடிவாங்கியது எல்லோருக்குமே அதிர்ச்சிதான்...இது நாள் வரைக்கும் வீட்ல கண்டிப்பு உண்டு; ஆனா யாரையும் அடிச்சதில்லை. முதன் முறையா ரித்திக் அடிவாங்கியிருக்கான் அதுவும் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்திட்டானு (வாழ்க்கைய மட்டுமில்ல அவளையும் சேர்த்து கெடுத்திட்டானுதான் பிராதே)
"ப்பா அவ பொய் சொல்றாப்பா...கோபத்துல கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன் அவ்வளவுதான் வேற எதுவும் நடக்கலைப்பா... உங்கபிள்ளைப்பா" என்று கத்தினான்.
கத்தாத ரித்திக் எது எப்படியோ அவ பொய்யே சொன்னாலும்... நீ அவளை கடத்திட்டுப்போனது தப்புத்தான... அதுவும் ஒரு வாலிபபிள்ளைய...ஒன்னுமே செய்யாத நம்ம பிள்ளையவே இவங்க அண்ணன் எவ்வளவு அசிங்கமாக பேசினான்.
இவ்வளவுக்கும் ரிஷி நம்ம பாப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்க.
அவரே விஷ்வேஷ் பேச்சை நம்பி நம்ம பாப்பாவை சந்தேகப்படத்தான் செய்தாங்க...நம்ம பாப்பா இப்பவும் அதனால மனசு நொந்து அழற...என்று ரித்திக்கிடம் தன் மன ஆதங்கத்தை பேச...அருகில் நின்றிருந்த ரிஷிக்கு அப்படியே சுருக்சுருக்கென்று குத்தியது.
நம்மளாலதான் மொத்த பிரச்சனையும், நான் பேசிய வார்த்தைகளால் என் மனைவிக்கு எவ்வளவு வருத்தம், அதை நினைத்து அந்த குடும்பத்திற்கு எவ்வளவு வருத்தம் என்று எண்ணியவன்...தலைகுனிந்து அமைதியாக நின்றிருந்தான்.
ரித்திக் சாரிப்பா...கொஞ்சம் ஆத்திரப்பட்டுட்டேன் என்றவன்..அதுக்காக அவ சொல்றதை நம்பாதிங்கப்பா...
மாணிக்கவேல் பொண்ணுதான அதுதான் பொய் சொல்லி நம்மளை பழிவாங்க பாக்குறா என்றதும்...ரிதன்யா ரித்திக்கை ஏறிட்டுப்பார்த்தாள்.
அவளோ நாகராஜை நோக்கி அங்கிள் இப்படி ஒரு சூழ்நிலையில் என்னை கொண்டு வந்தது யாரு உங்கப் பையன்தான்.. நான் ஏதோ உங்களைத் தேடி வந்து பழிவாங்குறதுக்காக செய்த மாதிரி பேசுறாங்க... அவங்ககிட்ட கேளுங்க ஒரு பொண்ணை பார்க்ககூடாத நிலையில் என்னை வச்சது அவருதான்.
அதுக்குப்பிறகு தான் இந்த ட்ரஸ்ஸைப் போட்டு இங்க கூட்டிட்டு வந்தாரு...இதுக்குப்பிறகு நான் வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி வாழமுடியுமா? அதைவிட நான் இப்போவே செத்துப்போயிடுறேன் என்று வெளியே ஓட...அவளை ஒரே எட்டில் தனது ஒற்றைக் கரங்களால் பிடித்து நிறுத்தியவன்...
அடங்குடி பெரியவங்க இருக்காங்க என்ன ஓவரா பண்ணிட்டிருக்க என்று அதட்டினான்...அவள் அவனிடமிருந்து திமிறி விடுடா என்னை, உன்னாலதான் எல்லாம் நான் பாட்டுக்கு எங்க வீட்ல இருந்தேன்...கடத்திட்டுப்போயிட்டு பேசறதுப்பாரு என்றவளை அடக்கினான்.
நாகராஜ் ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் மாணிக்கவேல்கிட்ட நான் பேசுறேன்மா... ரித்திக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்மா...ஒரு பொண்ணோட சாபம் எங்க குடும்பத்துக்கு வேண்டாம் என்க.
ரித்திக் ப்பா அவங்கப்பனும் அண்ணனும்தான்பா நம்ம ஆதி அத்தானைக் கொலை செய்தது...இது தெரியாமப் பேசாதிங்கப்பா என்றதும்...
" என்னது கொலையா? என்னப்பா சொல்ற? கார்ல இருந்து தவறி விழுந்ததாத்தான சொன்னீங்க, அதுலதாப்பா சந்தனாவுக்கு தலையில அடிப்பட்டிச்சுனு சொன்னீங்க" என்று அதிர்ந்து கேட்டார்.
ப்ரணவ் இடைப்புகுந்து அப்பா என்று அவரதுக் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தவன்.
ப்ரணவின் கண்களில் கண்ணீர் தானக வந்தது...ஆதியும் சந்தனாவும் போறதுக்கு ஹோட்டலிலிருந்து வெளியே வரவும் லாபியிலிருந்து வந்த ஒருவன் நேரடியாகவே வந்து ஆதியிடம் தெரிந்தவன் போல பேசவும் நம்பி வெளியே வர...அங்கு ஆதியின் கார் வேண்டும் என்றே ரிப்பேர் செய்யப்பட்டிருந்தது; எல்லாமே மாணிக்கவேலின் ஆட்கள்தான்...
ஆதியிடம் தமிழில் பேசியவன் மாணிக்கவேலின் ஆளுதான். அமெரிக்காவில் அவர் வாங்கும் சொத்துக்களின் பினாமி மாதவன்...
மாதவன் ஆதியை தங்களது காரில் வருந்தி அழைக்கவும், இங்கு யாரு நமக்கு எதிரி இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் உள்ளே முதலில் சந்தனாவை இருத்தியவன், அவன் உள்ளே சென்று இருக்கவும்தான் உணர்ந்தான்...காரின் உள்ளே பின்பக்க சீட்டில் விஷ்வேஷ், முன் சீட்டில் ஒரு அமெரிக்கனும் இருந்தனர்.
உடனே சுதாரித்த ஆதி சந்தனாவை தனக்கு இந்தபக்கமா இருத்தியவன்...
விஷ்வேஷின் கழுத்தை நெறித்து கிறுக்கனாடா நீ... எங்களை எதுக்குடா இப்படி பாலோ செய்து வந்திருக்க.
மரியாதையா காரை நிறுத்தி இறக்கிவிடு இல்லைனா நடக்குறதே வேற என்று அவனை உலுக்கவும்...முன்னாடி இருந்தவன் கையில் இருந்த ராடால் ஆதியை தலையில் தாக்கினான்...
அதையும் மீறி ஆதி வண்டி ஓட்டிய மாதவனின் கழுத்தைப் பிடிக்க வண்டி வளைந்து நெழிந்து ஓடி ஆட்டம் கண்டது.
இதை யாரும் எதிர் பார்க்காததால் எல்லோருக்கும் பயம் வர, ஆதியோ தலையில் வழிந்த இரத்தத்தோடு போராட, சந்தனாவோ பயந்து அழுதாள், கதவை திறக்க முயற்சித்தாள்...
அதற்குள் ஆதி சரமாரியாக தாக்க ஆரம்பித்தான் தன் கைக்கொண்டு, இறுதியில் விஷ்வேஷின் கழுத்தைப்பிடித்து அழுத்தமாக நெறிக்க..
இதற்குமேல கார் ஓட்டினாள் எங்கயாவது இடித்து சாகவேண்டியதுதாண்டா அவனை வெளியத்தூக்கி வீசுடா என்று அமெரிக்ககாரன் கத்தவும் மாதவன் லாக்கை ஓபன் செய்ய...ஆதி சந்தனாவை அப்படியே அணைத்து பிடித்து வெளியே விழவும்,இனி ஆதி உயிரோட இருந்தா ஆபத்து என்று அந்த அமெரிக்கனே சுட்டுவிட்டான்...
இவர்களை கடத்துவதற்காக மாதவன் தான் அவனை பணம் கொடுத்து அழைத்து வந்திருந்தான்...இப்போது விஷ்வேஷ் கத்தினான்...டேய் சந்தனாவை கடத்தி கல்யாணம் பண்ணிக்கத்தான்டா அழைச்சிட்டு வந்தேன்...ஆதிகிட்ட ஏதோ ஆதாரம் சிக்கிருக்கு, அதை அவன்கிட்ட இருந்து வாங்கணும்னு அப்பாதான் அவனையும் சேர்த்து கடத்த சொன்னாங்க... இப்போ என்னடானா எல்லாத்தையும் சொதப்பி வச்சிட்டீங்கடா என்று விஷ்வேஷ் கோபத்தில் கத்திக்கொண்டு வந்தான்... ஆதி அந்த இடத்திலயே இறந்துவிட,சந்தனாவும் இறந்துவிட்டாள் என்றே நினைத்து போலிஸ் இருவரையும் தூக்க அப்போதுதான் தெரியும் சந்தனாவிற்கு உயிர் இருக்கு என்று அவளை ஆதி அணைத்து இறுக்கி பிடித்திருந்தான்; அவனிடமிருந்து சந்தனாவைப் பிரித்தெடுப்பதற்கே சிறிது நேரமாகிற்று, அவ்வளவு பாதுகாப்பாக தனது கைக்குள் வைத்திருந்தான் ஆதி.. எல்லா விசயமும் தெரிய வந்ததும் ...
விஷ்வேஷ் உடனே கிளம்பி இந்தியா வர, அங்கயோ மாதவனிடம் பணம் கேட்டு மிரட்டினான் அமெரிக்க கொலைகாரன்... மாதவன் விஷ்வேஷிடம் கேட்க... அவனோ முடியாது சந்தனாவை எனக்கு கடத்தி தர்றேனுதான் பேச்சு. அவளே கிடைக்கலை பணம் தரமுடியாது என்று சொல்ல, அவ்வளவுதான் மாதவனை கொடுரமாக கொன்று ரோட்டில் வீசிவிட்டான் அவன்...
அவன் ஏற்கனவே பல கொடுரமான குற்றங்களை செய்தவன்... எனவே அவனை
அங்கிருக்கும் சிசிடிவி ரெக்கார்டிங் மூலமாகத்தான் கண்டுபிடித்தனர்.
இதை ப்ரணவ் சொல்லிமுடிக்கும்போது நாகராஜும்,தனராஜும் சோர்ந்து அமர்ந்துவிட்டனர்...என் பொண்ணை எதாவது பண்ணிருந்தாங்கன்னா, ஆதி தன் உயிரைக் கொடுத்து சந்தனாவைக் காப்பாற்றிருக்கான். எவ்வளவு அன்பு அவ மேல வச்சிருக்கணும்.
என் பொண்ணுக்கூட வாழறதுக்கு அவனுக்கு கொடுத்துவைக்கலையே!
அதைவிட அவனோட எல்லா நியாபகமும் அவளுக்கு இல்லாம போயிட்டுது...
இல்லைனா என் பொண்ணு ஆதியை நினைச்சு நினைச்சு வாழும்போதே நரகத்தைப் பார்த்திருப்பாளே என்று கதறினார்கள் இருவரும்.
ரிதன்யாவிற்கு அண்ணனும் அப்பாவும் செய்தது தெரியாது... இதைக் கேட்டதும் அழுதாள். ச்ச எவ்வளவு பெரிய கொடூரனுக்கு மகளாகப் பிறந்திருக்கோம் என்று வெட்கினாள்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க... ரிஷிக்கு இப்பவே சந்தனாவைப் பார்க்க வேண்டும் போல தோன்ற அங்கிருந்து கிளம்பினான்...
அப்படியே அங்கு அமைதி நிலவ... ப்ரணவ்தான் மூத்தமகனாக இருந்து எல்லோரையும் தேற்றினான், இப்போது போலிஸிடமிருந்து தகவல் வந்தது.
மாணிக்கவேல் தன்னுடைய அறையிலயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்று அதை கேட்டதும் நாகராஜ் "யாரோட சாவும் நம்ம இழந்ததை திரும்ப தரப்போறதில்லை...அவங்க அவங்க செய்ததுக்கு அவங்க அவங்கதான் உத்திரவாதி... நம்ம எதுவும் செய்யமுடியாது வாங்க நம்ம வீட்டுக்குப் போவோம் என்று கிளம்பவும்...
ரிதன்யா மட்டும் ரித்திக்கைப் பார்த்துக் கொண்டே நின்றாள்...அதைக் கண்ட நாகராஜ்தான் அவளை தன்னுடைய காரில் வரச்சொன்னார்.
ரித்திக்கோ அவளை ஒரு டேக்ஸி புடிச்சு அவங்க வீட்டுக்கு அனுப்புங்கப்பா...அவங்க அப்பாவை கடைசியா பார்க்கட்டும் என்றான்...
அது தப்பு நம்ம அங்கப் போயிட்டு வீட்டுக்குப் போகலாம் என்றவர்... மாணிக்கவேலின் வீட்டிற்கு சென்று ரிதன்யாவை விட்டு விட்டு மாணிக்கவேலின் எல்லா இறுதி காரியத்திலும் நின்று முடித்துவிட்டு...
வெளியே வரும்போது ரிதன்யாவை பார்த்து வா என்று தலையசைத்து அருகில் அழைத்தவர் "எங்க வீட்டுக்கு வர்றீயா என்று கேட்கவும் ரித்திக்கை ஒரு முறை பார்த்தவள் சரி என்று தலையசைத்தாள்.
ரித்திக்கிற்கு கோபம் வந்தது... இவ்வளவு செய்த பிறகும் எப்படி அப்பாக்கள் இரண்டுபேரும் கோபப்படாம இருக்காங்க என்று எரிச்சல் வந்தது...
ரிதன்யாவை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றார்.
அங்கோ ரிஷி அவர்களின் வீட்டில் சந்தனாவின் அறைக்கு முன்னாடி சம்மனம்போட்டு அமர்ந்திருந்தான்.
வந்தவர்கள் அத்தனை பேரும் என்னவென்று கேட்க...
பத்மா வந்தவர் ரிஷி சந்தனாவப் பார்க்க வாந்தாங்க.. அவ கோபத்துல கதவை சாத்திக்கிட்டு உள்ள உட்கார்ந்திருக்கா.. நீ கதவை திறக்குற வரைக்கும் இங்கதான் இருப்பேனு ரிஷி அங்க உட்கார்ந்திருக்காரு.. என்ன செய்யனு நாங்களும் பார்த்திட்டிருக்கோம்...
ரிஷி இது என்ன வீட்டுக்குள்ள தர்ணா பண்ணிட்டிருக்கீங்க... எழும்புங்க என்று சந்தனாவின் பாசமலர்கள் எல்லோரும் அவனருகில் அமர.
என் பொண்டாட்டி என்கூட பேசமாட்டுக்கா, தெரியாம தப்பு பண்ணிட்டேன் மன்னிக்ககூடாதா? நீங்களாம் இதுல தலையிடாதிங்க அவ கதவத் திறந்து பேசுற வரைக்கும் சாப்பிடமாட்டேன், இங்க தான் இருப்பேன், ஏன் தண்ணி கூட குடிக்கமாட்டேன்... இப்படியே செத்தா செத்துட்டுப் போறேன்.. யாரும் எதுவும் சொல்லாதிங்க என்றவன் அப்படியே கீழே தரையில் சாய்ந்துப்படுத்துவிட்டான்.
ப்ரணவ் கண்ணைக் காண்பிக்கவும் எல்லோரும் அப்படியே விலகிச் சென்றனர்...
ரித்திக் மட்டும் வந்து ரொம்ப ஓவரா சீனப்போடாத... இவங்களா எவன் சொல்றதையோ கேட்டு கண்டதையும் பேசுவாங்களாம்... என் தங்கச்சிக்கு மட்டும் மூளை, மனசு எதுவும் இருக்காதோ? ஹப்பா சினிமா தோத்துட்டு.. என்ன ஒரு ஸ்க்ரீன் ப்ளே... நடத்து நடத்து என் குடும்பமும் உன்கூட சேர்ந்திட்டாங்க பாரு அவங்களை சொல்லணும் என்று ரிஷியிடம் குமுறிக் கொண்டிருக்க.
ரிஷியோ போங்க மச்சான் என்ன ரொம்ப புகழாதிங்க... எப்போ பாரு என்ன புகழ்ந்திட்டே இருக்கீங்க...தங்கச்சி புருஷன்னு பாசம் இருக்க வேண்டியதுதான் ஆனாலும் இவ்வளவு இருக்கக்கூடாது என்று சிரிக்காமல் ரிஷி பேசவும்...
போடா டேய் என்றவிட்டு தன் காலை தரையில் உதைத்து திரும்பியவன் பார்த்தது ரிதன்யா ரிஷி பேசியதைக் கேட்டு வாயில் கைவைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்...
அவளைப் பார்த்ததும் இன்னும் கோபம் வந்தவன்...அவளிடம் நெருங்கி என்னடி பல்லை காண்பிக்குற என் வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டோம்னு திமிறா?
ஆமா...அதுக்கென்ன இப்போ, உண்மையா லவ் பண்றவங்களுக்குத் தான் தெரியும் ஒருத்தர் பேசாம இருந்தா இன்னொருத்தருக்கு எப்படி வலிக்கும்... இங்கதான் உங்க மனசு கல்லுதான என்று உதட்டை சுழிக்க...
யாருக்குடி மனசுக் கல்லு எனக்கா உண்மைய சொல்லு எனக்கு கல்லுனு... என்று அவளது கண்களையே பார்க்க.
தன் தலையைக் குனிந்துக் கொண்டாள் அவன் பார்வையின் தீட்சன்யத்தை தாங்க முடியாமல்...
அப்படியே அவன் போகும்போது தன் ஒற்றை ஆட்காட்டி விரலால் படியின் கம்பியை பிடிப்பதுப் போல அவளது இடுப்பில் கோடிழுத்து சென்றான்...
ரிதன்யாவோ அவனது கையில் ஒரு அடி வைக்க, திரும்பி என்ன என்று புருவம் உயர்த்த... மேல கைப்பட்டுச்சு கொன்றுவேன்டா என்று ஒற்றைவிரல் கொண்டு மிரட்ட.. மேல இரண்டு படியேறி வந்தவன்... என்னடி செய்வ உன் உடம்புல என் கைபடாத இடம் எதுவும் புதுசா இருக்கா என்ன. அதுதான் ஒட்டுமொத்தமா எது எது எங்கயிருக்கு எப்படியிருக்குனு பார்த்தாச்சே என்று விசமமாகக் கேள்விக் கேட்டான்...
அவளோ பொறுக்கி பேசறதுப் பாரு என்று உதடு சுழிக்க, தன் இரண்டு விரல் கொண்டு அதைப் பிடித்து இழுத்தவன் எதாவது இனி பேசின.. அப்படியே கடிச்சு வச்சிருவேன் வசதி எப்படி என்று கேட்க... தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சிரித்துக்கொண்டே தன் அறைக்கு செல்ல.. ரிதன்யாவிற்கென்று தனியறை ஒதுக்கிக் கொடுத்தனர்...இனி அவள் வீட்டில் இருந்தாளென்றால் கண்டிப்பாக விஷ்வேஷ் அவளிடம் எதுவும் வம்பு வளர்க்ககூடும் என்று அவளது தாயும் நாகராஜிடம் அவளை அழைத்து செல்லுமாறு கூறிவிட்டார் அதனால்தான்.
அவளது தாய் தன் பெண்பிள்ளையாவது நல்லாயிருக்கட்டும் என்று சிந்தித்து முடிவெடுத்திருந்தார்.
அங்கு ரிஷியோ கதவை திறடி பாமா என் காலு வலிக்குதுன்ற ரேஞ்ச்ல சோகமாக சந்தனா அறையின் அருகே படுத்திருந்தான்.
ஜமுனா இரவுபோல வந்து இந்த பாலையாவது குடிச்சிட்டு படுங்க தம்பி இப்படி பச்சத்தண்ணி கூட குடிக்காம இருந்தா எப்படி தம்பி...ஏற்கனவே நடந்த பிரச்சனையில் சாப்பிட்டிருக்கமாட்டிங்க என்றதும்.. ரிஷி அத்தை என்று வாயில் விரல்வைத்து சொல்லவும் சுதாரித்தவர் அமைதியாகிவிட.
இல்லை அத்தை வேண்டாம் தப்பு பண்ணிட்டேன் அதுக்கு தண்டனையா இது இருக்கட்டும்.. என் மனைவியவிட எதுவும் எனக்கு பெருசில்ல என்றான்.
உள்ளயோ சந்தனா கண்ணீரோடு படுத்திருந்தாள்... எவ்வளவு பேசிட்டு இப்போ வந்து மன்னிப்பு கேட்குறாங்க.. நம்ம பொண்டாட்டி அப்படியாபட்டவ இல்லைனு யோசிக்கலை தான என்று படுத்து உறங்க முயற்சிக்க... அவளால் முடியவில்லை.
சிறிது நேரம் பார்த்தவள் தன் கதவின் வழியே பார்க்க..ரிஷி வெற்றுத்தரையில் அந்த கார்பெட்டில் சரிந்துப் படுத்திருந்தான்...
முகமோ நல்லக் களைப்பில் ஏற்கனவே விஷவேஷ் கடத்தினது வேறு அவனை அடிச்சு புரட்டிப்போட்டு வந்தவன் சாப்பிடவேயில்லை, அது முகத்தில் அப்படியே தெரிந்தது.
கொஞ்ச நேரம் யோசித்தவள் கதவைத் திறக்க... அதை ரிஷி அரைக்கண்ணில் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.. என்ன செய்கின்றாள் பார்ப்போம் என்று...
அவளோ படியிறங்கி கீழேப் போக என்னடா ரிஷி உன் பிளான் ஊத்திக்கிச்சுப் போல...
என்ன இருந்தாலும் உண்ணாவிரதம் உண்ணாவிரதம் தான் பொண்டாட்டியா? சோறா? என யோசித்தவன், வயிற்றை தடவிக்கொண்டே பொண்டாட்டிதான் என்று இறுதி தீர்மானம் எடுத்து கண்ணை இறுக மூடிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் அவனருகில் யாரோ அமருவதை உணர்ந்தவன் மாமியார் தான் போல என்று எண்ணி அது தான் பால் எதுவும் வேண்டாம்னு சொன்னனே அத்தை என்று விழித்துப்பார்க்க.
கண்ணு இரண்டும் கோழிமுட்டை சைசுக்கு விரித்துப் பார்த்தான்... சந்தனா கையில் பால் டம்ளர் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்...
அவளையேப் பார்த்தவன் தன் கையை கிள்ளிப்பார்க்க வலித்தது... உண்மைதான் கனவில்லை என்று உணர்ந்தவன்... அவளது கன்னத்தை தொட்டுப்பார்க்க தட்டிவிட்டவள் பாலை நீட்ட..
நீ பேசினாதான் குடிப்பேன், நான் பண்ணினது தப்புத்தான் பெண்களோட உணர்வை புரிஞ்சுக்காம பேசிட்டேன்; தப்புத்தான் என்று தன் காதுகளைப் பிடித்தவன் வேணும்னா தோப்புக்கரணம் போட்டு மன்னிப்புக் கேட்டுக்குறனே! ப்ளீஸ் என்கிட்ட பேசேன் என்றவனின் குரல் தழுதழுத்து கண்கள் கலங்கி சிவந்தது...
உடனே சந்தனா அவனுக்கு உதட்டருகில் பாலை கொண்டுப்போக வாங்கிக்குடித்தவன் அப்படியே அங்கயே இருக்க... எழும்பிய சந்தனா அவனையே பார்த்து நின்றாள்... அவனுமே அவள் அழைத்தாள் மட்டுமே அறைக்குள் போகவேண்டும் என்று வீம்பாக இருக்க...
பொண்டாட்டியோட ரூமுக்கு யாராவது பெர்மிஷன் வாங்கிட்டு வருவாங்களா என்ன? என்று கதவினருகே நின்று சந்தனா பேசவும்...
அப்போ அனுமதியில்லாமலயே உள்ள வரலாம்னு சொல்றீயா?
என் புருஷன் ரொம்ப விவரமாக்கும் என்று தலையை சரித்து அவனைப் பார்த்து கண்ணடிக்க... அப்படியே ஓடிச்சென்று அவளை தூக்கியவன் அவளது முகத்தில் முத்தமழை வைத்தான். அறைக்குள் சென்று கட்டிலில் கிட்த்தியவன் உண்மையாக அவளது கழுத்தில் முகம் புதைத்து கண்ணீர்விட்டான்...அவனது கண்ணீரை உணர்ந்து சந்தனா ரிஷி த்தான் என்ன இது என்று அவளும் கண்கலங்க" சாரி ஏஞ்சல்...உண்மையாகவே என் வாழ்க்கையில் வந்த ஏஞ்சல் நீ என்று உணர்ந்து பேச அங்கு ஒரு காதல் பாடம் அரங்கேறியது...
அடுத்த நாள் காலையில் வெளியே வந்த ரித்திக்கிடம் நாகராஜ் "அடுத்தவாரம் உனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கோம் என்று பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அவனின் தலையில் போட்டனர்"
What's Your Reaction?






